முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வடமாநில ATM கொள்ளை கும்பலை பிடித்த காவல் துறையினருக்கு வாழ்த்து..!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நாமக்கல் மாவட்டத்திற்கு அரசு விழாவில் பங்கேற்பதற்காக வருகைப்புரிந்துள்ளார். அப்போது, அரசு விருந்தினர் மாளிகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்ட கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், உள்ளிட்ட வடமாநில ATM கொள்ளை கும்பலை மடக்கிப் பிடித்த நாமக்கல் மாவட்ட காவல் துறையினரைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்து, குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

கடந்த மாதம் கேரள மாநிலம் திருச்சூரில் அடுத்தடுத்து 3 ATM களில் வடமாநிலத்தை சேர்ந்த கொள்ளை கும்பல் கொள்ளையடித்தனர். ATM களில் கொள்ளையடித்துவிட்டு கொள்ளை கும்பல் ராஜஸ்தான் பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரியில் தப்பிச்செல்வதாக நாமக்கல் மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் குமாரபாளையம் அருகே காவல்துறை கேரளாவில் இருந்து வந்த கண்டெய்னர் லாரியை காவல்துறை நிறுத்தியும் நிற்காமல் சென்றது. இதையடுத்து விரட்டி சென்ற காவல்துறை கண்டெய்னர் லாரியை மடக்கி கொள்ளை கும்பலை பிடித்தனர்.

இந்த சம்பவத்தை பாராட்டி கேரள தலைமை காவல் துறை இயக்குநர் ஷேக் தர்வேஷ் சாஹிப், தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், நாமக்கல் மாவட்ட காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு, சம்பவம் நடைபெற்று 6 மணி நேரத்திற்குள் கொள்ளையர்களை பிடித்தது பாராட்டத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தின்போது. ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்றிய நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். காவல் துணை கண்காணிப்பாளர்கள் இமையவர்மன், முருகேசன், ராஜா, காவல் ஆய்வாளர்கள் தவமணி, ரங்கசாமி, காவல் துணை ஆய்வாளர்கள் என மொத்தம் 23 காவல் துறையினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டார். இந்நிகழ்வின்போது, காவல்துறை கூடுதல் இயக்குநர் சௌ. டேவிட்சன் தேவாசிர்வாதம், மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அமைச்சர் ராஜகண்ணப்பன் தன் மகன்கள் மூலமாக ரூ 411 கோடி மதிப்புள்ள அரசு நிலம் அபகரிப்பு..!

அமைச்சர் ராஜ கண்ணப்பன் அவர்கள் தன்னுடைய மகன்கள் மூலமாக ரூபாய் 411 கோடி மதிப்புள்ள கிட்டத்தட்ட ஐந்து ஏக்கர் அரசு நிலத்தை அபகரித்துள்ளதாக அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ளது.

அறப்போர் இயக்கம் விடுத்துள்ள பத்திரிக்கை செய்தியில், அமைச்சர் ராஜ கண்ணப்பன் அவர்கள் தன்னுடைய மகன்கள் மூலமாக ரூபாய் 411 கோடி மதிப்புள்ள கிட்டத்தட்ட ஐந்து ஏக்கர் சென்னை ஜிஎஸ்டி சாலையில் உள்ள அரசு நிலத்தை அபகரித்துள்ளதை குறித்தும் தன்னுடைய அதிகாரத்தை இன்று வரை துஷ்பிரயோகம் செய்து அந்த அரசு நிலத்தை தன்னுடைய குடும்பத்தின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் என்பதற்கான ஆதாரங்களையும் அறப்போர் இயக்கம் இன்றைய தினம் புகாராக லஞ்ச ஒழிப்பு துறை, முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமைச் செயலர் வருவாய் துறை அமைச்சர் மற்றும் வருவாய் துறை செயலர்களுக்கு அனுப்பியுள்ளோம்.

இந்த அரசு நிலம் உடனடியாக மீட்கப்பட்டு அமைச்சர் திரு ராஜ கண்ணப்பன் உட்பட இதில் சம்பந்தப்பட்ட அனைத்து பொது ஊழியர்கள் மீதும் FIR பதிவு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி உள்ளது உள்ளோம்.

