அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கோடாலி கிராமத்தில் குடியிருப்பு மற்றும் பள்ளி செல்லும் செல்லும் வழிக்கு அருகே டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வந்தனர். மதுப்பிரியர்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்ததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி சீருடை அணிந்த மாணவர்கள் மாணவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்….
அரசின் கட்டுப்பாடுகளையும் மீறி தொடர்ந்து தொல்லை கொடுத்து வரும் இந்த மதுக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தின் போது ஆவேசமடைந்த பொதுமக்கள், மதுக்கடைக்கு முன்னால் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை அதிரடியாக உடைத்தெறிந்து, கடையை முற்றுகையிட்டனர். மேலும் போராடிய மாணவ, மாணவிகளை ஓட ஓட விரட்டிய காவல்துறையினரின் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இது மட்டுமின்றி போராடத்தில் மாணவிகளை காவல்துறையினர் அடித்த நான்கு குழந்தைகள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.