சீமான் வேண்டுகோள்: கல் குவாரிகளின் கால அளவை உயர்த்தும் முடிவை அரசு கைவிட வேண்டும்..!

கல் குவாரிகள் இயங்குவதற்கான கால அளவை உயர்த்தும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என – நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சீமான் தனது எக்ஸ் பக்கத்தில், தமிழ்நாட்டில் கல் குவாரிகள் இயங்குவதற்கான கால அளவை 25 ஆண்டுகள் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.

தமிழ்நாடு அரசின் புவியியல் மற்றும் சுரங்கத்துறை கூடுதல் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி கல் குவாரிகள் இயங்குவதற்கான கால அளவை 25 ஆண்டுகள் உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கனிம வளங்களை வெட்டி எடுக்கும் ஒப்பந்தம் கோருவோருக்கு 10 முதல் 25 ஆண்டுகள் வரையிலும், 10 ஏக்கர் உள்ள குவாரிகளுக்கு 20 ஆண்டுகள் வரையிலும், 10 ஏக்கருக்கு மேல் உள்ள குவாரிகளுக்கு 30 ஆண்டுகள் வரையிலும் கால நீட்டிப்பு வழங்கி அனுமதி வழங்கியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.

தமிழ்நாட்டில் ஏற்கனவே உரிமம் பெற்று இயங்கிவரும் கல்குவாரிகளில், பல ஆண்டுகளாக அனுமதிக்கப்பட்ட அளவைவிடப் பல மடங்கு அதிகமான பரப்பளவில், அதிகமான ஆழத்தில் முறைகேடாக கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு வருகின்றது. அவற்றை முறையாகக் கண்காணித்து, அவ்வப்போது ஆய்வு செய்து, முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது எந்த நடவடிக்கையையும் தமிழ்நாடு அரசு எடுப்பதில்லை. மாறாகக் கனிம வளக்கொள்ளையைத் தடுக்க முயலும் அரசு அதிகாரிகள், புகார் தெரிவிக்கும் சமூக ஆர்வலர்கள், கனிமவளக் கொள்ளையர்களால் பட்டப்பகலில் படுகொலை செய்யப்படுவதை திமுக அரசு வேடிக்கை மட்டுமே பார்க்கிறது. மாறாகக் கனிமவளக்கொள்ளை குறித்துப் புகார் தெரிவிக்கும் நாம் தமிழர் கட்சியினர் மீது பொய் வழக்கு புனைந்து கைது செய்வதை திமுக அரசு வாடிக்கையாக வைத்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு கல் குவாரிகள் இயங்குவதற்கான கால அளவை, 25 ஆண்டுகள் நீட்டிப்புச் செய்து அறிவித்துள்ளது கனிம வளக்கொள்ளை மேலும் பன்மடங்கு அளவிற்கு அதிகரிக்கவே வழிவகுக்கும். நாம் வாழும் பூமி நமக்கானது மட்டுமல்ல; நமக்குப் பின்வரும் வருங்காலத் தலைமுறைக்கானது. அதனைப் பாதுகாப்பாக அவர்களிடம் கையளிக்க வேண்டியது நம்முடைய முழுமுதற் கடமையாகும். மீண்டும் நம்மால் உருவாக்கவே முடியாத இயற்கையின் அருட்கொடையாம் மலை, மணல் உள்ளிட்ட இயற்கை வளங்களைக் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி வெட்டி எடுக்க அனுமதித்து அழித்தொழிக்கப்படுவதை நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் வருங்காலத் தலைமுறைக்குச் செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.

“முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்” என்று நிலம் தன் இயல்பான தன்மையை இழந்தால் வறண்ட பாலை நிலமாகும் என்பதை எச்சரிக்கும் விதமாக ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட சிலப்பதிகார காப்பியம் வலிதோய்ந்து பாடுகிறது.

மலை, மணல், ஆறு, அருவி, கடல், காடு, காற்று, நிலம், நீர் என்று நாம் வாழும் பூமியின் எல்லா வளங்களையும் கொள்ளைப்போக அனுமதித்து, முற்று முழுதாக அழித்து முடித்துவிட்டு நமக்குப் பின்வரும் தலைமுறைக்கு எதை வைத்துவிட்டுப் போகப்போகிறோம்? சுற்றுச்சூழலை நாசமாக்கி வாழத் தகுதியற்ற நிலமாக பூமியை மாற்றிவிட்டு எங்கே நம் சந்ததிகளை வாழவைக்கப்போகிறோம்? என்ற கேள்விகளுக்கு எவரிடத்தில் பதில் உண்டு? ஆகவே, தமிழ்நாடு முழுவதும் இயங்கும் கல் குவாரிகளுக்கான கால அளவை 25 ஆண்டுகள் நீட்டிப்பு செய்யும் அறிவிப்பை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்துகிறேன் என சீமான் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை வைத்தது சீமானுக்கு எங்க எரியுது..!?

விடுதலைக்காக போராடிய வீரபாண்டிய கட்டபொம்மனை சீமான் இழிவு படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை வைத்தது சீமானுக்கு எங்க எரியுது என தெலுங்கு முன்னேற்ற கழகம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ், தமிழன் என்பதை முன்னிருத்தி தனது அரசியல் பயணத்தை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மேற்கொண்டு வருகிறது.

