எடப்பாடி பழனிசாமி விமர்சனம்: கூட்டணிக் கட்சிகள் கைவிட்டால் திமுக கீழே விழுந்துவிடும்..!

கூட்டணி கட்சிகள் கைவிட்டால், திமுக கீழே விழுந்து விடும்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, கட்டிடத்தின் வலிமைக்கு அஸ்திவாரம் வலுவாக உள்ளதைப் போல அதிமுகவில் கிளைக் கழகம் வலுவாக உள்ளது. எடப்பாடியில் எதிரிகள் புறமுதுகைக் காட்டி ஓடிவிட்டனர். எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெற்று சரித்திர சாதனை படைக்கும். நாடாளுமன்றத் தேர்தல் வேறு; சட்டப்பேரவை தேர்தல் வேறு. அடுத்து வரும் ஃபைனல் மேட்சில் அதிமுகதான் வெற்றி பெரும். மக்களுக்கு உண்மை செய்திகள் ஒருநாள் தெரிய வரும் போது திமுக காணாமல் போகும்.

திமுக கட்சியில் பலமில்லை, கூட்டணி பலத்தையே திமுக நம்பி உள்ளது. கூட்டணி கட்சிகள் கைவிட்டால் திமுக கீழே விழுந்துவிடும். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் வெற்றி, தோல்விகளை மாறி மாறி சந்தித்த கட்சி அதிமுக. எந்தக் கட்சிக்கும் வெற்றி, தோல்வி நிரந்தரம் இல்லை. தமிழகத்தில் 30 ஆண்டுகள் ஆட்சி செய்த ஒரே கட்சி அதிமுக தான். இதனால் தான் தமிழகம் இன்றைக்கு நாட்டின் முதன்மை மாநிலமாக விளங்குகிறது.

அதிமுகவில் மட்டும் தான் சாதாரண தொண்டன் கூட உயர்ந்த பதவிக்கு வர முடியும். எந்த ஆட்சியும் நிந்தரம் இல்லை. தற்போது மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது. உதயநிதி, ஒரு செங்கல்லை தூக்கிக் கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது. சிறப்பான ஆட்சிக்கு எடுத்துக்காட்டு அதிமுக ஆட்சிதான். உதயநிதியை துணை முதல்வராக்கியது மட்டும் தான் திமுக அரசின் சாதனை. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்தவுடன் மறந்து அந்தர்பல்டி அடிக்கும் ஒரே கட்சி திமுக.

திமுகவில் வாரிசு அரசியல்தான் நடக்கிறது. கருணாநிதிக்கு அடுத்து ஸ்டாலின், தற்போது உதயநிதியை முன் நிறுத்துகிறார்கள். இது ஒருபோதும் நடக்காது. திமுக மூலம் மன்னராட்சியை மீண்டும் தொடங்க நினைக்கிறார்கள். கருணாநிதி குடும்பத்தில் பிறந்ததால் தான் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கிடைத்தது. 50 ஆண்டு காலம் கட்சிக்காக உழைத்து படிப்படியாக உயர்ந்ததால் தான் எனக்கு பொதுச்செயலாளர் பதவி கிடைத்தது. கட்சியில் மூத்த நிர்வாகிகள் பலர் இருந்தும் அவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். துணை முதல்வர் பதவிக்கு திமுகவில் உதயநிதியை தவிர வேறு ஆளா இல்லை.

ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரின் குடும்பத்தைச் சேர்ந்த வேறு ஒருவருக்கு பதவி கொடுக்க வேண்டும் என்பதற்காக வேக வேகமாக உதயநிதிக்கு அடுத்தடுத்து பதவிகளை வழங்கி வருகிறார்கள் என மக்கள் பேசுகிறார்கள். உதயநிதிக்கு எந்த அனுபவமும் இல்லை. மிசாவில் சிறைக்குச் சென்ற வேறு யாருக்கும் துணை முதல்வர் பதவி தரவில்லையே. மூத்த நிர்வாகிகளை தூக்கி எறிந்துவிட்டு, ஜெட் வேகத்தில் உதயநிதிக்கு பதவியை வழங்கியுள்ளனர். உதயநிதிக்கு பதவியை மக்கள் கொடுக்கவில்லை. குடும்ப உறுப்பினரான முதல்வர் ஸ்டாலின் தான் வழங்கி உள்ளார் என எடப்பாடி பழனிசாமி பேசினார்.

