எல்.முருகன்: இது 1967 இல்லை…! மொழி அரசியல் இனி எடுபடாது..!

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மொழியை வைத்து மக்களை இனி ஏமாற்ற முடியாது என தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு எல்.முருகன் பதிலளித்தார். அப்போது, ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியது, முழுக்க முழுக்க மக்களை திசை திருப்பும் செயல். ‘இந்தி வாரம்’ என்பது மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் வழக்கமாக கடைபிடிக்கப்படுவதுதான்.

மத்தியில் திமுக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி 10 ஆண்டு காலம் இருந்தபோதும், அதில் திமுக அமைச்சர்கள் இருந்ததுறைகளில் கூட இந்தி வாரம் கடைபிடிக்கப்பட்டது. தமிழை பாதுகாப்பதிலும், உலக அளவில் எடுத்துச் செல்வதிலும் முதன்மையாக பிரதமர் மோடி இருக்கிறார்.

சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் குழந்தைகள் செய்தது தவறு. அந்த தவறுக்கு அவர்கள் மன்னிப்பும் கேட்டுவிட்டனர். அப்படி இருக்க, அதில் ஆளுநரை சம்பந்தப்படுத்துவது, எந்த விதத்திலும் நியாயம், தர்மம் அல்ல. அவர் ஒரு சிறப்பு அழைப்பாளராக மட்டுமே அந்த விழாவில் கலந்து கொண்டார்.

மேலும், மழை, வெள்ளத்தை சமாளிக்கதிமுக அரசு சரியாக திட்டமிடவில்லை. ஒருநாள் மழையையே சரியாக கையாளவில்லை. இதில் இருந்து மக்களை திசைதிருப்ப, அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக, திமுக – இண்டியா கூட்டணி செயல்படுகிறது. மொழியை வைத்து ஏமாற்ற இது 1967 இல்லை. மக்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றனர்.

‘இந்தி வாரம்’ நடத்த கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும் திமுக நிர்வாகிகள், தாங்கள் நடத்தும் CBSC பள்ளிகளில் இந்தியை பாடமாக வைக்க மாட்டோம் என்று கூறி, அப்பள்ளிகளை இழுத்து மூட தயாரா, எனவே மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனிமேல் நடக்காது. திமுக ஆக்கப்பூர்வமான அரசியலில் ஈடுபட்டு, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என எல்.முருகன் தெரிவித்தார்.

கணவன் மனைவி அந்தரங்க வீடியோ கசிந்தது எப்படி..!?

கன்னியாகுமரி அருகே தம்பதியின் அந்தரங்க வீடியோவை வாட்ஸ் அப் மூலம் செல்போனில் அனுப்பி பணம் கேட்டு மிரட்டிய 2 பேரை காவல்துறை வலைவீசி தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள வெள்ளரடா காவல் நிலையத்திற்கு எல்லைக்குட்பட்ட நெட்டா பகுதியை சேர்ந்த தம்பதி சுற்றுலா வேன், ஆம்புலன்ஸ் வாகனங்களை வாடகைக்கு விட்டு தொழில் நடத்தி வருகின்றனர். இவர்களுடைய வாகனங்களின் ஓட்டுநர்களாக மிதுன், சங்கீத் ஆகியோர் பணியாற்றி வந்தனர். டிரைவர்களாக மிதுன், சங்கீத் ஆகிய இருவரும் அந்த தம்பதியின் குடும்பத்தோடு நெருக்கமாக பழகி வந்தனர்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு தம்பதிக்கும், மிதுன் மற்றும் சங்கீத் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இத்தனை தொடர்ந்து, தம்பதியின் செல்போன் எண்ணுக்கு பெயர் தெரியாத நம்பரில் இருந்து ஒரு முறை பார்த்துவிட்டு அழியக்கூடிய வீடியோ வந்தது. அந்த வீடியோவில் தம்பதி தனிமையில் இருக்கும் அந்தரங்க காட்சிகள் இருந்தன. தம்பதியின் பக்கத்து வீட்டுக்காரரின் செல்போனுக்கும் இதே அந்தரங்க வீடியோ சென்றது.

