இம்ரான் கானின் மனைவி நீதிமன்றத்தில் கதறல்..! நீதிக்கு இடமில்லை..!

பாகிஸ்தான் நீதிமன்றத்தில் நீதிக்கு இடமில்லை. நீதி கேட்டு, இனி நீதிமன்றத்துக்கு வரவே மாட்டேன்’ என, முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மனைவி கண்ணீருடன் நீதிமன்றத்தில் கதறியழுத காட்சி அங்கு பரபரப்பு ஏற்படுத்தியது.

ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஜாமீன் கோரி இஸ்லாமாபாத் மாவட்ட மாஜஸ்திரேட் நீதிமன்றத்துக்கு புஷ்ரா பீபி நேற்று வந்திருந்தார். அப்போது, நீதிபதி முன் கண்ணீர் மல்க, புஷ்ரா பீபி பேசுகையில், ‘கடந்த 9 மாதங்களாக, நீதிமன்றத்தில் இம்ரான் கானுக்கு ஜாமீன் கேட்டு அலைந்து கொண்டிருக்கிறேன். சிறையில் அடைக்கப்பட்டுள்ள என் கணவர் இம்ரான் கான், மனிதர் இல்லையா? இந்த அநீதியை எந்த நீதிபதியும் கண்டுகொள்வதில்லை.

இந்த நீதிமன்றத்தில் நீதிக்கு இடமில்லை; இனி, நீதிகேட்டு நீதிமன்றத்துக்கு வரவே மாட்டேன்’ என்றார். முன்னாள் பிரதமரின் மனைவி, நீதிமன்றத்தில் கதறியழுத காட்சியால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்படுத்தியது.

பாமக, விசிக கொடிக்கம்ப பீடங்களை உடைத்த பெண்..! எங்களுக்கு எந்த கட்சியும் தேவையில்லை..!

எங்களுக்கு எந்தக் கட்சியும் தேவையில்லை’ என விசிக, பாமக கொடிக்கம்ப பீடங்களை ஆவேசமாக உடைத்த பெண்மணி. கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே உள்ள மஞ்சக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த செல்லதுரை என்பவர் சில தினங்களுக்கு முன்பு புவனகிரியில் இருந்து மஞ்சக்கொல்லை நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது உடையூர் கிராமத்தில் இளைஞர்கள் சிலர் சாலையில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர்.

அதைப்பார்த்த அவர், ஓரமாக சென்று மது அருந்துமாறு அந்த இளைஞர்களிடம் கூறியுள்ளார். இதில் இளைஞர்களுக்கும் செல்லதுரைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த இளைஞர்கள் அவரை தாக்கியுள்ளனர். காயமடைந்த செல்லதுரை, சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரில் உடையூர் கிராமத்தைச் சேர்ந்த 6 பேரை புவனகிரி காவல்துறை கைது செய்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பாமகவினர் மற்றும் கிராம மக்கள் விருத்தாசலம் – புவனகிரி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை, போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீதமுள்ள நபர்களையும் கைது செய்வதாக உறுதி அளித்தது இத்தனை தொடர்ந்து, சாலை மறியல் கைவிடப்பட்டது.

இதற்கிடையே, மஞ்சக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமரன் மனைவி அருட்செல்வி என்பவர் நேற்று முன்தினம் ஆத்திரத்துடன் கடப்பாறையால் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்ப பீடத்தை சேதப்படுத்தினார். அப்பொழுது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை கடப்பாரையை பிடுங்கி அருகே இருந்த வாய்க்காலில் வீசினர்.

ஆனால், அருட்செல்வி அதே பகுதியில் இருந்த பாட்டாளி மக்கள் கட்சி கொடிக்கம்ப பீடத்தை மற்றொரு இரும்பு கம்பியால் சேதப்படுத்தியதோடு, ‘‘மதுவால் ஊருக்குள் பிரச்சினை வருகிறது, எங்கள் ஊருக்கு எந்த கட்சியின் கொடிக்கம்பமும் தேவையில்லை, நாங்கள் இந்த ஊரில் அமைதியாக வாழ வேண்டும்’’ என தெரிவித்தார். அவரது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

பவன் கல்யாண் எச்சரிக்கை: எங்கு பார்த்தாலும் பலாத்காரம்..! உள்துறை அமைச்சர் அமைதியாக இருக்கிறார்..!

