ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கொங்கு மண்டல வாக்கு வங்கியை குறிவைத்து தமிழக பாஜக எல். முருகன் மாநில தலைவராக நியமனம். அவரை தொடர்ந்து அண்ணாமலை நியமனம் என கொங்கு மண்டலஅரசியல் களம் சூடிப்பிக்க தொடங்கியபோது 2018 திசம்பர் 14 -ஆம் தேதி மிண்டும் திமுகவில் இணைந்தார். மத்தியில் மோடி தலைமயிலான பாஜக ஆட்சி, மாநிலத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமயிலான அதிமுக ஆட்சி சேலத்து சிங்கம் வீரபாண்டி ஆறுமுகம் நில அபகரிப்பு வழக்கில் 2011-ஆம் ஆண்டு சிறை மற்றும் 2012-ஆம் ஆண்டு நவம்பர் 23-ந் தேதி மறைவுக்கு பிறகு திமுகவில் ஏற்பட மிகப்பெரிய வெற்றிடத்தை செந்தில் பாலாஜி நிரப்பினார்.
2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கொங்கு மண்டலம் முழுவதும் செந்தில் பாலாஜி சுற்று பயணம் மேற்கொண்டு பாஜக, அதிமுகவின் தேர்தல் பிரசாரத்தை ஒட்டுமொத்தமாக சிதறடித்து கொங்கு மண்டல ஒட்டுமொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களை வெற்றிபெற செய்தது மட்டுமின்றி கரூர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு தனக்குள்ள செல்வாக்கு மூலம் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றார்.
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் சிறை செல்ல நேர்ந்தபோது தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற பெயர் பட்டியலில் செந்தில் பாலாஜியின் பேரும் இருந்தது என்றால் அவர்கள் எவ்வளவு மக்கள் மற்றும் அரசியல் செல்வாக்கு மிக்க தலைவர் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து காட்டினார்.
கரூர் மாவட்டத்தில் பிறந்தது, வளர்ந்தாலும் மிக இளம் வயதில் குறுகிய காலத்தில் ஒட்டுமொத்த கொங்கு மண்டலத்தின் மக்களுக்காக மூலைமுடுக்கெல்லாம் ஓடோடி உழைத்து மக்கள் செல்வாக்கை பெற்றவர். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கருது வேறுபாடு ஏற்பட்டு எடப்பாடி பழனிசாமி உனக்கு முன்னாள் நான் அதிமுகவில் எம்எல்ஏ ஆனவன் என பேசியபோது, நீ என்னக்கு முன்னாள் அதிமுகவில் எம்எல்ஏவாக இருந்தாலும் நீயும் நானும் ஒரே நேரத்தில் தான் அமைச்சர்கள் ஆனேன் என்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கேள்வி கேட்டவர் செந்தில் பாலாஜி.
கரூர் மாவட்டம் ராமேஸ்வரப்பட்டியில் பிறந்தவர் செந்தில்குமார் என்னும் செந்தில் பாலாஜி. கரூர் விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்புத் தேறிய அவர், கரூர் அரசுக் கலைக் கல்லூரியில் பி.காம் படிப்பில் சேர்ந்தார். கல்லூரி காலத்தில் மதிமுக கட்சியில் சேர்ந்த செந்தில் பாலாஜியை அரசியல் ஆர்வம் தொற்ற கல்லூரி படிப்பை 16.4.1995 ம் நாள் இடைநிறுத்தம் செய்துவிட்டு முழுநேர அரசியல் பணிகளில் ஈடுபட தொடங்கினார்.
சில காலமே மதிமுகவில் இருந்த செந்தில் பாலாஜி பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். திமுகவில் சிறப்பாக செயல்பட்ட செந்தில் பாலாஜிக்கு 1996-ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை திமுக வழங்கியது. அதன்மூலம் முதன்முறையாக கவுன்சிலராக ஆனார் செந்தில் பாலாஜி.