பக்கத்து வீட்டினர் இந்த வீடியோ அனுப்பியது மிதுன், சங்கீத் தான் என்பதை அறிந்து தம்பதியிடம் கூறினார். இதுமட்டுமின்றி, அந்த தம்பதிக்கு வெளிநாட்டு எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர்கள், அந்தரங்க வீடியோவை வைத்து தம்பதியை மிரட்டி ரூ.10 லட்சம் வரை கேட்டார்களாம். இதனால் அதிர்ந்து போன தம்பதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். வழக்கு பதிவு செய்த காவல்துறை மிதுன், சங்கீத் ஆகிய இருவரையும் தேடினர். ஆனால், காவல்துறை தேடுவதை தொடர்ந்து இருவரும் தலைமறைவாகினார்.  டிரைவர்கள் மிதுன் மற்றும் சங்கீத் ஆகியோரை தேடி வருகின்றனர்.

மனைவியுடன் தனிமையில் இருப்பதை கணவர் தனது செல்போனில் வைத்திருந்தாராம். ஆனால் அந்த அந்தரங்க வீடியோ அந்த செல்போனில் இருந்து மிதுன் மற்றும் சங்கீத் ஆகியோரின் செல்போனுக்கு யார் அனுப்பினார்கள்? என்றும் ஒருவேளை கணவர் செல்போனை தனியாக வைத்துவிட்டு சென்ற நேரத்தில் இருவரும் அதனை தங்களின் செல்போனுக்கு அனுப்பி கொண்டார்களா..!? என்ற கோணத்தில் காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.

வானிலை ஆய்வு மையம்: வங்கக் கடலில் உருவாகிறது ‘டானா’ புயல்..!

வங்கக்கடலில் அக்டோப ர் 23 -ஆம் தேதி புயல் உருவாக இருப்பதாகவும், அந்தப் புயலுக்கு ‘டானா’ என பெயரிடப்பட்டுள்ளது எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ள செய்தி குறிப்பில், மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. தொடர்ந்து அக்டோபர் 23 -ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற உள்ளது.

பின்னர் புயல் உருவாகி, தமிழக கடற்கரை பகுதிகளை விட்டு விலகி, ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தை நோக்கி நகர்வதால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு கத்தார் பரிந்துரைத்த ‘டானா’ (DANA) என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.

வங்கக்கடல் பகுதிகளில் இன்று அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை அந்தமான் கடல் பகுதிகள், மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இத்தனை தொடர்ந்து அக்டோபர் 22 ஆம் தேதி மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகள், மத்திய வங்கக்கடல், தெற்கு வங்கக்கடலின் வடக்கு பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேலும், அக்டோபர் 23 -ஆம் தேதி மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல பகுதிகள் மத்திய வங்கக்கடல், தெற்கு வங்கக்கடலின் வடக்கு பகுதிகள், வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல், ஆந்திரா கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அக்டோபர் 24 -ஆம் தேதிவடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 90 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வட கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்திய வங்கக்கடல், வடக்கு வங்கக்கடல், தெற்கு வங்கக்கடல், ஆந்திரா கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேலும் இன்று மத்திய கிழக்கு அரபிக்கடல், மத்தியமேற்கு அரபிக்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

நாளை மத்திய அரபிக்கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.மேலே குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதியில் மீன்பிடிக்க வேண்டாமென இந்திய வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.

எல்.முருகன் சவால்: திமுக அரசு இந்தி பாடமாக உள்ள பள்ளிகளை இழுத்து மூட தயாரா..!?

‘இந்தி வாரம்’ நடத்த கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும் திமுக நிர்வாகிகள், தாங்கள் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளில் இந்தியை பாடமாக வைக்க மாட்டோம் என்று கூறி, அப்பள்ளிகளை இழுத்து மூட தயாரா என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சவால் விடுத்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு எல்.முருகன் பதிலளித்தார். அப்போது, ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியது, முழுக்க முழுக்க மக்களை திசை திருப்பும் செயல். ‘இந்தி வாரம்’ என்பது மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் வழக்கமாக கடைபிடிக்கப்படுவதுதான்.

மத்தியில் திமுக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி 10 ஆண்டு காலம் இருந்தபோதும், அதில் திமுக அமைச்சர்கள் இருந்ததுறைகளில் கூட இந்தி வாரம் கடைபிடிக்கப்பட்டது. தமிழை பாதுகாப்பதிலும், உலக அளவில் எடுத்துச் செல்வதிலும் முதன்மையாக பிரதமர் மோடி இருக்கிறார்.

சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் குழந்தைகள் செய்தது தவறு. அந்த தவறுக்கு அவர்கள் மன்னிப்பும் கேட்டுவிட்டனர். அப்படி இருக்க, அதில் ஆளுநரை சம்பந்தப்படுத்துவது, எந்த விதத்திலும் நியாயம், தர்மம் அல்ல. அவர் ஒரு சிறப்பு அழைப்பாளராக மட்டுமே அந்த விழாவில் கலந்து கொண்டார்.

மேலும், மழை, வெள்ளத்தை சமாளிக்கதிமுக அரசு சரியாக திட்டமிடவில்லை. ஒருநாள் மழையையே சரியாக கையாளவில்லை. இதில் இருந்து மக்களை திசைதிருப்ப, அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக, திமுக – இண்டியா கூட்டணி செயல்படுகிறது. மொழியை வைத்து ஏமாற்ற இது 1967 இல்லை. மக்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றனர்.

‘இந்தி வாரம்’ நடத்த கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும் திமுக நிர்வாகிகள், தாங்கள் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளில் இந்தியை பாடமாக வைக்க மாட்டோம் என்று கூறி, அப்பள்ளிகளை இழுத்து மூட தயாரா, எனவே மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனிமேல் நடக்காது. திமுக ஆக்கப்பூர்வமான அரசியலில் ஈடுபட்டு, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என எல்.முருகன் தெரிவித்தார்.

வீரப்பன் அவர்களின் 20-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி சீமான் மலர் வணக்கம்..!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட உட்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, புதிய பொறுப்பாளர்களைத் தேர்வு செய்வதற்காக, நேற்று விக்கிரவாண்டி ஜெயஶ்ரீ திருமண மண்டபத்தில் நடைபெற்ற மாவட்டக் கலந்தாய்விற்கு முன்னதாக, எல்லைக்காத்த மாவீரன் வீரப்பனார் அவர்களின் 20-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி மலர் வணக்கம் செலுத்தினார்.

அரபிக்கடல், வங்கக்கடல் என ஒரே நேரத்தில் இரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு..!

ஒரே நேரத்தில் வங்கக்கடல், அரபிக்கடல் என இரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் கணித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், “அரபிக் கடலில் அடுத்த 12 மணி நேரத்திலும் வங்கக் கடலில் அதாவது வரும் அக்டோபர் 20 -ஆம் தேதி வடக்கு அந்தமான் கடற்பகுதியில் ஒரு புதிய மேல் அடுக்கு காற்று சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது.

அதன் தாக்கத்தால், மத்திய வங்கக்கடலில் அக்டோபர் 22-ம் தேதியன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாக வாய்ப்புள்ளது. அதன்பின், அது வடமேற்கு நோக்கி நகர்ந்து மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளது” என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளது.

ராவண வதம் என்ற பெயரில் நிகழ்ச்சிக்கு சீமான் கண்டனம்..!

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் ராவண வதம் என்ற பெயரில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்பேன் நகரங்களில் வருகின்ற அக்டோபர் 27 அன்று இராவண வதம் என்ற பெயரில் சிலர் நிகழ்வு ஏற்பாடு செய்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

கலை பத்தில் தலை சிறந்தவன் திசை எட்டும் புகழ்கொண்டவன் எங்கள் இராவணப் பெரும்பாட்டன். பத்து கலை என்பதை பத்து தலை எனத் திரித்து நம்பவியலாத ஆரிய புராண கதைகளை கட்டமைத்து அருவருக்கத்தக்க தோற்றத்தை உருவாக்கி அவமதித்ததோடு, தொல்தமிழ் மூதாதை இராவணப்பெரும்பாட்டன் உருவத்தை எரிப்பதை ஒவ்வொரு ஆண்டும் விழாவாகக் கொண்டாடுவதென்பது எவ்வகையிலும் ஏற்புடையதன்று என்று கூறி இருந்தார்.

