திடீர் தர்ணாவில் ஈடுபட்ட அதிமுக சி.வி.சண்முகம் கைது..!

விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சி.வி.சண்முகம் தான் அளித்த புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிந்து கொள்வதற்காக வந்திருந்தார். அவர் வந்த சமயத்தில் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் இல்லாததால் அவ முன்னாள் அமைச்சரும், எம்பியுமான சி.வி.சண்முகம் இன்று காலையில் விருக்காக பார்வையாளர்கள் அறையில் காத்திருந்தார். நீண்ட நேரமாகியும் காவல் கண்காணிப்பாளரை சந்திக்க முடியாமல் போனதால் மதியம் 12 மணியளவில் விழுப்புரம் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தின் நுழைவாயிலில் முன்பு சி.வி.சண்முகம் தர்ணாவில் ஈடுபட்டார்.

அப்போது, சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் பேசுகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விசிக நடத்திய மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மாநாட்டில் அதிமுக சார்பில் நான் கலந்துகொள்ளப் போவதாகவும் அதுகுறித்து, அதிமுகவின் அதிகாரபூர்வ தொலைக்காட்சியான நியூஸ் ஜெ சேனலில் செய்தி வெளியானதாகவும் ஒரு தவறான தகவல் சமூகவலைதளங்களில் பரப்பப்பட்டது.

இது முழுக்க முழுக்க பொய்யான தகவல். திட்டமிட்டு எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பரப்பப்பட்ட பொய்ச் செய்தி என்பதால் நியூஸ் ஜெ சேனலும் மறுப்புச் செய்தி வெளியிட்டது. இந்தச் சம்பவத்தை குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரளித்தேன்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தல், விக்கிரவாண்டி இடைத் தேர்தல் சமயங்களிலும் இதுபோல எனக்கு எதிராக அவதூறு பரப்பினர். இது தொடர்பாக திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் இதுவரை தொடர்ந்து 23 புகார்கள் அளித்துள்ளேன். எந்த புகாரின் மீதும் நடவடிக்கையில்லை. என் மீது இந்த அரசு வழக்குப் பதிவுசெய்வதில் காட்டும் முனைப்பை, நான் அளிக்கும் புகார் மீது நடவடிக்கை எடுப்பதில் காட்டுவதில்லை. நான் காவல் கண்காணிப்பாளரை சந்திக்க முன்கூட்டியே அனுமதி வாங்கி இருந்தும் அவர் திட்டமிட்டு என்னைச் சந்திக்காமல் தவிர்த்துள்ளார்.

முன்னாள் அமைச்சரும், வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான நான் அளிக்கும் புகார்கள் மீதே நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் பொதுமக்களின் நிலை என்ன? இது தமிழ்நாடா அல்லது கருணாநிதியின் குடும்ப நாடா?,” என்று அவர் கேள்வி எழுப்பினர். பின்னர், விழுப்புரம் தாலுகா ஆய்வாளர் செல்வவிநாயகம், மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ராமலிங்கம் ஆகியோர் சி.வி.சண்முகத்திடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால், அந்த சமாதானத்தை எல்லாம் ஏற்காத அவர், “காவல் கண்காணிப்பாளரை நேரில் வரும் வரை தர்ணா போராட்டம் தொடரும்,” எனக்கூறி போராட்டத்தை தொடர்ந்தார். இதனை தொடர்ந்து பிற்பகல் 1 மணிக்கு விழுப்புரம் தாலுகா காவல்துறை அனுமதியின்றி தர்ணா போராட்டம் நடத்தியதாக சி.வி.சண்முகம் கைது செய்யப்பட்டார்.

NIA அறிவிப்பு: லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் தலைக்கு ரூ.10 லட்சம்..!

லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் பிஷ்னோயின் தலைக்கு ரூ.10 லட்சம் பரிசுத் தொகையை தேசிய புலனாய்வு முகமை அறிவித்துள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமை அன்மோல் பிஷ்னோய் மீது இரண்டு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்தது. மும்பையில் தற்போது நடந்து வரும் விசாரணையில் குறிப்பாக அரசியல் கட்சி நடவடிக்கைகள் தொடர்பாக அவரின் பெயர் மீண்டும் கவனம் பெற்றது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாகவும் அன்மோல் பிஷ்னோய் தேடப்பட்டு வருகிறார். அன்மோல் பிஷ்னோய் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அதனைத் தெரிவிக்க முன்வர வேண்டும் என NIA அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் தொடர்புடைய அன்மோல் பிஷ்னோய், ஒருங்கிணைக்கப்பட்ட குற்ற நடவடிக்கைகளில் முக்கியமான நபராக கருதப்படுகிறார். அன்மோல் பிஷ்னோயின் கைது மூலம் பிராந்தியம் முழுவதுமுள்ள சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பரந்த நெட்வொர்க்குகள் பற்றிய பல தகவல்கள் தெரியவரலாம் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

பாப்பர் கல்சா இன்டர்நேஷனல்மற்றும் லாரன்ஸ் பிஷ்னோயின் குற்ற நடவடிக்கையில் ஈடுபடும் குழு தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் NIA நடத்திய சோதனைகளில் சட்டவிரோத ஆயுதங்கள், வெடிப்பொருட்கள்,குற்ற ஆவணங்கள், டிஜிட்டல் பொருட்கள் மற்றும் பணங்களை கைப்பற்றிய 9 மாதங்களுக்கு பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் டெல்லி உள்ளிட்ட 32 இடங்களில் ஜனவரியில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அதில், இரண்டு பிஸ்டல்கள், இரண்டு மேகஸின்கள், வெடிபொருள்கள் மற்றும் ரூ.4.60 லட்சம் கைப்பற்றப்பட்டது.

லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் கோல்டி பிரார் உள்ளிட்ட அவரின் கூட்டாளிகளின் வழிகாட்டுதலின் படி நடத்தப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட குற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (உபா) கீழ், பதிவு செய்யப்பட்டது தொடர்பாக NIA ஏழு இடங்களில் சோதனை நடத்தியது. இந்த குழு அதன் மாஃபியா ஸ்டைல் குற்ற நெட்வொர்க்களை நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மற்றும் வெளிநாடுகளிலும் பரப்புகிறது.

இந்த நெட்வொர்க்குகள் பிரபல பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா மற்றும் பிரதீப் குமார் போன்ற மத மற்றும் சமூக தலைவர்களின் கொலை உள்ளட்ட பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த குற்ற நடவடிக்கைகளில் சம்மந்தப்பட்டுள்ளன. மேலும் தொழிலதிபர்கள் மற்றும் நிறுவனங்களில் மிரட்டி பெரிய அளவில் பணம் பறிக்கின்றன என தகவல்கள் வெளி வந்துள்ளன.

மெத்தம்பெட்டமைன் சப்ளை செய்யும் நபர்களை பொறிவைத்து தட்டி தூக்கிய காவல்துறை..!

சென்னையில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் சப்ளை செய்யும் நபர்களை மாதாவரம் பேருந்து நிலையத்தில் பயணிக்க மத்தியில் தட்டி தூக்கிய காவல்துறையினரால் பெரும் பபபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து நாளுக்கு நாள் போதை பழக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் காவல்துறை அதிரடி சோதனையில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை அரும்பாக்கம் உதவி ஆணையர் தலைமையிலான தனிப்படை காவல்யினருக்கு மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் அடிப்படையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அரும்பாக்கம் பகுதியில் மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்து வந்த தீபக் – டாலி மேத்தா தம்பதியினரும் அவர்களது நண்பரான முத்துகுமரனும் கைது செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து, அருண் குமார், சித்தார்த், தீபக் ராஜ் ஆகிய நபர்களையும் கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

இத்தனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் பெங்களூர் விரைந்து சென்ற தனிப்படை காவல்துறை மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் சப்ளை செய்த பெங்களூருவைச் சேர்ந்த சந்தோஷ், அந்தோணி ரூபன் மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவை சேர்ந்த அபித் கிளாப்டனின் ஆகிய மூன்று நபர்களை நேற்றைய முன்தினம் கைது செய்து அவர்களிடம் இருந்து 6 கிராம் மெத்தப்பெட்டமைன், கஞ்சா, செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை சென்னை அழைத்து வந்து வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் தொடர் விசாரணையில் ஆந்திராவை சேர்ந்த ஒருவர் மொத்தமாக மெத்தப்பெட்டமைன் போதைப்பொருளை வாங்கி வந்து டீலர்களுக்கு விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து, காவல்துறையினர் வாடிக்கையாளர் போல் அவரிடம் பேசி தங்களுக்கு 1 கிலோ மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் வேண்டும் என்றும் கேட்டுள்ளனர். அந்த நபர் மாதவரம் வந்து வாங்க வேண்டும் என கூறியதன் பேரில் காவல்துறை நேற்று‌ இரவு மாதவரம் பேருந்து நிலையம் அருகே சென்று காத்திருந்துள்ளனர்.

