எல். முருகன் கேள்வி: அருந்ததியர் அல்லது தேவேந்திரர்களுக்கு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட திருமாவளவன் வாய்ப்பு கொடுத்தாரா..!?

கடந்த கால தேர்தல்களில் தனது கட்சி சார்பில் போட்டியிட, ஒரு இடத்தையாவது அருந்ததியினருக்கோ அல்லது தேவேந்திரருக்கோ திருமாவளவன் கொடுத்திருப்பாரா? என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களின் கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பதிலளித்தார். திருமாவளவன் என்னை RSS காரர் என கூறியுள்ளார். நான் RSS அமைப்பைச் சேர்ந்தவன் என்பதில் பெருமைப்படுகிறேன். அருந்ததியினருக்கான இடஒதுக்கீட்டை நாங்கள் சட்டரீதியாக போராடி பெற்றுள்ளோம்.

அருந்ததியின மக்கள் மட்டுமின்றி, அடித்தட்டு மக்கள் அனைவருக்கும் இடஒதுக்கீடு சென்று சேர வேண்டும் என்பதைத்தான் பாஜக வலியுறுத்தி வருகிறது. ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்ட சுதந்திரப் போராட்ட தியாகி ஒண்டிவீரனின் 251-வது நினைவு நாளில் மத்திய அரசு சார்பில் பிரதமர் மோடி அஞ்சல் தலையை வெளியிட்டு, ஒண்டிவீரனுக்கு பெருமை சேர்த்தார். திருமாவளவன் எப்போதாவது திருநெல்வேலி சென்று ஒண்டிவீரனுக்கு மரியாதை செலுத்தியது உண்டா?

கடந்த கால தேர்தல்களில் தனது கட்சி சார்பில் போட்டியிட, ஒரு இடத்தையாவது அருந்ததியினருக்கோ அல்லது தேவேந்திரருக்கோ திருமாவளவன் கொடுத்திருப்பாரா? இடஒதுக்கீடு பற்றி பேச துளியும் தகுதியற்ற தலைவர் திருமாவளவன். பட்டியலின மக்கள் அனைவரும் மேம்பட வேண்டும் என்றுதான் பாஜக பணியாற்றி வருகிறது. ஆன்மிகத்தையும், சனாதனத்தையும் நாங்கள் ஆதரிப்போம். அருந்ததியினருக்கான இடஒதுக்கீட்டை சட்டரீதியாக பெற்றுத் தருவதில் என்னுடைய பங்கு என்ன என்பது சமுதாயத்துக்கு தெரியும்.

அந்தந்த மாநிலங்கள், அவர்களின் சூழ்நிலைக்கு ஏற்ப பட்டியலின மக்களுக்கு இடஒதுக்கீடை வழங்கிக் கொள்ளலாம் என்ற அதிகாரத்தை மாநிலங்களுக்கே வழங்கி நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து திருமாவளவன் மறுஆய்வு மனுவை கொடுத்திருக்கிறார். அப்படியென்றால், திருமாவளவன் எதற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறாரா? என எல். முருகன் பேசினார்.

கவுதமி அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராகிறார்..!

அதிமுகவில் கொள்கை பரப்பு துணை செயலாளராக நடிகை கவுதமி நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 25 ஆண்டுகளாக பாஜகவில் இருந்து வந்த நடிகை கவுதமி கருத்து வேறுபாடுகள் காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி, கடந்த பிப்ரவரி மாதம் அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில் கட்சியில் சேர்ந்து 8 மாதங்களுக்கு பிறகு அவருக்கு மாநில நிர்வாகி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “நடிகை கவுதமி அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த தடா து.பெரியசாமி MGR மன்ற துணைச் செயலாளராகவும், சென்னையை சேர்ந்த ஃபாத்திமா அலி, கட்சியின் சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச் செயலாளராகவும் நியமிக்கப்படுகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் விவசாய பிரிவு செயலாளராக இருந்த பி.சன்னாசி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். இவர், கட்சியின் மாநில விவசாயப் பிரிவு துணை செயலாளராக நியமிக்கப்படுகிறார்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொல் திருமாவளவன்: எல்.முருகன் அருந்ததியர் என்பது யாருக்கு தெரியும்..! RSS சொல்லித்தான் தெரியும்..!