இந்த அரசு நிலம் ஜிஎஸ்டி சாலையில் ஆலந்தூர் மெட்ரோவிற்கும் நங்கநல்லூர் மெட்ரோவிற்கு இடையே BSNL அலுவலகத்திற்கு அடுத்தபடி உள்ள பரங்கிமலை கிராமம் சர்வே எண் 1353 எண் 12, GST சாலை. இந்த நிலம் அரசு நிலம் தான் என்பதற்கான வருவாய்த்துறை பதிவேடு நகலை புகாருடன் இணைத்துள்ளோம். சர்வே எண் 1353 என்பது 4 ஏக்கர் 31,378 சதுர அடி கொண்டது மற்றும் சர்வே எண் 1352 என்பது 12964 சதுர அடி கொண்டது. இவை இரண்டும் புறம்போக்கு நிலங்கள் என்று வருவாய்த்துறை பதிவேட்டில் உள்ள ஆதாரங்களை புகாருடன் இணைத்துள்ளோம்.

முக்கியமாக 2015 -இல் ஆலந்தூர் தாசில்தார் சென்னை தெற்கு இணை அலுவலகம் இரண்டு சார் பதிவாளர் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் சர்வே எண் 1353, 1352 மற்றும் பல சர்வே எண்கள் அரசின் காலம் கடந்த குத்தகை நிலங்கள் என்றும் இந்த நிலங்கள் தற்பொழுது அரசு நிலங்கள் என்றும் இந்த சர்வே எண்களில் எந்தவிதமான பத்திரப்பதிவும் செய்யக்கூடாது என்றும் இதற்கு முன்பாக யாராவது செய்திருந்தால் அதை ரத்து செய்து தாசில்தாருக்கு அறிக்கை அனுப்பும் படி கேட்டுள்ளார். பரங்கிமலை கிராமத்தில் உள்ள பெரும்பாலான அரசு நிலங்கள் பிரிட்டிஷ் ஆட்சி செய்த பொழுது சிலருக்கு குத்தகை கொடுத்து பிறகு சுதந்திரம் அடைந்ததும் இந்த நிலங்கள் மீண்டும் அரசின் கட்டுப்பாட்டில் வந்தது.

டெக்கான் ஃபன் ஐலேண்ட் அண்ட் ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் தற்போதைய இயக்குனர்களாக இருப்பவர்கள் அமைச்சர் திரு ராஜ கண்ணப்பனின் மகன்கள் பிரபு ,திவாகர் மற்றும் திலீப் குமார். மேலும் இவர்கள் மூவரும் தான் இந்த நிறுவனத்தின் தற்போதைய பங்குதாரர்களாகவும் உள்ளனர்.

சர்வே எண் 1353 மற்றும் சர்வே எண் 1352 நிலங்களை அபகரிப்பதற்காக இந்த நிறுவனம் 1991 முதல் 2018 வரை பல பத்திரபதிவுகளை செய்துள்ளது. 4.52 ஏக்கர் அளவிற்கு பத்திரபதிவு செய்ததற்கான ஆதாரங்களை புகார் உடன் இணைத்து இருக்கிறோம்.

1990-களில் காதியா பெயரில் இருந்த இந்த டெக்கான் ஃபன் ஐலேண்ட் அண்ட் ஹோட்டல்ஸ் லிமிடெட் ராஜ கண்ணப்பனின் மகன்கள் பெயருக்கு மாறுகிறது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக அமைச்சர் ராஜ கண்ணப்பனின் மூன்று மகன்கள் தான் இந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் மற்றும் பங்குதாரர்கள்.

முக்கியமாக 2015-ல் ஆலந்தூர் தாசில்தார் இந்த சர்வே எண்ணில் எந்த பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று தெரிவித்த பின்பும் மற்றும் இதற்கு முன்பாக பதிவு செய்தவற்றை ரத்து செய்ய வேண்டும் என்று சொன்ன பிறகும் அந்த பத்திரப்பதிவுகள் எதுவும் இன்றுவரை ரத்து செய்யவில்லை.

