அமித் ஷா: மகா விகாஸ் அகாதி வெற்றி பெற்றால் மகாராஷ்டிரா மாநிலமே காங்கிரஸின் ATM ஆக மாறிவிடும்..!

மகா விகாஸ் அகாதி வெற்றி பெற்றால் மகாராஷ்டிரா மாநிலமே காங்கிரஸின் ATM ஆக மாறிவிடும் என அமித் ஷா விமர்சித்துள்ளார். மகாராஷ்டிராவை ஆளும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், பாஜக ஆகிய கூட்டணி கட்சிகளான மஹாயுதி கூட்டணியின் பதவிக்காலம் நவம்பர் 26-ம் தேதியுடன் முடிவடைகிறது. இத்தனை தொடர்ந்து 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு வரும் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்கு பதிவு நடத்தப்பட்டு வரும் 23-ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ளது.

மஹாயுதி கூட்டணிக்கும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கூட்டணி கட்சிகளான மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் ஆட்சியை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா தேர்தல் களத்தில் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், ஷிந்த்கேடா மற்றும் சாலிஸ்கான் சட்டப்பேரவைத் தொகுதிகளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, “சில நாட்களுக்கு முன்பு உமேலா குழுவைச் சேர்ந்தவர்கள், மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியின் தலைவரை சந்தித்து முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கேட்டனர். முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றால், SC – ST – OBC-க்கான இடஒதுக்கீட்டை குறைக்க வேண்டும். ராகுல் காந்திக்கு நான் சொல்கிறேன், உங்கள் நான்கு தலைமுறைகளால் கூட SC – ST – OBC க்கான இடஒதுக்கீட்டை வெட்டி முஸ்லிம்களுக்கு கொடுக்க முடியாது.

மன்மோகன் சிங் ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரம் 11-வது இடத்தில் இருந்தது. பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் பொருளாதாரத்தை 5-வது இடத்துக்கு கொண்டு சென்றார். 2027-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் பொருளாதாரம் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

மகா விகாஸ் அகாதி சிறுபான்மையினரை தாஜா செய்வதையே விரும்புகிறது. அதிகாரத்துக்காக பால் தாக்கரேவின் கொள்கைகளை உத்தவ் தாக்கரே மறந்துவிட்டார். அவுரங்காபாத் நகருக்கு சம்பாஜி நகர் என்று பெயர் மாற்றுவதை எதிர்ப்பவர்களுடன், ராமர் கோயில் கட்டுவதை எதிர்ப்பவர்களுடன், முத்தலாக் தடை சட்டத்தை எதிர்ப்பவர்களுடன், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 370 நீக்கத்தை எதிர்ப்பவர்களுடன் உத்தவ் தாக்கரே அமர்ந்திருக்கிறார். இந்துக்களை பயங்கரவாதிகள் என்று அழைப்பவர்களுடன் அவர் உள்ளார்.

பாஜக தலைமையிலான கூட்டணியான மகாயுதி என்றால் வளர்ச்சி என்று அர்த்தம். காங்கிரஸ் இடம் பெற்றுள்ள மகா விகாஸ் அகாதி என்றால் அழிவு என்று அர்த்தம். வளர்ச்சியை கொண்டு வருபவர்களை ஆதரிக்க வேண்டுமா அல்லது அழிவை கொண்டுவருபவர்களை ஆதரிக்க வேண்டுமா என்பதை வாக்காளர்கள் தீர்மானிக்க வேண்டும்.

வக்பு சட்டத்தால் நாட்டில் மக்கள் சிரமப்படுகின்றனர். சமீபத்தில், கர்நாடகாவில் உள்ள வக்பு வாரியம், கிராமங்களை வக்பு சொத்து என்று முடிவு செய்தது. 400 ஆண்டுகள் பழமையான கோயில்கள், விவசாயிகளின் நிலங்கள், வீடுகள் ஆகியவை வக்பு சொத்தாக மாறின. வக்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மசோதா கொண்டு வந்துள்ளோம். ஆனால் ராகுல் காந்தியும், சரத் பவாரும் மசோதாவை எதிர்க்கின்றனர். ராகுல் காந்திக்கு நான் சொல்கிறேன், நீங்கள் தடுத்தாலும் வக்பு சட்ட திருத்தத்தை பிரதமர் மோடி நிறைவேற்றுவார்.

