சீமான்: “வருண்குமார் திமுக ஐடி விங்கில் வேலை செய்யக் கூடாது…!”

திருவாரூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, திருச்சி காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் வழக்கு தொடுப்பதாக கூறியிருப்பது தொடர்பான கேள்விக்கு, “ஏற்கெனவே என் மீது 138 வழக்குகள் உள்ளன. அதை அதிகப்படுத்தி 200 ஆக்கிவிடலாம் என்று நினைக்கிறார். டபுள் செஞ்சுரி அடித்தார் சீமான் என்று வரலாற்றில் வரவேண்டும் அல்லவா. அவர் ஐபிஎஸ் அதிகாரியாக இயங்க வேண்டும். திமுகவின் ஐடி விங்கில் வேலை செய்யக் கூடாது.

நான் பார்க்காத வழக்கா? அவர் அதிகாரத்தின் ஒரு புள்ளி. நான் அதிகாரத்தையே எதிர்த்து சண்டை செய்து கொண்டிருக்கிறேன். மத்திய அரசு, மாநில அரசை எதிர்த்து சண்டை செய்து கொண்டிருக்கிறேன். அகில உலகத்தை எதிர்த்து சண்டை செய்தவரின் மகன் நான். நீ எம்மாத்திரம். ஃஎப்ஐஆர் போடு, என்னத்தையாவது போடு, என் வீட்டில் ஐந்தாறு குப்பைக் கூடைகள் இருக்கிறது, நான் கிழித்துப் போட்டுவிட்டு போய்க்கொண்டே இருப்பேன்,” என சீமான் தெரிவித்தார்.

வருண் குமார் எக்ஸ் தளத்தில் இருந்து தற்காலிகமாக விலகல்.. !

முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் மீது திருச்சி காவல்துறை நடவடிக்கை எடுத்தனர். இதன் தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் திருச்சி காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரை விமர்சனம் செய்தனர்.

இது போன்ற விமர்சனங்கள் குறித்து சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் எச்சரித்து இருந்தார். எனினும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சிலர் காவல் கண்காணிப்பாளர் மட்டுமல்லாது அவரது குடும்பத்தினர் மீதும் விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், இதுதொடர்பாக காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் இன்று தனது எக்ஸ் தளத்தில் 4 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: “ஒரு சாமானிய குடும்பப் பின்னணியிலிருந்து வந்த நான் சாமானிய மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முனைப்புடன் செயலாற்றி வருகிறேன்.

2021-ம் ஆண்டு யூடியூபர் ஒருவர் ஒரு அரசியல் கட்சி பின்புலத்தோடு பொய் செய்திகளைப் பரப்பி திருவள்ளுர், காஞ்சிபுரம். செங்கல்பட்டு மாவட்டங்களில் பெரிய அளவில் சட்டம் – ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தினார். அப்போது, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த நான் அந்த யூடியூபரை கைது செய்து, பிரச்சினையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு குண்டர் சட்டத்தில் அடைத்தேன்.

சமீபத்தில், அதே யூடியூபர் பதிவு செய்த அவதூறுகளால் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். சட்ட அடிப்படையில் பணியாற்றியதற்காக, அந்த யூடியூபர் சார்ந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர், பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் என்னைக் கடுமையாகச் சாடினார்.

அது விமர்சனைத்தையும் தாண்டி தீவிர அவதூறு கோணத்தில் இருந்தது. எனவே, அதற்கு எதிராக சிவில் மற்றும் கிரிமினல் நோட்டீஸை என் வழக்கறிஞர் மூலம் அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்பினேன். நான் சட்டப்படி இந்த நோட்டீஸ் அனுப்பிய ஒரே காரணத்துக்காக என்னைத் தாண்டி என் குடும்பத்தினர், பெண்கள், குழந்தைகள் என என்னைச் சார்ந்தவர்கள் மீது வசைகளையும், ஆபாசமான, அவதூறான செய்திகளையும், அருவருப்பான வாக்கியங்களுடன் எக்ஸ் தளத்தில் பரப்பினர்.

என் குழந்தைகள் மற்றும் என் குடும்ப பெண்களின் புகைப்படங்களும் தரம்தாழ்ந்து ஆபாசமாகச் சித்தரிக்கப்பட்டது. இது ஒரு கட்டத்தில் என் குடும்பத்தினருக்கே கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு அச்சுறுத்தலாக உருமாறியது. இவ்வாறு தொடர்ந்து ஆபாச சித்தரிப்பில் ஈடுபடும் இந்த கணக்குகளை ஆராயும்போது இவை அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளரில் தொடங்கி மாநில பொறுப்பாளர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் தூண்டுதலால் இயக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

ஏனெனில், இவை அனைத்தும் போலிக் கணக்குகளாகவும் தொடர்ந்து இதே வேலையைச் செய்து வருபவையாகவும் உள்ளன. அதிலும் பல போலி கணக்குகள் அந்த கட்சியின் தூண்டுதலின் காரணத்தினாலேயே வெளிநாடுகளில் வாழும் தமிழ் தெரிந்த நபர்களுக்கு பணம் கொடுத்து ஆபாச பதிவுகளை பதிவிட உத்தரவிடப்பட்டதாக தெரியவருகிறது. நான் இந்த விஷயத்தில் அளித்த 3 புகார்களில் 3 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சைபர் க்ரைம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

நானும், எனது மனைவி வந்திதா பாண்டேவும் தமிழகத்தில் மத்திய காவல் மண்டலத்தில் முக்கிய இரு மாவட்டங்களில் (திருச்சி, புதுக்கோட்டை) காவல் கண்காணிப்பாளர்களாக பணிபுரிகிறோம். பொது வாழ்வில் இருக்கும் எங்களுக்கு இதுபோன்ற தொடர் ஆபாச தாக்குதல்கள் ஒரு பொருட்டே அல்ல. இருப்பினும் இது எங்கள் குடும்பத்தினரை பாதித்துள்ளது.