இந்த கடிதத்திற்கு பிறகும் கூட 2018-ல் இந்த நிலத்தை ஏழு லட்சத்திற்கு அடகில் இருந்து மீட்டது போல் டெக்கான் ஃபன் ஐலண்ட் அண்ட் ஹோட்டல்ஸ் லிமிடெட் பத்திரபதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பத்திரப்பதிவின் பொழுது அமைச்சர் ராஜகன்னப்பனின் மகன்கள் தான் இந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் மற்றும் இயக்குனர்கள்.

கடந்த ஆண்டு 1352 சர்வே எண்ணில் உள்ள 12984 சதுர அடி நிலம் மீட்கப்பட்டதாக அதன் வாசலில் வட்டாட்சியர் பல்லாவரம் பலகை வைத்துள்ளார். ஆனால் அதற்கு அருகிலேயே உள்ள கிட்டத்தட்ட 4.75 ஏக்கர் அளவிற்கு அமைச்சர் ராஜ கண்ணப்பனின் மகன்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள சர்வே எண் 1353 அரசு நிலங்களை இன்று வரை மீட்கவில்லை.

அரசு வழிகாட்டி மதிப்பு படி பார்த்தால் இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு 1 சதுரடிக்கு ரூ 11000 ஆகும். எனவே 205618 சதுரடி நிலத்தின் மதிப்பு ரூ 226 கோடி ஆகும். இந்த இடத்தில் சந்தை மதிப்பு குறைந்த பட்சம் 1 சதுரடிக்கு ரூ 20000 ஆகும். இதன் படி இன்றைய மதிப்பு ரூ 411 கோடி ஆகும்.

அமைச்சர் திரு ராஜ கண்ணப்பனின் அழுத்தத்தினால் வருவாய்த்துறை இந்த நிலத்தை மீட்காமல் உள்ளது என்று அறிகிறோம். அமைச்சர் திரு ராஜ கண்ணப்பன் தன் மகன்கள் பெயரில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் சொத்து சேர்ப்பதற்காக தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து சொத்துக்களை சேர்த்து உள்ளார் என்று தெரிகிறது. இந்த நிலத்தை உடனடியாக அரசு மீட்க வேண்டும். அரசு நிலத்தை பத்திரப்பதிவு செய்வது சட்டவிரோதமாக இருந்தாலும் அதை தொடர்ந்து இந்த நிறுவனம் செய்து வந்துள்ளது.

எனவே அமைச்சர் ராஜ கண்ணப்பன் அவரது மகன்கள் மற்றும் இதை மீட்டெடுக்காத வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் சட்டவிரோதமாக பத்திர பதிவு செய்த அதிகாரிகள் போன்றோர் மீது உடனடியாக FIR பதிவு செய்து விசாரிக்கும் படி அறப்போர் இயக்கம் கேட்டுக்கொள்கிறது என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரா. முத்தரசன் எரியும் அதிமுகவை முதலில் அணைக்க ஏற்பாடு செய்யுங்கள்..!

அதிமுக எரிந்து கொண்டிருக்கிறது அதை அணைக்க எடப்பாடி பழனிசாமி ஏற்பாடு செய்யட்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா ஆசிரியர் பயிலரங்க கூட்டம் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களின் கேள்விகளுக்கு இரா. முத்தரசன் பதிலளித்தார். அப்போது, 1925 -ஆம் ஆண்டு டிசம்பர் 26 -ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டது. கட்சி தொடங்கப்பட்டு நூறாண்டுகள் ஆன நிலையில் நூற்றாண்டு விழாவை கொண்டாட முடிவெடுத்துள்ளோம்.

அதன் ஒரு பகுதியாக திருச்சியில் பயிலரங்கம் ஏற்பாடு செய்துள்ளோம். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு குறித்து புத்தகம் வெளியிடப்படுகிறது. கட்சியின் வரலாறு குறித்து மூத்த தலைவர்கள் எடுத்துரைப்பார்கள்.

நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் ஆண்டு முழுவதும் கருத்தரங்குகள், பொதுக்கூட்டங்கள், கலை நிகழ்சிகள், விளையாட்டு போட்டிகள் போன்ற பல்வேறு நிகழ்வுகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற இருக்கிறது. கட்சியின் வரலாறுகள் முழுவதும் தொகுக்கப்பட்டு நூல்களாக வெளியிடப்பட உள்ளன என இரா. முத்தரசன் தெரிவித்தார்.

மேலும் இரா. முத்தரசன் பேசுகையில், திமுக கூட்டணியிலிருந்து கூட்டணி கட்சிகள் வெளியேற வேண்டும் என்பது எடப்பாடி பழனிச்சாமியின் ஆசை. முதலில் அதிமுக எரிந்து கொண்டு இருக்கிறது, அதை அணைக்க எடப்பாடி பழனிச்சாமி ஏற்பாடு செய்யட்டும். தி.மு.க கூட்டணியில் குழப்பம் நீடிக்கிறது என கூறுபவர்கள் யார்? எங்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை, நாங்கள் தெளிவாக இருக்கிறோம், ஒற்றுமையோடு இருக்கிறோம். இந்த அணி தொடரும், மேலும் பலப்படும் என இரா. முத்தரசன் தெரிவித்தார்.

காவலாளியை சரமாரியாக தாக்கி ஓட்டம் பிடித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கைது..!

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் ஐந்து ரதம் அருகே நேற்று முன்தினம் காவலாளியை சரமாரியாக தாக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்துக்கு ஞாயிற்றுகிழமை நேற்று முன்தினம் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர். இந்நிலையில், ஐந்துரதம் புராதன சின்னம் அருகில் 2 பெண்கள் உள்பட 4 பேர் கொண்ட குடும்பத்தினர் காரில் வந்துள்ளனர். ஐந்து ரதம் பகுதியிலுள்ள வணிக வளாகத்தையொட்டி மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சிக் குழும கட்டுப்பாட்டின் இயங்கி வரும் வாகன நிறுத்துமிடம் உள்ளது.

மேலும், வணிக வளாகத்தில் கடை வைத்துள்ள வியாபாரிகள் தங்களது வருமானத்திற்காக ஏழுமலை என்பவர் நியமனம் செய்துள்ளார். ஆனால் ஏழுமலை காரை அருகில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்துமாறும் மற்றும் NO ENTRY வழியாக கார் செல்லக்கூடாது எனக்கூறி காரை வழி மறித்து நின்றுள்ளார்.

ஆனால், காரிலிருந்த நபர்கள் தனியார் காவலரை இடிப்பது போன்று சென்று NO ENTRY வழியா செல்ல முயன்றனர். இதனால், காரில் வந்தவர்களை நோக்கி வாகன நிறுத்துமிட பணியாளர் ஏழுமலை திட்டியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, காரிலிருந்து இறங்கிய 2 பெண்கள் தகாத வார்த்தைகளால் திட்டுகிறாயா எனக்கூறி ஆவேசமடைந்து, காவலாளி மீது தாக்குதல் நடத்தினர். காரில் வந்த 2 பெண்கள் உள்பட 3 பேர் காவலாளியை கடுமையாக தாக்கினர்.

காவலாளியை தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காவலாளியை தாக்கிவிட்டு காரில் தப்பிய 3 பேர் மீது 4 பிரிவில் வழக்கு பதிவுசெய்து காவல் துறை தேடி வந்த நிலையில் அவர்களை கைது செய்தனர்.

லட்டு கலப்பட விவகாரத்தில் பவன் கல்யாண் நேரில் ஆஜராக ஹைதராபாத் நீதிமன்றம் உத்தரவு..!

