திருமாவளவன் பேச்சு: திமுக கூட்டணியை பலவீனப்படுத்த அவர்களிடம் உள்ள ஒரே துருப்புச்சீட்டு விசிக தான்..!

திமுக கூட்டணியை பலவீனப்படுத்த அவர்களிடம் உள்ள ஒரே துருப்புச்சீட்டு விசிக தான். திமுக கூட்டணி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நாம் கருத்து சொல்வதால் நமக்கு எதிராக அவதூறு பரப்புகிறார்கள் என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்தார். இந்நிலையில், கூட்டணி தொடர்பாக எழும் விவாதங்கள் குறித்து கட்சி நிர்வாகிகளிடம் ஆதங்கத்தோடு தொல் திருமாவளவன் பேசியுள்ளார்.

ஃபேஸ்புக் லைவ் மூலமாக கட்சி நிர்வாகிகளிடம் தொல் திருமாவளவன் பேசுகையில், “கட்சி நிர்வாகிகள் கட்டாயப்படுத்தி தாங்கள் ஏற்பாடு செய்துள்ள விழாக்களில் பங்கேற்க வைப்பது மன அழுத்தத்தை தருகிறது. ஒரு நாள் கூட ஓய்வு இல்லை. ஒரு மணி நேரம் கூட தனிமை இல்லை என்கிற நிலை நீடிக்கிறது. கட்சிப் பணியில் கவனம் செலுத்த முடியாத நிலையிலும் கூட, மஞ்சள் நீராட்டு, திருமண நிகழ்ச்சிகளுக்கும் அழுத்தம் கொடுத்து அழைத்து செல்வதில் நமது கட்சியினர் குறியாக இருக்கிறீர்கள். 24 மணி நேரமும் உங்களுடன் இருக்க வேண்டும் என்பதில் எனக்கு எந்த சங்கடமும் இல்லை.

ஆனால் எந்தப் பணிக்கு முன்னுரிமை தர வேண்டும் என்பது முக்கியமானது. ஏதோ நாம் திமுகவை மட்டுமே நம்பி கிடக்கிறோம் என்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள். அந்த அற்பர்களின் தோற்றத்தை நாம் கடந்து செல்கிறோம் என்றாலும் கூட இயக்க தோழர்கள் அதில் தெளிவை பெற வேண்டும். தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் நம்மால் எடுக்க முடியும். அது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரம் இல்லை. எல்லா கதவுகளையும் திறந்து வைத்து இருப்பது, ஒரே நேரத்தில் பலரோடு பேரம் பேசுவது, கூடுதல் பேரம் பலிக்கும் இடத்தில் உறவை வைத்துக் கொள்வது, கூட்டணியை தீர்மானிப்பது எல்லாம் பெரிய ராஜதந்திரம் இல்லை. அது சுயநலம் சார்ந்த சந்தர்ப்பவாத அரசியல்.

நாம் அதை பொருட்படுத்தவில்லை, ஈடுபாடு காட்டவில்லை. விசிக எந்த எதிர்பார்ப்பும், நிபந்தனையும் இல்லாமல் ஒரு கூட்டணியில் தொடர்கிறோம் என்று சொன்னால் அதற்கும் ஒரு துணிச்சல், தெளிவு, தொலைநோக்குப் பார்வை வேண்டும். இதனை புரிந்து கொள்ள முடியாத அற்பர்கள் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்ற வகையில் நமக்கு எதிரான அவதூறுகளை தொடர்ந்து பரப்பி வருகிறார்கள்.

விசிக பிற அரசியல் கட்சிகளை போல் இல்லாமல், ஒரு முன் மாதிரியாக இயங்கக் கூடிய அரசியல் கட்சி என்பதை காலம் சுட்டிக்காட்டி வருகிறது. தொடர்ந்து அதை உறுதி படுத்தும். திமுக கூட்டணியை பலவீனப்படுத்த அவர்களிடம் உள்ள ஒரே துருப்புச்சீட்டு விசிக தான். திமுக கூட்டணி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நாம் கருத்து சொல்வதால் நமக்கு எதிராக அவதூறு பரப்புகிறார்கள்.

எங்களது தொலைநோக்குப் பார்வையை பொறுத்துக் கொள்ளாத அற்பர்கள் அவதுாறு பரப்புகின்றனர். தோழர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். ஆளும் கட்சியோடு இருக்கும் முரண் என்பது வேறு, கூட்டணி தொடர்பாக நாம் கையாளும் உத்தி என்பது வேறு. ஆளும் கட்சியோடு நாம் வைக்கும் கோரிக்கை வேறு. திமுக உடன் நாம் வைத்திருக்கும் கூட்டணி உறவு என்பது வேறு. இதனை நாம் புரிந்து கொண்டு கவனமாக இயங்க வேண்டும். தேர்தல் நெருங்கும் நேரத்தில் கட்சியினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அரசியல் தொடர்பான விவாதங்களில் தலைமையின் முடிவை அறிந்து கருத்து சொல்ல வேண்டும். அல்லது சொல்லாமல் தவிர்க்கலாம்.” என தொல் திருமாவளவன்  அறிவுறுத்தி உள்ளார்.

ஆர்பி உதயகுமார்: வயிற்றுப் பிழப்புக்காக அதிமுகவிலிருந்து திமுகவிற்கு மாறியவர்கள் திமுகவை தாங்கி பிடிக்கின்றனர்..!

