வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக தவெக பொதுக்குழு கூட்டத்தில் விஜய் தீர்மானம்..!

வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக வெற்றிக் கழக பொதுக்குழு கூட்டத்தில் விஜய் தீர்மானம் நிறைவேற்றினார். நேற்று தமிழக சட்டசபையில் வக்பு வாரிய சட்டத் திருத்தத்திற்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்திற்கு பாஜகவை தவிர்த்து மற்ற அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.

இந்நிலையில், சென்னை திருவான்மியூரிலுள்ள ஸ்ரீஇராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க 2 ஆயிரத்திற்கும் அதிகமான நிர்வாகிகள் வந்துள்ளனர். அவர்களுக்கு 22 வகையான சைவ உணவுகள் தயார் செய்யப்பட்டுள்ள நிலையில், தவெகவின் அடுத்தக்கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் தவெக பொதுக்குழு கூட்டத்தில் விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. தொகுதி மறுசீரமைப்பு அதேபோல் பெண்கள் பாதுகாப்பு, டாஸ்மாக் ஊழல் தொடர்பாகவும், அரசாங்க ஊழியர்கள் போராட்டம், சட்ட ஒழுங்கு பிரச்சினை, தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை என்றும், இரு மொழி கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைக்க கூடாது என்று தீர்மானம் நிறைவேறியுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்ந்து இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு பொது வாக்கெடுப்பே நடத்த வேண்டும், அதுவே ஒரே தீர்வாக இருக்கும் என்று, சமூகநீதியை நிலைநாட்ட சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வு நடத்த வேண்டும் என்றும், கொள்கை தலைவர்கள் வழியில் பயணிக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வக்பு வாரிய திருத்த சட்டம் குறிப்பாக வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

#westandforwomenharassment பேனரை பார்த்து பெண்கள் ஷாக்..!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பேரணி மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றி கழகத்தினர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தமிழக வெற்றி கழக கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் வன்கொடுமை செய்யப்படுவதற்கு நாங்கள் துணை நிற்கிறோம் என தமிழக வெற்றிக் கழகத்தினர் பேனர் வைத்திருப்பது சமூக வளைதளங்களில் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில்,” உங்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள் சொல்ல ஆசை தான்.

ஆனால் பாதுகாப்பே இல்லாமல் எப்படி மகளிர் தின வாழ்த்துக்கள் சொல்வது. நாம் அனைவரும் சேர்ந்து தான் திமுக அரசை தேர்ந்தெடுத்தோம். ஆனால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே இந்த அரசை 2026-ல் வீட்டுக்கு அனுப்புவோம்” என பேசி இருந்தார்.

இதற்கிடையே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பான விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழக அரசை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு உரிய அனுமதி பெறவில்லை என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகத்தினர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், வேலூர் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தினர் வைத்த பேனர் தான் தற்போது பேசுபொருளாக மாறி இருக்கிறது. we stand against women harassment என்பதற்கு பதிலாக we stand for women harassment என ஆங்கில வாசகத்தோடு வேலூர் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தினர் பேனர் வைத்திருக்கின்றனர். அதில் கையெழுத்திட வேண்டும் எனவும் பெண்களிடம் கோரிக்கை விடுத்தனர்.

சில படித்த பெண்கள் அதனை படித்து பார்த்துவிட்டு we stand against women harassment என்றால் தான் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நாங்கள் இருக்கிறோம் என்று அர்த்தம். we stand for women harassment என நீங்கள் பேனர் வைத்திருப்பது பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு நாங்கள் ஆதரவாக இருக்கிறோம் என்பது போல இருக்கிறது என கூறி கையெழுத்திட மறுத்துவிட்டனர். தற்போது இந்த பேனர் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

அண்ணாமலை கிண்டல் கெட் அவுட் கையெழுத்து இயக்கத்தின் மரியாதை அங்கேயே தெரிந்துவிட்டது..!

