நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை அடுத்த ஆய்மூர் கிராமம் அருள் பாலித்துக் கொண்டிருக்கும் மேற்கு ஸ்ரீ வீரப்ப சுவாமி, ஸ்ரீ பத்திரகாளியம்மன் பரிவார மூர்த்திகள் கண் திறப்பு விழா மற்றும் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் சிறப்பு பூஜைகள் பல்வேறு இசை வாத்தியங்கள் முழங்க காலையில் நடைபெற 39-ஆம் ஆண்டு நாடக விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் யாதவ மகாசபை யாதவ இளைஞர் மன்றம் மற்றும் கிராமவாசிகள் ஏற்பாட்டில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.