அதிமுகவில் இருந்து திமுகவிற்கு வயிற்றுப் பிழப்புக்காக வேஷ்டி மாற்றிக் கட்டிக் கொண்ட சிலர் திமுகவை தாங்கி பிடிப்பது போல பேசுகிறார்கள் என R.B. உதயகுமார் தெரிவித்தார். மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக் சார்பில் கல்லுப்பட்டி ஒன்றியத்திலுள்ள கோபிநாயக்கன்பட்டியில் பெண்களை ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடி ராஜினாமா செய்ய வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும் ஆர்பி உதயகுமார் தலைமையில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் பேசிய R.B. உதயகுமார்,” திருமங்கலம் நகராட்சியில் மட்டும் 300 கோடி அளவில் திட்டங்கள் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.

ஆனால் சிலர் என் மீது பழியை போட்டு எதுவும் செய்யவில்லை என்று வாய்க்கு வந்ததை உளறி வருகிறார்கள். இதே பதட்டம் அவர்கள் கட்சித் தலைவர் ஸ்டாலினிடம் உள்ளது. சட்டமன்றத்திலே ஆளும் கட்சி அதிமுக என்று ஒப்புதல் வழக்குமூலமே கொடுத்துவிட்டு பின்பு பதட்டமாக இருந்தது என்று பேசிட்டேன் என்று கூறினார். சட்டமன்றத்தில் கேள்வி இல்லா நேரத்தில் எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் இதே திமுக எதிர் கட்சியாக இருந்தபோது வாய்ப்பு அளிக்கப்பட்டது.

ஆனால் தற்போது எந்த வாய்ப்பும் அளிக்கப்படவில்லை. அமைச்சர் சேகர்பாபு சட்டமன்றத்தில் திமுக ஆட்சியில் தான் திருக்கோயிலில் கல்யாணம் நடைபெற்றது என்று பொய்யான தகவலை தந்தார். இவர் அதிமுகவில் இருக்கும் பொழுது புரட்சித்தலைவி அம்மா முதலமைச்சராக இருந்தார். அப்போது 1008 சாமானிய மக்களுக்கு திருக்கோயில் கல்யாணம் நடத்தப்பட்டது .இதை இங்கே கற்றுக்கொண்டு அங்கே போய் இதை செய்துள்ளார்.

மேலும் திருக்கோயில் அன்னதானத் திட்டத்தை திமுக செய்ததாக பேசுகிறார். அம்மா தான் முதன் முதலில் ஆலயங்கள் தோறும் அன்னதானத் திட்டத்தை கொண்டு வந்தார். சேகர்பாபு பொய்யை தவிர வேறு ஏதும் தெரியாது. அது மட்டுமல்ல கருணாநிதி சமாதியின் மீது ஆண்டாள் கோபுரத்தை வைத்துள்ளார். இதன் மூலம் அவருக்கு கெட்ட நேரம் ஆரம்பித்துவிட்டது இப்படி செய்த சேகர் பாபு பதவி விட்டு நீக்க வேண்டும். இன்றைக்கு திமுகவின் ஒரிஜினல் வித்துக்கள் எல்லாம் அமைதியாக உள்ளனர்.

ஆனால் அதிமுகவில் இருந்து திமுகவிற்கு வயிற்றுப் பிழப்புக்காக வேஷ்டி மாற்றிக் கட்டிக் கொண்ட சிலர் திமுகவை தாங்கி பிடிப்பது போல பேசுகிறார்கள். அதேபோன்று சட்டமன்ற 72விதியின் படி அமைச்சர்கள் பொன்முடி, நேரு, செந்தில் பாலாஜி ஆகியோரை பதிவியில் இருந்து நீக்க வேண்டும் என்று நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நாங்கள் கொண்டு வந்த போது அதை ஏற்கக் கூடாது என்று முதலமைச்சர் சபாநாயகரிடம் கண் ஜாடை காட்டுகிறார்.

இன்றைக்கு பொன்முடியை நீதிமன்றமே கடுமையாக கண்டித்து உள்ளது. இவரின் மீது தாமாக வழக்கு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். பொன்முடி மன்னிப்பு கேட்க வேண்டாம் அவரை பதவியில் விட்டு நீக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகிறார்கள். ஆனால் முதலமைச்சர் தொடர்ந்து மௌனம் காத்து வருகிறார். இன்றைக்கு பெண்களை ஆபாசமாக பேசிய திமுகவிற்கு 2026 தேர்தலில் நீங்கள் சரியான பாடத்தை பெண்கள் புகட்ட வேண்டும். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பெண்கள் ஓட்டு திமுகவுக்கு விழக் கூடாது. இதன் மூலம் திமுகவிற்கு பூஜ்ஜியத்தையும், அதிமுகவிற்கு ராஜ்ஜியத்தையும் கொடுக்க வேண்டும் என R.B. உதயகுமார் தெரிவித்தார்.

R.B. உதயகுமார்: சேகர்பாபு அதிமுகவில் கற்றதை திமுகவில் செயல்படுத்துகிறார் ..!