நிஜவாழ்வில் பலரை எதிர்கொள்ளும் சூழலில் இந்த இணையக் கூலிப்படையை எதிர்கொள்வது எங்களுக்கு பொருட்டல்ல. ஆனால், ஒரு சராசரி குடும்ப நபராக எங்கள் மூன்று குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மீதான அக்கறைக்காக இந்த எக்ஸ் இணைய உரையாடல்களிலிருந்து தற்காலிகமாக நானும், எனது மனைவியும் விலக முடிவு செய்துள்ளோம். எங்களது இந்த முடிவு தற்காலிகமானது என்றபோதும், நாங்கள் இதை பயத்தினாலோ அருவருப்பினாலோ மேற்கொள்ளவில்லை.

ஒரு சாதாரண குடிமகனாக இணையத்தில் எழுந்துள்ள இதுபோன்ற கூலிப்படை தாக்குதலைக் கண்டு மிகவும் அக்கறையும், அறச்சீற்றமும் கொள்கிறேன். ஒரு மாவட்ட கண்காணிப்பாளராக உள்ள பெண்ணையே இவர்கள் இந்தளவுக்குத் தாக்குகிறார்கள் என்றால் சாதாரண மக்களையும், பெண்களையும் என்னவெல்லாம் செய்வார்கள்?.

இன்றுவரை பதிவிட்ட எந்த ஆபாச பதிவுகளையும் நீக்கவில்லை. வருத்தம் தெரிவிக்கவுமில்லை, மன்னிப்பும் கேட்கவில்லை எனும்போது இந்த கூட்டத்துக்கு சட்டத்தின் முன் தகுந்த பாடம் புகட்ட வேண்டியுள்ளது. இதுதொடர்பான வழக்குகளில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், விசாரணையும், கைது நடவடிக்கையும் தொடரும்.

ஆபாசம் மற்றும் அவதூறு பரப்பிய அனைத்து போலி கணக்குகளையும் அதன்பின் ஒளிந்து கொண்டு ஆபாசம் பரப்பும் விஷமிகளையும் அவர்களை கூலிக்காக தூண்டிவிடும் அந்த கட்சி பொறுப்பாளர்களையும் சட்டத்தின் படி வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் நிறுத்துவேன்.

இதுபோக அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் 2 பொறுப்பாளர்கள் மீது ரூ.2 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர உள்ளேன். எந்தவித சமரசமும் இன்றி இந்த சட்ட நடவடிக்கையை மேற்கொள்வேன். சமூக வலைதளங்கள் இன்று குழந்தைகள் உட்பட அனைவரும் பயன்படுத்தும் சூழலில், நாம் அதில் இதுபோன்ற அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பாகவும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். ஆபாச பதிவுகளை நீக்காத, மன்னிப்புக் கேட்காத கூட்டத்துக்கு சட்டப்படி தகுந்த பாடம் புகட்ட வேண்டியுள்ளது.” என திருச்சி காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் பதிவிட்டுள்ளார்.

சீமான்: “நீ எம்மாத்திரம் FIR போடு, நான் கிழித்து குப்பையில் போட்டுவிட்டு போய்க்கொண்டே இருப்பேன்..!”

திருவாரூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, திருச்சி காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் வழக்கு தொடுப்பதாக கூறியிருப்பது தொடர்பான கேள்விக்கு, “ஏற்கெனவே என் மீது 138 வழக்குகள் உள்ளன. அதை அதிகப்படுத்தி 200 ஆக்கிவிடலாம் என்று நினைக்கிறார். டபுள் செஞ்சுரி அடித்தார் சீமான் என்று வரலாற்றில் வரவேண்டும் அல்லவா. அவர் ஐபிஎஸ் அதிகாரியாக இயங்க வேண்டும். திமுகவின் ஐடி விங்கில் வேலை செய்யக் கூடாது.

நான் பார்க்காத வழக்கா? அவர் அதிகாரத்தின் ஒரு புள்ளி. நான் அதிகாரத்தையே எதிர்த்து சண்டை செய்து கொண்டிருக்கிறேன். மத்திய அரசு, மாநில அரசை எதிர்த்து சண்டை செய்து கொண்டிருக்கிறேன். அகில உலகத்தை எதிர்த்து சண்டை செய்தவரின் மகன் நான். நீ எம்மாத்திரம். ஃஎப்ஐஆர் போடு, என்னத்தையாவது போடு, என் வீட்டில் ஐந்தாறு குப்பைக் கூடைகள் இருக்கிறது, நான் கிழித்துப் போட்டுவிட்டு போய்க்கொண்டே இருப்பேன்,” என சீமான் தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சி சீமான் மற்றும் 2 பொறுப்பாளர்கள் மீது ரூ.2 கோடி மானநஷ்ட வழக்கு..!

முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் மீது திருச்சி காவல்துறை நடவடிக்கை எடுத்தனர். இதன் தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் திருச்சி காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரை விமர்சனம் செய்தனர்.

இது போன்ற விமர்சனங்கள் குறித்து சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் எச்சரித்து இருந்தார். எனினும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சிலர் காவல் கண்காணிப்பாளர் மட்டுமல்லாது அவரது குடும்பத்தினர் மீதும் விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், இதுதொடர்பாக காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் இன்று தனது எக்ஸ் தளத்தில் 4 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: “ஒரு சாமானிய குடும்பப் பின்னணியிலிருந்து வந்த நான் சாமானிய மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முனைப்புடன் செயலாற்றி வருகிறேன்.

2021-ம் ஆண்டு யூடியூபர் ஒருவர் ஒரு அரசியல் கட்சி பின்புலத்தோடு பொய் செய்திகளைப் பரப்பி திருவள்ளுர், காஞ்சிபுரம். செங்கல்பட்டு மாவட்டங்களில் பெரிய அளவில் சட்டம் – ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தினார். அப்போது, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த நான் அந்த யூடியூபரை கைது செய்து, பிரச்சினையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு குண்டர் சட்டத்தில் அடைத்தேன்.

சமீபத்தில், அதே யூடியூபர் பதிவு செய்த அவதூறுகளால் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். சட்ட அடிப்படையில் பணியாற்றியதற்காக, அந்த யூடியூபர் சார்ந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர், பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் என்னைக் கடுமையாகச் சாடினார்.