ஆந்திராவில் எங்கு பார்த்தாலும் பாலியல் பலாத்காரம் நடக்கிறது. உள்துறை அமைச்சர் அனிதா அமைதியாக இருந்தால், அவரது பதவியை நானே ஏற்பேன் என துணை முதலமைச்சர் பவன் கல்யாண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தனது சொந்த தொகுதியான பிதாபுரத்தில் ரூ 5.52 கோடி மதிப்பில் நலத்திட்டம், வளர்ச்சி பணிகளுக்கு நேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பவன் கல்யாண் பேசுகையில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால் மட்டுமே வளர்ச்சி பெற முடியும்.

எங்கு பார்த்தாலும் பாலியல் பலாத்காரம், பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் நடைபெற்று வருவது கவலை அளிக்கிறது. காவல்துறை குற்றவாளிகளை கைது செய்யாமல் உள்ளனர். சாதி, மதம் குற்றவாளிகளுக்கு கிடையாது. தவறு செய்தால் தண்டனை கிடைக்க வேண்டும். யாராக இருந்தாலும், உறவினர் என்றும் ரத்த பந்தம் என கூறி வந்தால் தவறு செய்திருந்தால் அவர்களையும் சேர்த்து அடித்து உதையுங்கள். ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் அதிகாரிகள் மத்தியில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.

உள்துறை அமைச்சராக உள்ள அனிதாவும் பெரிய அளவில் எந்த மாற்றமும் செய்யாமல் அமைதியாக உள்ளார். நான் உள்துறை அமைச்சராக பதவி ஏற்றால் வேறு மாதிரி இருக்கும். என்னை அந்த நிலைக்கு கொண்டு வர வேண்டாம். தேவைப்பட்டால் உள்துறை அமைச்சர் பொறுப்பையும் நானே ஏற்பேன் என பவன் கல்யாண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரேமலதா விஜயகாந்த்: விஜய் இப்போது தான், மாநாடு நடத்தி கொடி ஏற்றி இருக்கிறார்…!?

விஜய் இப்போது தான், விஜய் மாநாடு நடத்தி கொடி ஏற்றி இருக்கிறார். அவர் கடந்து வரவேண்டிய பாதைகள் ஏராளம்  என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

மதுரையில் இன்று செய்தியாளர்களின் கேள்விக்கு பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்தார். அப்போது, “அரசியலில் யார் எதிரி என்று அறிந்து கொண்டு தான் அரசியல் களத்துக்குள் வருகிறார்கள். அந்த வகையில் விஜய்யும், தமது கருத்தை கூறி உள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம்.

இன்னும் காலம் இருக்கிறது. இப்போது தான், விஜய் மாநாடு நடத்தி கொடி ஏற்றி இருக்கிறார். அவர் கடந்து வரவேண்டிய பாதைகள் ஏராளம். எதிர்காலத்தில் அவரது செயல்பாடுகள், முனெடுத்துச் செல்லும் நிகழ்வுகளைப் பொறுத்தே எதையும் கூறமுடியும்.” என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

வானதி சீனிவாசன் கோரிக்கை: முதலமைச்சர் அடிக்கடி கோயம்புத்தூர் வரவேண்டும்..!