கெட் அவுட் என்று கையெழுத்து இயக்கம் தொடங்கி இருக்கிறார். கெட் அவுட் கையெழுத்து இயக்கம் தொடங்கிய சில 30 நொடிகளில் பிரசாந்த் கிஷோர் விலகி சென்று விட்டார். அதற்கான மரியாதை அங்கேயே தெரிந்துவிட்டது என அண்ணாமலை கிண்டல் அடித்தார். தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை கொண்டு வரப்பட வேண்டும் என்ற மத்திய அரசின் திட்டத்திற்கு தவெக தலைவர் விஜய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் யார் வேண்டுமானாலும் எந்த பள்ளியிலும் படிக்கலாம். அது அவர்களின் தனிப்பட்ட உரிமை. அதேபோல் எந்த மொழியையும் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமென்றாலும் கற்றுக் கொள்ளலாம். ஆனால் கூட்டாட்சி தத்துவத்தை மீறி மாநில தன்னாட்சி உரிமைக்கு எதிராக மாநில அரசின் மொழிக் கொள்கையையும், கல்விக் கொள்கையையும் கேள்விக்குறியாக்கி வேறு ஒரு மொழியை வலுக்கட்டாயமாக திணித்தால்.. அதுவும் அரசியல் ரீதியாக திணித்தால்.. எப்படி ப்ரோ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேபோல் திமுக மற்றும் பாஜக இரு கட்சிகளும் செட்டிங் செய்து வைத்து கொண்டு சோசியல் மீடியாவில் ஹேஷ்டாக் போட்டு விளையாடுவதாகவும் விமர்சித்துள்ளார். இந்நிலையில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், விஜய் பேசும் போது, மத்திய அரசு மற்றும் மாநில அரசு என்று இரண்டையும் குற்றம் சாட்டியுள்ளார்.

உங்கள் குழந்தைக்கு மூன்று மொழி.. நீங்கள் நடத்தும் விஜய் வித்யாஷ்ரம் பள்ளியில் மூன்று மொழி. ஆனால் தவெக தொண்டர்கள் மற்றும் குழந்தைகளுக்கு மட்டும் இருமொழி.. விஜய் சொல்வதை தன் வாழ்க்கையிலும் கடைபிடிக்க வேண்டும். கெட் அவுட் என்று கையெழுத்து இயக்கம் தொடங்கி இருக்கிறார். கெட் அவுட் கையெழுத்து இயக்கம் தொடங்கிய சில 30 நொடிகளில் பிரசாந்த் கிஷோர் விலகி சென்று விட்டார். அதற்கான மரியாதை அங்கேயே தெரிந்துவிட்டது என அண்ணாமலை தெரிவித்தார்.

LKG பிள்ளைகளை போல சண்டை போட்டுக் கொண்டு இருக்கின்றனர்..! பாஜக, திமுகவை மறைமுகமாக சாடிய விஜய்..!

நம்ம பாசிசமும், பாயாசமும், அதாவது நம் அரசியல் எதிரியும், கொள்கை எதிரியும் LKG பிள்ளைகளை போல சண்டை போட்டுக் கொண்டு இருக்கின்றனர் என தவெக தலைவர் விஜய் மறைமுகமாக விமர்சித்தார். மாமல்லபுரத்தில் நடைபெறும் தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசுகையில், “2026 தேர்தலை நாம் சந்திக்கப் போகிறோம். அதற்கு பூத் ஏஜென்டுகள் மிகவும் முக்கியம்.

ஆனால் அது பெரிய கட்சிகளுக்குதான் அதிகமாக இருப்பதாக சொல்கிறார்கள். கூடிய சீக்கிரமே பூத் கமிட்டி மாநாடு நடத்தப் போகிறோம். தவெக எந்தவொரு பெரிய கட்சிக்கும் சளைத்ததல்ல என்று அன்றைக்கு தெரியவரும். இப்போது புதிதாக ஒரு பிரச்சினையை கிளப்பி விட்டு இடிருக்கிறார்கள். இங்கே அதை செயல்படுத்தவில்லையென்றால் நம் மாநில அரசுக்கு நிதி கொடுக்க மாட்டார்களாம். கொடுக்க வேண்டியது அவர்களின் கடமை. வாங்க வேண்டியது இவர்களின் உரிமை. ஆனால் LKG பிள்ளைகளை போல சண்டை போட்டுக் கொண்டு இருக்கின்றனர்.