அவரது ஒரே கொள்கை தமிழ்நாட்டை தமிழர் தான் ஆள வேண்டும் என்பதாகும். இப்படி தமிழை உயிர் மூச்சாக கொண்டு அரசியல் களத்தில் சீமான் நிற்கிறார். இதனால் சீமான் அனைத்து மேடைகளிலும் தமிழர்களை போற்றியும், பிற மொழி மக்களை தூற்றியும் பேசி வருகிறார்.

இதற்கு பிற மொழி பேசும் மக்கள் சீமானை அவ்வப்போது விமர்சித்து வருகின்றனா். மேலும் எச்சரிக்கையும் விடுத்து வருகின்றனா். இந்நிலையில் தெலுங்கர்கள் குறித்து பேசிய சீமானை, தெலுங்கு பேசும் மக்கள் தற்போது எச்சரித்துள்ள சம்பவம் நடந்துள்ளது. சீமானுக்கு எதிராக தெலுங்கு முன்னேற்ற கழகம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில்,” விடுதலைக்காக போராடிய வீரபாண்டிய கட்டபொம்மை சீமான் இழிவுப்படுத்துவதை பொறுக்க முடியாது. சீமானின் மனைவி கயல்விழியே தெலுங்கர் தான். தெலுங்கர்கள் வேண்டாம் என்றால் சீமான் தனது மனைவி கயல்விழியை வீட்டைவிட்டு அனுப்புவாரா?. நாங்கள் எந்த சாதியை பற்றியும் தவறாக பேசியது கிடையாது. நீங்களும் மனிதன், நானும் மனிதன். நாங்கள் சீமானை பற்றி பேசுகிறோமா.?

வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை வைத்தது சீமானுக்கு ஏன் எரிகிறது. சீமான் வீட்டில் தெலுங்கு பெண் இருக்கிறார். அவரை வீட்டை விட்டு வெளியேற்றுவாரா.? சீமான் பாஞ்சாலன்குறிச்சி படத்திற்கு நாங்கள் உதவியாக இருந்தோம். ஆனால் சீமான் மேடைக்கு மேடை தெலுங்கு மக்களை இழிவாக பேசுகிறார். இதுபோன்று சீமான் இனி செய்தால், நாங்கள் என்ன செய்வோம் என்று தெரியாது” என சரமாரி கேள்வி எழுப்பினா். மேலும் சீமானுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

சீமான் வீட்டுல எங்கவீட்டு பொண்ணு இருக்கு முதல்ல எங்க வீட்டுக்கு அனுப்ப சொல்லுங்க..!

சீமானின் மனைவி கயல்விழியே தெலுங்கர் தான். தெலுங்கர்கள் வேண்டாம் என்றால் சீமான் தனது மனைவி கயல்விழியை வீட்டைவிட்டு அனுப்புவாரா?. என தெலுங்கு முன்னேற்ற கழகம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ், தமிழன் என்பதை முன்னிருத்தி தனது அரசியல் பயணத்தை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மேற்கொண்டு வருகிறது. அவரது ஒரே கொள்கை தமிழ்நாட்டை தமிழர் தான் ஆள வேண்டும் என்பதாகும். இப்படி தமிழை உயிர் மூச்சாக கொண்டு அரசியல் களத்தில் சீமான் நிற்கிறார். இதனால் சீமான் அனைத்து மேடைகளிலும் தமிழர்களை போற்றியும், பிற மொழி மக்களை தூற்றியும் பேசி வருகிறார்.

இதற்கு பிற மொழி பேசும் மக்கள் சீமானை அவ்வப்போது விமர்சித்து வருகின்றனா். மேலும் எச்சரிக்கையும் விடுத்து வருகின்றனா். இந்நிலையில் தெலுங்கர்கள் குறித்து பேசிய சீமானை, தெலுங்கு பேசும் மக்கள் தற்போது எச்சரித்துள்ள சம்பவம் நடந்துள்ளது. சீமானுக்கு எதிராக தெலுங்கு முன்னேற்ற கழகம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில்,” விடுதலைக்காக போராடிய வீரபாண்டிய கட்டபொம்மை சீமான் இழிவுப்படுத்துவதை பொறுக்க முடியாது. சீமானின் மனைவி கயல்விழியே தெலுங்கர் தான். தெலுங்கர்கள் வேண்டாம் என்றால் சீமான் தனது மனைவி கயல்விழியை வீட்டைவிட்டு அனுப்புவாரா?. நாங்கள் எந்த சாதியை பற்றியும் தவறாக பேசியது கிடையாது. நீங்களும் மனிதன், நானும் மனிதன். நாங்கள் சீமானை பற்றி பேசுகிறோமா.?

வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை வைத்தது சீமானுக்கு ஏன் எரிகிறது. சீமான் வீட்டில் தெலுங்கு பெண் இருக்கிறார். அவரை வீட்டை விட்டு வெளியேற்றுவாரா.? சீமான் பாஞ்சாலன்குறிச்சி படத்திற்கு நாங்கள் உதவியாக இருந்தோம். ஆனால் சீமான் மேடைக்கு மேடை தெலுங்கு மக்களை இழிவாக பேசுகிறார். இதுபோன்று சீமான் இனி செய்தால், நாங்கள் என்ன செய்வோம் என்று தெரியாது” என சரமாரி கேள்வி எழுப்பினா். மேலும் சீமானுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

சீமான் கருத்து: சிந்து நதியைத் தடுத்து நிறுத்தும் முடிவை மறுபரிசீலனை செய்..!

