தவெக விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் ஞானசௌந்தரி அவர்கள் ரூ.5 முதல் 30 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டும் அரசு வழக்கறிஞர்களை நியமனம் செய்வதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த ஜனவரி மாதம் தவெக மாநில, மாவட்ட அளவிலான செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தபிறகு, இதற்கு முன் இருந்தவர்களைப் போலவோ அல்லது இப்போது இருப்பவர்களைப் போலவோ ஒரு பைசா கூட ஊழல் செய்ய மாட்டேன்.
என் மீது ஒரு துளி ஊழல் கரை படியவும் விடமாட்டேன். ஊழல் சக்தி, தீய சக்தி இந்த இருவரும் தமிழகத்தை ஆளவே கூடாது என விஜய் பேசியது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் பேசிய “மக்கள் பணத்திலிருந்து ஒரு பைசா கூட தொட மாட்டோம்; தொடவும் விட மாட்டோம்; தொட்டவர்களையும் விட மாட்டோம்!” வீராப்பாகப் பேசி ரீல்ஸ் விட்ட CM விஜய்யின் அரசின் யோக்கியதை இன்று உயர் நீதிமன்றப் படியேறி வீதிக்கு வந்து சந்தி சிரிக்கிறது!
ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில், தமிழ்நாடு முழுவதும் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அரசு வழக்கறிஞர் பதவிகளை பெற தவெகவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் போட்டி போட்டு வருகின்றனர். அதோடு, பலரும், தவெக நிர்வாகிகளிடம் லட்சக் கணக்கில் பணம் கொடுத்து அரசு வழக்கறிஞர் பதவிகளைப் பெற முயல்வதாக கூறப்படுகிறது. தவெக பொதுச் செயலாளர் அமைச்சர் என். ஆனந்த் பரிந்துரையிலேயே வழக்கறிஞர் நியமனம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதை இது வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியது எதிர்க்கட்சிகள் அல்ல, தவெக விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் ஞானசௌந்தரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தவெக முகத்திரையைக் கிழித்துள்ளார். அவரது மனுவில், “பட்டியலின நடுத்தர வகுப்பைச் சேர்ந்த நான், தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் அறிவுறுத்தலின் பேரில் மகளிர் நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்கறிஞர் பணிக்கும், மாவட்ட முதன்மை மற்றும் சார்பு நீதிமன்றங்களில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பணிக்கும் விண்ணப்பித்திருந்தேன்.
தமிழக அரசு கடந்த ஜூன் 5-ந் வெளியிட்ட அறிவிப்பில், வழக்கறிஞர்கள் பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 29 மாலை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அன்றைய தினம் மாலையே நியமனப்பட்டியல் என்று ஒரு தகவல் வாட்ஸ் அப்பில் பரவியது. இதுகுறித்து மாவட்ட செயலாளரிடம் நான் விசாரித்த போது, இதுதான் இறுதிப் பட்டியல் என்று அவர் கூறினார். ஒரு அரசு வழக்கறிஞர் நியமனத்துக்கு 5 லட்சம் முதல் 30 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றுள்ளனர். பிற கட்சிகளை சேர்ந்த வழக்கறிஞர்களை, லஞ்சம் பெற்றுக்கொண்டு அரசு வழக்கறிஞர்களாக நியமித்துள்ளனர்.

தனது ஆட்சியில் லஞ்சம், ஊழல், விதிமீறல் ஆகியவற்றை அனுமதிக்க மாட்டேன் என்று கட்சி தலைவர் விஜய் கூறிவரும் நிலையில், அமைச்சரும் பொதுச் செயலாளருமான புஸ்ஸி ஆனந்த், மாவட்டச் செயலாளர், சட்டத்துறை செயலாளர் ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் ஆனந்த் பரிந்துரையிலேயே வழக்கறிஞர் நியமனம் செய்யப்படுகிறது. எனவே, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு முதல்வர் விஜய்க்கு இருக்கிறது.
எனவே அரசு வழக்கறிஞர் நியமனத்தில் தனக்கு வாய்ப்பளித்து நியமனங்களை மேற்கொள்ள உத்தரவிடவும், அதுவரை அறிவிப்பாணைக்கு தடை விதிக்க வேண்டும்” என்றும் கோரிக்கை வைத்துள்ளார். ஒரு மைக்கை பார்த்தால் மட்டும் தூய சக்தி நாடகம். ஆனால் திரைக்குப் பின்னால் கட்சியின் பொதுச்செயலாளர் தொடங்கி மாவட்டச் செயலாளர்கள் வரை அத்தனை பேரையும் கமிஷன் ஏஜெண்டுகளாக மாற்றி லட்சக்கணக்கில் பதவி பேரம்!
அரசுப் பதவிக்காகத் தன் சொந்தக் கட்சிக்காரர்களிடமே இரக்கமில்லாமல் லஞ்சம் பிடுங்கும் இந்த பித்தலாட்டக் கும்பல், எந்தப் பின்புலமும் இல்லாத சாதாரணப் பொதுமக்களிடம் ஒரு வேலைக்கு எவ்வளவு கமிஷன் கேட்பார்கள்? ஊழல் வழக்குகளில் சிக்கிய பெருச்சாளிகளுக்கெல்லாம் வாஷிங் மெஷினாக மாறி அடைக்கலம் கொடுப்பதில் தொடங்கி, இன்று நேரடியாக லஞ்சம் வாங்கிக் கொண்டு அரசுப் பதவிகளை விற்கும் அளவுக்குத் தரம் தாழ்ந்து நிற்கும் இந்தத் தவெக, இனிமேல் தமிழ்நாட்டைச் சூறையாட வந்த ஊழல் சக்தி.