எல்.முருகன் ஒரு RSS காரர். படித்த காலத்தில் இருந்தே RSS தொண்டனாகத்தான் வளர்ந்தார். அருந்ததியர் என்பதே, RSS அமைப்பு சொல்லித்தான் அருந்ததியர் சமூகத்துக்கே தெரியும் என தொல் திருமாவளவன் குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக சென்னையில் தொல் திருமாவளவன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலில் விசிக, அங்குள்ள ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியுடன் கூட்டணி அமைத்து 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அருந்ததியர் என்பதே, RSS அமைப்பு சொல்லித்தான் அருந்ததியர் சமூகத்துக்கே தெரியும். அவர் ஒரு RSS காரர். படித்த காலத்தில் இருந்தே RSS தொண்டனாகத்தான் வளர்ந்தார். அரசியலில் RSS அமைப்பை சேர்ந்தவராகவேதான் ஈடுபட்டார். அவர் ஒருபோதும் தன்னை அருந்ததியர் என்று காட்டிக்கொண்டது இல்லை.

அருந்ததியரின் இடஒதுக்கீட்டுக்காக எந்தவொரு போராட்டத்திலும் அவர் பங்கெடுத்ததில்லை. அந்தவகையில் தமிழகத்தில் உள்ள அருந்ததியர்களுக்கும், அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் விசிக தொடக்க காலத்தில் இருந்தே அருந்ததியர் இடஒதுக்கீட்டுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறது. விசிக ஆதரித்துதான் அருந்ததியர்களுக்கான இடஒதுக்கீடே கிடைத்தது.

உச்ச நீதிமன்றத்தில் விசிக தொடுத்த வழக்கு அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை எதிர்த்து அல்ல. அவர்களுக்கு எதிரானதும் அல்ல. ஆனால் விசிகவில் அருந்ததியர்கள் அதிகம் உள்ளனர் என்பதால், பொறாமை கொண்டு அவர்களை வெளியேற்ற ஆர்எஸ்எஸ் செய்கிற சதித்திட்டம் இது. மீண்டும் மீண்டும் பொய்யைச் சொல்லி அவதூறு பரப்புவது என்பது அநாகரிகமான அரசியலாகும் என தொல் திருமாவளவன் தெரிவித்தார்.

எல்.முருகன்: இடஒதுக்கீடு பற்றி பேச திருமாவளவனுக்கு தகுதியில்லை..!

இடஒதுக்கீடு பற்றி பேச திருமாவளவனுக்கு தகுதியில்லை என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பதிலளித்தார். திருமாவளவன் என்னை RSS காரர் என கூறியுள்ளார். நான் RSS அமைப்பைச் சேர்ந்தவன் என்பதில் பெருமைப்படுகிறேன். அருந்ததியினருக்கான இடஒதுக்கீட்டை நாங்கள் சட்டரீதியாக போராடி பெற்றுள்ளோம்.

அருந்ததியின மக்கள் மட்டுமின்றி, அடித்தட்டு மக்கள் அனைவருக்கும் இடஒதுக்கீடு சென்று சேர வேண்டும் என்பதைத்தான் பாஜக வலியுறுத்தி வருகிறது. ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்ட சுதந்திரப் போராட்ட தியாகி ஒண்டிவீரனின் 251-வது நினைவு நாளில் மத்திய அரசு சார்பில் பிரதமர் மோடி அஞ்சல் தலையை வெளியிட்டு, ஒண்டிவீரனுக்கு பெருமை சேர்த்தார். திருமாவளவன் எப்போதாவது திருநெல்வேலி சென்று ஒண்டிவீரனுக்கு மரியாதை செலுத்தியது உண்டா?