30 கோடி மக்களின் வாழ்வாதாராமாக விளங்கும் சிந்து நதியைத் தடுத்து நிறுத்தும் முடிவை இந்திய ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முக்கிய கோடை கால சுற்றுலாத்தலமான ஜம்மு – காஷ்மீர் பஹல்காமில் கடந்த 22-ஆம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை நோக்கி கண்மூடித்தனமாக ஆண்களை மட்டுமே குறிவைத்து சுட்டுள்ளனர். இதில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 27 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தமிழ்நாடு, மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் உள்பட மொத்தம் 13 பேர் காயமடைந்து உள்ளனர்.

இதனிடையே பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சவூதியில் இருந்து நாடு திரும்பிய பிரதமர் மோடி உடனடியாக ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இதேபோல ஜம்மு காஷ்மீர் சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாதுகாப்புப் படையினருடனும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மேலும் டெல்லியில் பிரதமர் மோடியின் இல்லத்தில் தற்போது பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், சிந்து நதி இனி பாகிஸ்தானிற்குள் பாயாது… இந்தியா- பாகிஸ்தான் இடையேயான சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும்,  வாகா-அட்டாரி எல்லைகளை மூடல் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள்,  இந்தியாவை விட்டு ஒரு வாரத்தில் வெளியேற வேண்டும். – பாகிஸ்தானியர்களுக்கு இனி சார்க் விசா வழங்கப்படமாட்டாது. – இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணிநேரத்தில் வெளியேற கெடு பாகிஸ்தானின் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் எண்ணிக்கை 55-ல் இருந்து 30 ஆக குறைப்பு போன்ற அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டது.

இது குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் பக்கத்தில், காஷ்மீர் மாநிலம், பகல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடுந்தாக்குதலுக்கான பதிலடியாக, இந்திய ஒன்றியத்தை ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு சிந்து நதியைத் தடுத்து நிறுத்தி அப்பாவி பாகிஸ்தான் மக்களைத் தண்டிப்பது சிறிதும் நியாயமற்றச் செயலாகும்.

பகல்காமில் அப்பாவி மக்களைத் தாக்கிய பயங்கரவாதிகள் எப்படி இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தார்களோ, அதுபோலத் தங்கள் உயிரைப் பணயம் வைத்து சுற்றுலாப்பயணிகளைப் பயங்கரவாதிகளிடமிருந்து காப்பாற்றிய உள்ளூர் காஷ்மீர் மக்களும் இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர்கள்தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. சுற்றுலா சென்ற இந்திய மக்களைக் கொன்றது பயரங்கவாதிகள்தானே தவிர, பாகிஸ்தானைச் சேர்ந்த ஏழை எளிய மக்கள் இல்லை. பயங்கரவாதிகளின் கோழைத்தனமான கொடுந்தாக்குதலுக்குக் குறிப்பிட்ட ஒரு மதத்தின் மீது பழிபோடுவதோ, குறிப்பிட்ட மக்களை பலிகொடுப்பதோ ஒருபோதும் அறமாகாது!

பகல்காம் பயங்கரவாத தாக்குதல் என்பது இந்திய அரசின் பாதுகாப்புத்துறை மற்றும் உளவுத்துறையின் படுதோல்வியால் நிகழ்ந்த கொடுநிகழ்வாகும். பாஜக அரசு தன்னுடைய தோல்வியை மறைக்க, மறக்கடிக்க, சிந்து நதியைத் தடுப்பதென்பது, மக்களின் உணர்வுகளைத் தூண்டி திசைதிருப்பும் செயலன்றி வேறில்லை. பாஜக அரசிற்கு உண்மையிலேயே பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க வேண்டுமென்ற எண்ணமிருந்தால், தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளையும், அதற்கு உதவியர்களையுமே தண்டிக்க வேண்டும். பயங்கரவாதிகளின் முகாம்களை தாக்கி அழிக்க வேண்டும். பயங்கரவாதச்செயலுக்குப் பின்னால் பாகிஸ்தான் அரசோ, ராணுவமோ இருக்குமேயானால் அவர்களுடன் நேரடியாக மோத வேண்டும்.

அவற்றை விடுத்து 30 கோடி மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் குடிநீரை, அவர்களின் உணவுத்தேவையை நிறைவு செய்யும் விவசாய பாசன நீரைத் தடுப்பது எவ்வகையில் நியாயமாகும்? பாகிஸ்தான் நாட்டின் மீது விதிக்கப்படும் பொருளாதாரத் தடையோ, வர்த்தகத் தடையோ அந்நாட்டு அரசையும், பெருமுதலாளிகளையுமே அதிகம் பாதிக்குமே தவிர, ஏழை மக்களை நேரடியாகப் பாதிப்பதில்லை. ஆனால், உயிர் ஆதாராமாக விளங்கும் நதிநீரை தடுப்பதென்பது, பயங்கரவாத தாக்குதலுக்கு எந்தத் தொடர்புமற்ற அப்பாவி ஏழை மக்களை நேரடியாகப் பாதிக்கின்ற கொடுஞ்செயலாகும்.

