சென்னை மதுரவாயலை அடுத்த திருவேற்காட்டில் திமுக தலைமை நிலையச் செயலாளர் துறைமுகம் காஜா இல்ல திருமண நிகழ்வு நடந்தது. இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அவர் வந்த அதே நேரத்தில் அங்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் வந்திருந்தார்.
அப்போது உதயநிதி ஸ்டாலினும், சீமானும் பரஸ்பரம் வணக்கம் கூறி கைகுலுக்கி நலம் விசாரித்துக் கொண்டனர். இதையடுத்து நாற்காலியில் உட்கார போகும் போது கூட சீமான் கையை பிடித்து அழைத்து சென்ற உதயநிதி, தனது அருகே உட்கார வைத்தார். பின்னர் சீமானுடன் உதயநிதி சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தனர். உதயநிதியும் சீமானும் ஒரே நிகழ்வில் கலந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.