புரட்சித்தலைவி அம்மா முதலமைச்சராக இருந்தபோது 1008 சாமானிய மக்களுக்கு திருக்கோயில் கல்யாணம் நடத்தப்பட்டது .அதிமுகவில் கற்றுக்கொண்டு திமுகவிற்கு போய் அமைச்சர் சேகர்பாபு செய்கிறார் என R.B. உதயகுமார் தெரிவித்தார். மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக் சார்பில் கல்லுப்பட்டி ஒன்றியத்திலுள்ள கோபிநாயக்கன்பட்டியில் பெண்களை ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடி ராஜினாமா செய்ய வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும் ஆர்பி உதயகுமார் தலைமையில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் பேசிய R.B. உதயகுமார்,” திருமங்கலம் நகராட்சியில் மட்டும் 300 கோடி அளவில் திட்டங்கள் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.

ஆனால் சிலர் என் மீது பழியை போட்டு எதுவும் செய்யவில்லை என்று வாய்க்கு வந்ததை உளறி வருகிறார்கள். இதே பதட்டம் அவர்கள் கட்சித் தலைவர் ஸ்டாலினிடம் உள்ளது. சட்டமன்றத்திலே ஆளும் கட்சி அதிமுக என்று ஒப்புதல் வழக்குமூலமே கொடுத்துவிட்டு பின்பு பதட்டமாக இருந்தது என்று பேசிட்டேன் என்று கூறினார். சட்டமன்றத்தில் கேள்வி இல்லா நேரத்தில் எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் இதே திமுக எதிர் கட்சியாக இருந்தபோது வாய்ப்பு அளிக்கப்பட்டது.

ஆனால் தற்போது எந்த வாய்ப்பும் அளிக்கப்படவில்லை. அமைச்சர் சேகர்பாபு சட்டமன்றத்தில் திமுக ஆட்சியில் தான் திருக்கோயிலில் கல்யாணம் நடைபெற்றது என்று பொய்யான தகவலை தந்தார். இவர் அதிமுகவில் இருக்கும் பொழுது புரட்சித்தலைவி அம்மா முதலமைச்சராக இருந்தார். அப்போது 1008 சாமானிய மக்களுக்கு திருக்கோயில் கல்யாணம் நடத்தப்பட்டது .இதை இங்கே கற்றுக்கொண்டு அங்கே போய் இதை செய்துள்ளார்.

மேலும் திருக்கோயில் அன்னதானத் திட்டத்தை திமுக செய்ததாக பேசுகிறார். அம்மா தான் முதன் முதலில் ஆலயங்கள் தோறும் அன்னதானத் திட்டத்தை கொண்டு வந்தார். சேகர்பாபு பொய்யை தவிர வேறு ஏதும் தெரியாது. அது மட்டுமல்ல கருணாநிதி சமாதியின் மீது ஆண்டாள் கோபுரத்தை வைத்துள்ளார். இதன் மூலம் அவருக்கு கெட்ட நேரம் ஆரம்பித்துவிட்டது இப்படி செய்த சேகர் பாபு பதவி விட்டு நீக்க வேண்டும். இன்றைக்கு திமுகவின் ஒரிஜினல் வித்துக்கள் எல்லாம் அமைதியாக உள்ளனர்.

ஆனால் அதிமுகவில் இருந்து திமுகவிற்கு வயிற்றுப் பிழப்புக்காக வேஷ்டி மாற்றிக் கட்டிக் கொண்ட சிலர் திமுகவை தாங்கி பிடிப்பது போல பேசுகிறார்கள். அதேபோன்று சட்டமன்ற 72விதியின் படி அமைச்சர்கள் பொன்முடி, நேரு, செந்தில் பாலாஜி ஆகியோரை பதிவியில் இருந்து நீக்க வேண்டும் என்று நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நாங்கள் கொண்டு வந்த போது அதை ஏற்கக் கூடாது என்று முதலமைச்சர் சபாநாயகரிடம் கண் ஜாடை காட்டுகிறார்.

இன்றைக்கு பொன்முடியை நீதிமன்றமே கடுமையாக கண்டித்து உள்ளது. இவரின் மீது தாமாக வழக்கு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். பொன்முடி மன்னிப்பு கேட்க வேண்டாம் அவரை பதவியில் விட்டு நீக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகிறார்கள். ஆனால் முதலமைச்சர் தொடர்ந்து மௌனம் காத்து வருகிறார். இன்றைக்கு பெண்களை ஆபாசமாக பேசிய திமுகவிற்கு 2026 தேர்தலில் நீங்கள் சரியான பாடத்தை பெண்கள் புகட்ட வேண்டும். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பெண்கள் ஓட்டு திமுகவுக்கு விழக் கூடாது. இதன் மூலம் திமுகவிற்கு பூஜ்ஜியத்தையும், அதிமுகவிற்கு ராஜ்ஜியத்தையும் கொடுக்க வேண்டும் என R.B. உதயகுமார் தெரிவித்தார்.

“அமித் ஷாவிற்கு பகிரங்க சவால் விடுத்த மு.க. ஸ்டாலின்”

பிற மாநிலங்களில் கட்சிகளை உடைத்து ஆட்சியமைக்கும் பாஜக வியூகம் தமிழகத்தில் எடுபடாது. “அமித்ஷா அல்ல.. எந்த ஷா வந்தாலும் சரி, உங்களால் தமிழ்நாட்டை ஆள முடியாது. நீங்கள் எத்தனை பரிவாரங்களை சேர்த்துக் கொண்டு வந்தாலும் ஒரு கை பார்க்க திமுக தயார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஆண்டார் குப்பத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு சுமார் 2 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.357.43 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் ரூ.418.15 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் ரூ.390.74 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்த விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “இந்தியாவில் உள்ள அனைத்து மாநில உரிமைகளுக்காகவும் தான் தமிழகம் போராடுகிறது. மாநில உரிமைகளை கேட்பது தவறா? நீங்கள் எதையும் செய்யாததால் தான், ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்றோம். திமுகவின் பவர் என்ன என்பது தமிழக மக்களுக்கு மட்டுமின்றி, இந்திய மக்களுக்கே இப்போது தெரிந்திருக்கிறது.