இங்கே எவ்வளவு பிரச்சினை நடந்து கொண்டு இருக்கிறது. நம்ம பாசிசமும், பாயாசமும், அதாவது நம் அரசியல் எதிரியும், கொள்கை எதிரியும் பேசிவைத்துக் கொண்டு மாற்றி மாற்றி சமூக வலைதளங்களில் ‘ஹேஷ்டேக்’ போட்டு விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் அடித்துக் கொள்வது போல அடித்துக் கொள்வார்களாம். இதை நாம் நம்பவேண்டுமாம். ‘வாட் ப்ரோ.. இட்ஸ் வெரி ராங் ப்ரோ’

இதையெல்லாம் மக்களுக்கு நாம் சொல்லி புரிய வைக்க வேண்டிய அவசியமில்லை. நம் ஊர் சுயமரியாதை மிக்க ஊர். நாம் எல்லாரையும் மதிப்போம். ஆனால் சுயமரியாதையை மட்டும் யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டோம். நாம் எல்லா மொழிகளையும் மதிப்போம். தனிப்பட்ட முறையில் யாரும் எந்த பள்ளியிலும் படிக்கலாம். எந்த மொழியை வேண்டுமானாலும் விருப்பத்துடன் கற்றுக் கொள்ளலாம்.

ஆனால், கூட்டாட்சி தத்துவத்தை மீறி மாநில தன்னாட்சி உரிமைக்கு எதிராக ஒரு மாநில அரசின் மொழிக் கொள்கையை, கல்விக் கொள்கையை கேள்விக் குறியாக்கி வேறு ஒரு மொழியை வலுக்கட்டாயமாக திணித்தால், அதுவும் அரசியல் ரீதியாக திணித்தால் எப்படி? எனவே தவெக சார்பில் இதனை நாங்கள் உறுதியாக எதிர்ப்போம்” என விஜய் தெரிவித்தார்.

தவெக விழாவில் #GetOut பதாகையில் கையெழுத்திட மறுத்த பிரசாந்த் கிஷோர்..!

மும்மொழி கொள்கைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய #GetOut கையெழுத்து பதாகையில் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கையெழுத்திட மறுப்பு தெரிவித்த வீடியோ வைரலாகி வருகிறது. மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி பகுதியிலுள்ள போர் பாயிண்ட் எனப்படும் தனியார் சொகுசு விடுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா கொண்டாட்டம் இன்று தொடங்கியது. இதில் தவெக தலைவர் விஜய், ஜன்சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

மேடைக்கு அருகே மும்மொழி கொள்கையையும், மத்திய, மாநில அரசுகளையும் விமர்சிக்கும் வாசகங்களுடன் #GetOut கையெழுத்து பதாகை வைக்கப்பட்டு இருந்தது. அதில் தவெக தலைவர் விஜய் கையெழுத்திட்டு #GetOut கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். அடுத்து தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கையெழுத்திட்டார். பின்னர் பேனாவை பிரசாந்த் கிஷோரிடம் கொடுத்த போது அவர் தான் கையெழுத்திட மாட்டேன் என்று தலையாட்டி பேனாவை வாங்க மறுத்து விட்டார். அதன் பிறகு ஆதவ் அர்ஜுனா அந்த பேனரில் கையெழுத்திட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழிசையை விளாசிய ராஜ்மோகன்: பேரில் இருக்கும் தமிழ் ஊரிலும் இருக்கட்டும்..!

இரு மொழிக் கொள்கையில் படித்த தமிழிசை சௌந்தரராஜன் மருத்துவராகவில்லையா? இரு மாநிலங்களின் ஆளுநர் ஆகவில்லையா என தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் ராஜமோகன் கேள்வி எழுப்பி உள்ளார். புதிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழி கொள்கையை தமிழக அரசு ஏற்க மறுத்ததன் தமிழ்நாட்டுக்கு நிதி தர முடியாது என மத்திய அமைச்சரான தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார். அவரது பேச்சுக்கு தமிழகம் முழுவது பலத்த கண்டனங்களை பெற்றுள்ளது.

இதையடுத்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள் தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மும்மொழிக் கொள்கை தொடர்பாக கருத்து தெரிவித்த விஜய்க்கு பதிலடி கொடுத்திருந்தார் தமிழக பாஜக முன்னாள் தலைவரான தமிழிசை சௌந்தரராஜன். இது தொடர்பாக பேசிய அவர்,” மும்மொழிக் கொள்கை குறித்து நடிகர் விஜய் பேசி இருக்கிறார்.