முதலமைச்சர் வருகையையொட்டி கோயம்புத்தூரில் பல்வேறு பகுதிகளில் சாலைகள் அமைக்கப்படுகிறதென்றால் அடிக்கடி முதலமைச்சர் கோயம்புத்தூர் வரவேண்டும் என்று கோரிக்கை வைப்பேன் என பாஜக MLA வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.  கோயம்புத்தூர் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகில் பேருந்து நிழற்குடை திறப்பு விழா இன்று நடைபெற்றது. கோயம்புத்தூர் தெற்கு தொகுதி MLA வானதி சீனிவாசன் நிழற்குடையை திறந்து வைத்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்களின் வானதி சீனிவாசன் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, கோயம்புத்தூர் தெற்கு தொகுதிக்கு அதிகமான நிதி அங்கன்வாடிகளுக்குத்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் விமான நிலைய விரிவாக்கத்துக்கு தேவையான நிலத்தை தமிழக அரசு ஆர்ஜிதம் செய்து மத்திய அரசிடம் ஒப்படைத்துள்ள நிலையில், அந்த நிலம் முழுவதும் காலி செய்து வழங்கப்படவில்லை. இதனால் விரிவாக்க திட்ட கட்டமைப்பு பணிகள் தொடங்குவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதுகுறித்த விவரம் மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து மத்திய அரசு கேட்கும் தகவல்களை தமிழக அரசு விரைவில் அனுப்ப வேண்டும் என முதலமைச்சரின் கோயம்புத்தூர் வருகையின் போது வலியுறுத்தப்படும். வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் பாஜகவின் லட்சியம். உணவு சார்ந்து மொழி சார்ந்து பாஜக மீது வைக்கப்படும் விமர்சனங்கள் உண்மையல்ல. கடந்த முறை முதலமைச்சர் கோயம்புத்தூர் வந்தபோது பல கோரிக்கைகள் உள்ளடக்கிய மனுவை வழங்கினேன். அவற்றில் சில நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து நடிகர் விஜய் கருத்து கூறியுள்ளார். உண்மையில் சாதக பாதகங்களை யோசிக்க வேண்டும். மற்றவர்கள் கூறுகிறார்கள் என்பதற்காக எதிர்க்கக் கூடாது. முதலமைச்சர் வருகையையொட்டி கோயம்புத்தூரில் பல்வேறு பகுதிகளில் சாலைகள் அமைக்கப்படுகிறதென்றால் அடிக்கடி முதலமைச்சர் கோயம்புத்தூர் வரவேண்டும் என்று கோரிக்கை வைப்பேன்முதலமைச்சர் வருகையையொட்டி கோயம்புத்தூரில் பல்வேறு பகுதிகளில் சாலைகள் அமைக்கப்படுகிறதென்றால் அடிக்கடி முதலமைச்சர் கோயம்புத்தூர் வரவேண்டும் என்று கோரிக்கை வைப்பேன் என பாஜக MLA வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

20 ஆண்டுகளுக்கு மேலாக நியாய விலை கடையில் பணியாற்றிய தற்காலிக பணியாளர் தர்ணா..!

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் நகராட்சிக்கு உட்பட்ட கூட்டுறவுத்துறை மூலம் நியாய விலை நகர கடையின் எண் -3 செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த நியாய விலை கடையில் குமாரசாமி தற்காலிக பணியாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் திடீரென நியாய விலை மண்டல மேலாளர் சௌமியா தற்காலிக பணியாளர்களை வெளியேறும்படி கூறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 3 நம்பர் நியாய விலை கடையில் கடந்த ஒரு வார காலமாக அரிசி பருப்பு, சர்க்கரை எண்ணெய் கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படாமல் தினந்தோறும் இன்று போய் நாளை வா என பொதுமக்களை ஊழியர்கள் அலைக்கழித்து வருகின்றனர்.

மேலும் நியாய விலை கடையில் பணியாற்றி வந்த குமாரசாமியை எந்தவித அரசு ஆணையும் வழங்காமல் கடையில் இருந்து விலகிக் கொள்ளுமாறு தெரிவித்து வருகிறார். இதனால் மணமுடைந்த குமாரசாமி கடை முன் அமர்ந்து தர்ணா ஈடுபட்டார்.  இந்த செய்தி அறிந்த செய்தியாளர்கள் அங்கு குவிந்தனர்.

