மொழி, இனம், நாடு போன்ற எல்லைகளைக் கடந்து உலக மக்களை ஒரே நேர்கோட்டில் இணைக்கும் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து திருவிழா அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகளில் அமெரிக்காவில் 11 நகரங்களிலும், மெக்சிகோவில் 3 நகரங்களிலும், கனடாவில் 2 நகரங்களிலும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கால்பந்து போட்டிகளை இம்முறை கால்பந்து வரலாற்றில் முதல் முறையாக மூன்று நாடுகள் இணைந்து நடத்தும் முதல் உலகக் கோப்பையாகும். மேலும் வரலாற்றில் முதல் முறையாக 48 அணிகள் பங்கேற்று விளையாடும் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ஒலிம்பிக் போட்டிகளை விட அதிகமான பார்வையாளர்களை கொண்டது.
கால்பந்து போட்டியானது வெறும் 90 நிமிட ஆட்டமாக இருந்தாலும், வீரர்களின் அசாத்திய வேகம், வியூகங்கள் மற்றும் கடைசி நிமிட கோல்கள் ஆகியவை பார்வையாளர்களை இருக்கையின் நுனியிலேயே அமரவைத்து உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை ஒன்றிணைக்கும் ஒரு மாபெரும் உணர்வு. ஒரு கோலுக்காக ஏங்கும் மில்லியன் கணக்கான ரசிகர்களின் பிரார்த்தனை, பந்தை நோக்கி ஓடும் வீரர்களின் வியர்வை, வெற்றிக்கான தாகம் மற்றும் தோல்வியின் போது சிந்தப்படும் கண்ணீர் என அனைத்தும் ஒருங்கே நிறைந்திருக்கும் மனித உணர்ச்சிகளின் சங்கமம் ஆகும்.
அசுர பலமும், அசாத்தியமான சகிப்புத்தன்மையுடன் கொண்டு கால்பந்து விளையாடுவதன் மூலம் வீரர்களின் உடல் ஆரோக்கியம் மேம்படுவதுடன், சிறந்த குழு மனப்பான்மை, விட்டுக் கொடுக்கும் குணம், மற்றும் மன உறுதி போன்ற நற்பண்புகளும் வளர்கின்றன. கால்பந்து வெறும் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் ஆட்டம் மட்டுமல்ல அல்ல; அது ஒரு வாழ்வியல் கலை. தொடர்ந்து 90 நிமிடங்கள் ஓடி, உழைத்து, தங்கள் வியர்வையால் கோப்பையை வெல்லும் அந்த தருணம், வீரர்களுக்கு மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத நினைவுகளைத் தருகிறது.
‘தென் அமெரிக்காவில் கால்பந்தாட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட காலகட்டத்தில் இங்கிலாந்து ராணுவத்தால் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியாவின் தலைநகராக கொல்கத்தா இருந்த காலகட்டத்தில் முதல் கால்பந்தாட்ட சங்கம் கொல்கத்தாவில் அமைந்தது. இதே காலகட்டத்தில் வட சென்னைப் பகுதியில் கால்பந்தாட்டம் பிரபலம் அடையத் தொடங்கிய போது தென்னிந்தியாவின் முதல் கால்பந்தாட்ட சங்கம் கேரளத்தில் திருச்சூரில் அமைக்கப்பட்டது.
சென்னையில் முதல் கால்பந்துத் தொடர் 1894-ல் ஜிம்கானா கிளப்பில் நடைபெற்றுவந்தது என்பதும் ஒரு வரலாறு. சுதந்திரத்துக்குப் பிறகான இந்தியக் கால்பந்தாட்ட வரலாற்றில் சையத் அப்துல் ரஹீமின் பெயர் விசேஷமானது. சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியக் கால்பந்தாட்ட அணிக்குப் பயிற்சியளிக்கும் பொறுப்பை சையத் அப்துல் ரஹீமின் ஏற்றார். முதல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றது.
1956 மெல்பர்ன் ஒலிம்பிக்ஸில் இந்திய அணி அரையிறுதிவரை முன்னேறியது. 1962 ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் இந்தியா தங்கம் வென்றது. அந்த 1950, 60 காலகட்டங்களில் பீட்டர் தங்கராஜ், பி.கே.பானர்ஜி, ராம் பகதூர், ஷெய்க் அப்துல் லத்தீப், தர்மலிங்கம் கண்ணன் போன்ற இந்தியக் கால்பந்தாட்ட வீரர்கள் சர்வதேசக் கவனத்தையும் ஈர்த்தனர்.
1950-ஆம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றும், போதிய பயிற்சி மற்றும் நிர்வாகக் காரணங்களால் இந்தியா அதில் பங்கேற்கவில்லை. இந்திய சீனியர் கால்பந்து அணி இதுவரை ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் விளையாடியதில்லை. கால்பந்து சர்வதேச தரவரிசையில் 139-வது இடத்திற்கு சரிந்த நிலையில் தற்போது 48 நாடுகள் பங்கேற்கும் உலகக் கோப்பை தொடரிலும் இந்தியா தகுதிபெறவில்லை.