சிந்து நதியால் அதிகம் பயன்பெறுவது பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் வாழும் சீக்கிய மக்களும்தான். அவர்கள் அனைவரும் எல்லை பிரிப்புவரை இந்த நாட்டின் குடிகளாக இருந்தவர்கள்தான் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, நதிநீர் என்பது வெறும் மனிததேவை மட்டுமன்று. அது மரங்கள், கால்நடைகள், ஊர்வன, பறப்பன உள்ளிட்ட அனைத்து உயிர்களின் இன்றியமையாத உயிர் ஆதாரத்தேவையாகும்.

உயர்ந்த நோக்கங்களோ, உன்னத லட்சியங்களோ இல்லாது கண்மூடித்தனமாகச் அப்பாவி மக்களைக் கொல்லும் பயங்கரவாதிகளுக்கும், சிந்து நதியை முடக்கி கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை முடக்க முயலும் இந்திய ஒன்றிய பாஜக அரசின் செயலுக்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும்? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சனநாயக அரசு இத்தகைய இரக்கமற்றச்செயலில் ஈடுபடுவது எவ்வகையிலும் ஏற்புடையதன்று.

பாகிஸ்தானுடன் வர்த்தக நிறுத்தம், எல்லை மூடல், தூதர்கள் வெளியேற்றம், போர்ப்பதற்றம், பாகிஸ்தான் மக்கள் வெளியேற்றம், நதிநீர் தடுத்து நிறுத்தம் என இத்தனை அதிரடி நடவடிக்கைகளை எடுக்கும் இந்திய ஒன்றிய அரசு, இதுவரை 800க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டபோதும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? பாகிஸ்தான் இசுலாமியர் நாடு என்பதால் பகை நாடென பதறி துடிக்கும் இந்திய அரசுக்கு, இத்தனை படுகொலைகள் செய்த பிறகும் இலங்கை நட்பு நாடாக இருப்பதற்கு காரணம் கொன்றது சிங்களவர், கொல்லப்பட்டது தமிழர்கள் என்பதால்தானே?

எல்லையற்ற கருணையையும், எதிர்ப்பார்ப்பற்ற அன்பையும் தந்து பெற்ற பிள்ளைகளை வாழ்விக்கும் தாய்மையின் அடையாளமாக, சிந்து, கங்கை, யமுனை, கோதாவரி, காவேரி என்று எல்லா நதிகளுக்கும் பெண்களின் பெயரைச்சூட்டி நதிகளை தெய்வமாக வணங்கும் நாடு, மனிதனின் தீராத பாவங்கள் எல்லாம் கங்கை நதியில் மூழ்கினால் தீரும் என்று நம்புகின்ற நாடு, நதிநீரை தடுத்து கோடிக்கணக்கான மக்களை கடுமையாக தண்டிப்பது முறைதானா? என்பதை இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும். ஆகவே, 30 கோடி மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் சிந்து நதியைத் தடுத்து நிறுத்தும் முடிவை இந்திய ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன் என சீமான் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சீமான் வலியுறுத்தல்: தமிழர்கள் குடியிருப்புகளை இடித்து மக்களை வெளியேற்றும் முடிவை பாஜக கைவிட வேண்டும்..!

டெல்லி ஜங்புரா மதராஸி கேம் பகுதியில் வாழும் தமிழர்கள் குடியிருப்புகளை அழித்து வாழ்வாதார உரிமையைப் பறிக்க முயலும் டெல்லி அரசின் முயற்சியைத் தடுத்து நிறுத்து என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து சீமான் தனது எக்ஸ் பக்கத்தில், டெல்லி ஜங்புரா மதராஸி கேம் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகளை இடித்து, மூன்று தலைமுறைகளாக அங்கு வாழ்ந்து வரும் தமிழர்களை வெளியேற்ற டெல்லி மாநில பாஜக அரசு முயற்சிப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. தங்கள் வாழ்விடங்களைக் காக்கப் போராடும் தமிழ் மக்களை டெல்லி மாநில பாஜக அரசு காவல்துறை மூலம் அடக்கி ஒடுக்குவது சிறிதும் மனச்சான்றற்ற கொடுங்கோன்மையாகும்.

ஜங்புராவில் அரசால் இடிக்கப்படும் வீடுகளுக்கு மாற்றாக 50 கி.மீ. தொலைவிலுள்ள நரேலாவில் வெறும் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் மாற்று வீடுகள் ஒதுக்கப்படும் என டெல்லி மாநில அரசு தெரிவித்துள்ளது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. டெல்லி மதராஸி கேம்ப் பகுதி அரசால் அங்கீகரிக்கப்பட்ட குடியிருப்புப் பகுதி எனும்போது மக்களின் விருப்பத்திற்கு மாறாக வீடுகளை இடித்து வாழ்விடங்களை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது என்பது எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும். பாஜக ஆளும் வட மாநிலங்களில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி மக்களின் குடியிருப்புகள் தொடர்ச்சியாக இடிக்கப்படும் கொடுங்கோன்மையை உச்சநீதிமன்றமே கடுமையாகக் கண்டித்து, எச்சரித்துள்ளதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆகவே, டெல்லி ஜங்புரா மதராஸி கேம் பகுதியில் வாழ்ந்து வரும் தமிழர்கள் அனைவருக்கும் அவர்களின் வசிப்பிடங்களிலேயே மாற்றுக் குடியிருப்புகள் வழங்குவதை உறுதிசெய்ய வேண்டுமென டெல்லி மாநில பாஜக அரசை வலியுறுத்துகிறேன். தமிழர் குடியிருப்புகளை அழித்து வாழ்வாதார உரிமையைப் பறிக்க முயலும் டெல்லி அரசின் முயற்சியைத் தடுத்து நிறுத்தி, தமிழர்களின் வாழ்விடத்தைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என சீமான் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