செய்தியாளர்களிடம் குமாரசாமி பேசுகையில், தாராபுரம் தாலுகாவிலுள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் தொடர்ந்து 22 ஆண்டுகள் தற்காலிக பணியாளராக வேலை செய்து வருகிறேன். என் மீது துறை ரீதியாகவும் பொதுமக்களும் எந்த புகார் அளிக்கவில்லை. என் மீது வன்மம் கொண்டு உடனடியாக வேலையை விட்டு செல்ல வேண்டும் என்று வற்புறுத்தி வந்த நிலையில் நான் நீதிமன்றம் மூலம் நியாயம் கேட்டு சென்ற பொழுது அங்கேயும் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து என் மீது வேண்டுமென்றே நடவடிக்கை எடுக்க இன்று முழு பொறுப்பு ரத்து செய்து எனக்கு எவ்வித முன் அறிவிப்பும் கொடுக்காமல் பத்துக்கு மேற்பட்ட கடை ஊழியர்களை வைத்து என்னை மிரட்டி வெளியேற்றி உள்ளனர்.

மேலும் தாராபுரத்தில் பத்துக்கும் மேற்பட்ட கடைகளில் ரிட்டையர்ட் ஆனவர்களை வைத்து செக்யூரிட்டி சர்வீஸ் என்ற பெயரில் மாதம் 10000 ரூபாய் சம்பளம் வழங்கி வருகிறார்கள். அவர்களுக்கு பென்ஷன் தொகையும் உண்டு. அதுபோல் என்னையும் வைத்துக் கொள்ளுங்கள் என்று கேட்டதற்கு நியாய விலை கடையை விட்டு வெளியே வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

எனக்கு வயது 47 ஆகிறது 20 ஆண்டுகளுக்கு மேலாக நியாய விலை கடையிலேயே வேலை செய்ததால், வேறு எந்த வேலையும் தெரியாது வேதனையுடன் தெரிவித்தார். ஆகையால் நியாய விலை கடையை விட்டு வெளியேறியதால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பிரேமலதா விஜயகாந்த்: சீமான் திடீர், திடீர்னு அந்நியனாகவும்.. அம்பியாகவும் மாறுவார்..!

விஜய்யை காட்டமாக பிரேமலதா.நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சீமான் விமர்சித்ததற்கு திடீர் என்று அம்பியாக மாறுவார் திடீர் என்று அந்நியனாக மாறுவார் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.

மதுரையில் இன்று செய்தியாளர்களின் கேள்விக்கு பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்தார். அப்போது, “அரசியலில் யார் எதிரி என்று அறிந்து கொண்டு தான் அரசியல் களத்துக்குள் வருகிறார்கள். அந்த வகையில் விஜய்யும், தமது கருத்தை கூறி உள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம். இன்னும் காலம் இருக்கிறது. இப்போது தான், விஜய் மாநாடு நடத்தி கொடி ஏற்றி இருக்கிறார். அவர் கடந்து வரவேண்டிய பாதைகள் ஏராளம். எதிர்காலத்தில் அவரது செயல்பாடுகள், முனெடுத்துச் செல்லும் நிகழ்வுகளைப் பொறுத்தே எதையும் கூறமுடியும்.” என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

விஜய்யின் தவெக பற்றியும், விஜய் பேச்சு பற்றியும் சீமான் விமர்சித்தது குறித்த கேள்விக்கு, “அவர் திடீர் என்று அந்நியனாக மாறுவார்.. திடீர் என்று அம்பியாக மாறுவார். இதற்கு எல்லாம் நான் பதில் கொடுத்துக் கொண்டு இருக்க முடியாது. ஏன் விஜய்யை முதலமைச்சர் தம்பி என்று சொன்னார், பின்னர் லாரியில் அடிபட்டு இறப்பார் என்று சொன்னார் என அவர் தான் பதில் சொல்ல வேண்டும். எப்போதும் ஒரே நிலைப்பாடோடு இருக்க வேண்டும். எல்லாருக்கும் பேசும் சக்தியை கடவுள் கொடுத்திருக்கிறார். அதற்காக வாய்க்கு வந்ததை எல்லாம் பேசக்கூடாது.” என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

வானதி சீனிவாசன்: அமரன் படத்தை கமல் தயாரித்து ‘ரெட் ஜெயின்ட் மூவீஸ்’ விநியோகம் செய்தது மகிழ்ச்சி..!