அது விமர்சனைத்தையும் தாண்டி தீவிர அவதூறு கோணத்தில் இருந்தது. எனவே, அதற்கு எதிராக சிவில் மற்றும் கிரிமினல் நோட்டீஸை என் வழக்கறிஞர் மூலம் அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்பினேன். நான் சட்டப்படி இந்த நோட்டீஸ் அனுப்பிய ஒரே காரணத்துக்காக என்னைத் தாண்டி என் குடும்பத்தினர், பெண்கள், குழந்தைகள் என என்னைச் சார்ந்தவர்கள் மீது வசைகளையும், ஆபாசமான, அவதூறான செய்திகளையும், அருவருப்பான வாக்கியங்களுடன் எக்ஸ் தளத்தில் பரப்பினர்.

என் குழந்தைகள் மற்றும் என் குடும்ப பெண்களின் புகைப்படங்களும் தரம்தாழ்ந்து ஆபாசமாகச் சித்தரிக்கப்பட்டது. இது ஒரு கட்டத்தில் என் குடும்பத்தினருக்கே கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு அச்சுறுத்தலாக உருமாறியது. இவ்வாறு தொடர்ந்து ஆபாச சித்தரிப்பில் ஈடுபடும் இந்த கணக்குகளை ஆராயும்போது இவை அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளரில் தொடங்கி மாநில பொறுப்பாளர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் தூண்டுதலால் இயக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

ஏனெனில், இவை அனைத்தும் போலிக் கணக்குகளாகவும் தொடர்ந்து இதே வேலையைச் செய்து வருபவையாகவும் உள்ளன. அதிலும் பல போலி கணக்குகள் அந்த கட்சியின் தூண்டுதலின் காரணத்தினாலேயே வெளிநாடுகளில் வாழும் தமிழ் தெரிந்த நபர்களுக்கு பணம் கொடுத்து ஆபாச பதிவுகளை பதிவிட உத்தரவிடப்பட்டதாக தெரியவருகிறது. நான் இந்த விஷயத்தில் அளித்த 3 புகார்களில் 3 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சைபர் க்ரைம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

நானும், எனது மனைவி வந்திதா பாண்டேவும் தமிழகத்தில் மத்திய காவல் மண்டலத்தில் முக்கிய இரு மாவட்டங்களில் (திருச்சி, புதுக்கோட்டை) காவல் கண்காணிப்பாளர்களாக பணிபுரிகிறோம். பொது வாழ்வில் இருக்கும் எங்களுக்கு இதுபோன்ற தொடர் ஆபாச தாக்குதல்கள் ஒரு பொருட்டே அல்ல. இருப்பினும் இது எங்கள் குடும்பத்தினரை பாதித்துள்ளது.

நிஜவாழ்வில் பலரை எதிர்கொள்ளும் சூழலில் இந்த இணையக் கூலிப்படையை எதிர்கொள்வது எங்களுக்கு பொருட்டல்ல. ஆனால், ஒரு சராசரி குடும்ப நபராக எங்கள் மூன்று குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மீதான அக்கறைக்காக இந்த எக்ஸ் இணைய உரையாடல்களிலிருந்து தற்காலிகமாக நானும், எனது மனைவியும் விலக முடிவு செய்துள்ளோம். எங்களது இந்த முடிவு தற்காலிகமானது என்றபோதும், நாங்கள் இதை பயத்தினாலோ அருவருப்பினாலோ மேற்கொள்ளவில்லை.

ஒரு சாதாரண குடிமகனாக இணையத்தில் எழுந்துள்ள இதுபோன்ற கூலிப்படை தாக்குதலைக் கண்டு மிகவும் அக்கறையும், அறச்சீற்றமும் கொள்கிறேன். ஒரு மாவட்ட கண்காணிப்பாளராக உள்ள பெண்ணையே இவர்கள் இந்தளவுக்குத் தாக்குகிறார்கள் என்றால் சாதாரண மக்களையும், பெண்களையும் என்னவெல்லாம் செய்வார்கள்?.

இன்றுவரை பதிவிட்ட எந்த ஆபாச பதிவுகளையும் நீக்கவில்லை. வருத்தம் தெரிவிக்கவுமில்லை, மன்னிப்பும் கேட்கவில்லை எனும்போது இந்த கூட்டத்துக்கு சட்டத்தின் முன் தகுந்த பாடம் புகட்ட வேண்டியுள்ளது. இதுதொடர்பான வழக்குகளில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், விசாரணையும், கைது நடவடிக்கையும் தொடரும்.

ஆபாசம் மற்றும் அவதூறு பரப்பிய அனைத்து போலி கணக்குகளையும் அதன்பின் ஒளிந்து கொண்டு ஆபாசம் பரப்பும் விஷமிகளையும் அவர்களை கூலிக்காக தூண்டிவிடும் அந்த கட்சி பொறுப்பாளர்களையும் சட்டத்தின் படி வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் நிறுத்துவேன்.

இதுபோக அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் 2 பொறுப்பாளர்கள் மீது ரூ.2 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர உள்ளேன். எந்தவித சமரசமும் இன்றி இந்த சட்ட நடவடிக்கையை மேற்கொள்வேன். சமூக வலைதளங்கள் இன்று குழந்தைகள் உட்பட அனைவரும் பயன்படுத்தும் சூழலில், நாம் அதில் இதுபோன்ற அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பாகவும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். ஆபாச பதிவுகளை நீக்காத, மன்னிப்புக் கேட்காத கூட்டத்துக்கு சட்டப்படி தகுந்த பாடம் புகட்ட வேண்டியுள்ளது.” என திருச்சி காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் பதிவிட்டுள்ளார்.

சீமான் விரைவில் கைதாகிறாரா..!? தமிழக காவல்துறை தீவிர ஆலோசனையில் ..!

நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அபிநயாவை ஆதரித்து பிரச்சாரம் செய்த போது அதிமுக சார்பாக ஏற்கனவே தயாரிக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதலவர் கருணாநிதி விமர்சிக்கும் சண்டாளன் என்ற பாடல் ஒன்றை பாடினார். இது சமூக வலைதளங்களில் வைரலானது. சாண்டாளன் என்ற வார்த்தை ஆதி திராவிட பிரிவில் ஒரு அமைப்பாகும். இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதையடுத்து தென்காசியில் வைத்து நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார்.