காமராசர் பேருந்து நிலையம் பெயர் மாற்றத்திற்கு சீமான் கடும் எதிர்ப்பு

மன்னார்குடி பெருந்தலைவர் காமராசர் பேருந்து நிலையம், ஆடுதுறை காயிதே மில்லத் பேருந்து நிலைய அங்காடி ஆகியவற்றின் பெயரை மாற்றும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து சீமான் தனது எக்ஸ் பக்கத்தில், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பெயரில் அமைந்திருந்த பேருந்து நிலையம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையில் கண்ணியமிக்க ஐயா காயிதே மில்லத் அவர்களின் பெயரில் அமைந்திருந்த பேருந்து நிலைய அங்காடி ஆகியவைச் சீரமைப்புச் செய்து, புதிதாகத் திறக்கப்படவிருக்கும் நிலையில், அவற்றிற்கு ஐயா கருணாநிதியின் பெயரைச் சூட்ட திமுக அரசு முடிவெடுத்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் கடந்த 4 ஆண்டுகளாகப் புதிதாகத் திறக்கும் மதுக்கடைகளைத் தவிர, மற்ற அனைத்து முதன்மை அரசு கட்டிடங்களுக்கும் முன்னாள் முதல்வர் ஐயா கருணாநிதி அவர்களின் பெயரைச் சூட்டுவதே வாடிக்கையாக வைத்துள்ளது. அது மட்டும் போதாதென்று, தமிழ்நாட்டில் தமிழ்ப்பெரும் தலைவர்களுக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ள அடையாளங்களையும் அழித்தொழிக்கும் வகையில், பராமரிப்பு என்ற பெயரில் கட்டிடங்களில் ஏற்கனவே இருக்கும் தலைவர்களின் பெயரை மாற்றி, ஐயா கருணாநிதி பெயரில் திறப்பதற்குப் பெயர்தான் திராவிட மாடலா?

அண்மையில், பெரம்பலூர் பேருந்து நிலையம் அருகில், உழவர் உரிமைப்போராளி நாராயணசாமி நாயுடு அவர்களுக்கு அமைத்திருந்த சிலையை அகற்றி, அங்கு ஐயா கருணாநிதி சிலையை நிறுவ முயன்ற செயலைக் கண்டித்து நான் அறிக்கை வெளியிட்ட பிறகு, பின் வாங்கிய திமுக அரசு, அப்படி எந்தத் திட்டமும் இல்லை என்று அறிவித்தது. அதேபோன்று திருவள்ளூர் நகரில் பெருந்தலைவர் காமராசர் பெயரில் அமைந்திருந்த காய்கறி சந்தையின் பெயரை மாற்றி ஐயா கருணாநிதியின் பெயரைச் சூட்டும் முடிவையும் கண்டித்து நான் அறிக்கை வெளியிட்ட பிறகு மீண்டும் பெருந்தலைவர் பெயரே சூட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 50 ஆண்டுகளாகத் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழத்தலைவர்களின் புகழை மூடி மறைத்து இருட்டடிப்புச் செய்து வருகின்றன என்பது வேதனைக்குரியதாகும். இந்நிலையில், தமிழ்த் தலைவர்களின் பெயரில் ஏற்கனவே உள்ள சிறுசிறு அடையாளங்களையும் அழித்தொழிக்க திமுக அரசு முயல்வது ஏற்க முடியாத கொடுமையாகும். ஆகவே, மன்னார்குடி பெருந்தலைவர் காமராசர் பேருந்து நிலையம் மற்றும் ஆடுதுறை காயிதே மில்லத் பேருந்து நிலைய அங்காடி ஆகியவற்றின் பெயரை மாற்றும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டுமென வலியுறுத்துகிறேன் என சீமான் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சீமான்: சாட்டை யூடியூப் சேனலில் வெளிவரும் கருத்து உண்மையிலேயே எனக்கு தெரியாது..!

சாட்டை துரைமுருகன் யூடியூப் சேனலில் ஒரு கருத்தை பேசுகிறார். அது கட்சியின் கருத்தாக பார்க்கப்படுகிறது.. உண்மையிலேயே அது எனக்கு தெரியாது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். நாம் தமிழர் கட்சியில் சீமானுக்கு அடுத்தபடியாக தமிழகம் முழுக்க அறியப்பட்ட நபராக இருந்து வரும் சாட்டை துரைமுருகன். நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக சாட்டை துரைமுருகன் இருந்து வருகிறார்.