“அமரன்” படத்தை கமல் தயாரித்து ‘ரெட் ஜெயின்ட் மூவீஸ்’ விநியோகம் செய்தது மகிழ்ச்சி என பாஜக MLA வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகில் பேருந்து நிழற்குடை திறப்பு விழா இன்று நடைபெற்றது. கோயம்புத்தூர் தெற்கு தொகுதி MLA வானதி சீனிவாசன் நிழற்குடையை திறந்து வைத்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்களின் வானதி சீனிவாசன் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, கோயம்புத்தூர் தெற்கு தொகுதிக்கு அதிகமான நிதி அங்கன்வாடிகளுக்குத்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் விமான நிலைய விரிவாக்கத்துக்கு தேவையான நிலத்தை தமிழக அரசு ஆர்ஜிதம் செய்து மத்திய அரசிடம் ஒப்படைத்துள்ள நிலையில், அந்த நிலம் முழுவதும் காலி செய்து வழங்கப்படவில்லை. இதனால் விரிவாக்க திட்ட கட்டமைப்பு பணிகள் தொடங்குவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதுகுறித்த விவரம் மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து மத்திய அரசு கேட்கும் தகவல்களை தமிழக அரசு விரைவில் அனுப்ப வேண்டும் என முதலமைச்சரின் கோயம்புத்தூர் வருகையின் போது வலியுறுத்தப்படும். வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் பாஜகவின் லட்சியம். உணவு சார்ந்து மொழி சார்ந்து பாஜக மீது வைக்கப்படும் விமர்சனங்கள் உண்மையல்ல. கடந்த முறை முதலமைச்சர் கோயம்புத்தூர் வந்தபோது பல கோரிக்கைகள் உள்ளடக்கிய மனுவை வழங்கினேன். அவற்றில் சில நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து நடிகர் விஜய் கருத்து கூறியுள்ளார். உண்மையில் சாதக பாதகங்களை யோசிக்க வேண்டும். மற்றவர்கள் கூறுகிறார்கள் என்பதற்காக எதிர்க்கக் கூடாது. முதலமைச்சர் வருகையையொட்டி கோயம்புத்தூரில் பல்வேறு பகுதிகளில் சாலைகள் அமைக்கப்படுகிறதென்றால் அடிக்கடி முதலமைச்சர் கோயம்புத்தூர் வரவேண்டும் என்று கோரிக்கை வைப்பேன்.

பிராமண சமுதாயத்துக்கு பாதுகாப்பு தேவைப்படுகிறது என்பதும் தவறாக பேசுபவர்கள் மீது பிசிஆர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பிராமணர்களின் கோரிக்கையும் நியாயமானது. ‘அமரன்’ படக்குழுவினருக்கு வாழ்த்துகள். இந்த படத்தை கமல்ஹாசன் தயாரித்து ‘ரெட் ஜெயின்ட் மூவீஸ்’ நிறுவனம் விநியோகம் செய்தது கூடுதல் மகிழ்ச்சி. அமரன் திரைப்படத்தை பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக திரையிட வேண்டும் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

கீதா ஜீவன் விளக்கம்: மகளிர் உதவி எண் மைய பணிக்கான தகுதியில் தவறுதலாக பதிவேற்றம்..!

சமூக நலத்துறையின் பெண்களுக்கான கட்டுப்பாட்டு மைய பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கையில் தேவையான தகுதிகள் என தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி என தவறுதலாக பதிவேற்றம் செய்யப்பட்டது. அவ்விளம்பரம் உடனடியாக இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டு தவறுதலாக இணையத்தில் பதிவேற்றம் செய்த இணை இயக்குநர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கீதா ஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் இயங்கும், சமூக நல ஆணையரகம் மூலம் பாதிப்புக்கு உள்ளாகும் மகளிருக்கு உதவிட பெண்களுக்கான கட்டுப்பாட்டு மையம், “மகளிர் உதவி எண் 181 சென்னையில் செயல்பட்டு வருகிறது. மகளிர் உதவி எண் 181 பணியிடத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிடும் பொருட்டு, விண்ணப்பங்கள் பெற்றிட tn.gov.in என்ற இணையதளத்தில் ஆட்சேர்ப்புக்கான அறிவிக்கை, சமூக நல ஆணையரக இணை இயக்குநரால் பதிவேற்றம் செய்யப்பட்டது.

