உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்: சர்வாதிகாரத்தின் ஆயுள் நீண்ட நாள் நீடிக்காது..!

உதயநிதி ஸ்டாலின் ஆவேசம் சர்வாதிகாரத்தின் ஆயுள் நீண்ட நாள் நீடிக்காது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தொடர்ந்து மக்கள் விரோத போக்கினை கடைபிடித்து வருகின்றது. கறுப்புப் பணம் ஆரம்பித்த பாஜக அரசின் சர்வாதிகார போக்கு இன்று ‘ஒரே நாடு ஒரே மொழி’ என்ற கொள்கையைத் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தையும் இந்தியில் பெயர் வைக்கும் பாஜக அரசு, பிற மொழிகளைத் தொடர்ந்து புறக்கணித்தே வருகிறது.

இந்நிலையில், பொது நிறுவனமான LIC-இலும் இந்தி திணிப்பை பாஜக முன்னெடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தயுள்ளது . அரசின் LIC இணையதளப் பக்கத்தின் முதன்மை மொழி, ஆங்கிலத்தில் இருந்து வந்த நிலையில், தற்போது முகப்பு பக்கத்தில் இந்தி மொழி மட்டுமே இருக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த செலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சர்வாதிகாரத்தின் ஆயுள் நீண்ட நாள் நீடிக்காது என பாஜக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ஒட்டுமொத்த நாட்டு மக்களின் பங்களிப்போடு செயல்பட்டு வரும் LIC -யின் இணையதளம், முழுக்க, முழுக்க இந்தி மயமாக்கப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம். அந்த இணையதளத்தை ஆங்கிலத்தில் பார்ப்பதற்கான வசதியைக் கூட இந்தியில் உள்ள சுட்டியின் மூலம் தான் பெற முடியும் என்பது மத்திய அரசின் இந்தித் திணிப்பு மோகத்தையே அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

தமிழ், ஆங்கிலம் உட்பட அனைத்து மாநில மொழிகளிலும் LIC இணையதளத்தை மக்கள் பயன்படுத்தும் வகையில் உடனே மாற்றி அமைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தி உட்பட எந்த ஒன்றையும் வலுக்கட்டாயமாக திணிப்பதன் மூலம் வளர்த்துவிட முடியாது என்பதை ஒன்றிய அரசு இன்னும் புரிந்துகொள்ளவில்லை. சர்வாதிகாரத்தின் ஆயுள் நீண்ட நாள் நீடிக்காது” என உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மீன்பிடி துறைமுகத்தை செல்வப்பெருந்தகை ஆய்வு..!

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய் பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பொதுக்கணக்குக் குழுத் தலைவருமான திரு.கு.செல்வப்பெருந்தகை ஆய்வு செய்தார்.

திண்டுக்கல் சீனிவாசன்: கூட்டணிக்கு வருபவர்கள் ரூ. 50 அல்லது ரூ. 100 கோடி கொடுங்கனு கேட்கிறாங்க..!

திருச்சி மாவட்ட அதிமுக கள ஆய்வு கூட்டம் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, கோகுல இந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், “பல முனைகளிலிருந்து அதிமுகவை தாக்கி வருகிறார்கள். தனி ஒரு மனிதனாக எடப்பாடி பழனிசாமி திமுக ஆட்சியின் அவலங்களை எடுத்துக் கூறி வருகிறார்.” “அதிமுக கட்சியின் சில மாவட்டங்களில் கோஷ்டி பூசல்கள் உள்ளன. அதனை முதலில் சரி செய்ய வேண்டும். ஆபரேஷன் செய்தால் மட்டும் தான் மருத்துவம் பலிக்கும் என்ற நிலை உள்ளது. கூட்டணிக்கு வருபவர்கள் 20 சீட் கொடுங்க, ரூ. 50 அல்லது ரூ. 100 கோடி கொடுங்க என்று கேட்கின்றனர்.”

