நாமக்கல் மாநகராட்சியில் புதிய வீட்டுக்கு வரி விதிக்க ரூ. 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய, வருவாய் உதவியாளர் மற்றும் தூய்மைப்பணியாளர் ஆகிய 2 பேரை லஞ்ச ஒழிப்புதுறை அதிரடியாக கைது செய்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட சிலுவம்பட்டியை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் பூபதி. இவர், சொந்தமாக வீடு கட்டியுள்ளார். அந்த வீட்டிற்கு வரி விதிக்க, நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.
அப்போது, மாநகராட்சி அலுவலகத்தில் பணியாற்றி வரும் வருவாய் உதவியாளர் உதயகுமார் ரூ. 25,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். தொடர்ந்து பேரம் பேசி, 15,000 ரூபாய் கேட்டுள்ளார். அப்போது, முதல் தவணையாக ரூ. 7,000 பூபதி தந்துள்ளார். மீதி பணம் பின்னர் தருவதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத பூபதி, நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் பணியாற்றி வரும் வருவாய் உதவியாளர் உதயகுமாருக்கு பாடம் புகட்ட நினைத்து நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில், நாமக்கல் லஞ்ச ஒழிப்புத் துறை ரசாயனம் தடவிய ரசாயனம் தடவிய 8,000 ரூபாய் நோட்டுகளை அந்த லஞ்ச பணத்தை உதயகுமாரிடம், பூபதி வழங்கினார். அங்கிருந்த என். கொசவம்பட்டியை சேர்ந்த தற்காலிக தூய்மைப்பணியாளர் கலாவிடம் கொடுத்துள்ளார்.
அப்போது, அங்கு மறைந்திருந்த காவல் ஆய்வாளர் பிரபு தலைமையிலான லஞ்ச ஒழிப்புதுறை, உதயகுமார் மற்றும் கலாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில், லஞ்ச வாங்கிய வழக்கில், வருவாய் உதவியாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.