அதில் “அழைப்பு ஏற்பாளர்” (Call Responders) என்று குறிப்பிடப்பட்டுள்ள பணியிடத்துக்கு தேவையான தகுதிகள் என தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி என தவறுதலாக பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த ஆட்சேர்ப்புக்கான அறிவிக்கை தமிழக அரசின் கவனத்துக்கு வந்தவுடன், அவ்விளம்பரம் உடனடியாக இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டு, தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரிந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று திருத்தப்பட்ட ஆட்சேர்ப்பு அறிவிக்கை உடனடியாக பதிவேற்றம் செய்யப்பட்டது. மேலும், தவறுதலாக இணையத்தில் பதிவேற்றம் செய்த இணை இயக்குநர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாய்மொழியாம் தமிழ் மொழியினை உயிருக்கும் மேலாய் மதிக்கும் தமிழக முதல்வர் தலைமையில், அனைத்து அரசுத் துறைகளிலும் தமிழ் மட்டுமே முக்கிய மொழியாக உள்ளது. நீதிமன்றம், மத்திய அரசுடனான கடிதப் போக்குவரத்து போன்றவற்றுக்கு மட்டுமே ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது.

தமிழ்த்தாய் வாழ்த்து, திருவள்ளுவருக்கு வள்ளுவர் கோட்டமும், 133 அடியில் வானுயர சிலையும் அமைத்தது, உலகத் தமிழ் மாநாடு நடத்தியது, தமிழுக்கு செம்மொழி சிறப்பு பெற்றுத் தந்தது என எண்ணிலடங்கா பெருமைகள் கொண்டது தான் திமுக வரலாறு. தமிழர் பெருமை கூறும் கீழடி அருங்காட்சியகம் அமைத்து, உலகத்தின் பார்வையை நம் மீது திருப்பியது அண்மைக் கால வரலாறு. மேலும், அரசுப்பணிகளில் தமிழ் மொழியில் பயின்றவருக்கு முன்னுரிமை அளித்து அரசாணை வெளியிட்ட அரசு, நமது திராவிட மாடல் அரசு.

தமிழக அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழக இளைஞர்களை 100 சதவீதம் நியமனம் செய்யும் பொருட்டு, தேர்வு முகமைகளால் நடத்தப்படும், அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தாள் தகுதித் தேர்வாக கட்டாயமாக்கப்பட்டது என தமிழ்மொழி வளர்ச்சிக்கான இவ்வரசின் பல்வேறு சாதனைகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

ஒரு அரசு அலுவலர் செய்த தவறை வைத்துக் கொண்டு அரசியல் செய்யும் நிலையில் சிலர் உள்ளதைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது. தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுத்து கூச்சல் போட வேண்டியதில்லை. இதனால் மக்கள் ஏமாறப் போவதில்லை. தமிழக முதல்வர் ஆட்சியில், தமிழ் மொழி மென்மேலும் சிறப்புகள் பெற்று வளர்ந்து வருகிறது. இதனைக் காண சகிக்காதவர்கள் தான் இப்போது கூக்குரல் இடுகிறார்கள். அதனை புறம் தள்ளி, எங்கள் தாய்மொழியாம் தமிழ் வழி பயணத்தை சிறப்புற தொடர்வோம்.” என கீதா ஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருட்கள் ஏற்ற கூடாது என சொல்லி பயணியை அடித்த அரசு பேருந்து நடத்துனர்.!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பொருட்கள் ஏற்ற கூடாது” என சொல்லி பயணியை அடித்த அரசு பேருந்து நடத்துனர்.!