மகாயுதி அரசாங்கம் அமையும்போது, மகாராஷ்டிராவின் அன்பு சகோதரிகளின் வங்கிக் கணக்கில் மாதம்தோறும் ரூ 2,100 டெபாசிட் செய்யப்படும். விவசாயிகளின் கணக்கில் ஆண்டுக்கு ரூ.12,000-க்கு பதிலாக ரூ.15,000 வரவு வைக்கப்படும். உங்கள் ஒரு வாக்கு, இந்தியாவின் எதிர்காலத்தை வலுப்படுத்தும்.

ஜார்க்கண்டில் பாஜக ஆட்சி அமைக்கப் போகிறது. மகாராஷ்டிராவில் மகாயுதி அரசு ஆட்சிக்கு வரப்போகிறது. காங்கிரஸ் பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றுவதே இதற்குக் காரணம். ஒருவேளை தவறுதலாக மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாதி அரசு ஆட்சிக்கு வந்தால், வளமான மகாராஷ்டிரா மாநிலமானது காங்கிரஸின் ATM ஆகிவிடும். மகாராஷ்டிர மாநிலத்தின் வளங்களைப் பயன்படுத்தி நிதியை எடுத்து டெல்லிக்கு அனுப்புவார்கள். மாறாக, மகாயுதி ஆட்சி அமைத்தால், மோடி நிர்வாகம் மகாராஷ்டிராவுக்கு பெரிய வளர்ச்சியை உறுதி செய்யும்” என அமித் ஷா தெரிவித்தார்.

மதரசாவை இடம் மாற்றுவதற்கு தவணையில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது..!

மதரசாவை இடம் மாற்றுவதற்கு தவணை முறையில் லஞ்சம் வாங்கிய மாநில சிறு பான்மையினர் நலத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டார். உத்தரபிரதேசத்தில் பரேலி மாவட்டம் தானா பஹேடி கிராமத்தை சேர்ந்த ஆரிஷ் ராஜ்புரா என்ற இடத்தில் இருந்து வசுந்தரா கிராமத்திற்கு மதரசாவை மாற்றுவது தொடர்பாக பரேலியில் உள்ள மாநில சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்தார். இது தொடர்பான கோப்பு 6 மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து, பரேலி சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் மூத்த உதவியாளர் ஆக பணியாற்றி வந்த முகம்மது ஆசிப் என்பவரை சந்தித்தார்.

அப்போது உரிய நடைமுறை களை முடித்து கோப்பினை ஒப்புதலுக்கு அனுப்ப ஆரிஷிடம் முகம்மது ஆசிப் ரூ.1 லட்சம் லஞ்சமாக கேட்டுள்ளார். ஆனால் இவ்வளவு பெரிய தொகையை தன்னால் தரமுடியாது என்று ஆரிஷ் கூறியதை தொடர்ந்து அப்பணத்தை தவணை முறையில் தருமாறு முகம்மது ஆசிப் கூறியுள்ளார். இது தொடர்பாக மாநில லஞ்ச ஒழிப்புத்துறையில் ஆரிஷ் புகார் கொடுத்தார். இதில் முகம்மது ஆசிப்பை கையும் களவுமாக பிடிக்க லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை அறிவுறுத்தலின் பேரில் முதல் தவணையாக ரூ.18 ஆயிரத்தை முகம்மது ஆசிப் பெற்றுக் கொண்டபோது அங்கு மறைந்திருந்த அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

அமித் ஷா திட்டவட்டம்: சொர்க்கத்தில் இருந்து இந்திராவே திரும்பினாலும் 370-வது சட்டப்பிரிவை மீட்டெடுக்க முடியாது..!

சொர்க்கத்தில் இருந்து இந்திராவே திரும்பினாலும் 370-வது சட்டப்பிரிவை மீட்டெடுக்க முடியாது என அமித் ஷா தெரிவித்தார். மகாராஷ்டிராவை ஆளும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், பாஜக ஆகிய கூட்டணி கட்சிகளான மஹாயுதி கூட்டணியின் பதவிக்காலம் நவம்பர் 26-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இத்தனை தொடர்ந்து 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு வரும் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்கு பதிவு நடத்தப்பட்டு வரும் 23-ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ளது.

மஹாயுதி கூட்டணிக்கும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கூட்டணி கட்சிகளான மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் ஆட்சியை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா தேர்தல் களத்தில் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், ஷிந்த்கேடா மற்றும் சாலிஸ்கான் சட்டப்பேரவைத் தொகுதிகளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, “சில நாட்களுக்கு முன்பு உமேலா குழுவைச் சேர்ந்தவர்கள், மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியின் தலைவரை சந்தித்து முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கேட்டனர். முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றால், SC – ST – OBC-க்கான இடஒதுக்கீட்டை குறைக்க வேண்டும். ராகுல் காந்திக்கு நான் சொல்கிறேன், உங்கள் நான்கு தலைமுறைகளால் கூட SC – ST – OBC க்கான இடஒதுக்கீட்டை வெட்டி முஸ்லிம்களுக்கு கொடுக்க முடியாது.

