செங்கோட்டையனுக்கு அடிப்படை அறிவு இருக்கணும் இல்ல.. அவருக்கு இருக்க என்பது தெரியல என தமிழ்ப்புலிகள் கட்சியின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் த. குமரவேல் தெரிவித்தார். கோபிச்செட்டிப்பாளையம் அடுத்துள்ள நம்பியூர் தனியார் பள்ளியில், முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தவெக கட்சியின் சார்பாக பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு 1000-க்கும் மேற்பட்டோருக்கு நலதிட்ட வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “பள்ளி மாணவர்கள் ஆண்டுதோறும் சாதி சான்றிதழ் பெறுவதில் இருக்கும் சிரமத்தை குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாணவர்களின் பெயர், சாதி, முகவரி, ஆதார் எண், ரத்த வகை உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய அடையாள அட்டை அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது” எனக் கூறினார்.

மேலும், முதலமைச்சரின் உத்தரவின் பேரில் முதற்கட்டமாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த அடையாள அட்டை வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். அவருடைய இந்த அறிவிப்பிற்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
இது தொடர்பாக, தமிழ்ப்புலிகள் கட்சியின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் த. குமரவேல் வெளியிட்டுள்ள வீடியோவில், ஜாதி பெயருடன் அடையாள அட்டை கொடுப்பதாக சொன்ன தமிழக வெற்றி கழக அமைச்சர் செங்கோட்டையனுக்கு தமிழ்ப்புலிகள் கட்சி கண்டனம் தெரிவிக்கிறது. மேலும், செங்கோட்டையனுக்கு அடிப்படை அறிவு இருக்கணும் இல்ல.. அவருக்கு இருக்க என்பது தெரியல என குமரவேல் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்