மக்கள் விரட்டியடிக்கிறார்கள் என்பதால், வேட்பாளரை விட்டு அழ வைத்து பிரச்சாரம் செய்கிறார் விஜய் என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். தமிழகத்தில் மதுராந்கம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6-ந் தேதி நடைபெறவுள்ள நிலையில் திமுக, அதிமுக, தவெக, கம்யூனிஸ்ட்கள், நாம் தமிழர் என 5 முனை போட்டியில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தலைவர்கள் இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள். தவெக வேட்பாளர்களுக்கு செல்லுமிடமெல்லாம் பிரச்சனை எதிர்ப்புகள் கிளம்புகிறது.
நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தலில் தனித்து நின்று தவெக யாரும் எதிர்பார்க்காத வகையில் 107 இடங்களில் வென்று, ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாத நிலையில் காங்கிரஸ், இடதுசாரிகள், ஐயுஎம்எல், விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவில் விஜய் முதலமைச்சரானார். இருப்பினும், அதிமுகவிலிருந்து சில எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு நேராக தவெகவில் இணைந்தனர். இப்படி இந்தவர்களில் ஒருவர்தான் தாராபுரம் எம்எல்ஏ சத்தியபாமா.
எனவே இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. சட்டமன்ற தேர்தலிலேயே ஜெயிச்சுட்டோம்.. இடைத்தேர்தலில் ஜெயிக்க மாட்டோமா என்று தவெகவினர் மிகுந்த நம்பிக்கையோடு இருக்கின்றனர். ஆனால், களத்தில் தவெகவுக்கு எதிரான அலை வீசத் தொடங்கியிருக்கிறது. காரணம், ஏற்கெனவே அதிமுக வேட்பாளராக ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட சத்தியபாமா இப்போது கட்சி தாவிவிட்டார்.. இந்தமுறையும் ஜெயிக்க வைத்தால்.. மீண்டும் கட்சி தாவ மாட்டார் என என்ன நிச்சயம்? என்று கேள்விகள் எழத்தொடங்கி இருக்கின்றன.

தவெக நிர்வாகிகள் பிரச்சாரத்திற்கு போகும்போது.. முகத்தில் அடித்தது போல மக்கள் கேள்வி கேட்க தொடங்கி இருக்கிறார்கள். இது கட்சியின் தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. தாராபுரம் அதிமுகவின் பெல்ட்.. இருப்பினும் இந்த தொகுதியில் ஆளும் கட்சியாக இருக்கும் தவெதான் ஜெயிக்கணும்.. ஒருவேளை தோற்றுவிட்டால்! தவெகவுக்கு இருக்கிற செல்வாக்கு குறைந்துவிட்டது என்று எதிர்க்கட்சிகள் பிரச்சாரத்தை கையில் எடுத்துவிடும். எனவே இந்த விஷயத்தில் விஜய் சீரியஸாக இறங்கியிருக்கிறார்.
இப்படி இருக்கையில் நேற்று விஜய் பிரச்சாரத்திற்கு வந்திருந்தபோது, அவர் முன்னிலையில் சத்தியபாமா கண்கலங்கி நின்று மக்களிடையே ஓட்டு கேட்டார். “என்னை பெண் என்று கூட பார்க்காமல்.. அருவருக்கத்தக்க வகையில் பேசினார்கள். நான் தவறு செய்யவில்லை. அப்படி செய்திருந்தால்.. இப்படி தைரியமாக வந்து நின்றிருக்க மாட்டேன்” என்று கூறி கண் கலங்கினார்.
இதை பார்த்த முதல்வர் விஜய் சட்டென, சத்தியபாமாவின் தோளை பிடித்து ஆறுதல் படுத்தினார். இதை பார்த்த நெட்டிசன்கள், மக்கள் சத்தியபாமா மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். பிரச்சாரத்திற்கு அவர் வரும்போது அவரை விரட்டி அடிக்கிறார்கள். இதையெல்லாம் சரி செய்யவே, அவரை அழ வைத்து தவெக பிரச்சாரம் செய்கிறது என்று விமர்சித்து இருக்கிறார்கள்.