நாமக்கல் மாவட்டம், தெத்துகாடு பட்டியலின அருந்ததியர் சமுதாயத்தைச் சார்ந்த மணி என்பவர் கொடுத்த புகார் மனு மீது வன்கொடுமை வழக்கை பதிவு செய்யாத ASP மற்றும் சேந்தமங்கலம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஆண்டனி டேனியல் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழ்ப்புலிகள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது
தமிழ்ப்புலிகள் கட்சி நாமக்கல் மாவட்ட செயற்குழு கூட்டம் நாமக்கல் மாவட்டச் செயலாளர் த. குமரவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட அமைப்பு செயலாளர் கோபி, இளம் புலிகள் அணி செயலாளர் குமரவேல் மற்றும் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில், தமிழ்நாட்டில் தொடர்ந்து அரங்கேறி வரும் ஆணவப் படுகொலைகளுக்கு தனி சட்டம் இயற்ற வேண்டும். தமிழகம் முழுவதும் வன்கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது குறிப்பாக மேற்கு மண்டலங்களில் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரக்கூடிய நிலையில் மேற்கு மண்டல காவல் துறை வன்கொடுமை வழக்குகளில் மிகவும் மெத்தன போக்கோடும், அலட்சியத் தன்மையோடும் செயல்பட்டு வருவதை வன்மையாகக் கண்டிக்கிறது.
நாமக்கல் மாவட்டம், தெத்துகாடு பட்டியலின அருந்ததியர் சமுதாயத்தைச் சார்ந்த மணி என்பவர் கொடுத்த புகார் மனு மீது வன்கொடுமை வழக்கை பதிவு செய்யாத ASP மற்றும் சேந்தமங்கலம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஆண்டனி டேனியல் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறது.
பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வாகனங்களின் வாடகை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் ஏற்பட்டு ஏழை, எளிய மக்களினுடைய வாழ்வாதாரத்தை மிகப்பெரிய அளவில் சிதைக்கக்கூடும் என்பதால் தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசை வலியுறுத்தி பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலையையும், அத்தியாவசிய பொருட்களின் விலையாற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். தமிழ்நாட்டில் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க சிறப்பு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் எனவும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.
நாமக்கல் மாவட்டம் குஞ்சாம்பாளையம் பகுதியில் பட்டியலின மக்களுக்கு பயன்படும் வகையில் சமுதாயம் கட்டுவதற்கு அடிக்கல் நடப்பட்டு தற்போது வரை அதற்கான பணிகளை துவங்காமல் அப்பகுதியில் இருக்கக்கூடிய ஆதிக்க சாதி மனநிலை கொண்ட சாதியவாதிகளுடைய தூண்டுதலின் அடிப்படையில், அப்பகுதி உடைய அரசு அதிகாரிகள் உடைய ஒத்துழைப்போடு சமுதாயக் கூடத்தை கட்ட விடாமல் தடுத்து வரக்கூடிய நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மிக விரைவில் அடிக்கல் நடப்பட்ட அதே இடத்தில் மிக விரைவில் துரித நடவடிக்கை எடுத்து பட்டியலின மக்களுடைய பயன்பாட்டிற்கு சமுதாயக்கூடம் கட்டுவதை மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை உறுதிப்படுத்த வேண்டும் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியில் நாமக்கல் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவகுமார், மாநகர துணை செயலாளர் கோபி மற்றும் மோகனூர் ஒன்றிய பொறுப்பாளர் மணிகண்டன் ஆகியோர் நன்றியுரையாற்றினார்.