ஆனால் அன்றைய தினமே சாட்டை துரைமுருகனை நீதிமன்றம் விடுதலை செய்ததது. ஆனால் அடுத்த ஒரு சில தினங்களில் சாட்டை துரைமுருகன் பேசிய ஆடியோக்கள் அடுத்தடுத்து வெளியானது. குறிப்பாக சீமான், இயக்குனர் அமீர் உள்ளிட்டோருடன் பேசிய ஆடியோக்கள் இணையதளத்தில் வீக் ஆனது. இதற்கு சாட்டை துரைமுருகன் இதற்கெல்லாம் காரணம் திருச்சி எஸ்.பி. வருண்குமார் என குற்றம்சாட்டினார். ஏற்கனவே பல முறை சாட்டை துரைமுருகனை எஸ்.பி .வருண்குமர் பல வழக்குகளில் கைதும் செய்துள்ளார்.

மேலும் கடந்த ஆகஸ்ட் 4 -ஆம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் குறித்து பொதுமேடையில் தொண்டர்கள் மத்தியில் அவ்வளவு ஆபாச வார்த்தைகளை பேசிய சீமானுக்கு கண்டனங்கள் குவிந்தது. தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

தலைவன் எவ்வழியோ…என்பதற்கு ஏற்றாற்போல் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களும் அதே போல் அருவருக்கத்தக்க வகையில் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி அவதூறு பரப்பி வருகின்றனர். இந்த சூழலில் இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் புகார் அளித்தார். அந்த புகாரில், “நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் கண்ணன் என்பவர் எனது குடும்பத்திற்கு ஆபாச வார்த்தைகளால் மிரட்டல் விடுத்துள்ளார்.

இவை அனைத்தும் முழுக்க முழுக்க இடும்பாவனம் கார்த்திக், சாட்டை துரைமுருகன், சீமானின் தூண்டுதலிலேயே நடக்கிறது. குறிப்பாக திட்டமிட்டு என் மீதும் என் குடும்பத்தின் மீதும் கட்டவிழ்க்கப்பட்ட வன்முறை ஆகும். காவல்துறை கண்காணிப்பாளர் குடும்பத்திற்கே கொலை மிரட்டல், குறிப்பாக என் தாய்க்கும், என் மனைவிக்கும் ஆபாசப் பாடல் மூலம் அவதூறு பரப்பி உள்ளார்.

என் மனைவி ஒரு சாதாரண குடும்பப் பெண் மட்டும் இல்லை, அவர் ஒரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆவார். ஆகையால் என்னையும், என் குடும்பத்தினருக்கும், கொலை மிரட்டல் விடுத்தது மட்டும் அல்ல, ஆபாச வார்த்தைகளால் சமூக வலைதளங்களில் கொச்சைப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த சமயத்தில்தான் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், சீமானுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், அவரது மனைவி, அவரது குடும்பத்தினர் குறித்து சமூக வலைதள பக்கத்தில் ஆபாசமாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய சீமான் திருச்சி எஸ்பி வருண்குமார் பெயரைக் குறிப்பிடாமல் ஜாதிய நோக்கத்துடன் அவர் செயல்படுவதாக பகிரங்கமாகவும் விமர்சித்தார். இதனையடுத்து திருச்சியில் பல இடங்களில் காவல் கண்கண்ணிப்பாளர் வருண்குமாருக்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் நோட்டீஸ் ஒட்டினர்.

இந்நிலையில் இது தொடர்பாக திருச்சி காவல் கண்கணிப்பாளர் வருண்குமார் வெளியிட்டுள்ள பதிவில், அரசியலுக்கும் இந்த விஷயத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனது வீட்டில் உள்ள பெண்களையும், எனது குழந்தைகளையும், எனது குடும்பத்தாரையும் அவதூறு பேசி, மிரட்டல் விடுத்த நபர்களை விடமாட்டேன். சட்டத்தின் முன்னால் கண்டிப்பாக கொண்டு வந்து நிறுத்துவேன். என் சட்டப் போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளார்.

மேலும் இதை தூண்டி விட்ட நபர்களையும் நீதித்துறையின் முன் கொண்டு வந்து நிறுத்துவேன். வெளிநாடுகளில் இருந்து ஆபாசமாக பதிவு செய்யும் போலி ஐடிகளையும் விடப்போவதில்லை. சட்டத்தின் மேல், நீதித்துறையின் மேல், 100% எனது நம்பிக்கையை வைக்கிறேன். ஆபாசத்திற்கும் அவதூருக்கும் இறுதி முடிவுரை எழுதுவோம் என கூறி இருந்தார். இதனையடுத்து சீமான், சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்ட 22 பேர் மீது வழக்கு பதிவு செய்ய்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து திருச்சி மாநகர காவல்துறை நாம் தமிழர் கட்சியை சேர்ந்த கண்ணன் என்பவரை அதிரடியாக கைது செய்து, திருச்சி சைபர் க்ரைம் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்ய தீவிர ஆலோசனையில் தமிழக காவல்துறை ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் குடும்பம் குறித்து ஆபாச பதிவு..! தட்டி தூக்கிய காவல்துறை.. !

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன், குறிப்பிட்ட சமூக மக்களை இழிவாக பாடல் பாடி வீடியோ வெளியிட்டதாக கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் நீதிபதியால் கண்டிக்கப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இவரை தொடர்ந்து எந்த வார்த்தை பேசக்கூடாது என்று நீதிபதி உத்தரவிட்டாரோ, அதே வார்த்தையை பொதுமேடையில் பேசி சர்ச்சையில் சீமான் சிக்கினார்.

கடந்த ஆகஸ்ட் 4 -ஆம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் குறித்து பொதுமேடையில் தொண்டர்கள் மத்தியில் அவ்வளவு ஆபாச வார்த்தைகளை பேசிய சீமானுக்கு கண்டனங்கள் குவிந்தது. தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்த சமயத்தில்தான் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், சீமானுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.

