திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அடுத்த பழையங்குடி ஊராட்சி இளவரசநல்லூர் கிராமத்தில் முக்கிய கிராமப்புறயாக விளங்குகிறது. இந்த சாலையின் வழியாக 30-க்கும் மேற்பட்ட கிராமப்புறங்களை இணைக்கும் சாலையாக உள்ளது. ஆகையால், இரவு நேரங்களிலும் பல்வேறு குற்றச்சம்பவங்கள் மற்றும் பல்வேறு குற்ற செயல்கள் நடைபெற்று வருகிறது.
இதனை தவிர்க்கும் விதமாக அரசு தரப்பில் சார்பில் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு வரும் நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ. சதீஷ் குமார் உத்தரவின் அடிப்படையில் இளவரசநல்லூர் பகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் வட்டார தலைவர் வி.என். ராஜ் அவர்கள் சொந்த செலவில் 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது.

மேலும் கண்காணிப்பு கேமரா வழங்கிய வி. என். ராஜ் அவர்களுக்கு காவல்துறை சார்பில் மாவட்ட நிர்வாகத்தின் கிராம நிர்வாகத்தின் சார்பில் பாராட்டு விழாக்கள் நடைபெற்றது. இந்த கண்காணிப்பு கேமரா துவக்க விழாவிற்கு மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பவானியா, திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் செந்தில்குமார், ஆலிவலம் காவல் ஆய்வாளர் மணிமாறன் ஊராட்சி மன்ற தலைவர் கோகிலா சங்கர்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர் பி. என். கே. என். ராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் ஜெயபால் ரங்கசாமி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மாதர் சங்க நிர்வாகிகள் கிராம நல சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு இளவரசநல்லூர் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தம் நிகழ்வு நடைபெற்றது.