மேலும் சாட்டை துரைமுருகன் தனியாக யூடியூப் சேனல் சாட்டை என்ற பெயரில் நடத்தி வருகிறார். இந்த யூடியூப் சேனலில் அரசியல் கட்சிகளை விமர்சித்து அவ்வப்போது சாட்டை துரைமுருகன் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பாக சீமானிடம் இருந்து அறிக்கை ஒன்று வெளியானது. அதில், நாதக கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் நடத்தும் யூ டியூப் சேனலுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் தொடர்பு இல்லை. அந்த யூடியூப் சேனலின் கருத்துகள், நாம் தமிழர் கட்சியின் கருத்துகள் இல்லை என கூறியிருந்தார்.

இந்த அறிக்கையை தமது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த சாட்டை துரைமுருகன், தனது எக்ஸ் பயோவில், திடீரென நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் என்பதையும் நீக்கி இருந்தார். அத்துடன் முகப்புப் படமாக கட்சி சாராத ஒரு படத்தை பதிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், சாட்டை துரைமுருகன் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுகிறாரா? வேறு கட்சியில் இணைய திட்டமிட்டுள்ளாரா? என இணையத்தில் நெட்டிசன்கள் இடையே விவாதம் அதிகரித்தது. எனினும், சீமானின் அறிக்கை தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்ட சாட்டை துரைமுருகன், நாம் தமிழர் கட்சியில் இருந்து 2 முறை ஏற்கனவே நீக்கப்பட்டேன்.

சீமானின் தம்பியாகவே இருப்பேன் அப்போது நான் பாடம் கற்றுக் கொண்டேன். இதேபோல 5 ஆண்டுகளுக்கு முன்னரும் என்னுடைய யூடியூப் சேனலுக்கும் கட்சிக்கும் தொடர்பு இல்லை என சீமான் அறிவித்திருந்தார். இப்போதும் அப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நான் வேறு கட்சியில் இணைய போவதாக பரவும் தகவலில் உண்மையில்லை. நாம் தமிழர் கட்சியில் நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சீமானின் தம்பியாகவே இருப்பேன்.

மேலும் சீமானுக்கு ஒருபோதும் நான் துரோகம் செய்யவே மாட்டேன். துரோகம் என்பது என் மரபணுவிலேயே கிடையாது. தமிழ்த் தேசியத்துக்காக தொடர்ந்து நான் பணியாற்றுவேன்” என்று கூறியிருந்தார். எனினும், சீமான் இது தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார்.

இந்நிலையில் செய்தியாளர்கள் கேள்விக்கு சீமான் பதிலளித்தார். அப்போது, உண்மையிலேயே அது சாட்டை துரைமுருகனின் தனிப்பட்ட யூடியூப் சேனல். எல்லோரும் என்ன நினைக்கிறார்கள் என்றால் அவர் பேசுறார்.. உஙக்ளுக்கு தெரியாமல் எப்படி பேசுவார்.. இப்படி பக்கத்தில் நிற்கிறார்.. அவர் ஒரு கருத்தை பேசுகிறார். அது கட்சியின் கருத்தாக பார்க்கப்படுகிறது. அதை தெளிவுபடுத்தவே அப்படி ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. உங்களுக்கு தெரியாமலா பேசுகிறார்.. நீங்கள் சொல்லாமலா பேசுகிறார் என்று கேட்டால்.. உண்மையிலேயே அது எனக்கு தெரியாது. அது ஒரு கருத்தை வைத்து இருக்கிறார். அந்த கருத்தை வலையொளியில் பதிவிடுகிறார். இதை தெளிவுபடுத்த வேண்டும் என்பதற்காகவே அறிக்கை கொடுக்க வேண்டியது ஆகியுள்ளது என சீமான் தெரிவித்தார்.

சீமான் கருத்து: டெல்லியின் அண்டர் தி கண்ட்ரோலில் தமிழ்நாடு உள்ளது..!

பேரிடர் காலங்களில் நிதி தரவில்லை; மாநிலத்துக்கு தர வேண்டிய கல்வி நிதி தரவில்லை. அப்படியான சூழலில் மத்திய அரசுக்கு வரி தரமாட்டோம் என சொல்லி இருந்தால் டெல்லியின் அவுட் ஆப் கண்ட்ரோலில் தமிழ்நாடு இருக்கிறது என அர்த்தம். ஆனால் வரியையும் கொடுத்துவிட்டு அண்டர் தி கண்ட்ரோல் தமிழ்நாடு உள்ளது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களின் கேள்விக்கு சீமான் பதிலளித்தார். அப்போது, அதிமுக கூட்டணியில் நடிகர் விஜய் 90 தொகுதிகள், துணை முதல்வர் பதவி தருவதாக கேட்டதாக ஆடிட்டர் குருமூர்த்தி கூறியுள்ளார். இதனையே விஜய்க்கு முன்னர் என்னிடமும் அதிமுக பேசியது. துணை முதல்வர் பதவி தரமாட்டேன் என அதிமுக சொல்லி இருக்காது. இரு கட்சிகளுக்கும் ஒத்துவராத சூழ்நிலையால் கூட்டணி அமையமால் பிரிந்து இருக்கலாம்.

பிக்பாஸ் நிகழ்ச்சி போல பேரணி பேசிக் கொண்டிருக்க முடியாது. தேர்தல் கூட்டணி வேறு; ஆட்சிக்கான கூட்டணி வேறு என்று நான் எப்போதும் கூறவே இல்லை. 2006-ஆம் ஆண்டு தேர்தலைப் போல, எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலை வரும் போது நாம் தமிழர் கட்சியின் முடிவு குறித்து அப்போது தெரிவிப்போம்.

