சாலை ஒப்பந்ததாரரிடம் ரூ.1.30 லட்சம் லஞ்சமாக பெற்றதாக தவெக நிர்வாகியான வீராசாமி மீது குற்றச்சாட்டுகள் எழுந்து அவர் தவெகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அதிரடியாக கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
செங்கல்பட்டு மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வீராசாமி தவெகவின் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளராக இருக்கிறார். இவர் சாலை போட்ட நவீன் என்கிற அரசு ஒப்பந்ததாரர் மாம்பாக்கம் பகுதியில் ரூ.9.80 லட்சம் மதிப்பில் புதிய சிமெண்ட் சாலையை அமைத்து இருக்கிறார்.

இந்த சாலைக்கான பில் அமொண்ட்டை வாங்க வேண்டும் எனில், எனக்கு வெட்ட வேண்டியதை வெட்டு என்று வீராசாமி கேட்டு இருக்கிறார். இதற்காக ஒப்பந்ததாரர் தரப்பில் ரூ.1.30 லட்சம் பணம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான வீடியோ ஆதாரங்கள் வெளியான நிலையில் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார்.