மத்திய அமைச்சர் அமித் ஷாவால் நீட் தேர்வில் விலக்கு அளிக்க முடியும் என்று சொல்ல முடியுமா? இந்தியை திணிக்க மாட்டோம் என்று சொல்ல முடியுமா? தமிழகத்திற்கு இவ்வளவு சிறப்பு நிதி கொடுத்துள்ளோம் என்று பட்டியல் போட முடியுமா? தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்தின் எண்ணிக்கை குறையாது என்று வாக்குறுதி கொடுக்க முடியுமா? பிற மாநிலங்களில் கட்சிகளை உடைத்து ஆட்சியமைக்கும் பாஜக வியூகம் தமிழகத்தில் எடுபடாது. நீங்கள் எத்தனை பரிவாரங்களை சேர்த்துக் கொண்டு வந்தாலும் ஒரு கை பார்க்க திமுக தயார்.

அடுத்த ஓராண்டில் நீங்கள் எப்படியெல்லாம் எங்களை மிரட்டுவீர்கள் என்று எங்களுக்கு தெரியும். உங்களுடைய உருட்டல் மிரட்டல்களுக்கு அடிபணிகிற அடிமைகள் அல்ல நாங்கள். டெல்லியின் ஆளுகைக்கு தமிழ்நாடு என்றுமே அடிபணியாது. மற்ற மாநிலங்களில் கட்சிகளை உடைத்து, ரெய்டு மூலம் மிரட்டி ஆட்சி அமைக்கிற உங்களோட ஃபார்முலா தமிழ்நாட்டில் வேலைக்கு ஆகாது. தமிழ்நாடு எப்போதும் டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல்தான். தமிழகத்தில் 2026லும் திராவிட மாடல் ஆட்சிதான். ” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

மு.க.ஸ்டாலின்: திமுகவிற்கு எதிராக “தினுசு தினுசா” எதிரிகளை உருவாக்கும் பாஜக..!

ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் பாஜகவின் சதித்திட்டங்களுக்கு முதன்மைத் தடையாக இருக்கும் தமிழ்நாடும் – திராவிட முன்னேற்றக் கழகமும்தான். அதனால், பல்வேறு வடிவங்களில் எதிரிகளை உருவாக்குவார்கள்; நாடகங்கள் நடத்துவார்கள் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வெற்றிக்காகப் பாடுபட்ட கழக நிர்வாகிகளுக்கான பாராட்டு விழா நேற்று மாலை, நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாகப் பங்கேற்று, திமுக கழக நிர்வாகிகளை வாழ்த்தி பேசினார்.

அப்போது, மு.க.ஸ்டாலின் பேசுகையில், “ஆல் போல் தழைத்து, தமிழ்நாட்டையும் தமிழினத்தையும் முன்னேற்றிட அல்லும் பகலும் உழைத்து, வேல் போல் பாய்ந்து எதிரிகள் படையைத் தோற்கடித்திடும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்வீரர்கள், பேரறிஞர் அண்ணாவும் – தலைவர் கலைஞரும் வளர்த்தெடுத்த எனதருமை உடன்பிறப்புகள் அனைவருக்கும் முதலில் என்னுடைய வாழ்த்துகள்! பாராட்டுகள்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடந்த சமயம் உங்களிடம் நான் தொலைபேசியில் பேசும்போதே, தேர்தல் முடிந்தவுடனே உங்களை எல்லாம் சந்திக்கிறேன் எனச் சொல்லி இருந்தேன். மாவட்டக் கழகச் செயலாளரும் அமைச்சருமான முத்துசாமி அவர்களிடம் பாக முகவர்களை அறிவாலயத்துக்கு அழைத்துவரச் சொல்லி இருந்தேன். அவரோ, “பாக முகவர்களோடு என்னுடன் கிட்டத்தட்ட பத்தாயிரம் பேர் இந்த வெற்றிக்காக உழைத்து இருக்கிறார்கள். அதனால் கூட்டம் ஏற்பாடு செய்கிறேன்” என்று சொல்லி லேட்டாக இருந்தாலும் மிக பிரம்மாண்டமாக இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்து இருக்கிறார் செயல்வீரர் முத்துசாமி அவர்கள். அவருக்கும் வாழ்த்துகள், பாராட்டுகள்!

தேர்தலைப் பொருத்தவரை வரலாறு காணாத வெற்றியையும் நாம் பார்த்து இருக்கிறோம்! மிக மோசமான தோல்வியையும் சந்தித்து இருக்கிறோம். பெற்ற வெற்றிகளால் நாம் தலைக்கனமும் கொண்டதில்லை; அடைந்த தோல்விகளால் சோர்வடைந்து முடங்கியதுமில்லை! ஒவ்வொரு முறையும் எழுச்சி பெற்று, முன்பை விட வீரியமாகக் கழகம் செயல்படுவதற்கு அடிப்படையாக இருப்பது உங்களைப் போன்ற உடன்பிறப்புகள்தான்! அதனால்தான், நான் தலைவராகப் பொறுப்பேற்றதற்குப் பிறகு சந்தித்த 2018 உள்ளாட்சித் தேர்தல் தொடங்கி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரையிலும் தொடர் வெற்றிகளை நாம் பெற்று இருக்கிறோம்.

