திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் கல்லூரி முதல்வர் பி. ராஜாராமன் அவர்களின் தலைமையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கல்லூரி , யோகா உடல் மற்றும் மன நலனை மேம்படுத்துவதோடு, ஒழுக்கம், ஒருமுகப்படுத்துதல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது என முதல்வர் பி. ராஜாராமன் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு நாட்டு நலப் பணித்திட்ட (NSS) ஒருங்கிணைப்பாளர் லோ. சதீஷ்குமார் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து பல்வேறு யோகாசனங்கள் மற்றும் மூச்சுப்பயிற்சிகளை மேற்கொண்டனர். யோகாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் விழிப்புணர்வு உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.

இந்நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் 80-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் பங்கேற்று யோகா பயிற்சிகளில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சியின் நிறைவில் அனைவரும் தினசரி வாழ்வில் யோகாவை கடைப்பிடித்து ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க உறுதியேற்றனர்.