ராகுல் பாபா, நீங்கள் அல்ல உங்களது நான்கு தலைமுறை வந்தாலும் SC – ST – OBC யினருக்கான இடஒதுக்கீட்டை குறைத்து இஸ்லாமியருக்கு வழங்கமுடியாது. என்ன வந்தாலும் ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை மீண்டும் கொண்டுவர முடியாது. சொர்க்கத்தில் இருந்து இந்திராவே திரும்பினாலும் 370-வது சட்டப்பிரிவை மீட்டெடுக்க முடியாது என அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்தார்.

உத்தவ் தாக்கரே கேள்வி: ஆளும்கட்சி தலைவர்களின் பைகளையும் தேர்தல் ஆணையம் ஆய்வு செய்யுமா..?!

மகாராஷ்டிராவை ஆளும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், பாஜக ஆகிய கூட்டணி கட்சிகளான மஹாயுதி கூட்டணியின் பதவிக்காலம் நவம்பர் 26-ம் தேதியுடன் முடிவடைகிறது. இத்தனை தொடர்ந்து 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு வரும் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்கு பதிவு நடத்தப்பட்டு வரும் 23-ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ளது.

மஹாயுதி கூட்டணிக்கும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கூட்டணி கட்சிகளான மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் ஆட்சியை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா தேர்தல் களத்தில் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தனது கட்சி வேட்பாளர்களுக்காக கறுப்பு பணம் நிறைந்த சூட்கேஸ்களை எடுத்துச் சென்றதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் யவத்மால் மாவட்டம் வானியில் தனது கட்சி வேட்பாளர் சஞ்சய் டெர்கருக்காக தேர்தல் பிரசாரம் செய்யச் சென்றபோது, உத்தவ் தாக்கரே கொண்டு சென்ற பையை தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதுகுறித்து உத்தவ் தாக்கரே கூறுகையில், ‘எனது ஹெலிகாப்டர் வானியை அடைந்த பிறகு, எனது பைகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதற்காக நான் வருத்தப்படவில்லை.

தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் சரியாகச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். நான் எனது பணியை தொடர்ந்து செய்கிறேன். ஆனால் பிரதமர் மோடி மற்றும் ஆளும்கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களின் பைகளையும் தேர்தல் ஆணையம் இதேபோன்று ஆய்வு செய்யுமா? என்று தான் கேட்கிறேன்’ என்றார்.

சஞ்சீவ் கன்னா உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்பு..!

உச்ச நீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா நேற்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். உச்ச நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த டி.ஒய்.சந்திரசூட் கடந்த 10-ம் தேதி ஓய்வு பெற்றார். முன்னதாக, அவருக்கு அடுத்த மூத்த நீதிபதியான சஞ்சீவ் கன்னாவை தலைமை நீதிபதியாக நியமிக்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்திருந்தார்.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா நேற்று பதவியேற்றார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். குடியரசுதுணைத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்றனர்.

ராகுல் காந்தி கடும் விமர்சனம்: ஏழைகள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை கொல்லும் ஆயுதங்கள் பாஜவின் கொள்கைகள்..!

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற பாஜக.,வின் கொள்கைகள் ஏழைகள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை கொல்லும் ஆயுதங்கள் என பாஜகவை ராகுல் காந்தி கடும் விமர்சனம் செய்துள்ளார். ஜார்க்கண்ட் 81 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவைக்கு நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று நவம்பர் 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவுகள் வெளிவர உள்ளது.

இந்நிலையில், மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணியும், ஆட்சியை பிடிக்க பாஜக கூட்டணி கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஜாம்ஷெட்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு ராகுல் காந்தி உரையாடினார்.

அப்போது, பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற பாஜக.,வின் கொள்கைகள் ஏழைகள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை கொல்லும் ஆயுதங்கள். நாட்டை ஜாதி, மதம் மற்றும் மொழி அடிப்படையில் பிளவுபடுத்த பாஜக-ஆர்எஸ்எஸ் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அரசியலமைப்பை காக்க காங்கிரஸ் விரும்புகிறது. தொழிலதிபர்கள் ஆதாயம் அடைய பிரதமர் மோடி உதவுகிறார். நாங்கள் மோடி அரசை தோற்கடித்து, நாட்டு மக்களின் நலனுக்காக பணியாற்றுவோம் என ராகுல் காந்தி பாஜகவை கடுமையாக சாடினார்.

