திருத்துறைப்பூண்டியில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம், தெற்கு திருத்துறைப்பூண்டி பிரதி மருந்தீஸ்வரர் ஆலயத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தெற்கு மாவட்ட செயலாளர் ஜி.பி. பாரதி தலைமையில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுடைய பிறந்தநாள் விழாவை கொண்டாடும் விதமாக சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் மகளிர் அணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து திருத்துறைப்பூண்டி அரசு போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் பாரதமாதா முதியோர் இல்லத்திற்கு தமிழக முதல்வர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானங்கள் வழங்கி சிறப்பித்தனர். இந்த நிகழ்வில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட ஒன்றிய,நகர, கிளை மற்றும் அரசு போக்குவரத்து பணிமனை தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.