இதேபோல் உலகின் எந்த மூலையில், எந்த வடிவில் தமிழர் மூதாதை இராவணப்பாட்டன் இழிவுப்படுத்தப்பட்டாலும் அது உலகத்தமிழர் அனைவரையும் அவமதிப்பதற்கு ஒப்பாகும். மானத்தமிழினம் அதனை இனியும் வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருக்காது என எச்சரிக்கிறேன். நாம் தமிழர் கட்சி தம்முடைய பண்பாட்டு பாசறையான வீரத்தமிழர் முன்னணி மூலம் உலகெங்கும் தமிழர் வாழும் இடங்களில் எல்லாம் இராவணப்பெருவிழாவை விரைவில் முன்னெடுக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆகவே, ஆஸ்ரேலிய வாழ் தமிழ்ச்சொந்தங்கள் ஓர்மையுடன், ஓரணியில் ஒன்றுதிரண்டு, இராவணப்பெரும்பாட்டனை அவமதிக்கும் கொடுஞ்செயலைத் தடுத்து நிறுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். தங்களது நடவடிக்கை உலகத்தமிழர் உணர்வுகளைச் சீண்டிப்பார்க்கும் தவறான செயல் என்பதை இராவண வதம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உடனடியாக உணர்ந்து, நிகழ்வுப் பணிகளை நிறுத்த வேண்டுமென இவ்வறிக்கையின் வாயிலாக வலியுறுத்துகிறேன் என சீமான் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை குறித்த அவதூறு வழக்கில் சீமான் நீதிமன்றத்தில் ஆஜர்..!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விக்கிராவண்டி உரிமையியல் நீதிமன்றத்தில் ராஜீவ் காந்தி கொலை குறித்த அவதூறு வழக்கில் இன்று நேரில் ஆஜரானார் .

விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ராதாமணி காலமானதைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் கடந்த 2019-ல் நடைபெற்றது. அந்த இடைத்தேர்தலில் பிரகலதாவை ஆதரித்து கஞ்சனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நேமூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் சீமான் பேசினார்.

அப்போது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சீமான் மீது காங்கிரஸ் கட்சியின் விழுப்புரம் மாவட்ட தலைவர் ரமேஷ் விக்கிரவாண்டியில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது விக்கிரவாண்டியில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் சீமான் நேரில் ஆஜரானார். அவரிடம் விசாரணை நடத்திய நீதிபதி சத்ய நாராயணன், அடுத்தகட்ட வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

முதலமைச்சர் அருகே உணவு அருந்த தயங்கிய தூய்மை பணியாளர்..! மு.க. ஸ்டாலின் செய்த செயலால் நெகிழ்ச்சி..!

சென்னையில் கொட்டும் மழையிலும் பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு நன்றிச் சொல்லும் விதமாக அவர்களுடன் அமர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உணவு அருந்தினார். அப்போது முதல்வர் அருகே அமர்வதற்கு தூய்மை பணியாளர் கூச்சப்பட்ட நிலையில் மு.க. ஸ்டாலின் செய்த செயல் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னையில் மழைக் காலங்களில் அதிகளவு தண்ணீர் தேங்கும் தாழ்வான இடங்களான கொளத்தூர், வீனஸ் நகர், கணேஷ் நகர், செல்வி நகர் மற்றும் மஹாவீர் நகர் உள்ளிட்டப் பகுதிகளில் தேங்கும் மழைநீரினை அகற்றிட 1 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட மழைநீர் வெளியேற்றும் நிலையத்தின் மூலம், மழைநீர் வெளியேற்றப்பட்டு வரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அங்கிருந்த மக்கள் மழைநீர் தேங்காமல், பாதிப்பு ஏதும் ஏற்படாமல் சிறப்பாக நடவடிக்கை எடுத்ததற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். பின்னர் நீர்வளத்துறை சார்பில் ரெட்டேரியை 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆழப்படுத்தி, கரைகளை உயர்த்தி, அதன் கொள்ளளவினையும் உயர்த்தி, 3.5 கி.மீ. சுற்றுச்சுவர் கட்டும் பணி மற்றும் ரெட்டேரி தெற்கு பகுதியில் உள்ள மதகினை சீரமைக்கும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, அயனாவரம் மற்றும் மாதவரம் வட்டத்தில் அமைந்துள்ள தணிகாசலம் நகர் உபரிநீர் கால்வாயில், கூடுதலாக உபரிநீர் செல்லும் வகையில் 91 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அகலப்படுத்தி மேம்படுத்தும் பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து, பெரியார் நகர், கார்த்திகேயன் சாலையில் உள்ள திருவள்ளுவர் திருமண மண்டபத்தில் – சென்னை, பெரம்பூர், செம்பியம், ராகவா தெருவில் அமைந்துள்ள சி.எஸ்.ஐ. புத்துயிர் சிறப்புப் பள்ளியில் பயிலும் 70 மாற்றுத்திறனாளி குழந்தைகளின் நலன் மற்றும் பள்ளியின் மேம்பாட்டிற்காக 2 கணினிகள், 1 பிரிண்டர், 2 இரும்பு பீரோ, அத்தியாவசியப் பொருட்கள், என 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களையும், அச்சிறப்பு பள்ளியின் தாளாளர் டாக்டர் எட்வின் ராஜ்குமார் அவர்களிடம் பள்ளி மேம்பாட்டிற்காக நிதியுதவியும் முதலமைச்சர் வழங்கினார்.