“கூட்டணி குறித்து நான் பார்த்துக் கொள்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துவிட்டார். கூட்டணி குறித்து நீங்கள் பேட்டி கொடுத்து அதை கெடுத்துவிட வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணிக்கு செல்பவர்கள் ஜெயிக்க முடியாது. எடப்பாடி பழனிசாமி தான் ஜெயிப்பார்” என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

சசி தரூர் வேதனை: டெல்லி இனியும் நாட்டின் தலைநகராக இருக்க வேண்டுமா..?

“டெல்லி இனியும் நாட்டின் தலைநகராக இருக்க வேண்டுமா?” என காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லியில் சுவாசப் பிரச்சினைகளோடு மருத்துவமனைகளுக்கு வருவோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் டெல்லியின் பல பகுதிகளிலும் இன்று காற்றின் தரக் குறியீடு 500-ஐ நெருங்கியுள்ளது.

இந்நிலையில் டெல்லி காற்று மாசு குறித்து காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் எக்ஸ் பக்கத்தில், “உலகிலேயே மிக மோசமான காற்று மாசு கொண்ட நகரம் டெல்லி என்பது ஏற்கெனவே அதிகாரபூர்வமாக உறுதியாகிவிட்டது. உலகின் இரண்டாவது மாசடைந்த தாக்கா நகரைவிட 4 மடங்கு அதிகமான நச்சு டெல்லி காற்றில் உள்ளது. நமது அரசாங்கம் பல ஆண்டுகளாக இந்த நிலையை எதிர்கொண்டு வருகிறது. ஆனால், அதைப் பற்றி எதுவும் செய்யவில்லை என்பது புரிந்துகொள்ள முடியாதது. நானும் கடந்த 2015 முதல் எம்.பி.க்கள், சுற்றுச்சூழல் வல்லுநர்கள், மாசு கட்டுப்பாட்டில் பங்குதாரர்களுக்காக காற்றின் தர வட்ட அட்டவணையை நடத்தினேன்,

ஆனால் கடந்த ஆண்டு கைவிட்டேன், ஏனெனில் எதுவும் மாறவில்லை, யாரும் கவலைப்படவில்லை. இந்த நகரம் நவம்பர் முதல் ஜனவரி வரை வசிக்கவே முடியாத நகரமாகிவிடுகிறது. ஆண்டின் மற்ற மாதங்களில் ஏதோ பிழைக்கலாம் என்பதுபோல் உள்ளது. இத்தகையச் சூழலில், டெல்லி இனியும் நாட்டின் தலைநகராக இருக்க வேண்டுமா?” என சசி தரூர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரயிலில் பீட்சா, பர்கர், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட கூடைப்பந்து வீராங்கனை உயிரிழப்பு..!

மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரில் கூடைப்பந்து போட்டி விளையாடுவதற்காக சென்றுவிட்டு சென்னை திரும்பிய கோவை வீராங்கனை திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் தனியார் பள்ளியை சேர்ந்த 15 வயதான எலினா லாரேட் கூடைப்பந்து விளையாடுவதில் வல்லவர். இவர் நிறைய கூடைப்பந்து போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றிருந்தார்.

இந்நிலையில் மபள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் கடந்த 8-ம் தேதிமுதல் 15-ம் தேதிவரை நடைபெற்றது. இந்த போட்டிகளில் விளையாடுவதற்காக எலினா லாரெட், சக மாணவிகளுடன் ரயிலில் குவாலியர் சென்று பின்னர் போட்டியை முடித்துவிட்டு கடந்த சனிக்கிழமை கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது மாணவி எலினா லாரெட், சக மாணவிகளுடன் சேர்ந்து ரயிலில் சிக்கன் ரைஸ், பர்க்கர் ஆகியவற்றை வாங்கி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவருக்கு கடும் வயிற்று வலியுடன் கூடிய வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இது தொடர்பாக எலினா லாரெட் சென்னை அண்ணா நகரிலுள்ள தனது உறவினர் டேவிட் வில்லியம்சிடம் தனது உடல்நிலை பிரச்சினை குறித்து கூறியுள்ளார்.

எத்தனை தொடர்ந்து, எலினா லாரெட்யை அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். சிகிச்சைக்கு பின்னர் எலினா லாரெட், பெரவள்ளூரில் உள்ள தனது மற்றொரு உறவினர் வீட்டுக்குச் சென்றார். அங்கு சென்ற சிறிது நேரத்தில் எலினா லாரெட்டிற்க்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டது.

