திருப்பூரில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு தவெக மாவட்ட செயலாளர் ரூ.2 கோடி பேரம் பேசும் ஆடியோ வைரலாகி வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் பல்வேறு தேர்தல்களில் தவெக சார்பில் போட்டியிட அக்கட்சியினர் ஆர்வம் காட்டி வரும் நிலையில் அக்கட்சியின் மாவட்ட மாநில நிர்வாகிகள் பணம் கேட்டு மிரட்டுவதாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகிறது.
திருப்பூர் பல்லடம் கிழக்கு ஒன்றிய தவெக செயலாளராக இருப்பவர் பாலசுப்பிரமணியம். இவர் உள்ளாட்சித் தேர்தலில் கணபதிபாளையம் பஞ்சாயத்து தலைவராக போட்டியிடுவதற்காக மேற்கு மாவட்ட செயலாளர் ஜி.கே. சங்கர் என்பவரிடம் கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு அவர், ‘‘ஒரு கோடியில் இருந்து 2 கோடி ரூபாய் வரை செலவாகும். எப்படி நீ செலவு செய்வாய்?.
எப்போதும் எம்எல்ஏ அலுவலகத்திலேயே இருக்கிறாயே. கட்சி வேலை எதுவும் செய்வதில்லை, எல்லோருக்கும் கட்சி பொறுப்பு வாங்கி கொடுத்துவிட்டு நான் இப்படி இருக்கிறேன்’’ என்று சொல்கிறார். பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ரூ.2 கோடி தவெக மாவட்ட செயலாளர் ஜி.கே.சங்கர் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.