பொதுவாகத் தேர்தல் பணிகளில் ஈடுபடுகிறவர்களிடம், களநிலவரம் எப்படி இருக்கிறது? வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என நான் விசாரிக்கும்போது, “இரண்டு மடங்கு உழைப்பைக் கொடுத்து இருக்கிறோம்; மூன்று மடங்கு உழைப்பைக் கொடுத்திருக்கிறோம்!” என்று சொல்வார்கள்… ஆனால் உங்கள் ஈரோடு கிழக்கு தொகுதியைப் பொருத்தவரை, கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்று முறை மூன்று மடங்கு உழைப்பைக் கொடுத்து தொடர் வெற்றியை நீங்கள் உறுதிசெய்து இருக்கிறீர்கள்! அதற்காக உங்களுக்குச் சிறப்பான வாழ்த்துகள், பாராட்டுகள்!

தேர்தல் பணி என்பது, கட்சிக் கூட்டம் மாதிரி கிடையாது. கடுமையான களப்பணி அது! ஒவ்வொரு நாளும் – ஒவ்வொரு நிமிடமும், பொதுமக்களைச் சந்திக்க வேண்டும். நம்மைப் பற்றி ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமான மதிப்பீட்டை வைத்து இருக்கிறார்கள். அவர்களிடம் நம் கொள்கைகள் – திட்டங்கள் – சாதனைகளை எடுத்துச் சொல்லி, அவர்களுக்கு ஏதாவது குறைகள் – கோபம் இருந்தால் அதற்குத் தீர்வு காண்கிறோம் என உறுதியளித்து, அவர்களின் நன்மதிப்பைப் பெற வேண்டும். அதை வாக்குகளாக மாற்ற வேண்டும். தேர்தல் நாள் தொடங்கி, வாக்கு எண்ணிக்கை முடிந்து, வெற்றிச் சான்றிதழை வாங்கும்வரை உணவு – தண்ணீர் – குடும்பம் – தூக்கம் என அனைத்தையும் மறந்துவிட்டுத் தவறுகள், முறைகேடுகள் எதுவும் நடக்காத அளவுக்கு விழிப்போடு பணியாற்ற வேண்டும்! அப்படி பணியாற்றி வெற்றியைத் தேடித்தந்திருக்கும் உங்களை பாராட்டுவது மூலமாக திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராக, தலைமைத் தொண்டனாகப் பெருமை அடைகிறேன்.

தந்தை பெரியார் பிறந்த மண்ணில் மாபெரும் வெற்றியைத் தேடித்தந்து, தமிழ் மண்ணில் பிற்போக்குத் தனங்களையும் – வெறுப்பையும் பேசும் மக்கள் விரோத சக்திகளுக்கும் – அவர்களின் கைப்பாவைகளுக்கும் இடமில்லை என இந்தத் தேர்தலில் நிரூபித்து இருக்கிறோம்.  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் என்பது நாம் ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளை நிறைவு செய்யப்போகும் நேரத்தில் வந்த தேர்தல். நம் ஆட்சி பற்றிய மக்களின் தீர்ப்பாகக் கருதப்பட்ட முக்கியமான தேர்தல்.

அதில் பெருவெற்றியைப் பெற்றுத் தந்த உங்களிடம் நான் கேட்டுக்கொள்வது, இன்னும் ஓராண்டில் பொதுத் தேர்தலைச் சந்திக்கப் போகிறோம். பொதுத் தேர்தல் களத்தில் நம் எதிர்க்கட்சிகள் எல்லாம் நம்மிடம் இருந்து வெற்றியைப் பறிக்க எவ்வளவு வேண்டுமானாலும் தரம் தாழ்ந்து போவார்கள். ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் பாஜகவின் சதித்திட்டங்களுக்கு முதன்மைத் தடையாக இருக்கும் தமிழ்நாடும் – திராவிட முன்னேற்றக் கழகமும்தான்.

அதனால், பல்வேறு வடிவங்களில் எதிரிகளை உருவாக்குவார்கள்; நாடகங்கள் நடத்துவார்கள். இந்த மாதிரியான நாடகங்களை 75 ஆண்டுகளாக – ஏன், அதற்கு முன்பிருந்தே பார்த்துக்கொண்டு இருப்பவர்கள் நாம். அதனால், என்ன திட்டம் போட்டாலும் அதை முறியடிப்பதற்கான வலிமை நம்மிடம் உள்ளது. அந்த வலிமைதான் நீங்கள்! உங்களை மாதிரி உழைக்கும் கோடிக்கணக்கான உடன்பிறப்புகள்! நம் மேல் நம்பிக்கை வைத்து வாக்களிக்கும் தமிழ்நாட்டு மக்கள்!

என்னை பொருத்தவரைக்கும், நான் கொள்கை – உழைப்பு – சாதனை ஆகியவற்றை நம்புகிறவன். அதற்கு நேர்மையாகவும் – தடம் மாறாமலும் இருப்பதால்தான் மக்கள் நம்முடன் இருக்கிறார்கள். அந்த மக்களைக் காக்க – இந்த தமிழ்நாட்டை தொடர்ந்து முன்னேற்ற – 2026-இல் களம் காண்போம்! உங்கள் உழைப்பைக் கொடுங்கள்! வரலாறு காணாத வெற்றியைக் காண்போம்! நன்றி! வணக்கம்!”என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

அண்ணாமலை விமர்சனம்: மாமனார் கொடுத்த காசில் வண்டி ஓட்டவில்லை..!