இதில் எலினா லாரெட், அங்கேயே மயங்கி கீழே விழுந்தார். உடனே அவருடைய உறவினர்கள் எலினா லாரெட்யை பெரவள்ளூரிலுள்ள பெரியார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், எலினா லாரெட் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தகவலறிந்த பெரவள்ளூர் காவல்துறை, அங்கு விரைந்து சென்று எலினா லாரெட் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக பெரவள்ளூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மாணவி எலினா லாரெட் சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் உயிரிழந்தாரா? அல்லது அவருடைய இறப்புக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்பது பிரேதப் பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே தெரியவரும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காவல் கண்காணிப்பாளருக்கே “அல்வா” கொடுக்கும் புதுச்சத்திரம் காவல் நிலையம்..! உயர் அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுப்பார்களா..!?

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட செல்லியாயிபாளையம் கிராமத்தில் புகழ் பெற்ற வன காளியம்மன் திருக்கோயில் உள்ளது. இந்த வன காளியம்மன் திருக்கோயிலில் கடந்த 05-11-2024 அன்று ஜெயபிரகாஷ் என்ற போதை ஆசாமி கோயில் வேல்(லை) திருடியுள்ளார். இதனை கோவில் பூசாரி பார்த்து தட்டி கேட்ட போது பூசாரியை கடுமையாக வேல்லால் தாக்கியுள்ளான்.

இந்த சம்பவத்தை கண்டவர்கள் பூசாரியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இத்தனை தொடர்ந்து 06-11-2024 அன்று வன காளியம்மன் திருக்கோயில் பூசாரி நாமக்கல் மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் மனு கொடுத்தார். நாமக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் அவர்கள் புதுச்சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவலை தெரிவித்துள்ளார். ஆனால், புதுச்சத்திரம் காவல் நிலையம் புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

இந்நிலையில், பல ஆண்டுகளாகவே புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் கட்டுப்பாட்டில் உள்ள பல ஊர்களில் ஏஜெண்டுகள் வைத்து ஏஜெண்டுகள் மூலமாக செயல்படுவதாக புகார்கள் மக்கள் மத்தியில் உள்ளது. ஆகையால், புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் ஏஜெண்டுகள் மூலம் கைமாறியதால் வன காளியம்மன் திருக்கோயில் பூசாரி தாக்கப்பட்டு இரண்டு வரமாகியும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

இந்நிலையில், வன காளியம்மன் திருக்கோயில் பூசாரியை தாக்கிய குற்றவாளி இரவு நேரங்களில் ஒரு கையில் கோவில் வேல் மற்றொரு கையில் கூறிய ஆயுதங்களுடன் முதியவர்கள் இருக்கும் வீடுகளை கூறிவைத்து இரவு முழுவதும் தூங்கவிடாமல் வீட்டு கதவை தட்டுவதாக காவல் கட்டுப்பாடு அறைக்கு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், புதுச்சத்திரம் காவல் நிலைய காவலாளிகள் விசாரணை செய்வதாக தெரியவில்லை அவர்களின் ஏஜெண்டுகளுக்கு தகவல் கொடுத்து பணம் பார்க்கும் யுத்தியை கடைபிடிப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் அஞ்சுகின்றனர்.

ஆகையால், காவல்துறை உயர் அதிகாரிகள் உடனே தலையிட்டு வன காளியம்மன் திருக்கோயில் பூசாரியை தாக்கிய குற்றவாளியை கைது செய்வார்களா..? மேலும் இரவு நேரங்களில் முதியவர்கள் வீட்டு கதவை தட்டும் குற்றவாளியை கைது செய்து முதியவர்களை நிம்மதியாக தூங்க விடுவார்களா..? என்பதே மக்களின் எதிர்பார்ப்பு ஆகும்.

சீமான்: த.வெ.க கூட்டணி..! நான் திருப்பூர் போகும்போது அவர் திருப்பதி போயிட்டா சிக்கலாகிடும்..!

