அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தேர்தல் தோல்வி மற்றும் உட்கட்சி மோதல்களைத் தொடர்ந்து, நிர்வாக வசதிக்காக அமைப்பு ரீதியான அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூர், திருப்பூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் புதிதாக 12 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாநகர் மாவட்டம் திருப்பூர் (வடக்கு), திருப்பூர் (தெற்கு) மாவட்ட செயலாளராக வேல்குமார் எம். சாமிநாதன், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட (காங்கயம், தாராபுரம், படத்துக்குளம் தொகுதி) செயலாளராக ஆர். செல்வக்குமார், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டம் (பல்லடம், உடுமலைப்பேட்டை) செயலாளராக திருப்பூர் சி. சிவகாமி, கோவை புறநகர் தெற்கு மாவட்டம் (பொள்ளாச்சி, வால்பாறை) செயலாளராக பொள்ளாச்சி ஜெயராமன்.
மேலும், கோயம்புத்தூர் புறநகர் மத்திய மாவட்டம் (தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, சூலூர்) செயலாளராக செ.ம. வேலுசாமி, திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் (ஸ்ரீரங்கம், மணப்பாறை) செயலாளராக ஆர். மனோகரன், திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டம் (திருவெறும்பூர், லால்குடி) செயலாளராக டி.என். சிவக்குமார், தஞ்சாவூர் மாநகர் மாவட்டம் (தஞ்சாவூர், திருவையாறு) செயலாளராக ஆர். காந்தி, தஞ்சாவூர் மத்திய மாவட்டம் (ஒரத்தநாது, பாபநாசம்) செயலாளராக கு. ராஜமாணிக்கம்.

மற்றும் புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் (புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை) செயலாளராக வி. பழனிவேல், புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் (திருமயம், விராலிமலை) செயலாளராக ஏ.எல். ராமு, புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் (ஆலங்குடி, அறந்தாங்கி) செயலாளராக ஞான. கலைச்செல்வம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று, திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக அவை தலைவர் பொறுப்பில் இருக்கும் இ. இன்பநாதன் இன்று முதல் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். திருவள்ளூர் மேற்கு மாவட்டம், கடம்பத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பொறுப்பில் இ. இன்பநாதன் நியமிக்கப்படுகிறார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இந்நிலையில், திருப்பூர் மாநகர் மாவட்டம் திருப்பூர் (வடக்கு), திருப்பூர் (தெற்கு) மாவட்ட செயலாளராக வேல்குமார் எம். சாமிநாதன் அவர்களை நமது இந்தியா ஃபஸ்ட் மாத இதழின் அரசியல் ஆசிரியர் K. அபிராம்பிரசாத் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து நமது இந்தியா ஃபஸ்ட் ஆகஸ்ட் மாத இதழை வழங்கி எதிர்கால அதிமுகவின் செயல்பாடுகள் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாகப் பேசினார்.