மேலும் இப்படிப்பட்ட வெறுப்பு பேச்சுகளை தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் தனது சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார். சீமானுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பியதால், எஸ்.பி. வருண்குமார் மீது நாதக நிர்வாகிகள் அவதூறு பரப்பி வருகின்றனர். காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், அவரது மனைவி, அவரது குடும்பத்தினர் குறித்து சமூக வலைதள பக்கத்தில் ஆபாசமாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தலைவன் எவ்வழியோ…என்பதற்கு ஏற்றாற்போல் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களும் அதே போல் அருவருக்கத்தக்க வகையில் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி அவதூறு பரப்பி வருகின்றனர். இந்த சூழலில் இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் புகார் அளித்தார். அந்த புகாரில், “நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் கண்ணன் என்பவர் எனது குடும்பத்திற்கு ஆபாச வார்த்தைகளால் மிரட்டல் விடுத்துள்ளார்.

இவை அனைத்தும் முழுக்க முழுக்க இடும்பாவனம் கார்த்திக், சாட்டை துரைமுருகன், சீமானின் தூண்டுதலிலேயே நடக்கிறது. குறிப்பாக திட்டமிட்டு என் மீதும் என் குடும்பத்தின் மீதும் கட்டவிழ்க்கப்பட்ட வன்முறை ஆகும். காவல்துறை கண்காணிப்பாளர் குடும்பத்திற்கே கொலை மிரட்டல், குறிப்பாக என் தாய்க்கும், என் மனைவிக்கும் ஆபாசப் பாடல் மூலம் அவதூறு பரப்பி உள்ளார்.

என் மனைவி ஒரு சாதாரண குடும்பப் பெண் மட்டும் இல்லை, அவர் ஒரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆவார். ஆகையால் என்னையும், என் குடும்பத்தினருக்கும், கொலை மிரட்டல் விடுத்தது மட்டும் அல்ல, ஆபாச வார்த்தைகளால் சமூக வலைதளங்களில் கொச்சைப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.இதனை தொடர்ந்து திருச்சி மாநகர காவல்துறை நாம் தமிழர் கட்சியை சேர்ந்த கண்ணன் என்பவரை அதிரடியாக கைது செய்து, திருச்சி சைபர் க்ரைம் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சீமான் கோரிக்கை: மோடி அரசின் மற்றுமொரு மதவெறி சூழ்ச்சியே புதிய வக்ஃபு வாரிய திருத்தச்சட்டம்

இந்தியாவில் பாதுகாப்புத் துறை, ரயில்வே ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக அதிகமான நிலங்களைக் கொண்டிருப்பது வக்ஃபு வாரியம் தான் என சொல்லப்படுகிறது. இந்த வக்ஃபு வாரியம் சொத்துக்கள் முஸ்லிம் சமுதாயப் செல்வந்தர்கள், பெருமக்களால் பொது மக்களின் பயன்பாட்டுக்காக இறையருள் நாடி, தங்கள் பகுதிகளில் இருக்கும் மசூதிகள், தர்காக்கள், மதரஸாக்கள் ஆகியவற்றின் பெயரில் தானமாக வழங்கப்பட்டவையே அசையும் சொத்துகளாகவும், அசையா சொத்துகளாகவும் வக்ஃபு சொத்துகள் இருக்கின்றன.

எனவே வக்ஃபு சொத்துக்களைக் கண்காணிப்பது அரசின் கடமை என்று கருதி, 1954-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் வக்பு சட்டம் இயற்றப் பட்டது. அதன் பிறகு, அனைத்து மாநிலங்களிலும் வக்ஃபு வாரியங்கள் 1958-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டன. 1954-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அந்தச் சட்டம், 1995-ம் ஆண்டு விரிவாக்கம் செய்யப்பட்டு, முழுமைப்படுத்தப்பட்டு, அந்தச் சட்ட விதிகளின் அடிப்படையில் அவற்றை கண்காணிக்கப்பட்டு, நிர்வகிக்கப்படுகின்றன. என வக்ஃபு சட்டம் 1995 குறிப்பிடப்படுகிறது.

இந்நிலையில், வக்ஃபு வாரியத்தின் நிர்வாக செயல்திறனை மேம்படுத்தவும், வக்ஃபு வாரியம் தொடர்பான பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும் வக்ஃபு சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டியது அவசியம் என்று கூறி, அதற்கான மசோதாவை மத்திய பாஜக அரசு கொண்டு வந்திருக்கிறது. ‘வக்ஃபு (திருத்தம்) மசோதா, 2024’ என்று பெயரிலான மசோதாவை, மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் தாக்கல் செய்தார். அதன்படி, ‘வக்ஃபு சட்டம், 1995 என்பது ஒருங்கிணைந்த வக்ஃபு மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மேம்பாடு சட்டம், 1995’ என்று அது பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. வக்ஃபு வாரியத்துக்கு நிலத்தைக் கொடுப்பவர், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் இஸ்லாம் மதத்தைத்ப் பின்பற்றுபவராக இருக்க வேண்டும்.

இந்த மசோதாவில், வக்ஃபு வாரியத்தில் முஸ்லிம் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்குவது, முஸ்லிம் அல்லாதவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன. வக்ஃபு கவுன்சிலிலும், மாநில அளவிலான வக்ஃபு வாரியத்திலும் முஸ்லிம் அல்லாத இரண்டு பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என்ற புதிய விதிமுறை கொண்டு வரப்படுகிறது.

இந்த மசோதாவில், மாவட்ட ஆட்சியருக்கு முக்கிய அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது, வக்ஃபு சட்டம் தொடர்பான பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. மாவட்ட ஆட்சியர் முஸ்லிமாக இல்லையென்றாலும், வக்ஃபு வாரியத்தின் சொத்து விவகாரங்களில் இறுதி முடிவுகளை அவரால் எடுக்க முடியும்.

வக்ஃபு சொத்துகள் இந்த மசேதாவின்படி, வக்ஃபு நிலத்தை அளவீடு செய்யும் கூடுதல் ஆணையரின் அதிகாரம் திரும்பப் பெறப்பட்டு, அதற்கு பதிலாக மாவட்ட ஆட்சியர் அல்லது துணை ஆணையரிடம் அந்தப் பொறுப்பு வழங்கப்படும். ‘மத்திய வலைத்தளம், தரவுத்தளம் மூலமாக வக்ஃபு வாரிய சொத்துகள் பதிவு முறைப்படுத்தப்பட வேண்டும். வக்ஃபு நிலங்களை டிஜிட்டல் முறையில் பட்டியலிடுவதற்கு சட்டத்தில் வழிவகுக்கப்படுகிறது. வக்ஃபு நிலமாக அறிவிக்கப்படும் முன்பு சம்பந்தப்பட்டோருக்கு தகவல் அளிக்கும் விதத்தில் சட்டத்தில் திருத்தம் செய்யப்படுகிறது.