உதயநிதி ஸ்டாலின் கர்ஜனை: திராவிடத்தை நீக்குங்க பார்ப்போம்..!

“தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடத்தை நீக்க சிலர் கிளம்பியுள்ளனர், தி.மு.க-வின் கடைசி தொண்டன், தமிழன் இருக்கும் வரை தொட்டுக் கூட பார்க்க முடியாது.” என சீமானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கர்ஜித்து உள்ளார்.

சென்னையில் உள்ள டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி துவங்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதில், “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்” என்ற வரியை விட்டு பாடப்பட்டது. இதேபோல், நிகழ்ச்சியின் இறுதியில் பாடப்பட்ட தேசிய கீத பாடலில் திராவிடம் சொல் தவிர்க்கப்பட்டது. இதனால், பெரும் சர்ச்சை கிளம்பியது.

இந்த விவகாரத்திற்கும் தமிழக ஆளுநருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்தது. இதனிடையே, நடந்த தவறுக்கு மன்னிப்பு கோருவதாக டிடி தமிழ் தொலைக்காட்சி கூறியது. இருப்பினும், தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான சர்ச்சை இன்னும் முடிந்தபாடில்லை.

இந்நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை தொடர்பாக ஈரோட்டில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் ‘திராவிடல் நல் திருநாடு’ என்கிற வார்த்தையை விட்டுவிட்டார்கள் அல்லது தூக்கி விட்டார்கள் என்பது தானே உங்களுக்கு பிரச்சினை. அதே தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் ஆரியங்கோல் வழக்கொழிந்து என்ற வார்த்தையை தூக்கியது யார்?. கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட வார்த்தைகள் அடங்கிய அந்த வரியை தூக்கியது யார்?. திராவிடன் என்ற ஒரு சொல்லை எடுத்ததற்கே இப்படி குதிக்கிறீர்கள்.

50 ஆயிரம் ஆண்டுகளுன் முன் தோன்றிய என் தாய்மொழி தமிழை கொன்று சமாதி கட்டி வைத்திருக்கிறீர்கள். கொத்துக்கொத்தாக, லட்சக்கணக்கான என் இன மக்கள் சாவும் போது கொதித்து வராத கோவம், ஆந்திர காடுகளில் எங்களை சுட்டுக்கொல்லும் போது வராத கோபம், அன்னை தமிழ் மொழி செத்துவிழும் போது வராத கோபம், இப்போது ஏன் வருகிறது ?இதே ஆளுநர் 100 ரூபாய் வெளியிடும் போது கட்டிப்பிடித்து அணைத்துக் கொண்டீர்கள்.

நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து என்ற பாடலே இருக்காது. அப்போது என்ன செய்வீர்கள். இது எங்கள் நாடு. எங்கே இருக்கிறது திராவிடம்?. எங்கிருந்து வந்தது திராவிடம் என்ற சொல்?. திராவிடம் என்றால் என்ன? கேரளாவில் பஞ்ச திராவிடர் மாநாடு நடந்ததா இல்லையா?. அதில் ஏன் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் பங்கேற்க வேண்டும். அவர் ஏன் ராகுல் டிராவிட் என அழைக்கப்படுகிறார். நான் எப்படி திராவிடர் ஆனேன். திராவிடம் என்பது சமஸ்கிருதம் சொல். மாடல் என்பது ஆங்கில சொல்.” என சீமான் பேசியிருந்தார்.

இந்நிலையில், சீமானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடத்தை நீக்க சிலர் கிளம்பியுள்ளனர். தி.மு.க-வின் கடைசி தொண்டன், தமிழன் இருக்கும் வரை தொட்டுக் கூட பார்க்க முடியாது.

தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க பல்வேறு வகைகளில் முயற்சி செய்கிறார்கள். நேரடியாக இந்தியை திணிக்க இயலாத காரணத்தால் தமிழ்த்தாய் வாழ்த்தில் சில சொற்களை நீக்குகின்றனர். தமிழகத்தில் இந்தியை திணிக்கும் முயற்சிக்கு பலர் துணை போகின்றனர்.” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

ஜெயக்குமார்: உலகத்திலேயே அரசு நிகழ்ச்சிக்கு டி சர்ட் போட்டு செல்வது உதயநிதிதான்..!