திருப்பதி ஏழுமலையான் கோயில் கலப்பட நெய் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் நேரில் ஆஜராக வேண்டும் என ஹைதராபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆந்திராவில் முந்தைய ஜெகன்மோகன் ஆட்சியில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டுபிரசாதம் தயாரிக்க விலங்குகளின் கொழுப்பும், மீன் எண்ணெயும் கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார். இது ஏழுமலையான் பக்தர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிபிஐ இயக்குநரின் கண்காணிப்பின் கீழ் 5 உறுப்பினர்களை சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இக்குழு விரைவில் விசாரணையை தொடங்க உள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணுக்கு எதிராக ஹைதராபாத்தை சேர்ந்த இ.ராமாராவ் என்ற வழக்கறிஞர் சிவில் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், “கலப்படம் செய்யப்பட்ட நெய் அயோத்தி ராமர் கோயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் உறுதிபட கூறியுள்ளார். இதில் இந்துக்களின் மனம் புண்படும்படி அவர் பேசியுள்ளார். அவரது சர்ச்சைக்குரிய கருத்து சமூக வலைதளங்களிலும் உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்” என மெனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை ஹைதராபாத் சிவில் நீதிமன்ற தலைமை நீதிபதி ரேணுகா நேற்று விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார். நவம்பர் மாதம் 22-ஆம் தேதி பவன் கல்யாண் இதே நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.

தொல் திருமாவளவன் குற்றச்சாட்டு: விசிகவில் இருந்து அருந்ததியரை பிரிக்க RSS சதி நடக்கிறது..!

விசிகவில் இருந்து அருந்ததியின மக்களை வெளியேற்ற RSS சதித்திட்டம் தீட்டுவதாக அக்கட்சி தலைவர் தொல் திருமாவளவன் குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக சென்னையில் தொல் திருமாவளவன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலில் விசிக, அங்குள்ள ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியுடன் கூட்டணி அமைத்து 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அருந்ததியர் என்பதே, RSS அமைப்பு சொல்லித்தான் அருந்ததியர் சமூகத்துக்கே தெரியும். அவர் ஒரு RSS காரர். படித்த காலத்தில் இருந்தே RSS தொண்டனாகத்தான் வளர்ந்தார். அரசியலில் RSS அமைப்பை சேர்ந்தவராகவேதான் ஈடுபட்டார். அவர் ஒருபோதும் தன்னை அருந்ததியர் என்று காட்டிக்கொண்டது இல்லை.

அருந்ததியரின் இடஒதுக்கீட்டுக்காக எந்தவொரு போராட்டத்திலும் அவர் பங்கெடுத்ததில்லை. அந்தவகையில் தமிழகத்தில் உள்ள அருந்ததியர்களுக்கும், அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் விசிக தொடக்க காலத்தில் இருந்தே அருந்ததியர் இடஒதுக்கீட்டுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறது. விசிக ஆதரித்துதான் அருந்ததியர்களுக்கான இடஒதுக்கீடே கிடைத்தது.

உச்ச நீதிமன்றத்தில் விசிக தொடுத்த வழக்கு அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை எதிர்த்து அல்ல. அவர்களுக்கு எதிரானதும் அல்ல. ஆனால் விசிகவில் அருந்ததியர்கள் அதிகம் உள்ளனர் என்பதால், பொறாமை கொண்டு அவர்களை வெளியேற்ற ஆர்எஸ்எஸ் செய்கிற சதித்திட்டம் இது. மீண்டும் மீண்டும் பொய்யைச் சொல்லி அவதூறு பரப்புவது என்பது அநாகரிகமான அரசியலாகும் என தொல் திருமாவளவன் தெரிவித்தார்.

நோ என்ட்ரி பிரச்சனையில் காவலாளியை தாக்கி 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு..!

மாமல்லபுரத்தில் நோ என்ட்ரி வழியே சென்ற காரை தடுத்த காவலாளியை சரமாரியாக தாக்கிய 2 பெண்கள் உள்ளிட்ட நால்வர் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.  செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் ஐந்து ரதம் பகுதியில் கைவினை பொருட்கள் விற்பனை செய்யும் மொத்தம் 100 கடைகள் கொண்ட வணிக வளாகம் அமைந்துள்ளது. தற்போது, இந்த வணிக வளாகத்தில் 75 கடைகளுக்கு மேல் இயங்கி வருகிறது. இந்த, வணிக வளாகத்தையொட்டி மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சிக் குழும கட்டுப்பாட்டின் இயங்கி வரும் வாகன நிறுத்துமிடம் உள்ளது.