நான் திருப்பூர் போகும்போது அவர் திருப்பதி போயிட்டா சிக்கலாகிடும்..! அதனால எங்க கால்களை நம்பியே எங்கள் லட்சிய பயணம் தொடரும் என தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார் சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 88 -வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. வ.உ.சிதம்பரனாரின் 88 -வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரின் உருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு சீமான் பதிலளித்தார்.

அப்போது, வ.உ.சிதம்பரனார், கப்பலோட்டியும், செக்கிழுத்தும் நாட்டின் விடுதலைக்கு பாடுபட்டார். தமிழகத்தைச் சேர்ந்த விடுதலை போராட்ட வீரர்கள் மறக்கப்பட்டு, மறைக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களின் எந்த அடையாளமும் தமிழகத்தில் இல்லை. திராவிடம் என்பது தமிழர்களின் அடையாளங்களை மறக்கடிக்க உருவாக்கப்பட்டது தான். தமிழர்களின் அடையாளங்களை திராவிட அடையாளங்களாக மாற்றியுள்ளார்கள்.

மேலும் சீமான் பேசுகையில், வல்லபாய் பட்டேலை தூக்கிப் பிடித்தவர்கள் ஆர்.என்.ரவியின் கூட்டத்தினர். அதை ஆதரித்தவர்கள் திராவிட கூட்டத்தினர். ஆட்சியாளர் தன் ஆட்சி சிறப்பாக இருக்கிறது என கூறினால் அந்த ஆட்சி கொடுமையாக இருக்கிறது என்று தான் அர்த்தம். ஆய்வுக்குச் செல்லும் பொழுது மக்கள் வரவேற்கிறார்கள் என்றால் அவர்களாகவே வரவேற்க வந்தார்களா அல்லது வர வைக்கப்பட்டார்களா? ஒருத்தரை ஒருத்தர் அவர்கள் பாராட்டிக் கொண்டு, போற இடமெல்லாம் சூப்பர் சூப்பர் என்று சொல்கிறார்கள் என முதலமைச்சர் சொல்லிக் கொள்கிறார்.

என் கூட ஒருமுறை வாருங்கள், நான் ஆய்வுக்கு போகிறேன், இந்த மனுக்களை கொடுத்துவிட்டு கவலையோடும், கண்ணீருடன் கதறும் மக்களை ஒருமுறை கேளுங்கள், ஆட்சியாளர்கள் தன் ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்று சொன்னார் என்றால் அது கொடுமையாக இருக்கிறது என்று அர்த்தம். மக்கள் சொல்ல வேண்டும். நாடும் மக்களும் போற்ற வேண்டும்.

த.வெ.க – அதிமுக கூட்டணி குறித்தெல்லாம் என்னிடம் கேட்கக் கூடாது. நான் திருப்பூர் போகும்போது அவர் திருப்பதி போயிட்டா சிக்கலாகிடும்..! அதனால எங்க கால்களை நம்பியே எங்கள் லட்சிய பயணம் தொடரும். நாங்கள் 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்து தான் போட்டியிடுவோம். கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம் என்கிற கொள்கையுடயவன் நான். அவர் அவரோட போறாரு. இவர் இவரோடு போறாரு என இந்த காரை அவர் வைத்திருந்தார். இப்ப யார் வைத்திருக்கிறார் என்ற நகைச்சுவை எல்லாம் நான் சொல்ல தயாராக இல்லை என சீமான் தெரிவித்தார்.

லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் அமெரிக்காவில் கைது..!?

கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வைத்து கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளி வந்துள்ளது. மகாராஷ்டிரா முன்னாள் எம்எல்ஏ பாபா சித்திக் கொலை வழக்கு, சல்மான் கான் வீட்டில் துப்பாக்கி சூடு தொடர்புடைய லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரன் அன்மோல் பிஷ்னோயை அமெரிக்காவில் இருந்து இந்தியா கொண்டுவர மும்பை காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள சல்மான்கானின் வீட்டின் மீது கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இது தொடர்பாக விக்கி குப்தா, சாகர் பால், அனுஜ்குமார் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் அனுஜ்குமார் காவல்துறை காவலில் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் லாரன்ஸ் பிஷ்னாய் மற்றும் அவரது சகோதரர்கள் அன்மல் பிஷ்னாய் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு அன்மோல் பிஷ்னோய் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவரும் முன்னாள் MLA -வுமான பாபா சித்திக்கை, கடந்த மாதம் 12-ஆம் தேதி 3 பேர் கொண்ட கும்பல் சுட்டுக்கொன்றது. இது தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலையின் பின்னணியில் குஜராத் சமர்பதி சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய், அவரது சகோதரர் அன்மோல் பிஷ்னோய் இருப்பதாக மும்பை காவல்துறை சந்தேகிக்கின்றனர்.

மேலும் டெல்லி உட்பட நாட்டின் பல நகரங்களில் நடைபெற்ற கொடிய குற்றங்களில் இவர்களுக்கு தொடர்பு இருப்பதால் அன்மோல் பிஷ்னோயை கைது செய்ய உதவினால் ரூ. 10 லட்சம் பரிசு என தேசிய புலனாய்வு முகமை சமீபத்தில் அறிவித்தது.

இந்நிலையில் அன்மோல் பிஷ்னோய் அமெரிக்காவில் இருப்பதாக மும்பை காவல்துறைக்கு அமெரிக்க அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், இம்மாத தொடக்கத்தில், மும்பை காவல்துறையின் குற்றப்பிரிவு அவரை அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தும் பணியைத் தொடங்கியது. இத்தனை தொடர்ந்து அன்மோல் பிஷ்னோயை அமெரிக்காவில் இருந்து இந்தியா கொண்டு வர மும்பை காவல்துறை முடிவு செய்து இதற்கான அன்மோல் பிஷ்னோய் கைது செய்ய மகாராஷ்டிர சிறப்பு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

மேலும் உலகளாவிய சட்ட அமலாக்க நிறுவனமான இன்டர்போல் மூலம் ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டது. இதையடுத்து அன்மோல் பிஷ்னோயை இந்தியா அழைத்து வர தேவையான நடவடிக்கை எடுக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மும்பை காவல்துறை வேண்டுகோள் விடுத்த நிலையில் லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வைத்து கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளி வந்துள்ளது.

சீமான்: திமுகவினரிடம் ரெய்டும் ஏன் வரவில்லை..! வராது கப்பம் சரியாக கட்டரங்க..!

ஆளும்கட்சியான திமுகவினரிடம் எந்த ரெய்டும் ஏன் வரவில்லை, அவர்களுக்கு வராது. அதற்கு காரணம் அவர்கள் கரைப்படியாத கரம் என்பதல்ல. கப்பம் சரியாக கட்டிக் கொண்டுள்ளார்கள் என்று அர்த்தம். என தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்

சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 88 -வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. வ.உ.சிதம்பரனாரின் 88 -வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரின் உருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு சீமான் பதிலளித்தார்.

அப்போது, வ.உ.சிதம்பரனார், கப்பலோட்டியும், செக்கிழுத்தும் நாட்டின் விடுதலைக்கு பாடுபட்டார். தமிழகத்தைச் சேர்ந்த விடுதலை போராட்ட வீரர்கள் மறக்கப்பட்டு, மறைக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களின் எந்த அடையாளமும் தமிழகத்தில் இல்லை. திராவிடம் என்பது தமிழர்களின் அடையாளங்களை மறக்கடிக்க உருவாக்கப்பட்டது தான். தமிழர்களின் அடையாளங்களை திராவிட அடையாளங்களாக மாற்றியுள்ளார்கள்.