இன்ஜின் இடையே சிக்கி ரயில்வே ஊழியர் பரிதாப பலி..! உயர்மட்ட குழு விசாரணை..!

பிஹார் மாநிலம் பரவுனி ஜங்ஷனை கடந்த 9-ஆம் தேதி காலை 8.10 மணிக்கு லக்னோ-பரவுனி ரயில் வந்தடைந்தது. அப்போது, பாயிண்ட்மேன் முகமது சுலைமான் மற்றும் அமர் குமார் ராவ் இன்ஜினை தனியாக பிரிப்பதற்காக சென்றுள்ளனர்.

இந்த பணியின்போது, ரயில் ரயில் ஒட்டுநர் லோகோ பைலட்க்கு தவறான சமிக்ஞை வழங்கப்பட்டதால் இன்ஜினுக்கும் பவர் காருக்கும் இடையில் நசுங்கி அமர் குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதைப் பார்த்து பதற்றமடைந்த ரயில் ஒட்டுநர் லோகோ பைலட் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதையடுத்து, இரண்டு மணி நேரத்துக்குப் பிறகே இன்ஜின் மற்றும் பவர் கார் தனியாக பிரிக்கப்பட்டு அமர் குமாரின் உடல் வெளியே எடுக்கப்பட்டது.

இதையடுத்து, அமர் குமார் குடும்பத்தினர் இந்த விபத்துக்கு காரணமான பாயிண்ட்மேன் சுலைமான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து 5 பேர் அடங்கிய ரயில்வே அதிகாரிகள் குழு நடத்திய விசாரணையில் இரண்டு பாயிண்ட்மேன்களுக்கு இடையே மிக மோசமான ஒருங்கிணைப்பின் காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்ததை கண்டறிந்தனர்.

சிசிடிவி ஆதாரங்களை ஆராய்ந்ததில், பாயிண்ட்மேன் முகமது சுலைமான் லோகோ பைலட்டுக்கு தவறான சமிக்ஞை அளித்ததே அமர் குமாரின் மரணத்துக்கு காரணம் என்பது தெரிய வந்தது. ஆனால், இந்த குற்றச்சாட்டை சுலைமான் மறுத்ததுடன் ரயில் ஒட்டுநர் லோகோ பைலட் தான் இந்த விபத்துக்கு முழு பொறுப்பு என எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, இந்த விபத்து தொடர்பாக உயர்மட்ட குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம்… இளைஞர்களுக்கு ரூ.4,000 என மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாடி கூட்டணி வாக்குறுதிகள்

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் கூட்டணியின் தேர்தல் அறிக்கை மும்பையில் இன்று வெளியிடப்பட்டது. அதில் பெண்களுக்கு மாதம் ரூ.3,000, வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000 வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவை ஆளும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், பாஜக ஆகிய கூட்டணி கட்சிகளான மஹாயுதி கூட்டணியின் பதவிக்காலம் நவம்பர் 26-ம் தேதியுடன் முடிவடைகிறது. இத்தனை தொடர்ந்து 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு வரும் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்கு பதிவு நடத்தப்பட்டு வரும் 23-ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ளது.

இந்நிலையில், மஹாயுதி கூட்டணிக்கும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கூட்டணி கட்சிகளான மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் ஆட்சியை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுகிறது.

இந்தச் சூழலில் மகா விகாஸ் அகாடி கூட்டணி சார்பில் மும்பையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ரவுத், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் சுப்ரியா சுலே ஆகியோர் கூட்டாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

அந்த தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

1. மகா லட்சுமி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும்.

2. பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் அமல்படுத்தப்படும்.

3. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். 50 சதவீத இடஒதுக்கீடு உச்ச வரம்பை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

4. ரூ.25 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வசதி வழங்கப்படும்.

5. இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

6. ரூ.3 லட்சம் வரையிலான விவசாய கடன்கள் ரத்து செய்யப்படும்.

7. விவசாய கடன்களை முறையாக செலுத்திய விவசாயிகளுக்கு ரூ.50,000 ஊக்கத் தொகை வழங்கப்படும்.

8. வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000 நிதியுதவி வழங்கப்படும் போன்ற அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.