நான் என் மாமனார் கொடுத்த காசில் வண்டி ஓட்டவில்லை, லாட்டரி விற்று வரவில்லை. எனக்கு கொஞ்சம் தன்மானம் அதிகம். சொந்தமாக நின்று சுயம்புவாக நிலைத்து பேசுபவன் நான் என ஆதவ் அர்ஜுனாவை அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்தார். சென்னை திருவான்மியூரிலுள்ள ஸ்ரீஇராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்கூட்டம் நேற்றைய முன்தினம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பொதுக்குழுவில் பேசிய தவெக தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசினார். அப்போது, “பல பொய் பிரச்சாரங்களை உருவாக்க வேண்டும் என்ற கோணத்தில் செட் செய்யப்பட்டவர் தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. டெல்லியில் பிரதமர் மோடி அமர்ந்து கொண்டு மற்ற மாநிலங்களில் செட் செய்து கொண்டு இருக்கிறார்.

தமிழகத்தில் திமுக அண்ணாமலையையே செட் செய்து விட்டது நன்றாக கவனித்தால் தெரியும், திமுகவின் பிரச்சினைகளை அவர் எப்படி திசை திருப்புவார் என்று. நமது தலைவர் விஜய் புலி மாதிரி அமைதியாக இருக்கும் போது திடீரென ஒரு ஆடு வந்து சம்பந்தமே இல்லாமல் வந்து, தொழிலை சம்பந்தப்படுத்தி பெண்ணை கேவலமாக பேசியிருக்கிறார். ஒரு பெண்ணை கேவலமாக பேசும் தலைவரை பாஜக வைத்திருக்கும் போதே தெரிந்துவிட்டது அந்த கட்சியின் நிலைமை.” என ஆதவ் அர்ஜுனா விமர்சித்து இருந்தார்.

இந்நிலையில், கோயம்புத்தூர் விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களின் கேள்விக்கு அண்ணாமலை பதிலளித்தார். அப்போது, “அண்ணாமலை அரசியலுக்கு வந்திருப்பது அதிகாரத்திற்கு அல்ல. தமிழகத்தில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பது தான். என்னால் யாருக்கும் பிரச்சினை வராது. மாற்றி, மாற்றி பேசுபவன் நான் அல்ல. எனக்கு தமிழகம் முதன்மையானது. பாஜக வளர்ச்சி முக்கியம். எனது தனிப்பட்ட வளர்ச்சியோ, மற்றவர் வளர்ச்சியோ முக்கியம் கிடையாது” என அண்ணாமலை தெரிவித்தார்.

மேலும் அண்ணாமலை பேசுகையில், “திமுகவுக்கு எதிராக அதிக போராட்டங்களை நடத்திய கட்சி பாஜக. திமுகவுக்கு எதிராக பேசியதாக அதிக அவதூறு வழக்குகள் என் மீது தான் இருக்கின்றன. கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டிலேயே ஒரு கட்சித் தலைவர் மீது அதிக FIR போட்டு இருக்கிறார்கள் என்றால் அது என் மீது தான். திமுகவை தீர்க்கமாக எதிர்த்து தினமும் பேசுவது யார்? வாய் வியாபாரிகளுக்கு மாமனார் பணம் இருக்கிறது. கொழுத்துப் போய் இருக்கிறார்கள். மைக் ஓசியில் வந்துவிடுகிறது, என்ன வேண்டுமானாலும் பேச வாய்ப்பு கிடைக்கிறது.

நேர்மையான அரசியல்வாதியாக வாழ்ந்து கொண்டிருப்பவன் நான். படித்து முடித்த முதல் நாளில் இருந்து எந்த தனியார் நிறுவனத்திலும் சம்பளம் பெறாதவன். என் முதல் சம்பளமே மக்களின் வரிப்பணம் தான். 10 ஆண்டுகளாக மக்கள் பணியாற்றியவன் நான். எனது சொந்த நிறுவனத்தில் கூட ஒரு ரூபாயைக் கூட நான் சம்பளமாகப் பெற்றதில்லை. இத்தனைக்கும் நான் இப்போது எந்த அரசுப் பதவியிலும் இல்லை, பஞ்சாயத்து தலைவராகக் கூட இல்லை என்றாலும், ஒரு ரூபாய் பணத்தை தனியாரிடம் இருந்து பெற்றதில்லை.

2011 IPS ரேங்க்கில் எனது ரேங்க் 2. நான் என் மாமனார் கொடுத்த காசில் வண்டி ஓட்டவில்லை, லாட்டரி விற்று வரவில்லை. எனக்கு கொஞ்சம் தன்மானம் அதிகம். சொந்தமாக நின்று சுயம்புவாக நிலைத்து பேசுபவன் நான். எனக்கு கொஞ்சம் வாய் பேச்சு, குறும்பு அதிகம். வைராக்கியம் அதிகம். நான் இங்கு பவருக்காக வரவில்லை. எதை இழந்தாலும் மீண்டும் வருவேன்” என ஆவேசமாக அண்ணாமலை பேசினார்.