நாங்கள் ஆட்சி மாற்றம்- ஆள் மாற்றத்துக்கானவர்கள் அல்ல.. அடிப்படையையே மாற்றுகிறவர்கள். கட்டிடத்துக்கு வெள்ளை அடிப்பவன் அல்ல.. அந்த கட்டிடத்தையே இடித்துவிட்டு புதியதாக கட்டுகிறவன் நான். இந்திய ஒன்றியத்தில் ஆட்சியில் இருந்த கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு மாநில தன்னாட்சி பேசுவதை எப்படி ஏற்க முடியும்? இந்தி மொழியை திணித்தது காங்கிரஸ்; எதிர்த்து போராடியது தமிழ்நாடு. இந்தி மொழியை திணித்தவனுடன் கூட்டணி வைத்தது திராவிட கட்சிகள்; மாநில உரிமைகளை பறித்த போது ஆட்சியில் இருந்தவர்களும் இவர்கள்தான். இந்த கட்சிகள்தான் இன்று தனித்த குணம், தன்னாட்சி என்று பேசுகின்ற்ன.

டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோலில் தமிழ்நாடு இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். இவ்வளவு நாள் அப்படி இருந்துள்ளதா? பேரிடர் காலங்களில் நிதி தரவில்லை; மாநிலத்துக்கு தர வேண்டிய கல்வி நிதி தரவில்லை. அப்படியான சூழலில் மத்திய அரசுக்கு வரி தரமாட்டோம் என சொல்லி இருந்தால் டெல்லியின் அவுட் ஆப் கண்ட்ரோலில் தமிழ்நாடு இருக்கிறது என அர்த்தம். ஆனால் வரியையும் கொடுத்துவிட்டு அவுண்ட் ஆப் கண்ட்ரோல் என பேச முடியாது. அண்டர் தி கண்ட்ரோல் என்பதுதான் சரி என சீமான் தெரிவித்தார்.

கூட்டணியில் சேர்ந்தால் துணை முதல்வர் பதவி..! விஜய், சீமானிடம் அதிமுக பேரம்..!

அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்தால் தமக்கு துணை முதல்வர் பதவி தருவதாக அதிமுக பேரம் பேசியது; இதனையே தவெக தலைவர் விஜய்யிடமும் அதிமுக பேரம் பேசி இருக்கிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களின் கேள்விக்கு சீமான் திலளித்தார். அப்போது, அதிமுக கூட்டணியில் நடிகர் விஜய் 90 தொகுதிகள், துணை முதல்வர் பதவி தருவதாக கேட்டதாக ஆடிட்டர் குருமூர்த்தி கூறியுள்ளார்.

இதனையே விஜய்க்கு முன்னர் என்னிடமும் அதிமுக பேசியது. துணை முதல்வர் பதவி தரமாட்டேன் என அதிமுக சொல்லி இருக்காது. இரு கட்சிகளுக்கும் ஒத்துவராத சூழ்நிலையால் கூட்டணி அமையமால் பிரிந்து இருக்கலாம். பிக்பாஸ் நிகழ்ச்சி போல பேரணி பேசிக் கொண்டிருக்க முடியாது. தேர்தல் கூட்டணி வேறு; ஆட்சிக்கான கூட்டணி வேறு என்று நான் எப்போதும் கூறவே இல்லை. 2006-ஆம் ஆண்டு தேர்தலைப் போல, எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலை வரும் போது நாம் தமிழர் கட்சியின் முடிவு குறித்து அப்போது தெரிவிப்போம்.

நாங்கள் ஆட்சி மாற்றம்- ஆள் மாற்றத்துக்கானவர்கள் அல்ல.. அடிப்படையையே மாற்றுகிறவர்கள். கட்டிடத்துக்கு வெள்ளை அடிப்பவன் அல்ல.. அந்த கட்டிடத்தையே இடித்துவிட்டு புதியதாக கட்டுகிறவன் நான். இந்திய ஒன்றியத்தில் ஆட்சியில் இருந்த கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு மாநில தன்னாட்சி பேசுவதை எப்படி ஏற்க முடியும்? இந்தி மொழியை திணித்தது காங்கிரஸ்; எதிர்த்து போராடியது தமிழ்நாடு. இந்தி மொழியை திணித்தவனுடன் கூட்டணி வைத்தது திராவிட கட்சிகள்; மாநில உரிமைகளை பறித்த போது ஆட்சியில் இருந்தவர்களும் இவர்கள்தான். இந்த கட்சிகள்தான் இன்று தனித்த குணம், தன்னாட்சி என்று பேசுகின்ற்ன.

டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோலில் தமிழ்நாடு இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். இவ்வளவு நாள் அப்படி இருந்துள்ளதா? பேரிடர் காலங்களில் நிதி தரவில்லை; மாநிலத்துக்கு தர வேண்டிய கல்வி நிதி தரவில்லை. அப்படியான சூழலில் மத்திய அரசுக்கு வரி தரமாட்டோம் என சொல்லி இருந்தால் டெல்லியின் அவுட் ஆப் கண்ட்ரோலில் தமிழ்நாடு இருக்கிறது என அர்த்தம். ஆனால் வரியையும் கொடுத்துவிட்டு அவுண்ட் ஆப் கண்ட்ரோல் என பேச முடியாது. அண்டர் தி கண்ட்ரோல் என்பதுதான் சரி என சீமான் தெரிவித்தார்.