கடந்த கால தேர்தல்களில் தனது கட்சி சார்பில் போட்டியிட, ஒரு இடத்தையாவது அருந்ததியினருக்கோ அல்லது தேவேந்திரருக்கோ திருமாவளவன் கொடுத்திருப்பாரா? இடஒதுக்கீடு பற்றி பேச துளியும் தகுதியற்ற தலைவர் திருமாவளவன். பட்டியலின மக்கள் அனைவரும் மேம்பட வேண்டும் என்றுதான் பாஜக பணியாற்றி வருகிறது. ஆன்மிகத்தையும், சனாதனத்தையும் நாங்கள் ஆதரிப்போம். அருந்ததியினருக்கான இடஒதுக்கீட்டை சட்டரீதியாக பெற்றுத் தருவதில் என்னுடைய பங்கு என்ன என்பது சமுதாயத்துக்கு தெரியும்.

அந்தந்த மாநிலங்கள், அவர்களின் சூழ்நிலைக்கு ஏற்ப பட்டியலின மக்களுக்கு இடஒதுக்கீடை வழங்கிக் கொள்ளலாம் என்ற அதிகாரத்தை மாநிலங்களுக்கே வழங்கி நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து திருமாவளவன் மறுஆய்வு மனுவை கொடுத்திருக்கிறார். அப்படியென்றால், திருமாவளவன் எதற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறாரா? என எல். முருகன் பேசினார்.

பிரேமலதா விஜயகாந்த்: படகு, பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் அரசை இப்போது தான் பார்க்கிறேன்…!

ஒரு நாள் பெய்த மழைக்கு மீனவர்களின் படகுகளையும், தீபாவளிக்காக பேருந்துகளையும் வாடகைக்கு எடுத்துள்ளனர். படகு மற்றும் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கக்கூடிய அரசை நான் இப்போது தான் தமிழகத்தில் பார்க்கிறேன் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேமுதிக முப்பெரும் விழா நிகழ்ச்சியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா கலந்து கொண்டார். இதையடுத்து திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வட்டம் பள்ளிதெரு பகுதியில் நடைபெற்ற உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சியிலும், ஆம்பூர் அடுத்த சான்றோர் குப்பம் பகுதியில் தேமுதிக கிளைசெயலாளர் சங்கரின் படத்திறப்பு விழா நிகழ்ச்சியிலும் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டார்.

அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்தார். அப்போது, ஒரு நாள் பெய்த மழை வெள்ளத்துக்கு சென்னை தாங்கவில்லை. எங்கு பார்த்தாலும் சாலைகளில் குளம் போல் தேங்கிய மழை நீரால் மக்கள் அவதிப்பட்டனர். இது வெறும் ட்ரெய்லர் மட்டும் தான். மெயின் பிக்சர் டிசம்பர் மாதம் தான். அப்போது பெய்யும் மழைக்கு தமிழக அரசு எந்த அளவுக்கு தயாராக இருக்கப் போகிறது என்பது அப்போது தான் தெரியும்.

ஒரு நாள் மழைக்கே, தமிழக அரசின் சாதனையென்று சொல்லிக் கொண்டு இருக்கும் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இது சாதனை கிடையாது. அடுத்து வருகின்ற பெரு மழைக்கு தயாராக வேண்டும் என்பதுதான். ஒரு நாள் பெய்த மழைக்கு மீனவர்களின் படகுகளையும், தீபாவளிக்காக பேருந்துகளையும் வாடகைக்கு எடுத்துள்ளனர். படகு மற்றும் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கக்கூடிய அரசை நான் இப்போது தான் தமிழகத்தில் பார்க்கிறேன்.

தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரத்துக்கு தூர்தர்ஷன் ஊழியர்கள் தவறு செய்துவிட்டதாக மன்னிப்புக் கேட்டுவிட்டனர். இதற்கும் ஆளுநருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதில் ஆளுநரை கொச்சைப்படுத்தி பேசுவது கண்டனத்துக்குரியது. தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு குடியரசு தினத்துக்கும் சுதந்திர தினத்துக்குமான தேதியைக் கூட சரியாகச் சொல்ல முடியவில்லை, அப்படி இருக்கும் பட்சத்தில் இதுபோல தவறுவதும் சகஜம் தான்.

தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் விவகாரத்தில் திமுக அரசு அரசியல் செய்து வருகிறது. சென்னை மட்டுமல்லாமல் தமிழக முழுவதும் கஞ்சா, கள்ளச்சாராயம், வெளி மாநில மது விற்பனை என பல்வேறு பிரச்சினைகள் தமிழகத்தில் நிலவுகிறது. மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடையாது, விவசாயம் இல்லை, நெசவுத்தொழில் முற்றிலும் அழிந்து வருகிறது. இதையெல்லாம் தமிழகத்தில் மாற்ற வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

கள்ளக்காதல் ஜோடி காம போதையில் வீசிய தரம் கெட்ட வார்த்தைகள் விளைவால் அதிரடி கைது..!

சென்னை மெரினா கடற்கரை லூப் சாலையில் மயிலாப்பூர் காவல்துறை நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாலையில் காரை நிறுத்திவிட்டு, உள்ளே ஒரு ஆணும் பெண்ணும் தனிமையில் இருந்துள்ளனர். இதைப்பார்த்த காவல்துறை, காரை எடுக்கும்படி காருக்குள் இருந்த இருவரிடமும் சொன்னதாகக் கூறப்படுகிறது.

அப்போது, அதில், ‘நீங்கள் யார்?’ என்று அந்த ஆண் – பெண்ணிடம் காவல்துறை கேட்டதும், ஒரு பொம்பள இன்ஸ்பெக்டர் எப்படி வணக்கம் போடுவா தெரியுமா..? மூஞ்ச பாரு வையாபுரி மூஞ்சி என இருவரும் போஸ் கொடுத்து கிண்டல் செய்தனர். மேலும் அந்த ஆண், “நான் உதயநிதி ஸ்டாலினை இங்கேயே கூப்பிடுவேன் பார்க்கிறாயா?” என காவல்துறையினரை மிரட்டும் தொணியில் பேசி கேலியும் கிண்டலும் செய்துள்ளார். தொடர்ந்து “உன்னால் முடிந்ததை பாரு” என மிரட்டல் விடுத்த அந்த நபர், “நான் குடித்துதான் இருக்கிறேன்.

என்னால் வண்டியை எடுக்க முடியாது. நாளைக்கு காலையில டிபன் சாப்பிட மாட்ட, நாளை காலை உங்க முகவரி எல்லாத்தையும் எடுத்து உங்களை காலி செய்து விடுவேன்” எனக்கூறியதோடு காரை வட்டமிட்டபடி எடுத்துச் சென்றார். இந்த ரோந்து காவல்துறையினரை மிக இழிவாக பேசிய அந்த இருவரும், அநாகரீகமாக நடந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை காவல்துறையினர் வீடியோ பதிவு செய்த நிலையில், அந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், காவல்துறை விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், காரில் இருந்த இருவரும் கள்ளக்காதல் ஜோடி என தெரியவந்தது. மேலும் இவர்கள் காரை சாலையில் நிறுத்திவிட்டு காருக்குள் காமக்களியாட்டம் தொடர்ந்து நடத்தி வந்துள்ளார். இதனை தொடர்ந்து இந்த கள்ளக்காதல் ஜோடியை மைலாப்பூர் காவல்துறை சுற்றி வளைத்து கைது செய்து.

ரூ.4.67 லட்சம் விவகாரம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி பறிப்பு..!

தேனி மாவட்டம் சுருளிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் நாகமணி வெங்கடேசனை பொறுப்பில் இருந்து நீக்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவு அளித்துள்ளார்.