போரா, அகாகானிஸ் ஆகிய பிரிவினருக்க தனி சொத்து வாரியம் உருவாக்கப்படும்‘ என்ற திருத்தங்கள் இந்த மசோதாவில் இடம்பெற்றிருக்கின்றன. வக்ஃபு சட்டத்தில் சுமார் 40 திருத்தங்கள் கொண்டுவரப்படுகின்றன. முஸ்லிம்களிடமிருந்து வக்ஃபு வாரிய சொத்துக்களை அபகரிப்பதற்கான, சட்டத் திருத்தங்களை பாஜக கொண்டுவருகிறது என்று இஸ்லாமிய அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் குற்றம்சாட்டுகின்றன. இந்தத் திருத்தங்கள் மூலமாக, வக்ஃபு வாரியத்தின் அதிகாரங்கள் குறைக்கப்படுவதாக விமர்சனம் எழுந்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வக்ஃபு வாரிய திருத்தச்சட்ட வரைவினை உடனடியாகத் திரும்பப்பெறாவிட்டால், நாடு தழுவிய மிகப்பெரிய புரட்சியை பாஜக அரசு எதிர்கொள்ள நேரிடும் என சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இந்திய ஒன்றியத்தை ஆளும் பாசிச பாஜக அரசு மக்களவையில் புதிய வக்ஃபு வாரிய திருத்தச்சட்ட வரைவை அறிமுகப் படுத்தியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. இசுலாமியப் பெருமக்களுக்குச் சொந்தமான நில உரிமையைப் பறித்து, அவர்களை நிலமற்ற ஏதிலிகளாக மாற்ற முயலும் மோடி அரசின் மற்றுமொரு மதவெறி சூழ்ச்சியே புதிய வக்ஃபு வாரிய திருத்தச்சட்ட வரைவாகும்.

ஓர் இறையை ஏற்று, நபி வழி நின்று, குறைந்தபட்சம் 5 ஆண்டுகளாக இசுலாமிய சமயத்தைப் பின்பற்றி வருபவர்கள், தாங்களாக விரும்பி இறை வழிபாட்டுப் பணிகளுக்கோ, அல்லது இறைவன் திருப்பெயரால் மக்கள் தொண்டு செய்வதற்கோ மனமுவந்து அளிக்கும் நன்கொடைகளே ‘வக்ஃப்’ என்பதாகும். இந்தியா என்றொரு நாடு விடுதலைப்பெற்று ஒருங்கிணைக்கப்படுவதற்கு முன்பிருந்தே, பல நூற்றாண்டுகளாக இசுலாமியச் செல்வந்தர்கள் பெருமளவில் தானமாக அளித்த நிலங்களே வக்ஃப் நிலங்களாகும். அவை முழுக்க முழுக்க இசுலாமியப் பெருமக்களது இறை வணக்கப் பணிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட நில உடைமைகளாகும். அவ்வாறு இசுலாமியச் செல்வந்தர்களால் இசுலாமிய இறைப்பணிக்காக வழங்கப்பட்ட உடைமைகளைப் பாதுகாக்க இசுலாமியச் சான்றோர்களால் நிர்வகிக்கப்படும் அறக்கட்டளைகள்தான் வக்ஃப் அமைப்புகள் ஆகும்.

இந்தியப் பெருநாடு விடுதலைப்பெற்ற பிறகு வக்ஃப் அமைப்புகளுக்குச் சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டு, மாநில அரசுகளின் மூலமாக வக்ஃப் வாரியங்கள் செயல்படுவதற்கும், வக்ஃப் சொத்துக்களைப் பாதுகாக்கவும், நேர்மையாக நிர்வகிக்கவும் 1954ஆம் ஆண்டு வக்ஃப் சட்டம் இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. தற்போது நாடு முழுவதும் அரசு அங்கீகாரம் பெற்ற 3 லட்சத்திற்கும் அதிகமான வக்ஃப் அறக்கட்டளைகள் செயல்பட்டுவருகின்றன. அவற்றை ஒருங்கிணைக்கவும், கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் அந்தந்த மாநில அரசின் கீழ் வக்ஃப் வாரியங்கள் செயல்பட்டுவருகின்றன.

மேலும், வக்ஃப் சட்டத்திலிருந்த குறைபாடுகளைக் களைவதற்காக ஏற்கனவே 1959, 1964, 1969, 1995ஆம் ஆண்டுகளில் தேவையான திருத்தங்களும் கொண்டுவரப்பட்டன. இறுதியாக 2013ஆம் ஆண்டு வக்ஃப் சட்டத்தைப் பல்வேறு நிலைகளில் ஆய்ந்து, அதிலிருந்த ஒருசில குறைகளையும் நீக்கத்தேவையான திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு, முழுமையான வக்ஃப் சட்டம் தற்போது நாடு முழுவதும் நடைமுறையில் உள்ளது. ஆனால், நாட்டு மக்களுக்குத் துளி நன்மையும் செய்யாத 10 ஆண்டுகால மோடி தலைமையிலான பாஜக ஆட்சி மெல்ல மெல்ல வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ள நிலையில், இந்து மதத்தினரிடம் இழந்த செல்வாக்கை மீட்பதற்காக மேற்கொள்ளப்படும் மற்றுமொரு மதவெறி சூழ்ச்சியே தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய வக்ஃபு வாரிய திருத்தச்சட்ட வரைவாகும்.

அதன்படி இசுலாமிய சமய சொத்துக்களைப் பாதுகாக்க முழுக்கவும் இசுலாமியர்கள் அங்கம் வகித்த வக்ஃபு வாரிய குழுக்களில், புதிதாக 2 மாற்று மதத்தினரை நியமிக்கவும், வக்ஃபு வாரிய நிலங்களை 12 ஆண்டுகளுக்கு மேல் ஆக்கிரமித்திருந்தால், அந்நிலங்களை ஆக்கிரமித்தவர்களே சொந்தமாக்கி பட்டா பெற்றுக்கொள்ள முடியும் என்பது உள்ளிட்ட 40 திருத்தங்களைக் கொண்டுவந்து வக்ஃபு வாரியத்தின் அதிகாரங்களை முற்று முழுதாக நீர்த்துப்போகச்செய்ய பாஜக அரசு முயல்கிறது.