ஆனால் அவர் கருத்து சொல்லக் கூடாது. தனது படங்களை தமிழில் மட்டும் தான் வெளியிடுவேன் என சொல்ல வேண்டும். விஜயின் படங்கள் தெலுங்கு, ஹிந்தியில் கூட வெளியாகிறது. வியாபாரத்திற்கு மட்டும் முன்மொழிக் கொள்கை தேவை, ஆனால் மாணவர்கள் மூன்று மொழிக் கொள்கை மூன்று மொழிகளை கற்றுக் கொள்ளக் கூடாதா? என பேசி இருந்தார்.

இந்த தமிழிசை சௌந்தரராஜனின் கருத்திற்கு தவெக கொள்கை பரப்பு செயலாளர் ராஜ்மோகன் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக ராஜ்மோகன் தனது எக்ஸ் பக்கத்தில்,” நீங்கள் வேண்டுமானால் ஒரு மனிதனை இந்துவாய், இஸ்லாமியனாய், கிருத்தவனாய்ப் பார்க்கலாம். அவர்கள் மூவரையும் மனிதனாக மட்டுமே பார்க்கும் உயர்ந்த இடம் தமிழ்நாட்டின் பள்ளிக்கூடங்கள். பயிற்று மொழியாக தமிழ் மொழி. இணைப்பு மொழியாக ஆங்கிலம். இந்த இருமொழிக் கொள்கையே தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை. மாநிலப் பட்டியலில் இருக்க வேண்டிய கல்வி, பொதுப் பட்டியலில் இருப்பதால் ஒன்றிய அரசும் மாநில அரசும் ஒத்திசைவில் முடிவுகள் எடுக்க வேண்டிய சூழல் உள்ளது.

ஆனால் ஒன்றிய அரசு எந்த ஒத்திசைவும் வழங்காமல் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் நிதி தருவோம் எனச் சொல்வது எப்படி நியாயம்? இப்படி ‘மும்மொழிக் கொள்கை’ என்ற பெயரில் நடக்கும் நவீன இந்தித் திணிப்பை தட்டிக்கேட்ட எங்கள் தலைவரை, பல மொழிகளில் அவரது படங்கள் வெளியாவதை, திரைப்படப் பாடலை, குடும்பத்தினர் படிக்கும் கல்விச் சாலையை எல்லாம் இழுத்து, திரித்து எழுதியுள்ளார் பாஜகவைச் சார்ந்த மதிப்பிற்குரிய திரு H.ராஜா அவர்கள்.

திரைப்படம் தொழில், கல்வி என்பது தொண்டு, தொழிலுக்கும் தொண்டுக்கும் வித்தியாசம் தெரியாதா? தனிமனிதர் வேறு; அரசின் கொள்கை வேறு. மாநில தன்னாட்சி உரிமை, கல்விக் கொள்கை, மொழிக் கொள்கை அனைத்தும் தனித்துவமானது. யார் எங்கு படிக்கிறார் என்பது தனிநபர் விருப்பம். ஆனால் ஓர் அரசு எந்த மொழியில் கற்றுக் கொடுக்கிறது என்பது கொள்கை.

இத்தனை சீரியசான பிரச்சனைக்கு ஆதாரமாய் சினிமா பாடலையா கொண்டு வருவீர்கள்? ஆலமரப் பள்ளிக்கூடம் ஆக்ஸ்போர்டாய் மாறுவதற்கு மும்மொழி வேண்டுமாம். அந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலேயே ஆங்கிலம்தான் பேசுகிறார்கள். நிலாவைக் காட்டி சோறு ஊட்டியவர்கள் மத்தியில் அந்த நிலவுக்கே சந்திராயனை ஊட்டிய அறிவியல் தமிழர்கள் அனைவரும் இந்தி படிக்காதவர்கள்தான். இது உங்களுக்கும் உங்கள் அட்மினுக்கும் தெரியாதா? மதிப்பிற்குரிய அக்கா மருத்துவர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள், எங்கள் தலைவர் இது குறித்துப் பேசக்கூடாது என்கிறார்.