மல்லிகார்ஜுன கார்கே: நரேந்திர மோடியை தொடக்கப் பள்ளிக்குதான் அனுப்ப வேண்டும்..!

இந்திய அரசியலமைப்பின் சிவப்பு புத்தகத்தை நகர்புற நக்சலிசத்துடன் இணைத்து பேசியதற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜகவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநில தேர்தலுக்காக மகா விகாஸ் அகாதியின் தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று வெளியிட்டார். பின்பு செய்தியாளர்களின் கேள்விக்கு மல்லிகார்ஜுன கார்கே பதிலளித்தார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கை மக்களைப் பிரிப்பதற்கானது இல்லை. இதன் மூலம் மக்கள் அதிக நன்மைகளைப் பெற முடியும்.

நரேந்திர மோடி இந்தச் சிவப்பு புத்தகத்தை நகர்புற நக்சல் புத்தகம், மார்க்சிஸ்ட் இலக்கியத்தின் ஒரு பகுதி என்று குறிப்பிடுகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு இதே போன்ற புத்தகம் ஒன்றை அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்க்கு நரேந்திர மோடி வழங்கினார். அதில் வெற்றுப் பக்கங்கள் இருப்பதாகவும் நரேந்திர மோடி தெரிவித்து இருந்தார்.

அந்தச் சிவப்பு புத்தகம் குறிப்புகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அது ஒட்டுமொத்த அரசியலமைப்பு இல்லை. பாஜகவும், பிரதமரும் சித்தரிப்பது போல இது வெற்றுக் காகிதம் இல்லை. அவரை மீண்டும் ஒரு தொடக்கப் பள்ளியில் சேர்க்க வேண்டியது அவசியம். நாட்டைப் பிரித்து வைத்தால்தான் காங்கிரஸ் பலமடையும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார். இதற்கு என்ன அர்த்தம்? இந்தியாவின் ஒற்றுமைக்காக இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் தங்களின் உயிரை தியாகம் செய்துள்ளனர். இதுபோன்ற முழக்கங்கள் யோகி இடமிருந்து வருகின்றது.

பிரதமர் நரேந்திர மோடியோ நீங்கள் தனித்திருந்தால் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்று கூறுகிறார். இதில் எந்த கோஷம் வேலை செய்யும் என்று தெரியவில்லை. ஆனால், நமக்கு சுதந்திரத்தை வாங்கித் தந்தவரைக் கொன்ற கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் நீங்கள்” என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

மகாராஷ்டிரா தேர்தல்: பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அமித் ஷா

மகாராஷ்டிரா சட்டபேரவைத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டார். மகாராஷ்டிராவை ஆளும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், பாஜக ஆகிய கூட்டணி கட்சிகளான மஹாயுதி கூட்டணியின் பதவிக்காலம் நவம்பர் 26-ம் தேதியுடன் முடிவடைகிறது. இத்தனை தொடர்ந்து 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு வரும் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்கு பதிவு நடத்தப்பட்டு வரும் 23-ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ளது.

மஹாயுதி கூட்டணிக்கும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கூட்டணி கட்சிகளான மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் ஆட்சியை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், மும்பையில் நடந்த தேர்தல் அறிக்கை வெளியிட்டு நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ், மாநில பாஜக தலைவர் சந்திரசேகர பவன்குலே, மும்பை பாஜக தலைவர் ஆஷிஷ் ஷெலர், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கெண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “சுதந்திர இந்தியாவுக்கும் சமூக சீர்த்திருத்தத்துக்கும் மகாராஷ்டிரா எப்போதும் வழிகாட்டியுள்ளது. இந்த அறிக்கை மாநிலத்தின் விருப்பங்களை பிரதிபலிக்கிறது. இந்த தேர்தல் அறிக்கை மகாராஷ்டிர மக்களின் உண்மையான தேவைகள் மற்றும் விருப்பங்களை வெளிப்படுத்துகிறது. சத்திரபதி சிவாஜி மகாராஜாவும் இங்கே இருந்துதான் தனது பயணத்தைத் தொடங்கினார்.

இந்த அறிக்கை மாநிலத்தின் உணர்வினை வெளிக்காட்டுகிறது. விவசாயிகளை மதிப்பது மற்றும் பெருமை உணர்வினை வளர்ப்பதற்கு பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் கவனம் செலுத்துகிறது. இந்த அரசு பாதுகாப்பான மகாராஷ்டிராவை உருவாக்குவதற்கு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது” என அமித் ஷா தெரிவித்தார்.