அப்போது ஆந்திராவில் இருந்து பேருந்தில் போதை பொருளுடன் வந்த நபரை மடக்கி பிடித்து சோதனை செய்த போது அவரிடம் 1 கிலோ மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் இருப்பதை காவல்துறை கண்டுபிடித்தனர். பின்னர், அந்த நபரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அவர் ஆந்திர மாநிலம் ஓங்கோல் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் என்பதும் இவர் சென்னை பல போதைப்பொருள் ஏஜெண்ட்டுகளுக்கு போதைப்பொருள் சப்ளை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறை விஸ்வநாதனிடம்‌ இருந்து 1 கிலோ மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அஸ்வத்தாமன்: இல்லாத இனவாதமான திராவிடத்தை பேசுவோர் கையில் தமிழ்ச் சமூகம் சிக்கியுள்ளது..!

இல்லாத இனவாதமான திராவிடத்தை பேசுவோர் கையில் தமிழ்ச் சமூகம் சிக்கிக்கொண்டிருக்கிறது என அஸ்வத்தாமன் தெரிவித்தார். இது தொடர்பாக சென்னை, கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவியை, பாஜக மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார்.

அதன்பின்னர், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அஸ்வத்தாமன் பதிலளித்தார். அப்போது அண்மையில் ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் ஒரு வரி விடுபட்டது சர்ச்சை யாக்கப்பட்டது. இதில், ஆளுநர் மீது இனவாத அடிப்படை யில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவதூறு கருத்து தெரிவித்து இருந்தார். நான் பெருமைமிகு கிறிஸ்தவன் என சொல்லும் உதயநிதி, சனாதனத்தை வேரறுப்போம் என்கிறார். என தெரிவித்தார்

இதைப்போல், இனவாத கருத்துகளை தொடர்ந்து முன்வைப்பது, ஆளுநரை பணி செய்யவிடாமல் தடுப்பது, இனவாத கருத்துகளை பரப்பி மக்களிடையே அமைதியை குலைக்கும் நோக்கில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழான குற்றங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஆகியோர் மீது பிஎன்எஸ் சட்டம் 218-ன் கீழ் குற்றவியல் நடவடிக்கையை தொடங்குவதற்கான அனுமதிவழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கி றோம். இதுதொடர்பாக ஆளுநர் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

இங்கு மக்கள் பிரச்சினைகள் ஆயிரம் இருக்கின்றன. அவற்றில் கவனம் செலுத்தாமல் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் மக்களை திசை திருப்பும் நயவஞ்சக நாடகங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின் றனர். திமுகவின் வரலாறே இந்திய தேசத்துக்கு எதிரானது. அவர்களின் நடவடிக்கைகள் அனைத்துமே பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதிலும், இனவெறி கருத்துகளை பேசுவதிலும், மதவெறியில் ஊறிப்போய் பேசுவதிலுமே இருக்கிறது.

இல்லாத இனவாதமான திராவிடத்தை பேசுவோர் கையில் தமிழ்ச் சமூகம் சிக்கிக்கொண்டிருக்கிறது. இதைவிடுத்து எப்போது அவர்கள் மனிதவாதம் பேசப்போகிறார்கள் என்பது தெரிய வில்லை என அஸ்வத்தாமன் தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலின் விளக்கம்: நாமக்கல் கவிஞர் மாளிகையில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதா..!?