குடியுரிமை திருத்தச்சட்டத்தைத் தொடர்ந்து, இசுலாமியர்களை நிலமற்ற அகதிகளாக, நாடற்ற நாடோடிகளாக மாற்றவே புதிய வக்ஃபு வாரிய திருத்தச்சட்ட வரைவினை பாஜக அரசு கொண்டுவந்துள்ளது. குடியுரிமை திருத்தச்சட்டம் மூலம் இசுலாமியர்களை இந்திய நாட்டிற்கு அந்நியமானவர்கள் என்று நிறுவத் துடித்த மதவாத பாஜக அரசின் முயற்சிக்கு மிகப்பெரிய இடையூறாக இருப்பது இசுலாமிய சமயத்தவரிடம் இருக்கும் லட்சக்கணக்கான ஏக்கர் வக்ஃப் நிலங்களாகும். இந்தியாவிலேயே பாதுகாப்புத்துறை மற்றும் தொடர்வண்டித்துறைக்கு அடுத்தபடியாக ஏறத்தாழ 10 லட்சம் ஏக்கர் அளவிற்கு நிலமுடையவர்களை இந்த நாட்டிற்குத் தொடர்பில்லாதவர்கள் என்று எப்படிக் கூற முடியும்? எனவே தான் சட்டத்தின் மூலம் அதை அபகரிக்க நினைக்கிறது பாசிச பாஜக அரசு.

வக்ஃபு வாரியம் என்பது இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட சட்டப்பூர்வ அமைப்பாகும். ஒன்றிய மற்றும் மாநில அளவில் வக்ஃபு வாரியங்கள் உள்ளன. அதில் நியமிக்கப்படும் உறுப்பினர்கள் அரசால் நியமிக்கப்படுபவர்கள். வக்ஃபு தீர்ப்பாயம் வழங்கும் முடிவுகள் தவறெனக் கருதினால் உயர்நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் மேல் முறையீடும் செய்ய முடியும். எனவே வக்ஃபு தீர்ப்பாயம் வழங்கும் முடிவுகளுக்கு எதிராக யாரும் நீதிமன்றத்தை அணுக முடியாது என்பதும், வக்ஃபு வாரியம் யாராலும் கட்டுப்படுத்த முடியாத கட்டற்ற அதிகாரம் படைத்த தன்னாட்சி அமைப்பு போலவும் பாஜக பரப்புவது அனைத்தும் பச்சைப் பொய்யாகும். உண்மையில் வக்ஃபு சொத்துக்களால் பயனடைவது இசுலாமியர்கள் மட்டுமல்ல.

குத்தகைக்கு விடப்பட்டுள்ள வக்ஃபு வாரிய நிலங்கள், வாடகைக்கு விடப்பட்டுள்ள வணிகக் கடைகள், மண்டபங்கள், ஓய்வெடுக்கும் அறைகள், மருத்துவ சேவைகள், அவசர ஊர்திகள், பேரிடர்காலத் துயர்துடைப்பு உதவிகள் என அனைத்தும் இசுலாமியர்களுக்கு மட்டுமல்ல அதைவிட அதிகமாக இந்து மக்களுக்கும், ஏனைய மதத்தினருக்கும் உதவவும் பயன்படுத்தப்படுகிறது என்பதே நடைமுறை உண்மையாகும். வக்ஃபு சட்டத்தில் குறைகள் உள்ளது என்றால் அதைக் கூற வேண்டியது இசுலாமியப் பெருமக்கள்தான். தங்களுக்கு இத்தகைய திருத்தங்கள் வேண்டும் என்று கேட்க உரிமை பெற்றவர்கள் அவர்கள்தான். ஒரு சில இடங்களில் நடைபெற்ற தவறுகளை வைத்து ஒட்டுமொத்த அமைப்பையும் சீர்குலைக்க நினைப்பது என்ன நியாயம்? ஒரு இந்து மடத்தில் தவறு நடந்தால் ஒட்டுமொத்த இந்து மடங்களையும் பாஜக அரசு மூடிவிடுமா?

அல்லது மாற்று மதத்தினரை இந்து மடங்களில் நிர்வாகிகளாக நியமிக்கத்தான் அனுமதிக்குமா? நிர்வாகத்தில் ஊழல் என்பதற்காக சங்கரமடத்தையும், சிதம்பரம் கோயிலையும் அரசே நிர்வகிக்க வேண்டும் என்றால் அதனை பாஜக ஆதரிக்குமா? வக்ஃபு நிலங்களை ஆக்கிரமித்தவர்களே அதனைச் சொந்தமாக்கிக் கொள்ளலாம் என்ற மோடி அரசின் முடிவு, கோயில் நிலங்களுக்கும் பொருந்துமா? சச்சார் குழு கொடுத்த பரிந்துரைகளை நிறைவேற்றுவதாகக் கூறும் பாஜக அரசு, இசுலாமியர் நலன் காக்க சச்சார் குழு கொடுத்த அனைத்து பரிந்துரைகளையும் நிறைவேற்றத் தயாரா? என்ற கேள்விகளுக்கு பாஜக உரிய விளக்கமளிக்க வேண்டும்.

எனவே, நாடாளுமன்றத் தேர்தலின்போது பிரதமர் மோடி மேற்கொண்ட மதவெறுப்பு பரப்புரை எப்படி எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியதோ, அரசியல் லாபத்திற்காக பாபர் மசூதியை இடித்துக் கட்டப்பட்ட ராமர் கோயில் பாஜகவிற்கு எப்படிப் பலன் தரவில்லையோ, அதுபோல எதிர்வரும் தேர்தல்களை மனதில்கொண்டு, இசுலாமியப் பெருமக்களுக்குச் சொந்தமான வக்ஃபு நிலங்களைப் பறிப்பதன் மூலம் இந்துக்களிடம் இழந்த செல்வாக்கை மீட்க முடியும் என்ற பாஜகவின் நம்பிக்கையும் பொய்த்துப் போவதோடு, ஆட்சி அதிகாரத்தை இழக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.