தேனி மாவட்டம் சுருளிப்பட்டி ஊராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இந்த ஊராட்சியில் நிதிமுறைகேடு நடைபெற்றதாகவும், ஊராட்சி மன்ற தலைவர் நாகமணி மீது மீது நடவடிக்கை எடுக்க கோரியும், மாவட்ட ஆட்சியர் முரளிதரனிடம் மனு அளித்திருந்தனர்.

இந்த மனு மீது மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் 2022 நவம்பர் மாதம் ஊராட்சி மன்றத்தின் 3-வது வார்டு உறுப்பினரும், துணைத் தலைவருமான ஜெயந்தி மாலா நீங்கலாக மற்ற 11 வார்டு ஊராட்சி மன்ற உறுப்பினர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் எழுதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொடுத்தனர்.

இத்தனை தொடர்ந்து நிதியிழப்பு ஏற்படுத்திய புகாரில் நடத்தப்பட்ட கணக்கு தணிக்கையில், ரூ.4.67 லட்சம் உரிய அனுமதியின்றி செலவிட்டது தெரிய வந்துள்ளது. இந்த தொகையை நாகமணி, செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால், தொகையை நாகமணி செலுத்தாததால் செக் அதிகாரமும் பறிக்கப்பட்ட நிலையில் பதவி பறிக்கப்பட்டது.

பிரேமலதா விஜயகாந்த்: ஒரு நாள் பெய்த மழை வெள்ளத்துக்கு சென்னை தாங்கல…!

போதை ஏறிப்போச்சு புத்தி மாறி போச்சு..! காலி செய்து விடுவேன்…!

சென்னை மெரினா கடற்கரை லூப் சாலையில் மயிலாப்பூர் காவல்துறை நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாலையில் காரை நிறுத்திவிட்டு, உள்ளே ஒரு ஆணும் பெண்ணும் தனிமையில் இருந்துள்ளனர். இதைப்பார்த்த காவல்துறை, காரை எடுக்கும்படி காருக்குள் இருந்த இருவரிடமும் சொன்னதாகக் கூறப்படுகிறது.

அப்போது, அதில், ‘நீங்கள் யார்?’ என்று அந்த ஆண் – பெண்ணிடம் காவல்துறை கேட்டதும், ஒரு பொம்பள இன்ஸ்பெக்டர் எப்படி வணக்கம் போடுவா தெரியுமா..? மூஞ்ச பாரு வையாபுரி மூஞ்சி என இருவரும் போஸ் கொடுத்து கிண்டல் செய்தனர். மேலும் அந்த ஆண், “நான் உதயநிதி ஸ்டாலினை இங்கேயே கூப்பிடுவேன் பார்க்கிறாயா?” என காவல்துறையினரை மிரட்டும் தொணியில் பேசி கேலியும் கிண்டலும் செய்துள்ளார். தொடர்ந்து “உன்னால் முடிந்ததை பாரு” என மிரட்டல் விடுத்த அந்த நபர், “நான் குடித்துதான் இருக்கிறேன்.

என்னால் வண்டியை எடுக்க முடியாது. நாளைக்கு காலையில டிபன் சாப்பிட மாட்ட, நாளை காலை உங்க முகவரி எல்லாத்தையும் எடுத்து உங்களை காலி செய்து விடுவேன்” எனக்கூறியதோடு காரை வட்டமிட்டபடி எடுத்துச் சென்றார். இந்த ரோந்து காவல்துறையினரை மிக இழிவாக பேசிய அந்த இருவரும், அநாகரீகமாக நடந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை காவல்துறையினர் வீடியோ பதிவு செய்த நிலையில், அந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், காவல்துறை விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், காரில் இருந்த இருவரும் கணவன் மனைவி இல்லை என்பது தெரியவந்துள்ளது.

உதயநிதி ஸ்டாலின் கர்ஜனை: திராவிடத்தை நீக்குங்க பார்ப்போம்..!

“தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடத்தை நீக்க சிலர் கிளம்பியுள்ளனர், தி.மு.க-வின் கடைசி தொண்டன், தமிழன் இருக்கும் வரை தொட்டுக் கூட பார்க்க முடியாது.” என சீமானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கர்ஜித்து உள்ளார்.

சென்னையில் உள்ள டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி துவங்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதில், “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்” என்ற வரியை விட்டு பாடப்பட்டது. இதேபோல், நிகழ்ச்சியின் இறுதியில் பாடப்பட்ட தேசிய கீத பாடலில் திராவிடம் சொல் தவிர்க்கப்பட்டது. இதனால், பெரும் சர்ச்சை கிளம்பியது.

இந்த விவகாரத்திற்கும் தமிழக ஆளுநருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்தது. இதனிடையே, நடந்த தவறுக்கு மன்னிப்பு கோருவதாக டிடி தமிழ் தொலைக்காட்சி கூறியது. இருப்பினும், தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான சர்ச்சை இன்னும் முடிந்தபாடில்லை.

இந்நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை தொடர்பாக ஈரோட்டில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் ‘திராவிடல் நல் திருநாடு’ என்கிற வார்த்தையை விட்டுவிட்டார்கள் அல்லது தூக்கி விட்டார்கள் என்பது தானே உங்களுக்கு பிரச்சினை. அதே தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் ஆரியங்கோல் வழக்கொழிந்து என்ற வார்த்தையை தூக்கியது யார்?. கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட வார்த்தைகள் அடங்கிய அந்த வரியை தூக்கியது யார்?. திராவிடன் என்ற ஒரு சொல்லை எடுத்ததற்கே இப்படி குதிக்கிறீர்கள்.

50 ஆயிரம் ஆண்டுகளுன் முன் தோன்றிய என் தாய்மொழி தமிழை கொன்று சமாதி கட்டி வைத்திருக்கிறீர்கள். கொத்துக்கொத்தாக, லட்சக்கணக்கான என் இன மக்கள் சாவும் போது கொதித்து வராத கோவம், ஆந்திர காடுகளில் எங்களை சுட்டுக்கொல்லும் போது வராத கோபம், அன்னை தமிழ் மொழி செத்துவிழும் போது வராத கோபம், இப்போது ஏன் வருகிறது ?இதே ஆளுநர் 100 ரூபாய் வெளியிடும் போது கட்டிப்பிடித்து அணைத்துக் கொண்டீர்கள்.

நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து என்ற பாடலே இருக்காது. அப்போது என்ன செய்வீர்கள். இது எங்கள் நாடு. எங்கே இருக்கிறது திராவிடம்?. எங்கிருந்து வந்தது திராவிடம் என்ற சொல்?. திராவிடம் என்றால் என்ன? கேரளாவில் பஞ்ச திராவிடர் மாநாடு நடந்ததா இல்லையா?. அதில் ஏன் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் பங்கேற்க வேண்டும். அவர் ஏன் ராகுல் டிராவிட் என அழைக்கப்படுகிறார். நான் எப்படி திராவிடர் ஆனேன். திராவிடம் என்பது சமஸ்கிருதம் சொல். மாடல் என்பது ஆங்கில சொல்.” என சீமான் பேசியிருந்தார்.

இந்நிலையில், சீமானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடத்தை நீக்க சிலர் கிளம்பியுள்ளனர். தி.மு.க-வின் கடைசி தொண்டன், தமிழன் இருக்கும் வரை தொட்டுக் கூட பார்க்க முடியாது.

தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க பல்வேறு வகைகளில் முயற்சி செய்கிறார்கள். நேரடியாக இந்தியை திணிக்க இயலாத காரணத்தால் தமிழ்த்தாய் வாழ்த்தில் சில சொற்களை நீக்குகின்றனர். தமிழகத்தில் இந்தியை திணிக்கும் முயற்சிக்கு பலர் துணை போகின்றனர்.” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.