“சென்னையில் நடந்த அரசு நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து தவறாகப் பாடப்படவில்லை. அது ஒரு தொழில்நுட்பக் கோளாறுதான். மைக் சரியாக வேலை செய்யவில்லை. இரண்டு மூன்று இடங்களில், பாடியவர்களின் குரல் கேட்கவில்லை. எனவே, ஆரம்பத்தில் இருந்து மீண்டும் தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டது,” என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தமிழ்நாடு அரசின் புத்தாய்வுத் திட்டப் பயிற்சியை நிறைவு செய்தோருக்கான சான்றிதழ்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அங்கிருந்த அரசு ஊழியர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடினர். அப்போது கண்டமிதில் என்பதை கண்டமதில் என்றும், புகழ் மணக்க என்பதை ‘திகழ்’ மணக்க என்றும் பாடினர். மேலும் மைக் சரியாக வேலை செய்யாததால் , திராவிட நல் திருநாடும் என்ற வரியில் ‘ திருநாடும் ‘ என்ற வார்த்தை ஒலிபெருக்கியில் ஒலிப்பதில் இடைவெளி ஏற்பட்டது.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை பிழையுடனும் , தடுமாற்றத்துடனும் அரசு ஊழியர்கள் பாடியதைக் கண்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது அருகில் அமர்ந்திருந்த சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை செயலாளர் தாரேஸ் அகமதுவிடம் நிகழ்ச்சியின் நிறைவில் பிழையின்றி ஒருமுறை தமிழ்த்தாய் வாழ்த்தை பாடச் செல்லுமாறு கூறினார் . துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்படி இரண்டாம் முறை தமிழ்த்தாய் வாழ்த்தை பாடிய அரசு ஊழியர் குழுவினர் மீண்டும் அதே பிழையுடன் பாடினர். இம்முறை மைக் சரியாக வேலை செய்ததால், பிழைகள் அனைத்தும் தெளிவாகத் தெரிந்தன.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “தமிழக அரசின் புத்தாய்வுத் திட்டப் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்ட 30 பேரில் 19 பேர் நிறைவு செய்து இன்று சான்றிதழ் பெற்றுள்ளனர். இத்திட்டத்தை, பாரதிதாசன் மேலாண்மை கல்லூரியுடன் இணைந்து ஆண்டுக்கு 6.5 கோடியில் செயல்படுத்தி வருகிறோம். அடுத்த 2 ஆண்டுக்கு இப்பயிற்சி திட்டம் செயல்படுத்தப்படும்.” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

அப்போது அவரிடம், தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “தமிழ்த்தாய் வாழ்த்து தவறாகப் பாடப்படவில்லை. அது ஒரு தொழில்நுட்பக் கோளாறுதான். மைக் சரியாக வேலை செய்யவில்லை. இரண்டு மூன்று இடங்களில், பாடியவர்களின் குரல் கேட்கவில்லை. எனவே, ஆரம்பத்தில் இருந்து மீண்டும் தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதன்பின்னர், தேசிய கீதமும் முறையாக பாடப்பட்டது. தேவையில்லாமல் மீண்டும் பிரச்சினையை கிளப்பிவிட வேண்டாம்” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றம் உத்தரவு: ஆதார் அடையாளத்தை கண்டுபிடிக்க மட்டும்தான்..! வயது நிர்ணயம் கூடாது..!

ஆதார் அடையாளத்தை கண்டுபிடிக்க உதவும் ஒன்று. பிறந்த தேதியை, வயதை கண்டுபிடிக்க ஆதாரை பயன்படுத்த வேண்டியது இல்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் 2015-ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் இறந்தவரின் இழப்பீட்டு தொகையை நிர்ணயிக்கும் போது மோட்டார் விபத்து உரிமை கோரல் தீர்ப்பாயம் ஆதார் அடிப்படையில் வயதை 45-ல் இருந்து 47ஆக தவறாக கணக்கிட்டது. இதனால் பஞ்சாப்-அரியானா உயர் நீதிமன்றத்தில் இறந்தவருக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீடு தொகை ரூ.19.35 லட்சத்தில் இருந்து ரூ.9.22 லட்சமாக குறைந்தது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கரோல், உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து, வயதை கணக்கிட சிறார் நீதி சட்டம், 2015 பிரிவு 94-ன் கீழ் பள்ளி விடுப்பு சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள பிறந்த தேதியிலிருந்து இறந்தவரின் வயதை தீர்மானிக்க வேண்டும். ஆதார் அடையாளத்தை கண்டுபிடிக்க உதவும் ஒன்று. பிறந்த தேதியை, வயதை கண்டுபிடிக்க ஆதாரை பயன்படுத்த வேண்டியது இல்லை’ என நீதிபதிகள் தெரிவித்தனர்.

தமிழக அரசு நடவடிக்கை புயலால் அழிந்த தனுஷ்கோடியில் 60 ஆண்டுக்குப்பின் சுகாதார மையம் மற்றும் அங்கன்வாடி அமைக்க பரிந்துரை..!