இப்படியாக மதிமுக மூலமாக அரசியல் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த செந்தில் பாலாஜி பின்னர் திமுகவில் சிலருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளால் அதிமுகவில் இணைந்தார். 2000 மார்ச் 13- ஆம் தேதி போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா வீட்டில் செந்தில் பாலாஜி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.
2000 செப்டம்பரில் அ.தி.மு.க.வின் கரூர் மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டு, 2004-ஆம் ஆண்டு கரூர் மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் ஆனார். 2006-ம் ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற செந்தில் பாலாஜி கரூரில் தொடர்ந்து தனது ஆளுமையை நிலை நாட்டினார். தனக்கான ஆதரவாளர்களை அதிகப்படுத்தினார். திமுக ஆட்சிக்கு எதிராக மணல் கொள்ளை விவகாரங்களில் அவர் துணிச்சலுடன் செயல்பட்டது ஜெயலலிதாவை ஈர்த்தது மட்டுமின்றி வி.கே. சசிகலாவின் முழு நம்பிக்கைக்கு பாத்திரமானார்.
அதன்விளைவாக 2007 மார்ச் 11- ஆம் நாள் கரூர் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் மற்றும் 2007 மார்ச் 21-ஆம் நாள் கரூர் மாவட்ட அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் ஆனார். அடுத்து நடைபெற்ற 2011-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மீண்டும் கரூரில் வெற்றி பெற்ற செந்தில் பாலாஜிக்கு தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சராக பொறுப்பு கொடுக்கப்பட்டது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக வலம் வந்த செந்தில் பாலாஜி கடந்த 2014-ஆம் ஆண்டு, போக்குவரத்துத் துறையில் ஓட்டுநர், நடத்துநர் பணி நியமனத்தில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரில் சிக்கினார். 2015-ஆம் ஆண்டு தேவசகாயம் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து உடனே நடவடிக்கை எடுத்த ஜெயலலிதா 2015-ம் ஆண்டில் செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி, கரூர் மாவட்ட செயலாளர் பதவி என அனைத்து பதவியிலிருந்தும் அவரை நீக்கினார்.
பண மோசடி தொடர்பாக செந்தில் பாலாஜி மீது கடந்த 2016-ஆம் ஆண்டு அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. மேலும் வி.கே. சசிகலாவின் ஆதரவு செந்தில் பாலாஜிக்கு இருந்தால் செந்தில் பாலாஜி 2016 தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக சார்பில் நின்று வெற்றி பெற்றார். ஆனால் செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.
ஆனால் இதில் செந்தில் பாலாஜி பெயர் இடம்பெறவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதன் அடிப்படையில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் உள்பட 40 பேர் மீது 2016ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், 2016- ஆம் ஆண்டு செப்டம்பர் 22 அன்று ஜெயலலிதா உடல்நலக் குறைவின் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாட்கள் தொடர் சிகிக்சைக்கு பிறகு டிசம்பர் 5 – ஆம் தேதி ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் செந்தில் பாலாஜியின் அரசியல் வாழ்க்கையும் நடுக்கம் கண்டது.
அதிமுக இரு அணிகளாக பிரிந்த நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட அதிமுக எம்.எல்.ஏக்களில் செந்தில் பாலாஜியும் ஒருவர். தகுதி நீக்கத்திற்கு பிறகு அதிமுகவின் இரண்டு அணிகளிலும் சேராமல் புதிதாக டிடிவி தினகரன் தொடங்கிய அமமுக கட்சியில் இணைந்தார் செந்தில் பாலாஜி. அமமுக மாநில அமைப்பு செயலாளராக பொறுப்பேற்ற அவர் பின்னர் கட்சி பூசல்களால் அமமுகவிலிருந்து வெளியேறி மீண்டும் திமுகவிலேயே இணைந்தார்.
2019-ல் நாடாளுமன்ற தேர்தலோடு நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு கரூரில் சுற்று வட்டாரத்தில் தனக்குள்ள செல்வாக்கை தனது வெற்றியின் மூலம் செந்தில் பாலாஜி நிரூபித்தார். இதன்பின்னர் செந்தில் பாலாஜிக்கு க்ரீன் சிக்னல் கொடுக்க அரசியல் பயணம் அசுர வளர்ச்சி அடைந்தது. ஒட்டு மொத்த கொங்கு மண்டலத்தையே தான் கட்டுக்குள் கொண்டு வந்தார்.