மேலும் சீமான் பேசுகையில், வல்லபாய் பட்டேலை தூக்கிப் பிடித்தவர்கள் ஆர்.என்.ரவியின் கூட்டத்தினர். அதை ஆதரித்தவர்கள் திராவிட கூட்டத்தினர். ஆட்சியாளர் தன் ஆட்சி சிறப்பாக இருக்கிறது என கூறினால் அந்த ஆட்சி கொடுமையாக இருக்கிறது என்று தான் அர்த்தம். ஆய்வுக்குச் செல்லும் பொழுது மக்கள் வரவேற்கிறார்கள் என்றால் அவர்களாகவே வரவேற்க வந்தார்களா அல்லது வர வைக்கப்பட்டார்களா? ஒருத்தரை ஒருத்தர் அவர்கள் பாராட்டிக் கொண்டு, போற இடமெல்லாம் சூப்பர் சூப்பர் என்று சொல்கிறார்கள் என முதலமைச்சர் சொல்லிக் கொள்கிறார்.

என் கூட ஒருமுறை வாருங்கள், நான் ஆய்வுக்கு போகிறேன், இந்த மனுக்களை கொடுத்துவிட்டு கவலையோடும், கண்ணீருடன் கதறும் மக்களை ஒருமுறை கேளுங்கள், ஆட்சியாளர்கள் தன் ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்று சொன்னார் என்றால் அது கொடுமையாக இருக்கிறது என்று அர்த்தம். மக்கள் சொல்ல வேண்டும். நாடும் மக்களும் போற்ற வேண்டும்.

த.வெ.க – அதிமுக கூட்டணி குறித்தெல்லாம் என்னிடம் கேட்கக் கூடாது. நாங்கள் 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்து தான் போட்டியிடுவோம். கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம் என்கிற கொள்கையுடயவன் நான். அவர் அவரோட போறாரு. இவர் இவரோடு போறாரு என இந்த காரை அவர் வைத்திருந்தார். இப்ப யார் வைத்திருக்கிறார் என்ற நகைச்சுவை எல்லாம் நான் சொல்ல தயாராக இல்லை.

மற்ற எல்லோருக்கும் ரெய்டு வருகிறார்கள். ஆளும்கட்சியான திமுகவினரிடம் எந்த ரெய்டும் ஏன் வரவில்லை, அவர்களுக்கு வராது. அதற்கு காரணம் அவர்கள் கரைப்படியாத கரம் என்பதல்ல. கப்பம் சரியாக கட்டிக் கொண்டுள்ளார்கள் என்று அர்த்தம் என சீமான் தெரிவித்தார்.

எச்சரிக்கை: அலுமினியம் பேப்பர், பிளாஸ்டிக் கவரில் உணவை பார்சல் செய்தால் கடைக்கு சீல்..!

சமூக வலைதளங்களில் உணவகம் ஒன்றில் பிரியாணி உணவை சில்வர் கவரில் பார்சல் செய்த வீடியோ ஒன்று வேகமாக பரவியது. அந்த வீடியோவில் சம்பந்தப்பட்ட நபர் ஒருவர் பிரியாணி கடைக்கு சென்று உணவு பார்சல் வாங்கி வந்து அந்த உணவை திறந்து சாப்பிடும் போது அலுமினியம் கவரை வைத்து உணவு பொட்டலம் கட்டியதை பார்த்து அந்த நபர் அதிர்ச்சி அடைந்தார்.

இந்த வீடியோ, உணவு பாதுகாப்பு துறையின் கவனத்துக்கு வந்த நிலையில், இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்த சம்பவம் எங்கு நடைபெற்றாலும் உடனடியாக உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவிக்க உத்தரவு இடப்பட்டுள்ளது

ஏற்கனவே உணவு பாதுகாப்புத்துறை சட்டத்தின் படி பார்சல் வாங்கி செல்லும் உணவுகள் பிளாஸ்டிக் மற்றும் அலுமினியம் கவரில் பயன்படுத்தி பார்சலை வழங்க கூடாது என தெரிவிக்கப்பட்டு உள்ள நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவது பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், உணவு பாதுகாப்புத்துறை சட்டத்தின் படி பார்சல் வாங்கி செல்லும் உணவுகள் பிளாஸ்டிக் மற்றும் அலுமினியம் கவரில் பயன்படுத்தி பார்சலை வழங்கினால் அந்த கடையின் உரிமையாளருக்கு 5000 ரூபாய் அபராதம் விதிப்பது மட்டுமின்றி அவரது கடை உரிமைத்தை ரத்து செய்து சீல் வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.