சீமான் குமுறல்: தமிழ்நாட்டில் ஆட்டோ ஓட்டும் தொழிலை விட்டே அகல வேண்டிய அவலம்..!

ஆட்டோ ஓட்டுநர்களின் உழைப்பினைச் சுரண்டி கொழுக்கும் தனியார் பெருநிறுவனங்களின் ஆதிக்கத்தை தமிழ்நாடு அரசு கட்டுப்படுத்த தவறியதால், சுயமாகத் தொழில் புரியும் ஆட்டோ ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டும் தொழிலை விட்டே அகல வேண்டிய அவலமான சூழல் நிலவுகிறது என நாம் தமிழர் கட்சிதலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சீமான் தனது எக்ஸ் பக்கத்தில்,” தமிழ்நாடு முழுவதுமுள்ள தானி (ஆட்டோ) வாகன ஓட்டுநர்கள் எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுப் போதிய வருமானமின்றித் தவித்து வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. மாநகரங்களில் முன்பதிவு செயலி மூலம் தானி ஓட்டுநர்களின் உழைப்பினைச் சுரண்டும் தனியார் பெருநிறுவனங்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தாது வேடிக்கை பார்க்கும் தமிழ்நாடு அரசின் மெத்தனப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

தமிழ்நாடு அரசு கடந்த 2013-ம் ஆண்டு தானி வாகனங்களுக்கான பயணக் கட்டணத்தை 1.8கி.மீ தூரத்திற்கு ரூ.25, அடுத்துவரும் ஒவ்வொரு கி.மீக்கும் தலா ரூ.12, காத்திருப்புக் கட்டணம் 5 நிமிடத்துக்கு ரூ.3.50 எனவும் நிர்ணயித்து உத்தரவு பிறப்பித்தது. அன்றைய காலகட்டத்தில் எரிபொருள் விலையானது பெட்ரோல் ரூ.60, டீசல் ரூ.45 என்ற அளவில் இருந்தது. ஆனால் கடந்த 12 ஆண்டுகளில் எரிபொருட்களின் விலை இருமடங்கு அளவிற்கு உயர்ந்து தற்போது ரூபாய் 100ஐ கடந்துள்ளது. அதுமட்டுமின்றி, காற்று மாசினைக் கட்டுப்படுத்தும் வகையில், 75 விழுக்காட்டிற்கும் அதிகமான தானிகள் எரிகாற்றில் இயங்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில், எரிகாற்று விலையும் வாங்க முடியாத அளவிற்குப் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

மேலும், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஆனால் தானி வாகனங்களுக்கான கட்டணம் மட்டும் 12 ஆண்டுகளாக எவ்வித மாறுதலும் இல்லாமல் பழைய கட்டண அளவிலேயே உள்ள காரணத்தினால் தானி ஓட்டுநர்கள் போதிய வருமானம் கிடைக்காமல் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதோடு, அவர்களது குடும்பங்கள் வறுமையில் வாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

தானிகளுக்கான தரச்சான்றிதழ் மற்றும் காப்பீடு தொகையையும் கட்டுக்குள் வைத்திருக்க தமிழ்நாடு அரசு தவறிவிட்டது. மேலும், ‘தானிகளுக்கான பயணக் கட்டணத்தை எரிபொருள் விலைக்கேற்ப நிர்ணயிக்க வேண்டும்’ என்ற உயர் நீதிமன்ற அறிவுறுத்தலையும் தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்பது தானி ஓட்டுநர்களின் வயிற்றில் அடிக்கும் கொடுஞ்செயலாகும்.

மேலும், தானி வாகன சேவையை முழுமையாக ஆக்கிரமித்து, தானி ஓட்டுநர்களின் உழைப்பினைச் சுரண்டி கொழுக்கும் தனியார் பெருநிறுவனங்களின் ஆதிக்கத்தை தமிழ்நாடு அரசு கட்டுப்படுத்த தவறியதால், சுயமாகத் தொழில் புரியும் தானி ஓட்டுநர்கள், தானி ஓட்டும் தொழிலை விட்டே அகல வேண்டிய அவலமான சூழல் நிலவுகிறது. ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகியும் கட்டண உயர்வு உள்ளிட்ட தானி ஓட்டுநர்களின் நியாயமான கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்ற மறுப்பது கொடுங்கோன்மையாகும்.

ஆகவே, தமிழ்நாடு அரசு 12 ஆண்டுகளாக மாற்றப்படாமல் உள்ள தானி கட்டண உயர்வினை மாற்றி அமைக்க வேண்டும், இணைய வழி அபராதங்களைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட தானி ஓட்டுநர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டுமெனக் கோருகிறேன். மேலும், தானி சேவையில் தனியார் பெருநிறுவனங்களின் மேலாதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், கேரள மாநில அரசு செய்துள்ளதுபோலக் குறைந்த பிடித்த தொகையில் ‘தானி சேவைக்கான முன்பதிவு செயலியை’ அரசு சார்பில் உருவாக்கி தானி ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன் என சீமான் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.