புயலால் அழிந்து வரலாற்றில் வாழும் தனுஷ்கோடியில் சுகாதார மையம் மற்றும் அங்கன்வாடி அமைக்க பொது சுகாதார இயக்குனரகம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. ராமேஸ்வரம் தீவின் தென்கிழக்கு பகுதியில் வங்கக்கடலும், இந்திய பெருங்கடலும் கூடுமிடமாக தனுஷ்கோடி அமைந்திருந்தது. 1964-க்கு முன்பு வரை தனுஷ்கோடி ஒரு பெரும் வர்த்தக நகரமாக விளங்கியது.

இலங்கை தலைமன்னார் – தனுஷ்கோடி இடையே கப்பல் போக்குவரத்து, சென்னை – தனுஷ்கோடி இடையே போட் மெயில் ரயில் போக்குவரத்து, தபால் நிலையம், பள்ளிக்கூடம் மற்றும் அரசு அலுவலகங்கள் என பரபரப்பாக இயங்கி வந்தது.

கடந்த 1964, டிசம்பர் 23-ஆம் தேதி மன்னார் வளைகுடா கடலில் வீசிய பெரும் கோரப்புயலில் ஒட்டு மொத்த நகரமும், கடல் அலையின் கோரதாண்டவத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதில் வீடுகள், அரசு அலுவலகங்கள், போக்குவரத்து வழித்தடங்கள், குடியிருப்புகள் என அனைத்தும் உருக்குலைந்து நிலையில் சுமார் 2 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். அந்த புயலின் எச்சங்களாக கட்டிடங்களும், தேவாலயமும் தனுஷ்கோடியின் அடையாளமாய் இருக்கும் நிலையில் இந்த கோரப்புயலுக்கு பின் தனுஷ்கோடியை, மக்கள் வாழ தகுதியற்ற பகுதியாக தமிழக அரசு அறிவித்தது.

அதன்பின்னர், வரலாற்று சுற்றுலா பகுதியாக இருந்த தனுஷ்கோடியை புத்துயிர் பெறும் நகரமாக மாற்ற முடிவு செய்த மத்திய அரசு, கடந்த 2016-ல் முகுந்தராயர்சத்திரம் முதல் அரிச்சல்முனை வரை தார்ச்சாலை அமைத்து 52 ஆண்டுகளுக்கு பிறகு போக்குவரத்து வசதியை ஏற்படுத்தியது. இத்தனை தொடர்ந்து தனுஷ்கோடிக்கு பள்ளிக்கூடம், கலங்கரை விளக்கம், தபால் நிலையம் என படிப்படியாக கொண்டு வரப்பட்டது.

இப்பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வரும் பூர்வகுடி மீனவர்கள், தற்காலிக குடிசைகள் அமைத்து வாழ்வாதாரத்திற்காக தங்கி வருகின்றனர். தினசரி வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளை நம்பி சங்கு கடைகள், மீன் உணவு ஓட்டல், பலசரக்கு கடைகள் அமைத்து வருமானம் ஈட்டுகின்றனர்.

ஆனால்  60 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு  மின்சார வசதி இல்லாததால் மீனவ மக்கள் வாழும் குடிசையில் சூரிய சக்தியில் இயங்கும் சோலார் பேனல்களை பயன்படுத்தி, மின் தேவையை பூர்த்தி செய்கின்றனர். எனினும் மாலை 6 மணிக்கு மேல் தங்குவதற்கு அரசு அனுமதி இல்லாததால்  இதுவரை குடிநீர், மின்சாரம், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அரசு ஏற்பாடு செய்யவில்லை.

தனுஷ்கோடி, அரிச்சல்முனை சுற்றுலாத்தலம் என்பதால் தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். 2 அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. மேலும் 500-க்கும் மேற்பட்ட மீனவ மக்களும் தற்காலிகமாக வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதிக்கு வரும் சுற்றுலாப்பயணிகள், உள்ளூர் மக்கள், பள்ளி குழந்தைகள் அனைவரும் சாதாரண மருத்துவத்திற்கு கூட 20 கிமீ தொலைவில் உள்ள ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர்.