வக்ஃபு வாரிய திருத்தச்சட்ட வரைவினை உடனடியாக பாஜக அரசு திரும்பப்பெறாவிட்டால், எப்படிக் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் இசுலாமியப் பெருமக்கள் மிகப்பெரிய எழுச்சியுடன் ஒன்றுதிரண்டு போராடினார்களோ, எப்படி புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ச்சியாகப் போராடித் திரும்பப்பெறச் செய்தார்களோ, அப்படி இச்சட்டத்திருத்தத்திற்கு எதிராகவும், நாடு முழுவதும் மிகப்பெரிய மக்கள் திரள் புரட்சி போராட்டங்களை பாஜக அரசு எதிர்கொள்ள நேரிடும் எனவும் எச்சரிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

சீமான் கேள்வி: கொசுவையே ஒழிக்க முடியாதவர்கள் எப்படி ஊழலை ஒழிப்பார்கள்..?

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பரபரப்பான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் கார்த்திகா, மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி வேட்பாளர் காளியம்மாளை ஆதரித்து, கும்பகோணம் உச்சிப் பிள்ளையார்கோயில் அருகில் சீமான் பேசுகையில், மீனவர்கள், மாணவர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள் என அனைவரும் வீதிக்கு வந்து போராடிவிட்டனர்.

தமிழகத்தில் அனைவரும் வீதிக்கு வந்து போராடிய பிறகும் நல்லாட்சி நடப்பதாக கூறுவதை நம்ப முடியுமா?. அதேபோல, கடந்த 10 ஆண்டுகளில் எதுவும் செய்யாத பிரதமர் மோடி, அடுத்த 5 ஆண்டுகளில் என்ன செய்யப்போகிறார்?. இந்திராகாந்தி, கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்து கொடுத்ததால், மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். இதுவரை தமிழக மீனவர்கள் 350 பேர் கடலுக்குள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஏனெனில், அவர்களுக்கு நீங்கள் உயிர் அல்ல. ஓட்டு அவ்வளவுதான். நாட்டின் அனைத்து துன்பம், துயரங்களுக்கு காங்கிரஸ், பாஜக கட்சிகள்தான் காரணம்.

நாட்டின் முறையற்ற நிர்வாகம், ஊழல், லஞ்சம் ஆகியவற்றுக்கு இக்கட்சிகள்தான் பொறுப்பேற்க வேண்டும். ஆட்சியைக் கலைத்துவிடுவார்கள் என்று தமிழகத்தில் உள்ளவர்கள் இதை தட்டிக்கேட்கவில்லை. ஏனெனில், பதவிவெறி பிடித்து அலைகின்றனர். கொசுவை ஒழிக்க முடியாத இவர்கள், எப்படி ஊழல், லஞ்சத்தை ஒழிப்பார்கள்? என சீமான் கடுமையாக விமர்ச்சித்தார்.

ஒரு பாட்டு படுங்க அண்ணே..! பாட்டுப் பாடி வாக்கு சேகரிக்கும் சீமான்..!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், வேட்பாளர்கள் வாக்கு வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் 3-ம் கட்ட தேர்தல் பிரச்சாரம் தமிழகம் முழுவதும் தொடங்கியுள்ளது. ற்கெனவே 2 கட்டங்களாக பிரச்சாரம் மேற்கொண்ட சீமானின் 3-ம் கட்ட பிரச்சாரம் கடந்த 11-ம் தேதி நாமக்கல் மக்களவைத் தொகுதியில் தொடங்கியது. தொடர்ந்து, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, பெரம்பலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், பிரச்சாரத்தின்போது தொண்டர்களை உற்சாக மூட்டுவதற்காக, தேர்தல் சம்பந்தமான வரிகளுடன் கூடிய பாடல்களை பாடுவதையும் சீமான் வழக்கமாகக் கொண்டுள்ளார். இதனால் ஒவ்வொரு பிரச்சாரத்தின் நடுவிலும், அங்கு கூடியிருப்போர் சீமானை பாடச் சொல்லிக் கேட்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சீமான்: நாங்கள் வெள்ளை அடிக்க வந்தவர்கள் அல்ல..! கட்டிடத்தையே தகர்த்து விட்டு புதிய கட்டிடத்தை கட்ட வந்தவர்கள்..!

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் சந்தோஷ் குமாரை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரித்தார். அப்போது, நாங்கள் தேர்தலில் 50 சதவீதம் மகளிருக்கு ஒதுக்கீடு அளிக்கிறோம். ஆனால் அவர்கள் மற்ற கட்சி ஆண் வேட்பாளர்களிடையே போட்டி போட வேண்டிய நிலை உள்ளது. பட்டியலினத்தவர்களுக்கு தனி ஒதுக்கீடு இருப்பது போல் மகளிருக்கும் ஒதுக்கீடு இருக்க வேண்டும்.

அப்போது தான் மகளிர் போட்டியிட்டு அவர்களுக்குள் திறமையானவர்கள் மக்களவை உறுப்பினராகவோ, சட்டப் பேரவை உறுப்பினராகவோ வர முடியும். சீமானுக்கு வாக்களித்தால் ஜெயிப்பாரா என்று கேட்காதீர்கள். முதலில் வாக்களியுங்கள். நாங்கள் ஜெயிக்கிறோம். படித்த பட்டதாரிகளை வேட்பாளர்களாக நிறுத்தி உள்ளேன். அவர்கள் மூலம் இந்த பாழடைந்த சமூகத்தை தகர்த்து புதிய சமுதாயத்தை படைப்போம்.

நாங்கள் வெள்ளை அடிக்க வந்தவர்கள் அல்ல. அந்த கட்டிடத்தையே தகர்த்து விட்டு புதிய கட்டிடத்தை கட்ட வந்தவர்கள். இந்த நாட்டின் இயற்கை வளத்தை பாதுகாக்க, உங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் உடனே வந்து நிற்க நாம் தமிழர்தான் முன் வருவார்கள். உங்களை கண் போல காத்து நிற்போம் என சீமான் பேசினார்.