உலகத்திலேயே அரசு நிகழ்ச்சிக்கு டி சர்ட் போட்டு செல்வது உதயநிதிதான். T – shirt போடுவதை நான் குறை சொல்லவில்லை கட்சி நிகழ்ச்சிக்கு மட்டும் போட்டு செல்லுங்கள் என ஜெயக்குமார் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசு நிகழ்ச்சியில் சட்டை போடாமல் T – shirt போட்டு, அதில் கட்சி சின்னத்தை பதிவு செய்து வருகிறார். அவரிடம் சட்டை அவரிடம் சட்டை இல்லையா..? சட்டை இல்லை என்றால் நாங்கள் வாங்கி தருகிறோம் என தெரிவித்தார்.

டி சர்ட் போட்டுக்கொண்டு அதில் அவரது கட்சியின் சின்னத்தை பொறித்துக்கொண்டு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது ஏற்புடையது இல்லை. கட்சி நிகழ்ச்சிக்கு எப்படி வேண்டுமானாலும் போங்கள், அதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அரசு நிகழ்ச்சி என்றால் அதற்கு என்று சில விதிகள் உள்ளன.

2019 -ஆம் ஆண்டில் போடப்பட்ட உத்தரவில், அரசு ஊழியர்கள் பணியில் இருக்கும் போது கண்ணியமான உடையை அணிய வேண்டும். ஆண்களாக இருந்தால் சட்டை, ஃபார்மல் பேண்ட், வேட்டி என தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

T – shirt பாரம்பரிய உடையா? வீட்டில் நடைப்பயிற்சி செல்லும் போது T – shirt போடுவோம்.. அரசு நிகழ்ச்சிக்கு யாராவது T – shirt போட்டு செல்வார்களா? உலகத்திலேயே அரசு நிகழ்ச்சிக்கு T – shirt போட்டு செல்வது உதயநிதிதான்.  T – shirt போடுவதை நான் குறை சொல்லவில்லை கட்சி நிகழ்ச்சிக்கு மட்டும் போட்டு செல்லுங்கள்.

கண்ணியம் என ஒன்று இருக்கிறது. அதை பின்பற்ற வேண்டும். அதிலும் தப்பு பண்ணக்கூடாது. கட்சியின் சின்னத்தை போட்டு கொடியை போடுவது ஏற்புடையது அல்ல. உடை விஷயத்தை உதயநிதி இப்படியே தொடர்ந்தால் அதிமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடரும்.” என ஜெயக்குமார் தெரிவித்தார்.

ஜெயக்குமார்: துணை முதலமைச்சரிடம் சட்டை இல்லை என்றால் நாங்கள் வாங்கி தருகிறோம்..!

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசு நிகழ்ச்சியில் சட்டை போடாமல் T – shirt போட்டு, அதில் கட்சி சின்னத்தை பதிவு செய்து வருகிறார். அவரிடம் சட்டை அவரிடம் சட்டை இல்லையா..? சட்டை இல்லை என்றால் நாங்கள் வாங்கி தருகிறோம் என தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசு நிகழ்ச்சியில் சட்டை போடாமல் T – shirt போட்டு, அதில் கட்சி சின்னத்தை பதிவு செய்து வருகிறார். அவரிடம் சட்டை அவரிடம் சட்டை இல்லையா..? சட்டை இல்லை என்றால் நாங்கள் வாங்கி தருகிறோம் என தெரிவித்தார்.

டி சர்ட் போட்டுக்கொண்டு அதில் அவரது கட்சியின் சின்னத்தை பொறித்துக்கொண்டு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது ஏற்புடையது இல்லை. கட்சி நிகழ்ச்சிக்கு எப்படி வேண்டுமானாலும் போங்கள், அதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அரசு நிகழ்ச்சி என்றால் அதற்கு என்று சில விதிகள் உள்ளன.

2019 -ஆம் ஆண்டில் போடப்பட்ட உத்தரவில், அரசு ஊழியர்கள் பணியில் இருக்கும் போது கண்ணியமான உடையை அணிய வேண்டும். ஆண்களாக இருந்தால் சட்டை, ஃபார்மல் பேண்ட், வேட்டி என தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

T – shirt பாரம்பரிய உடையா? வீட்டில் நடைப்பயிற்சி செல்லும் போது T – shirt போடுவோம்.. அரசு நிகழ்ச்சிக்கு யாராவது T – shirt போட்டு செல்வார்களா? உலகத்திலேயே அரசு நிகழ்ச்சிக்கு T – shirt போட்டு செல்வது உதயநிதிதான்.  T – shirt போடுவதை நான் குறை சொல்லவில்லை கட்சி நிகழ்ச்சிக்கு மட்டும் போட்டு செல்லுங்கள்.