இந்தியாவில் 130 கோடிக்கு மேல் மக்கள் தொகை இருந்தும், பல்வேறு வசதிகள் கட்டமைப்பு இருந்தும் நம்மால் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் தகுதி பெறவே முடியவில்லை. ஆனால் வெறும் 5 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட அட்லாண்டிக் பெருங்கடலிலுள்ள 10 தீவுகளின் கூட்டமைப்பே கேப் வெர்டே. எந்த ஒரு வசதியும் இல்லாத கேப் வெர்டே உலகக் கோப்பை கால்பந்து தொடரிலே நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்ற மிக சிறிய நாடு பெரிய சாதனையை செய்திருக்கிறார்கள்.
குரூப் ஹச் பிரிவில் இடம் பிடித்து இருந்த கேப் வெர்டே அணி ஸ்பெயினுக்கு எதிராக எவ்வித கோலும் இன்றி சமன் செய்தது. அந்தப் போட்டியில் 40 வயதான கோல்கீப்பர் வோசின்ஹா, ஏழு கோல்களை தடுத்து சாதனை படைத்தார். அதன் பிறகு இரண்டு முறை உலக சாம்பியன் ஆன உருகுவே அணிக்கு எதிராக இரண்டுக்கு இரண்டு என்ற கணக்கில் போட்டியை சமன் செய்தனர்.
இதனை தொடர்ந்து சவுதி அரேபியாவுக்கு எதிரான போட்டியில் இரண்டு அணிகளும் கோல் அடிக்க முடியாமல் போட்டி சமனில் முடிந்தது. அதன்பிறகு உருகுவே அணிக்கு எதிராக ஸ்பெயின் அணி வெற்றி பெற்றதை அடுத்து கேப் வெர்டே அணி நாக்அவுட் சுற்றுக்கு தகுதி பெற்று சாதனை படைத்து இருந்தது.
இந்த தருணத்தில் ரவுண்ட் ஆப் 32 சுற்றில் நடப்பு சாம்பியன் ஆன அர்ஜென்டினாவை எதிர்கொண்டது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினாவுக்கு மரண பயத்தை காட்டிய கேப் வெர்டே, இறுதியில் இரண்டுக்கு மூன்று என்ற கோல் கணக்கில் போராடி தோல்வியை தழுவியது. இதன் மூலம் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இருந்து கேப் வெர்டே வெளியேறினாலும், ஒட்டுமொத்த ரசிகர்களின் இதயத்தையும் இந்த குட்டி தீவு கைப்பற்றி சென்றிருக்கிறது.
ஆசியாவின் பிரேசில்’ எனக் கால்பந்தாட்டத்தில் அழைக்கப்பட்ட ‘ப்ளூ டைகர்ஸ்’ என்று அழைக்கப்படும் இந்திய ஆண்கள் தேசிய கால்பந்து அணி ஆசிய மண்டலத்திற்கான ஆரம்பக்கட்ட தகுதிச் சுற்றுகளைத் தாண்டி, உலகக் கோப்பைக்குச் செல்லும் வாய்ப்பை இந்தியா இதுவரை ஒருமுறைகூடப் பெறவில்லை. அன்று தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் விளையாட்டு வகுப்பில் விளையாடப்படும் முதன்மையான விளையாட்டு கால்பந்தாட்டம்.
கிரிக்கெட்டில் உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு பள்ளிகளில் உள்ள கால்பந்தாட்ட மைதானங்கள் இன்று கிரிக்கெட் மைதானங்களாக பயன்படத் தொடங்கியதன் விளைவுதான் “உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழா” என்று அழைக்கப்படும் ஃபிஃபா உலகக் கோப்பையில் 48 நாடுகள் பங்கேற்கும் உலகக் கோப்பை தொடரிலும் இந்தியா தகுதிபெறவில்லை.
நம்மில் பலர் சஞ்சு சாம்சனை ஒரு சில போட்டிகளில் நீக்குவதற்கே இன்று சஞ்சு சாம்சனுக்கு முதுகு சொரிந்து கொண்டுள்ளோம். இந்தியாவில் பல்வேறு வசதிகள் கட்டமைப்பு இருந்தும் 130 கோடிக்கு மேல் மக்கள் தொகை இருந்தும் உலகக் கோப்பை தொடரிலும் இந்தியா தகுதிபெறவில்லை.
எந்த ஒரு வசதியும் இல்லாத வெறும் 5 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட அட்லாண்டிக் பெருங்கடலிலுள்ள 10 தீவுகளின் கூட்டமைப்பே கேப் வெர்டே நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் உள்ள சேலம் , திருச்சி போன்ற மாநகரங்களை விட பாதி மக்கள் தொகையை உள்ள ஒரு நாடு கால்பந்து உலகில் இவ்வளவு பெரிய சாதனையை படைத்தது என்பதுதான் ஒட்டுமொத்த கால்பந்து ரசிகர்களின் ஆச்சரியமாக இருக்கின்றது.