மேலும், வணிக வளாகத்தில் கடை வைத்துள்ள வியாபாரிகள் தங்களது வருமானத்திற்காக உள்ளூர் நபர் ஒருவரை தினக்கூலி அடிப்படையில் பார்க்கிங் ஏரியாவில் நிற்க வைத்து, அங்கு வரும் வாகனங்களை பார்க்கிங்கில் நிறுத்த சொல்லி அனுப்ப அறிவுறுத்தினர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாமல்லபுரம் சுற்றுலா வந்த ஒரு காரை ஐந்து ரதம் பகுதியில் மறித்து பார்க்கிங்கில் நிறுத்த சொல்லி அந்த நபர் கூறியுள்ளார். அப்போது, காரில் வந்த பயணிகள் நாங்கள் ஐந்து ரதத்தை கடந்து சென்னைக்கு செல்கிறோம் என்று கூறியுள்ளனர்.

அப்போதும், இது நோ என்ட்ரி என தெரிவித்து காரை தடுத்து திரும்பி செல்லும்படி தெரிவித்துள்ளார். இதில், ஆத்திரமடைந்த 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் காரில் இருந்து இறங்கி அந்த நபர் கையில் இருந்த பிளாஸ்டிக் பைப்பை பிடுங்கி எங்களையே தகாத வார்த்தைகளால் திட்டுவியா என பைப் உடையும் வரை அந்த நபரை சரமாரியாக தாக்கினர்.

மேலும் ஒரு பெண் ரவுடியாக மாறி காலால் எட்டி எட்டி உதைத்தார். பின்னர், கண் இமைக்கும் நேரத்தில் 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேரும் காரில் ஏறி ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவத்தை அவ்வழியாக சென்ற வெளிநாட்டு பயணி ஒருவர் இந்த தாக்குதல் சம்பவத்தை செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டார். அந்த, வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வைரலானது.

இந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணையை முடக்கி விட்டது. அப்போது, இது நோ என்ட்ரி வழியே ஆகையால் காரை திருப்ப செல்ல காவலாளி வலியுறுத்தியுள்ளார். ஆனால், காவலாளியின் பேச்சு கேட்காமல் அவர்கள் தகராறு செய்ததாக தெரிய வருகிறது. இதனால் ஏற்பட்ட வார்த்தை மோதலில் விளைவாக காவலாளியை சரமாரியாக தாக்கிய 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் கண் இமைக்கும் நேரத்தில் தப்பி ஓட்டம் பிடித்தனர் என தெரிய வந்தது. இத்தனை தொடர்ந்து, 2 பெண்கள் உள்ளிட்ட நால்வர் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஸ்வத்தாமன் காட்டம்: அண்ணா தோற்றுவித்த திராவிட முன்னேற்ற கழகம் தற்போது திராவிட கழகமாக மாறி வருகிறது..!

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலுக்கு, பாஜகவின் மாநில செயலாளர் அஸ்வத்தாமன் நேற்று முன்தினம் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தார். பின்னர், அவர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, ‘அண்ணா தோற்றுவித்த திராவிட முன்னேற்ற கழகம் தற்போது திராவிட கழகமாக மாறி வருவதாகவும், மக்களின் அன்றாட பிரச்னைகளை கவனிக்காமல் தமிழ்த்தாய் வாழ்த்தை வைத்து அரசியல் செய்கிறது.

மேலும், திருமாவளவனோடு மத்திய அமைச்சர் எல்.முருகனை ஒருபோதும் ஒப்பிட முடியாது. அவர் சட்டம் பயின்றவர். ஆனால், திருமாவளவனோ மதமாற்றம் குறித்த செய்கையில் முனைவர் பட்டம் பெற்றார் என அஸ்வத்தாமன் தெரிவித்தார்.

கே.பி.முனுசாமி: அதிமுக உடையவில்லை..! பதவி ஆசை பிடித்தவர்கள் வெளியேற்றம்..!