கண்ணியம் என ஒன்று இருக்கிறது. அதை பின்பற்ற வேண்டும். அதிலும் தப்பு பண்ணக்கூடாது. கட்சியின் சின்னத்தை போட்டு கொடியை போடுவது ஏற்புடையது அல்ல. உடை விஷயத்தை உதயநிதி இப்படியே தொடர்ந்தால் அதிமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடரும்.” என ஜெயக்குமார் தெரிவித்தார்.

இரு மாநில மக்களிடையே பகையை உருவாக்கும் பவன் கல்யாண் மீது நடவடிக்கை எடுங்கள் ..!

ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் மீது மதுரை காவல் ஆணையரிடம் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் புகார் அளித்தார். அந்த புகாரில், லட்டு விவகாரத்தில் எந்த வித தொடர்பும் இல்லாத தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதியில் நேற்று தரிசனம் செய்த பவன் கல்யாண் பின்னர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது, “இங்கே நிறைய தமிழ் மக்கள் இருக்கிறார்கள் என்பதால் தமிழிலேயே சொல்கிறேன். சனாதனம் என்பது ஒரு வைரஸ் மாதிரி. அதை நாசம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டில் ஒருவர் சொல்லியிருக்கிறார்.

ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் இதை யார் சொல்லியிருந்தாரோ அவருக்கு சொல்லிக் கொள்கிறேன். உங்களால் சனாதன தர்மத்தை அழிக்கமுடியாது. சனாதன தர்மத்தை யாரேனும் அழிக்க முயன்றால், ஏழுமலையானின் பாதத்தில் இருந்து சொல்கிறேன், நீங்கள்தான் அழித்து போவீர்கள். உங்களைப் போல நிறைய பேர் வந்து போய்விட்டார்கள். ஆனால் சனாதன தர்மம் அப்படியே தான் நிலைத்திருக்கிறது.

சனாதன தர்மத்தின் மீதான தாக்குதலை யாரும் ஒருபோதும் கண்டிப்பதில்லை. யாரும் கண்டிக்காவிட்டாலும் தவறு எப்போதும் தவறுதான். நீங்கள் அரசியல்ரீதியாக சரியாக இருக்க விரும்புகிறீர்கள். ஆனால் நான் உண்மையை பேச விரும்புகிறேன். மதச்சார்பின்மை என்பது ஒரு வழிப் பாதை அல்ல. அது இருவழிப் பாதை. மரியாதை கொடுத்தால்தான் மரியாதை கிடைக்கும்” என பவன் கல்யாண் பேசினார்.

பவன் கல்யாணின் இந்த கருத்துக்கு திமுக தொண்டர்களிடையே மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பவன் கல்யாண் மீது மதுரை காவல் ஆணையரிடம் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் புகார் அளித்தார். அந்த புகாரில், லட்டு விவகாரத்தில் எந்த வித தொடர்பும் இல்லாத தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு மாநில மக்களிடையே பகையை உருவாக்கும் வகையில் பேசிய பவன் கல்யாண் மீது வழக்கு பதிய வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமர்சனங்களை விரட்டிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!

கடந்த 40 மாதங்களாக அதிகாரம் படைத்த சிலருக்கு மட்டும் சூரியன் உதிக்கிறது. மற்றவா்களுக்கு சூரிய கிரகணம் மட்டுமே தெரிகிறது என அண்ணாமலை லண்டனில் இருந்து அறைகூவல், பட்டியலின மக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் ஆகியோரின் ஓட்டுகளை கூட்டணி மூலம் வாங்கி கொண்டு “கருணாநிதி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், இன்பநிதி என்று அடுத்தடுத்து வாரிசுகள் வருவது தான் சனாதனம் மூச்சு முட்ட சீமான் கதற, தந்தை, மகன் என்பதைத்தவிர, வேறு எந்த தகுதியும் இல்லாமல் என முருகன் உளற, திமுகவில் எத்தனையோ மூத்த முன்னோடிகள் உள்ளனர் . அவர்களுக்கு ஏன் துணை முதல்வர் பதவி வழங்க முன்வரக்கூடாது என அவர் பங்குற்கு எடப்பாடி பழனிச்சாமி கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் முதன்முதலில் கடந்த 2009-ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது, மு.க. ஸ்டாலின் துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்ட போது எழுந்த விமர்சனங்களை விட பல மடங்கு விமர்சனங்கள். விமர்சனங்களே இல்லாமல் 2017-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஓ. பன்னீர்செல்வம் துணை முதலமைச்சர் பதவி, ஆனால் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்கும்போது மட்டும் ஏன் விமர்சனங்கள் விண்ணை முட்டுகின்றது.