டிடிவி.தினகரன்: திமுகவை எதிர்க்கும் எந்த கட்சியும் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேரலாம்..!

திமுகவை எதிர்க்கும், திமுக வெற்றி பெறக் கூடாது என்று கருதும் எந்தக் கட்சியும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையலாம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார். மதுரை அவனியாபுரத்தில் நேற்று நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் டிடிவி.தினகரன் பங்கேற்றார். அதன் பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு டிடிவி.தினகரன் பதிலளித்தார்.

அப்போது, அமமுக ஏற்கெனவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துள்ளார். ஆனால், அந்த சந்திப்பு குறித்து வெளிப்படையாக பேசவில்லை. திமுகவை எதிர்க்கும், திமுக வெற்றி பெறக் கூடாது என்று கருதும் எந்தக் கட்சியும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையலாம்.

திமுகவுக்கு மாற்று தவெக என்று விஜய் கூறியிருப்பது, அவரது விரும்பம் மட்டுமே. தமிழகத்தில் உண்மையான எதிர்க்கட்சியாக மக்கள் மனதில் இருப்பது தேசிய ஜனநாயகக் கூட்டணிதான். சுயநலம், பதவி வெறியாலும், திமுக மீதுள்ள பயத்தாலும், தங்கள் மீது வழக்கு பதிவு செய்யக்கூடாது என்பதற்காகவும், திமுக தேர்தலில் வெற்றி பெற சிலர் மறைமுகமாக உதவி வருகின்றனர்.

காங்கிரஸ் ஆட்சியைவிட பாஜக ஆட்சியில் தமிழகத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. ஆட்சியாளர்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். அதை மறைப்பதற்காக மத்திய அரசு மீது திமுகவினர் பழி சுமத்துகின்றனர். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லியில் பாஜக தலைவர்களை சந்தித்தது குறித்து எதுவும் தெரியாது. ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்கு துரோகம் செய்தார் என்று கூறும் பழனிசாமிதான் உண்மையில் துரோகத்தின் வடிவம். தனியாக கட்சி நடத்துவதால் நாங்கள் அதிமுகவில் இணைய வேண்டிய அவசியம் இல்லை என டிடிவி.தினகரன் தெரிவித்தார்.

சீமான்: திமுக அழிக்க வேண்டும் என்ற தம்பி விஜய்யின் நிலைப்பாட்டை வரவேற்கிறேன்..!

திமுகவுடன் மோதி அந்த கட்சியை அழிக்க வேண்டும் என நினைக்கிற என் தம்பி விஜய்யின் நிலைப்பாட்டை நான் வரவேற்கிறேன் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். திருச்சியில் இன்று செய்தியாளர்களின் கேளிவிக்கு சீமான் பதிலளித்தார். அப்போது, 2026 சட்டசபை தேர்தலில் திமுகவை வீழ்த்துவோம் என தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் கூறியிருப்பதை வரவேற்கிறேன். திமுகவுடன் மோதி அந்த கட்சியை அழிக்க வேண்டும் என நினைக்கிற என் தம்பி விஜய்யின் நிலைப்பாட்டை நான் வரவேற்கிறேன்.

நான் ஆள் சேர்த்துக் கொண்டு சண்டக்குப் போகிறவன் அல்ல. பிரபாகரனை வீழ்த்த உலக நாடுகளின் படையை துணை தேடி சிங்களர் வந்தனர்; ஆனால் அத்தனை படையையும் எதிர்க்க எந்த நாட்டிடம் உதவி கோரவில்லை பிரபாகரன். அதே மரபில் என் எதிரியை நான் தனியாகவே சந்திப்பேன். ஒரு நாய், 4 நாய்களை சேர்த்துக் கொண்டு வேட்டைக்கு போனால் சரி; ஆனால் ஒரு புலி, 10 புலிகளை சேர்த்துக் கொண்டு வேட்டைக்கு போனால் நன்றாக இருக்காது.

தனித்து நிற்பதற்குதான் வீரமும் துணிவும் தேவை. நாங்கள் வீரர்கள்; தனித்து நிற்கிறோம்; மோதுகிறோம். கொள்கையே இல்லாமல் எப்படி கூட்டணி அமைக்க முடியும் என யாரும் கேள்வி கேட்பதும் இல்லை; கூட்டணி வைத்தால்தான் வெல்ல முடியும் என்பது மரபா? சட்டமா? நாங்கள் யார் எதிரி என்பதை தீர்மானித்துவிட்டுதான் களத்துக்கு வந்தவர்கள்.

யாரை எதிர்க்கிறோம் என்பது தெரியாமல் அரிவாளை தூக்கிக் கொண்டு வீதியில் நின்று கொண்டு எவனை வெட்டலாம் என தேடவில்லை. யாரை வீழ்த்த வேண்டும் என்ற முடிவுடனேயே போருக்கு வந்துள்ளோம். அதனால் எங்களுக்கு எந்த குழப்பமும் இல்லை. அடுத்த 4 மாதங்களில் யார் யாருடன் கூட்டணி என்பது எல்லாம் தெரிந்துவிடும். பிரதமர் நரேந்திர மோடி வரும் 6-ந் தேதி தமிழகம் வருவது மக்களை சந்திக்கதான்.. என்னை சந்திக்க அல்ல. நான் அவரை சந்திக்க போவதும் இல்லை என சீமான் தெரிவித்தார்.