அதிமுக உடையவில்லை; பதவிஆசை பிடித்தவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக கிழக்கு ஒன்றிய செயல் வீரர்கள்மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டதிற்கு ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி தலைமை வகிக்க, மாவட்டச் செயலாளர் அசோக்குமார் எம்எல்ஏ முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் அதிமுக துணைபொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கலந்துகொண்டு பேசினார். அப்போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிமுகவின் 53-ஆம் ஆண்டு தொடக்க விழாவும், செயல்வீரர்கள் கூட்டமும் சிறப்பாக நடந்து வருகின்றன. அவற்றில் ஒற்றுமையுடன் நிர்வாகிகள் பங்கேற்று வருகின்றனர். ஆனால், ‘அதிமுக மூன்றாக, நான்காக உடைந்து விட்டது’ எனசிலர் பேசி வருகின்றனர். பதவி ஆசைக்காக செயல்பட்ட அவர்களின் சுயரூபம் தெரிந்ததால் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

கட்டுக்கோப்போடு உள்ள அதிமுக இயக்கத்தை யாராலும் உடைக்க முடியாது. தொண்டர்கள் நம் பக்கம் உள்ளனர். அதே ஒற்றுமையுடன் செயல்பட்டு, வரும் சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் மகத்தான வெற்றிக்காகப் பாடுபட வேண்டும் என கே.பி.முனுசாமி பேசினார்.

பார்க்கிங் பிரச்சனையில் ருத்ரதாண்டவம் ஆடிய பெண்..! கண் இமைக்கும் நேரத்தில் தப்பி ஓட்டம்..!

மாமல்லபுரம் ஐந்து ரதம் வணிக வளாக பார்க்கிங்கில் கார் நிறுத்துவது சம்பந்தமாக ஏற்பட்ட தகராறில் ஊழியரை 2 பெண்கள் சேர்ந்து சரமாரியாக தாக்கி உள்ளனர். இச்சம்பவம் சமூக வலைதலங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் ஐந்து ரதம் பகுதியில் கைவினை பொருட்கள் விற்பனை செய்யும் மொத்தம் 100 கடைகள் கொண்ட வணிக வளாகம் அமைந்துள்ளது. தற்போது, இந்த வணிக வளாகத்தில் 75 கடைகளுக்கு மேல் இயங்கி வருகிறது. இந்த, வணிக வளாகத்தையொட்டி மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சிக் குழும கட்டுப்பாட்டின் இயங்கி வரும் வாகன நிறுத்துமிடம் உள்ளது.

மேலும், வணிக வளாகத்தில் கடை வைத்துள்ள வியாபாரிகள் தங்களது வருமானத்திற்காக உள்ளூர் நபர் ஒருவரை தினக்கூலி அடிப்படையில் பார்க்கிங் ஏரியாவில் நிற்க வைத்து, அங்கு வரும் வாகனங்களை பார்க்கிங்கில் நிறுத்த சொல்லி அனுப்ப அறிவுறுத்தினர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாமல்லபுரம் சுற்றுலா வந்த ஒரு காரை ஐந்து ரதம் பகுதியில் மறித்து பார்க்கிங்கில் நிறுத்த சொல்லி அந்த நபர் கூறியுள்ளார். அப்போது, காரில் வந்த பயணிகள் நாங்கள் ஐந்து ரதத்தை கடந்து சென்னைக்கு செல்கிறோம் என்று கூறியுள்ளனர்.

அப்போதும், வழிவிடாமல் அந்த உள்ளூர் நபர் காரை தடுத்து தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதில், ஆத்திரமடைந்த 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் காரில் இருந்து இறங்கி அந்த நபர் கையில் இருந்த பிளாஸ்டிக் பைப்பை பிடுங்கி எங்களையே தகாத வார்த்தைகளால் திட்டுவியா என பைப் உடையும் வரை அந்த நபரை சரமாரியாக தாக்கினர்.

மேலும் ஒரு பெண் ரவுடியாக மாறி காலால் எட்டி எட்டி உதைத்தார். பின்னர், கண் இமைக்கும் நேரத்தில் 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேரும் காரில் ஏறி ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவத்தை அவ்வழியாக சென்ற வெளிநாட்டு பயணி ஒருவர் இந்த தாக்குதல் சம்பவத்தை செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டார். அந்த, வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வைரலாகி வருகிறது.