இவர்களை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தச் சொன்னால் யார் வீட்டுக் குழந்தை எங்கு படிக்கிறார்கள் என்று கணக்கெடுப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். திருமதி தமிழிசை அவர்களே.. நீங்கள் எங்கு படித்தீர்கள்? இருமொழிக் கொள்கையில் படித்த நீங்கள் மருத்துவராகவில்லையா? இரு மாநிலங்களின் ஆளுநராகவில்லையா? உங்கள் பேரில் இருக்கும் தமிழ் நம் ஊரிலும் இருக்கட்டும். தமிழ் எங்கள் பேச்சு. தமிழ் எங்கள் மூச்சு.” என ராஜ்மோகன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி: படங்களை மட்டும் 3 மொழிகளில் வெளியிடும் விஜய், மும்மொழிக் கொள்கையை எதிர்க்கலாமா..?

மூன்று மொழிகளில் படங்களை வெளியிடும் நடிகர் விஜய், மும்மொழிக் கொள்கையை எதிர்க்கக்கூடாது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “நாங்கள் இந்தியை திணிக்கவில்லை. மூன்றாவதாக வேறு எந்த ஒரு மொழியாவது கற்றுக் கொள்ளுங்கள் என்றுதான் சொல்கிறோம். ஆனால், திமுகவினர்தான் இந்தி திணிப்பை மக்கள் மீது திணிக்கின்றனர்.

நடிகர் விஜய்யின் திரைப்படம் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் கூட வெளியாகிறது. உங்கள் வியாபாரத்திற்கு மட்டும் மும்மொழிக் கொள்கை தேவை. ஆனால் மாணவர்கள் மூன்று மொழிகளை கற்றுக் கொள்ளக் கூடாதா? குழந்தைகளின் வருங்காலத்துக்கு பலமொழிக்கொள்கை தேவைப்படும். மும்மொழிக் கொள்கை குறித்து எல்லாம் நடிகர் விஜய் கருத்து சொல்லக்கூடாது.

அப்படி சொல்வதென்றால் தனது படங்களை தமிழில் மட்டும்தான் வெளியிடுவேன் என விஜய் முதலில் சொல்ல வேண்டும். ஒரு சாதாரண அரசாங்க பள்ளி மாணவ மாணவியர் இந்தி மட்டுமில்லாமல் தெலுங்கு அல்லது மலையாளமும் கற்றுக் கொண்டால் ஆந்திராவிலோ அல்லது கேரளாவிலோ ஒரு வேலையை பெற முடியும். மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய நிதியை தடுப்பது மத்திய அரசு அல்ல தமிழ்நாடு அரசுதான்.

மாறி வரும் சவால் நிறைந்த உலகில் கூடுதல் மொழியை குழந்தைகள் படிக்கிறோம் என கூறுகின்றனர். உங்களுக்கு என்ன பிரச்சினை? திமுகவுக்கும் திராவிடத்தை சார்ந்தவர்களுக்கு படிப்பு என்றாலே பிரச்சினைதான். சாமானிய மக்களை படியுங்கள் என்று கூறுவது ஆணவமா?” என தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

H. ராஜா சாடல்: 24 மணிநேரம்.. குழந்தையை அரசு பள்ளியில் சேர்க்கட்டும் பார்க்கலாம்..!

தமிழக அரசியல் தலைவர்கள் தங்களின் குழந்தைகள் தற்போது படிக்கும் கல்வி நிறுவனத்தில் இருந்து டிசி வாங்கி அடுத்த 24 மணிநேரத்தில் அரசு பள்ளியில் சேர்க்கட்டும் பார்க்கலாம்” என எச் ராஜா சவால் விட்டுள்ளார். சமக்ர சிக்சா அபியான் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும் ரூ.2152 கோடி கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. தேசியக் கல்வி கொள்கையினை ஏற்றுக்கொண்டால் தான் நிதி வழங்கப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

