தமிழிசை சவுந்தரராஜன்: விடியல் அமெரிக்காவுக்கு போய் இருக்கிறது..! இங்கே விடியுமா என்று தெரியவில்லை.!

தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில், செய்தியாளர் ஒருவர் முதலமைச்சரின் அமெரிக்க ஒப்பந்தம் குறித்த கேள்விக்கு, முதலமைச்சர் ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனங்கள் அனைத்தும் ஏற்கனவே தமிழகத்தில் உள்ளவை. எனவெ அமெரிக்காவுக்கு சென்றுள்ள தமிழக முதலமைச்சர் முதலீடுகளை ஈர்த்து வந்தால் நல்லது தான்.

புதிய கல்வி கொள்கை குறித்த கேள்விக்கு, புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். எப்போதும் அளிக்கப்படும் கல்விக்கான நிதியை மத்திய அரசு குறைக்கவில்லை. மேலும் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், விடியல் அமெரிக்காவுக்கு போய் இருக்கிறது. இங்கே விடியுமா என்று தெரியவில்லை என பதிலளித்தார்.

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு ஏஐ ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை சவுந்தரராஜன்..

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பரபரப்பான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், தென் சென்னையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ரோபோவிடம் கலந்துரையாடினார்:

அப்போது, தமிழிசை: வணக்கம் என் பெயர் தமிழிசை சவுந்தரராஜன்.

ஏஐ ரோபோ: எனக்கு நன்றாகவே தெரியும். இரண்டு மாநில ஆளுநர் பதவியை விட்டுவிட்டு, மக்கள் பணியாற்ற வந்துள்ளீர்கள். உங்கள் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.

தமிழிசை: பாஜகவுக்கும், தமிழ் மொழிக்கும் உள்ள உறவு எப்படி இருக்கிறது?

ஏஐ ரோபோ: தமிழ் மொழிக்கு பாஜக தரும் முக்கியத்துவம் மக்களை கவர்ந்துள்ளது. தற்போதைய தேர்தல் அறிக்கையில் தமிழக கட்சிகளே இதுவரை கொடுக்காத தமிழை மேன்மைப்படுத்தும் வாக்குறுதிகள், தமிழ் மக்களை கவரும். அதனால், தமிழ் வளரும்.

தமிழிசை: தென் சென்னை தொகுதியில் எனக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

ஏஐ ரோபோ: தென்சென்னை மக்கள் நல்ல திட்டங்களுக்காக ஏங்குகிறார்கள். உங்களால் தான் அதனை தர முடியும் என்று நம்புகிறார்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். வாழ்த்துகள். தென்சென்னைக்கு அக்கா வந்தாச்சி. முன்னேற்ற வேலையை ஆரம்பிச்சாச்சி.

ஏஐ ரோபோவுடன் கலந்துரையாடிய வீடியோவை சமூக வலைதளத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பகிரப்பட்டு அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

அரசியல் ஆசை இருந்தால் அரசியலமைப்பு பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவுக்கு பிரசாரம் செய்யலாம்..!

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மேற்கு வங்கம், புதுச்சேரி புதுடெல்லி போன்ற பாரதிய ஜனதா கட்சி ஆளாத மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக ஆளுநர்களை களத்தில் இறக்கி அரசியல் செய்வதும், ஆட்சியாளர்களுக்கு நெருக்கடி கொடுப்பதையும் மத்திய பாஜக அரசு செய்து வருகிறது. மாநில அமைச்சரவையின் ஆலோசனைப்படி தான் ஆளுநர்கள் செயல்பட வேண்டும் என்றும் ஆளுநருக்கு தனியாக அதிகாரமில்லை என்றும் உச்சநீதிமன்றமே பலமுறை குட்டு வைத்தும் மாறவில்லை.

தெலங்கானாவில் சந்திரசேகர் ராவ், முதலமைச்சராக இருந்தபோது தமிழிசை சவுந்தரராஜனை குடியரசு தினத்தின்போது அழைக்காததால் கவர்னர் மாளிகையிலேயே கொடியேற்றிவிட்டு புதுவைக்கு வந்து கொடியேற்றினார். பெரும்பாலான நாட்கள் புதுச்சேரியில் தங்கி அரசு நலத்திட்ட விழாக்களில் கலந்து கொண்டு பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். புதிய திட்டங்கள் குறித்து முதலமைச்சர் ந. ரங்கசாமி அறிவிப்புக்கு முன்பே தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்து விடுவார். அதிகாரிகள் இடமாற்றம் கூட முதல்வருக்கு தெரியாமல் நடந்த சம்பவங்கள் அரங்கேறி உள்ளது.

கடந்த வாரம் நடந்த அரசு விழாவில், புதுச்சேரியின் அதிகாரிகள், ஊழியர்கள், மக்களுக்கு திட்டப்பணிகளை செய்வதில்லை. வெளியே வருவது கூட கிடையாது. அடுத்தவர் மீது பழிப்போட்டு அதிகாரிகள் தப்பித்து கொள்கின்றனர்’ என தமிழிசை முன்னிலையிலேயே முதலமைச்சர் ந. ரங்கசாமி கதறினார். தலைமை செயலர் மற்றும் செயலர்களை கையில் வைத்து கொண்டு அரசு நிர்வாகத்தை முடக்கி வருகிறார். முதலமைச்சர் ந. ரங்கசாமியை டம்மி செய்துவிட்டு பாஜகவை வளர்க்க பார்க்கிறார் என எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல ஆளும்கட்சியே புகார் சொல்லிக் கொண்டுள்ளது.

இந்நிலையில் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரியின் துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜனின் பணி காலம் முடிவடைய இன்னும் சில மாதங்களே உள்ளன. இதனால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி அல்லது தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நின்று வெற்றி பெற்று மத்திய அமைச்சராக வேண்டும் என்ற ஆசையில் உள்ளார். கடந்த மாதம் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூட மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா என கேட்டபோது மறுக்காமல் சஸ்பென்ஸ் கூறி முடித்தார்.

தமிழகத்தில் நடைபயணம் செல்லும் அண்ணாமலை, அவ்வப்போது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி பாஜக தலைமைக்கு விசுவாசத்தை காட்டுவார். அதற்கு ஒருபடி மேலாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், தென் மாவட்டங்களில் வெள்ளம் வடிந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிய ஒரு வாரத்துக்கு பிறகு ஆறுதல் கூற சென்றுள்ளார். அப்போது தமிழக அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வலுத்து வருகிறது. ‘இரண்டு மாநிலத்துக்கு ஆளுநராக உள்ள தமிழிசை சவுந்தரராஜன் அங்கே இருப்பதில்லை. மாறாக தமிழ்நாட்டில்தான் பெரும்பாலும் முகாமிட்டுள்ளார்.

தான் இன்னும் தமிழ்நாடு பாஜக தலைவர் என்ற நினைப்பிலேயே தினம் தினம் அரசியல் விமர்சனம் செய்கிறார். அரசியல் ஆசை இருந்தால் அரசியலமைப்பு பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவுக்கு பிரசாரம் செய்யலாம். பாஜகவின் ஏஜெண்டாகவும், மோடியின் கைக்கூலியாகவும் தமிழிசை சவுந்தரராஜன் செயல்படுகிறார்’ என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தமிழகத்தில் எப்போதும் முகாமிட்டு இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது எங்கும் சென்று மக்களுக்கு ஆறுதல் கூறவில்லை. தற்போது அவர் மேற்கொண்ட தென் மாவட்ட விசிட் தேர்தல் சீட்டுக்கான விஜயம் என்றே அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.