இதனால் இப்பகுதிக்கு வந்து செல்லும் சுற்றுலாப்பயணிகள் மற்றும் மீனவ மக்களின் வாழ்வியலை கருத்தில் கொண்டு தமிழக அரசின் பொது சுகாதார இயக்குனரகம், தனுஷ்கோடியில் நிரந்தர சுகாதார வசதியை ஏற்படுத்தும் வகையில் அங்கு சுகாதார மையம் மற்றும் அங்கன்வாடி மையம் அமைக்க மத்திய, மாநில சுகாதார அமைப்புக்கு பரிந்துரை செய்துள்ளது. இது நிறைவேறும்பட்சத்தில் அங்கு பகல் நேரத்தில் மட்டும் இயங்கக் கூடிய மருத்துவர் செவிலியர் பணிபுரியும் வகையில், சுகாதார மையம் அமைக்கப்படும் என தெரிய வருகின்றது.

கனடா புதிய ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை..!

இந்தியா மீது பொருளாதாரத் தடையை கனடா அரசு விதிக்க வேண்டும் என்று, கனடாவிலுள்ள புதிய ஜனநாயகக் கட்சியின் எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கனடாவில் வசித்து வந்த சீக்கிய பிரிவினைவாத காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது.

இந்நிலையில், நிஜ்ஜார் கொலை தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்தமுடிவு செய்துள்ளதாகவும் கனடா தெரிவித்தது. இதையடுத்து இந்தியதூதரை திரும்ப பெற இந்தியா முடிவு செய்தது. மேலும் டெல்லியில் உள்ள கனடா தூதரக அதிகாரிகள் 6 பேரை வெளியேற உத்தரவிட்டது. அதேபோல் கனடாவில் உள்ள இந்திய அதிகாரிகள் 6 பேரை வெளியேறுமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. இதனால் இரு நாடுகள் இடையேயான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டு மோதல் போக்கு அதிகரித்தது.

இந்நிலையில், கனடாவைச் சேர்ந்த புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங் பேசுகையில், RSS அமைப்பு தீவிரவாத அமைப்பு போன்று செயல்படுகிறது. எனவே, கனடாவில் அதைத் தடை செய்யவேண்டும். மேலும் இந்தியா மீது பொருளாதாரத் தடையை கனடா அரசு விதிக்கவேண்டும். சீக்கிய பிரிவினைவாதியின் கொலைக்கு இந்திய தூதர்கள் சிலர் காரணம் என்று கனடாவிலுள்ள ராயல் கனடிய மவுண்டட் காவல்துறை குற்றம் சாட்டியுள்ளதன் மூலம் இதில் இந்தியாவின் பங்கு இருப்பது தெரியவந்துள்ளது என ஜக்மீத் சிங் தெரிவித்தார்.

இந்நிலையில் கனடா நாடாளுமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் கலந்துகொண்டு புதிய ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் பேசினர். அப்போது, “இந்தியாவிலுள்ள RSS அமைப்பு தீவிரவாத அமைப்பு போன்று செயல்படுகிறது. அதை கனடாவில் தடை செய்யவேண்டும். மேலும் இந்தியா மீது பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும்.

கனடாவில் வசிக்கும் சீக்கியர்களுக்கு கொலை மிரட்டல் எச்சரிக்கைகள் வருகின்றன. அவர்கள் வீடுகளுக்குள் அடைந்து கிடக்கின்றனர். மேலும் தங்கள் பாதுகாப்புக்காக ஆயிரக்கணக்கான டாலர்களை செலவு செய்து வருகின்றனர். மேலும் சிலர் ஓட்டல்களில் தங்கி பாதுகாப்புடன் உள்ளனர்’’ என்று தெரிவித்தனர்.

என்டிபி கட்சி எம்.பி. ஹீத்தர் மெக்பெர்சன் பேசுகையில்,, “இந்தியாவுக்கு ஆயுதங்கள், ராணுவத்தள வாடங்கள் விற்பனை செய்வதை கனடா நிறுத்தவேண்டும். மேலும், சிறுபான்மையினருக்கு எதிரான இன வன்முறை, இனப்படுகொலை வன்முறைக்கு அழைப்பு விடுக்கும், இந்தியாவைச் சேர்ந்த பாஜக தலைவர்கள் கனடா வருவதற்கு தடை செய்யவேண்டும். இந்தியா மீது பொருளாதாரத் தடையை விதிக்கவேண்டும்” என்றார். அவையில் என்டிபி கட்சித் தலைவர் ஜக்மீத் சிங் பேசுகையில்,, “RSS அமைப்பானது உலகம் முழுவதும் கிளைகளைப் பரப்பி வன்முறை, தீவிரவாத அமைப்பு போன்று செயல்படுகிறது. கனடாவில் பிரித்தாளும் சூழ்ச்சியை RSS செயல்படுகிறது. அந்த அமைப்பைத் தடை செய்ய வேண்டும்’’ என ஜக்மீத் சிங் பேசினார்.