ஆர்.பி.உதயகுமார்: அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்த உடன் திமுக அமைச்சர்களுக்கு எல்லாம் காய்ச்சல்

டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்த உடன் திமுக அமைச்சர்களுக்கு எல்லாம் காய்ச்சல் வந்துவிட்டது என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். தமிழகத்தில் இன்றைக்கு சட்ட ஒழுங்கு மிகவும் சீர் கெட்டுவிட்டது, மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் காவலரின் உயிர் பறிக்கப்படுகிறது. போதைப்பொருள் குறித்து அறிவுரை சொன்ன உசிலம்பட்டியை சேர்ந்த காவலர் படுகொலை செய்யப்படுகிறார். இது குறித்து நீதி வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து பிரதான எதிர்க்கட்சியான அதிமுக அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறது. இது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கடமையாகும்.

கேள்வி நேரம் புரிந்து ஜீரோ ஹவரில் தான் கேள்வியை எழுப்பினோம், சபாநாயகரும் அனுமதி தந்தார். ஆனால் முதலமைச்சர் இதற்கு பதில் சொல்லாமல் முறையாக நாங்கள் கேள்வி கேட்கவில்லை என்று கூறுகிறார். நாங்கள் இதை கேள்வி நேரத்தில் கேட்கவில்லை. இது மக்களின் கோரிக்கையாகும். முதலமைச்சர் இதற்கு பதில் பேச மறுக்க காரணம் என்னவென்றால், உதயநிதி பேசும் பொழுது சட்டசபையில் அதிமுக இருக்கக் கூடாது என்று காவலர்களை வைத்து எங்களை வெளியே தூக்கிப் போட்டனர். ஜனநாயகம் எங்கே போய்விட்டது? சட்டமன்றத்தில் ஜனநாயகம் செத்துப் போய்விட்டது. உதயநிதி சிறப்பாக பேசுகிறார். அழகாக பேசுகிறார் என்று ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை.

குற்றம் குறைகளை சுட்டி காட்டும் ஆண்மகனாக எடப்பாடி பழனிசாமி உள்ளார். உதயநிதி மானிய கோரிக்கைக்கு காய்ச்சலால் வரவில்லை என்று கூறுகிறார்கள். டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்த உடன் திமுக அமைச்சர்களுக்கு எல்லாம் காய்ச்சல் வந்துவிட்டது. தமிழக பட்ஜெட்டில் ஒன்றும் இல்லை, நிதி அமைச்சர் அழகு தமிழில் பேசுகிறார்.

ஆனால் உள்ளே கடன் தான் உள்ளது. திமுக பட்ஜெட்டை LED திரையில் ஒளிபரப்பினார்கள். ஆனால் பார்க்க தான் ஆள் இல்லை. இன்றைக்கு விலைவாசி உயர்வு கடுமையாக உயர்ந்துள்ளது. மின்சார கட்டணம் உயர்ந்துவிட்டது, சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது, போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதை கட்டுப்படுத்த அரசுக்கு திராணி இல்லை. இதற்கு தீர்வு காண வேண்டும் என்றால் மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வரவேண்டும். மீண்டும் 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் முதலமைச்சராக வருவார் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி: திமுகவை வீழ்த்த வேண்டும்..! அதற்காக அதிமுக அனைத்து முயற்சிகளும் எடுக்கும்..!

திமுகவை வீழ்த்த வேண்டும், அதுதான் எங்களின் ஒரே குறிக்கோள். மக்கள் விரோத ஆட்சியான திமுகவை, தமிழகத்தில் இருந்து அகற்ற வேண்டும். அதற்காக அதிமுக அனைத்து முயற்சிகளையும் எடுக்கும்” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். டெல்​லியில் மத்​தி​ய உள்​துறை அமைச்​சர்​ அமித்​ ஷாவை நேற்​று சந்​தித்​தது மக்கள் பிரச்சினைகளுக்காக தான். மக்கள் பிரச்சினைகள் குறித்து கோரிக்கை மனுவை அளித்துள்ளோம். காலையிலே இது குறித்து விளக்கம் அளித்துவிட்டேன்.

எந்த கூட்டணியாவது நிலையாக இருந்ததுண்டா? , அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு கூட்டணியில் மாற்றம் ஏற்படும். அதை எப்படி இப்போது கூற முடியும். 2019 -ஆம் ஆண்டுக்கான கூட்டணியை பிப்ரவரி மாதத்தில் தான் அறிவித்தோம். தேர்தல் வரும்போது தான் ஒத்த கருத்தோடு இருக்கும் கட்சிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும். இப்போது கூட்டணி இருக்கிறதா, இல்லையா என கேட்டால் எப்படி பதில் சொல்ல முடியும்.

அமித் ஷா கூறியது அவரது கட்சியின் விருப்பம். அதிமுகவை பொறுத்தவரை கூட்டணி குறித்து முடிவு செய்யும் போது, அனைத்து பத்திரிகையாளர்களையும் அழைத்து தெரிவிக்கப்படும். அது குறித்து கவலையே பட வேண்டாம். எங்களுக்கு , திமுகவை வீழ்த்த வேண்டும். அதுதான் எங்களின் ஒரே குறிக்கோள். மக்கள் விரோத ஆட்சியான திமுகவை, தமிழகத்தில் இருந்து அகற்ற வேண்டும். அதற்காக அதிமுக அனைத்து முயற்சிகளையும் எடுக்கும்” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.