உதயநிதி ஸ்டாலின் கலைஞரின் பேரன் என்பதில் எழுந்த விமர்சனங்கள் அல்ல மு.க. ஸ்டாலின் மகன் என்பதில் எழுந்த விமர்சனங்கள் அல்ல அதையும் தாண்டி பெரியார் கருத்துக்களை சுமந்து அண்ணாவின் வழியில் கலைஞரின் பாணியில் பகுத்தறிவு பகல்வனாக திராவிட கொள்கைகளை தன் நாவில் உச்சரித்து, வீறுகொண்டு வீரநடை போடுவதால் எழுந்த விமர்சனங்கள்.

விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் F4 கார் பந்தயம் நடத்தியதில் என்ன தவறு அதற்கு எழாத விமர்சனங்களா..!? மக்கள் நடமாட்டம், வாகன நெரிசல் மிகுந்த பகுதியில் நடப்பதால் கண்டிப்பாக டிராபிக் ஜாம் ஆகும். அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி இந்த போட்டியை எப்படியாவது நிறுத்திவிடவேண்டும் என்று நிறைய பேர் பிளான் செய்தனர். சின்ன விபத்து நடந்தால் கூட அதை ஊதி பெரிதாக்க நிறைய பேர் காத்திருந்தனர். ரேஸ் தடத்தில் ஒரு நாய்குட்டி ஓடி வந்ததை கூட விமர்சனம் செய்தனர். ஆனால் அதையெல்லாம் தவிடுபொடியாக்கி தெற்கு ஆசியாவில் முதல்முறையாக நடத்தப்படும் இரவு நேர ஃபார்முலா 4 சாலை பந்தயம் சென்னையில் நடத்தி கட்டியவர் தான் உதயநிதி ஸ்டாலின். அப்புறம் என்ன இருக்காதா வயித்தெரிச்சல்.

தொடரும்….

லண்டனில் இருந்து அண்ணாமலை: புரிஞ்சு போச்சு..! “விடியலுக்கு இதுதான் அர்த்தமா..!?

உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகி உள்ள நிலையில், திமுகவில் வாரிசு அரசியல் நிலவுவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் விமர்சித்து பதிவிட்டுள்ளார். “விடியல்” என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன என்பதை மக்கள் இப்போது புரிந்துகொண்டுள்ளனர். அவர்களுக்கு விடியல், அவர்களின் குடும்பத்திற்கு விடியல் என அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின்: அட நீங்க போங்க விமர்சனங்கள் அல்ல வாழ்த்துக்கள்..! இளைஞரணி தலைவரான போதும் இதுதான்…!

தமிழக அமைச்சரவை செந்தில் பாலாஜி உள்பட 4 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு 6 அமைச்சர்களின் இலாகாக்கள் நேற்று இரவு மாற்றம் செய்யப்பட்டது. மேலும் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இதன்பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, * துணை முதலமைச்சர் என்பது பதவியல்ல, பொறுப்பு… மிகப்பெரிய பொறுப்பு அளித்துள்ள முதலமைச்சருக்கு நன்றி. * நான் இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்ட போதும் விமர்சித்தார்கள்.

துணை முதலமைச்சர் என்பது பதவியல்ல, பொறுப்பு… மிகப்பெரிய பொறுப்பு அளித்துள்ள முதலமைச்சருக்கு நன்றி. நான் இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்ட போதும் விமர்சித்தார்கள். துணை முதலமைச்சராகும் எனக்கு வரும் வாழ்த்துகளை போல் விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்வேன்.

எல்லா விமர்சனங்களையும், வரவேற்கிறோம், எனது பணிகள் மூலம் அனைத்து விமர்சனங்களுக்கும் பதில் அளிப்பேன் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

வானதி சீனிவாசன்: உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி..! திமுகவின் வாரிசு அரசியல்..!