பின்னர், ஜம்புலிங்கம் பிரதான சாலையில் உள்ள காமராசர் சத்திரத்தில், 600 தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, ரெயின் கோட், புடவை, போர்வை, ரஸ்க், பால் பவுடர், துவரம் பருப்பு, மிளகாய்த் தூள், சமையல் எண்ணெய், லுங்கி உள்ளிட்ட 10 அத்தியாவசியப் பொருள்களை முதல்வர் வழங்கினார். பின்னர் கடந்த 2 நாட்களாக அயராது பணியாற்றிய தூய்மை பணியாளர்களை பாராட்டும் விதமாக அவர்களுக்கு பிரியாணியுடன் கூடிய மதிய உணவை அன்புடன் பரிமாறி அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.

இந்த நிகழ்ச்சியின்போது, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்படுள்ளது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக அயராது பணியாற்றிய தூய்மை பணியாளர்களை பாராட்டும் விதமாக அவர்களுக்கு பிரியாணியுடன் கூடிய மதிய உணவை அன்புடன் பரிமாறி அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். அப்போது, முதலமைச்சருக்கு அருகே இருந்த தூய்மை பணியாளர், அவருக்கு அருகே அமர கூச்சப்பட்டு அதிக இடைவெளிவிட்டு அமர்ந்திருந்தார். உடனே முதலமைச்சர், தனது இலையையும் நாற்காலியையும் நகர்த்திக் கொண்டு அந்த பெண் தூய்மை பணியாளர் அருகில் உட்கார்ந்தார். இதை கண்ட அவர் நெகிழ்ச்சி அடைய, இடையிடையே முதல்வர், அந்த பெண்ணுக்கு ஏதாவது உணவு வேண்டுமா என கேட்டது அந்த தூய்மை பணியாளர் நெகிழ்ச்சியடைந்தார்.

தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்க தடையை மீறியதாக சுற்றுலாத்துறை செயலர் ஆஜராக உத்தரவு..!

சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான டெண்டருக்கு விதிக்கப்பட்ட தடையை மீறியதாக சுற்றுலாத்துறை செயலாளர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைப்பதற்கான டெண்டர் நடவடிக்கைகளுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், உயர் நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவு மீறப்பட்டுள்ளதாக கூறி சென்னை பட்டாசு முகவர்கள் நலச்சங்கம் சார்பில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் ஆனந்த், ‘‘யாருக்கும் டெண்டர் வழங்கப்படவில்லை என கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி நீதிமன்றத்தில் தெரிவித்த தமிழக அரசு, அக்டோபர் 14-ஆம் தேதியே டெண்டர் வழங்கப்பட்டு விட்டதாகவும், அக்டோபர் 10-ஆம் தேதியே அதற்கான தொகை பெறப்பட்டு விட்டதாகவும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது’’ என வாதிட்டார்.

அப்போது பேசிய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், ஏற்கெனவே டெண்டர் வழங்கப்பட்டு, பட்டாசு கடைகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். குறுக்கிட்ட நீதிபதி, ‘‘அப்படியென்றால் டெண்டர் இன்னும் வழங்கப்படவில்லை என ஏன் நீதிமன்றத்தில் தவறான தகவல் தெரிவிக்கப்பட்டது. மதுவை விற்கும் அரசால் பட்டாசு கடைகளை அமைக்க முடியாதா’’ என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், ‘‘காரணமின்றி அரசை குறை கூறக்கூடாது. அவ்வாறு கூறினால் மவுனமாக இருக்க முடியாது’’ என தெரிவித்தார். அப்போது, நீதிபதி, பட்டாசு விற்பனை மூலமாக தனிநபர்களுக்கு செல்லும் வருமானம் அரசுக்கு கிடைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான் தானும் பேசுவதாக தெரிவித்தார். மேலும், அவமதிப்பு வழக்கில் சுற்றுலாத்துறை செயலர், சுற்றுலா வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.