பெரியகுளம் அரசு மருத்துவமனையில் மூக்கில் சதை வளர்ந்துள்ள சதையை அகற்ற சிகிச்சை மேற்கொள்ளப்பட நிலையில் கோமாவில் 60 நாட்களுக்கு மேலாக போராடிய சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த சுதா என்பவருடைய 14 வயது மகன் நிவாஸ் குமார். இவருக்கு கடுமையான சளி மற்றும் உடல்நல குறைவு காரணமாக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் கடந்த ஜூன் 2-ந் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அப்போது சிறுவனுக்கு மூக்கில் சதை வளர்ந்துள்ளதாகவும் அதனை அகற்றுவதற்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்காக சிறுவனுக்கு சுவாச குழாய் வழியாக செலுத்தப்பட வேண்டிய டியூப்பை தவறுதலாக உணவு குழாய் வழியாக செலுத்தி தவறான சிகிச்சை மேற்கொண்டதால் சிறுவனின் நிலைமை மேலும் மோசம் அடைந்ததாக கூறப்படுகிறது. அவர் கோமாவுக்கு சென்றதாக தெரிகிறது.

இதனையடுத்து சிறுவனை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோமா நிலையில் சிகிச்சையில் இருந்த சிறுவன் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.சிறுவனின் உடலைக் கண்டு அவரது தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து உயிரிழந்த சிறுவனின் உடலை உடற்கூராய்வு செய்தபின் அவர் பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட உள்ளது
இந்நிலையில் ஒருவருக்கு தவறான சிகிச்சை அளித்ததால் தான் உயிரிழப்பு ஏற்பட்டு இருப்பதாக சிறுவனின் பெற்றோருக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் தேனி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். சிறுவனின் உடற்கூராய்வு அவர்களது பெற்றோர்கள் முன்னிலையில் வீடியோ பதிவு செய்ய வேண்டும், சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்திருப்பதாக புகார் வருகின்ற நிலையில் அது குறித்து அரசு விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மூக்கில் சதை வளர்ந்துள்ள சதையை அகற்ற சிகிச்சை மேற்கொள்ளப்பட நிலையில் கோமாவில் 60 நாட்களுக்கு மேலாக போராடிய சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.