தமிழக பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்எல்ஏ, பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை கோயம்புத்தூர் ராமநாதபுரம் பகுதியில் உள்ள பாஜக நிர்வாகி வீட்டில் இன்று தொண்டர்களுடன் அமர்ந்து பார்த்தார்.

அதன் பின்னர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதலளித்தார். அப்போது, மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் நிகழ்ச்சி வாயிலாக பிரதமர் மோடி, பொதுமக்களிடம் உரையாடி வருகிறார். நாட்டின் சிறிய கிராமங்களிலும், மூளை முடுக்குகளிலும் சிறந்த மனித சேவை செய்பவர்களையும், கண்டுபிடிப்பாளர்களையும், சமூக சேவை செய்பவர்களையும் கண்டறிந்து உலகம் முழுவதும் அறியும் வகையில் குறிப்பிட்டு பேசி வருகிறார்.

தமிழகத்தில் அமைச்சரவை மாற்றப்பட்டு உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக இன்று பதவி ஏற்க உள்ளார். திமுகவில் அனுபவமிக்க அமைச்சர்கள் பலர் இருந்த போதும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மகன் என்ற அடிப்படையில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது திமுகவின் வாரிசு அரசியலையே காட்டுகிறது.

திமுகவில் மற்றவர்கள் எத்தனை ஆண்டுகள் உழைத்திருந்தாலும், அவர்களால் சாதாரண உறுப்பினர்களாக மட்டுமே நீடிக்க முடியும். பொறுப்பிற்கும் தலைமைக்கும் வருவதற்கு வாரிசாக இருக்க வேண்டும் என்ற நிலையை திமுக பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டி உள்ளது. மாற்றி அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில், குற்றம் சாட்டப்பட்டு சுப்ரீம் கோர்ட்டின் நிபந்தனை ஜாமினில் வெளிவந்தவருக்கு மீண்டும் அமைச்சர் பொறுப்பு கொடுப்பதால் அவர் அதிகாரத்தை பயன்படுத்தி விசாரணையை வலுவிழக்க செய்ய முடியும்.

திராவிட மாடல் என்பதற்கு சமூக நீதி, சமத்துவம், பெரியாரின் கொள்கைகள் என பேசும் திமுக அரசு, அமைச்சரவையில் முக்கிய துறைகள் எதுவும் பட்டியலினத்தைச் சேர்ந்த அமைச்சருக்கு வழங்கவில்லை. கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருந்தாலும், மத்திய அமைச்சராகவும், முதலமைச்சராகவும் உயர்ந்த பொறுப்புகளை வழங்கும் ஜனநாயகம் மிக்க ஒரே கட்சியாக பாஜக தான் செயல்பட்டு வருகிறது.

திமுக வின் இந்த வாரிசு அரசியல் குறித்து பாஜக தீவிரமாக மக்களிடம் எடுத்துச் செல்லும். 2026 சட்டமன்ற தேர்தலில் இந்த விஷயம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலின்: அனைத்து விமர்சனங்களுக்கும் எனது பணிகள் மூலம் பதில் அளிப்பேன்..!

தமிழக அமைச்சரவை செந்தில் பாலாஜி உள்பட 4 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு 6 அமைச்சர்களின் இலாகாக்கள் நேற்று இரவு மாற்றம் செய்யப்பட்டது. மேலும் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இதன்பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, * துணை முதலமைச்சர் என்பது பதவியல்ல, பொறுப்பு… மிகப்பெரிய பொறுப்பு அளித்துள்ள முதலமைச்சருக்கு நன்றி. * நான் இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்ட போதும் விமர்சித்தார்கள்.

துணை முதலமைச்சர் என்பது பதவியல்ல, பொறுப்பு… மிகப்பெரிய பொறுப்பு அளித்துள்ள முதலமைச்சருக்கு நன்றி. நான் இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்ட போதும் விமர்சித்தார்கள். துணை முதலமைச்சராகும் எனக்கு வரும் வாழ்த்துகளை போல் விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்வேன்.

எல்லா விமர்சனங்களையும், வரவேற்கிறோம், எனது பணிகள் மூலம் அனைத்து விமர்சனங்களுக்கும் பதில் அளிப்பேன் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.