இதனிடையே தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை நியமிக்கப்பட்டார். ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் கொங்கு மண்டல வாக்குவங்கி கணக்கு பாஜகவிற்கு பெரிய இடையூறாக இருந்ததாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர். இதுமட்டுமின்றி பாஜக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளின் விமர்சனங்களை செந்தில் பாலாஜி ஒருவரே தக்க பதிலடி கொடுத்தார். தமிழக பாஜக தலைவரான அண்ணாமலைக்கும், செந்தில் பாலாஜிக்கும் மோதல் போக்கு தொடர்ந்தது. மேலும் பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுகவிற்கு செந்தில் பாலாஜியின் அரசியல் வளர்ச்சி பெரும் தடையாக இருந்தது.
இதன்காரணமாக செந்தில் பாலாஜி குறித்த பழைய வழக்குகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் அரக்கப்பரக்க பேசி வருகின்றனர். இதனால் 2021 சட்டமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெல்லும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. மேலும் மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறைகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்தான் கடந்த 2015-ல் அதிமுக ஆட்சியில் அவர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது நடந்த முறைகேடுகள் தொடர்பான விசாரணைகள் திடீரென அழுத்தம் பெற்று விசாரணைக்கு வந்தன. இதுதொடர்பான அமலாக்கத்துறை 2021ல் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுடன் வேலைக்கு லஞ்சமாக பணம் வாங்கியது தொடர்பான சர்ச்சையை சமரசமாக தீர்த்துவிட்டதாகக் கூறி அவர்கள் ஒரு கூட்டு மனுவை தாக்கல் செய்தனர்.
இந்த சூழ்நிலையில், உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரி கார்த்திக் தசாரி மேல் முறையீடு செய்தார். தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி செந்தில் பாலாஜி கடந்த 2022ல் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் 16-ஆம் தேதி இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணா முராரி, ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கை இரண்டு மாதத்திற்குள் முடிக்கும்படி குற்றப்பிரிவு காவல்துறைக்கு உத்தரவிட்டது.
சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக கடந்த 2023 ஆண்டு ஜூன் மாதம் 13-ஆம் தேதி, சென்னை பசுமை வழிசாலையில் உள்ள அவரது அரசு இல்லத்தில் அமலாக்கத் துறையினர் நாள் முழுவதும் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தினர். அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். வீட்டிலிருந்த செந்தில் பாலாஜி எங்கும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து, 14-ஆம் தேதி அதிகாலை செந்தில் பாலாஜியை கைது செய்தனர்.
நீண்டகாலமாக சிறையில் உள்ள செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் 2024 மார்ச் 18ல் மேல் முறையீடு செய்தார். இந்த மனு மீதான விசாரணையில் செந்தில் பாலாஜி தரப்பு, அமலாக்கத் துறை தரப்பு என இருதரப்பினருக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. 2024 ஆகஸ்ட் 12-ம் தேதி நடந்த விசாரணையின் போது, ‘மனுதாரர் 13 மாதங்களாக சிறையில் இருக்கிறார்.
தற்போது வரை இந்த வழக்கில் விசாரணை தொடங்கவில்லை. விசாரணை எப்போது தொடங்கும்’ என்பதும் தெரியவில்லை என செந்தில் பாலாஜி தரப்பு வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தது. மேலும், சுமார் 58 முறை அவருக்கு காவல் நீட்டிப்பு வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கி உள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதன் மூலம் கொங்கு சிங்கம் 471 நாட்களாக சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி நான் உள்ளே செல்லும்போது 39, நான் வெளியே வரும்போது 40 என புரிய வேண்டியவர்களுக்கு புரியும் பாஷையில் மீண்டும் கர்ஜிக்க தொடங்கினார்.