 

தென் கொரியா தகவல்: ரஷ்யாவுக்கு 3 ஆயிரம் ராணுவ வீரர்களை வட கொரியா அனுப்பியாதா..!?

உக்ரைன் போரில் ஈடுபட்டு வரும் ரஷ்யாவுக்கு உதவும் நோக்கில் வட கொரியா 3 ஆயிரம் ராணுவ வீரர்களை அனுப்பி உள்ளதாக தென் கொரிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தென் கொரிய தேசிய புலனாய்வு நிறுவனம், அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கம் அளித்தது.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தென் கொரிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், “உக்ரைனுடன் போரிட்டு வரும் ரஷ்யாவுக்கு ஆதரவாக வட கொரியா 3 ஆயிரம் ராணுவ வீரர்களை அனுப்பியுள்ளது. மொத்தம் சுமார் 10,000 துருப்புக்களை வழங்குவதாக வட கொரியா உறுதியளித்துள்ளது. அவர்கள் அனைவரும் வரும் டிசம்பருக்குள் அனுப்பப்பட்டுவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வட கொரியா தனது ராணுவ வீரர்களை கப்பல் மூலம் அனுப்பி உள்ளது. முன்னதாக, வட கொரியாவுக்குள் துருப்புக்கள் பயிற்சி பெற்றதற்கான அறிகுறிகள் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் கண்டறியப்பட்டன. ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்ட வட கொரிய துருப்புகள், அங்கு பல்வேறு பயிற்சி நிலையங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டுள்ளனர். சூழலுக்கு ஏற்றவாறு அவர்கள் களமிறக்கப்படுவார்கள் என தென் கொரியா குறிப்பிட்டனர்.

நீதி தேவதை சிலையில் மாற்றதிற்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் எதிர்ப்பு..!

நீதி தேவதை சிலை மற்றும் சின்னத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களுக்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் நீதிபதிகளின் நூலகத்தில் ஆறடி உயரம் கொண்ட நீதி தேவதையின் சிலை திறக்கப்பட்டது. பழைய சிலையுடன் ஒப்பிடும்போது புதிய சிலையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.

குறிப்பாக, பழைய நீதி தேவதையின் கண்கள் துணியால் கட்டப்பட்டிருந்த நிலையில், புதிய சிலையில் கண்கள் துணியால் மூடப்படவில்லை. ஒரு கையில் தராசும், மறு கையில் வாளுக்கு பதிலாக அரசமைப்பு சட்ட புத்தகமும் புதிய சிலையில் இடம்பெற்றது. தலையில் கிரீடத்துடன் வெள்ளை நிற உடையில் இருப்பது போன்று இந்த புதிய சிலை உருவாக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நீதி தேவதை சிலையின் இந்த தலைகீழ் மாற்றத்துக்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறி்த்து, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் தலைவர் கபில் சிபல் மற்றும் நிர்வாக குழுவின் உறுப்பினர்கள் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானங்கள் குறித்து பேசினார்.

அதில், நீதி தேவதையின் சிலை மற்றும் சின்னத்தில் உச்சநீதிமன்றம் ஒருதலைபட்சமாக செயல்பட்டு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களின் நிர்வாக குழுவின் கவனத்துக்கு வந்துள்ளது. நீதி நிர்வாகத்தில் சமபங்குதாரர்களாக இருக்கிறோம். ஆனால், இந்த மாற்றங்கள் முன்மொழியப்பட்டபோது எங்களின் கவனத்துக்கு கொண்டு வரப்படவில்லை. மேலும், இந்த மாற்றத்துக்கான பின்னணி என்ன என்பது குறித்தும் தெரியவில்லை.

அதபோன்று, நாங்கள் வழக்கறிஞர் சங்கத்துக்காக உணவு விடுதி கட்ட கோரிக்கை விடுத்த இடத்தில் அருங்காட்சியகம் கட்ட எடுத்துள்ள நடவடிக்கைக்கும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் ஒருமனதாக தனது எதிர்ப்பை தெரிவிக்கிறது என அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.