ஆனால் தமிழக அரசு தேசிய கல்வி கொள்கையை ஏற்க மறுத்து வருகிறது. தேசிய கல்வி கொள்கை மூலம் ஹிந்தியை மத்திய அரசு திணிக்கிறது என்று குற்றம்சாட்டி தமிழக அரசு அதனை ஏற்காமல் உள்ளது. இதனால் சமக்ர சிக்சா அபியான் திட்ட நிதியை மத்திய அரசு இன்னும் விடுவிக்கவில்லை. இந்த விவகாரம் தற்போது தமிழகத்தில் பூதாகரமாகி உள்ளது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், அதிமுக, பாமக உள்பட அனைத்து கட்சிகளும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதாகும் என்றும், மாநில மொழிக் கொள்கைக்குச் சவால் விடுத்து, நிதி ஒதுக்கமாட்டோம் என்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தான் கோயம்புத்தூரில் நேற்று இரவு பாஜக மூத்த தலைவர் H. ராஜா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழ்நாட்டில் மத்திய அரசுக்கு எதிராக பேசினால் தான் மக்கள் ஓட்டுப்போடுவார்கள் என்ற மூடநம்பிக்கை உள்ளது. அதனால் எல்லோரும் மத்திய அரசை எதிர்த்து பேசுகிறார்கள். விஜயின் குழந்தை எங்கு படிக்கிறது? இருமொழி கொள்கையிலேயே? சமச்சீர் கல்வியிலா? சொல்லுங்கள். இந்த அமைச்சர்கள், வார்டு கவுன்சிலர்கள் யாராவது தங்களின் குழந்தைகளை சமச்சீர் கல்வியில் சேர்த்து உள்ளார்களா?

திமுக தலைவர்களின் குழந்தைகள் எல்லாம் மும்மொழி, நான்கு மொழி கொள்கை படிக்கும். வெளிநாட்டில் படிக்கும். ஓரளவு மிடில் கிளாஸை விட வளர்ந்த குடும்பத்துக்கு குழந்தைகள் தனியார் பள்ளிகளில் ஹிந்தி, சமஸ்கிருதம் படிப்பதை தடுக்க முடியவில்லை. ஆனால் கார்ப்பரேஷன் பள்ளிக்கூடத்தில் படிக்கும் ஏழை, விவசாயி, தொழிலாளியின் குழந்தைகளை மும்மொழி கொள்கையை படிக்காதே என்று குரல்வளையை நெறிக்கிறார்கள். இது என்ன புத்திசாலி தனம்? இது விஜய்க்கு மட்டுமில்லை.

தமிழகத்தில் இருமொழி கொள்கையை தொடருவோம் என்று கூறும் அனைவரும் நாளை காலை உங்களின் குழந்தைகளை தற்போது படிக்கும் பள்ளியில் இருந்து அழைத்து வந்து கார்ப்பரேஷன் பள்ளியில் சேருங்கள். அனைத்து அரசியல் தலைவர்கள் தங்களின் குழந்தைகள் தற்போது படிக்கும் கல்வி நிறுவனத்தில் இருந்து டிசி வாங்கி அடுத்த 24 மணிநேரத்தில் அரசு பள்ளியில் சேர்க்கட்டும். அப்போது அவர்கள் யோக்கியமானவர்கள், நல்லவர்கள் என்று நானே ஏற்றுக்கொண்டு பகிரங்கமாக அறிவிக்கிறேன்” என H. ராஜா கடுமையாக சாடி உள்ளார்.

தவெக சம்பத்குமார்: எத்தனை ஆண்டுகள் “வென்றால் மகிழ்ச்சி,. தோற்றால் பயிற்சி” என சீமான் உளருகிறார்..!

சீமான் இன்னும் எத்தனை ஆண்டுகள் “வென்றால் மகிழ்ச்சி,. தோற்றால் பயிற்சி” என்று நாம் தமிழர் உறவுகளை உசுப்பேத்திக் கொண்டே இருக்கப் போகிறாரோ தெரியவில்லை? என தவெக கொள்கை பரப்பு இணை செயலாளர் சம்பத்குமார் விமர்சித்துள்ளார். தவெக ஆரம்பித்துள்ள நடிகர் விஜய் ஏற்கனவே ஜான் ஆரோக்யசாமி, ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட தேர்தல் வியூக நிபுணர்களை கட்சியில் இணைத்து இருக்கிறார். இந்நிலையில் பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோரையும் அவர் சந்தித்தார்.

2026 சட்டமன்றத் தேர்தலில் பிரசாந்த் கிஷோர் பல்வேறு வியூகங்களை தவெகவிற்கு வகுத்துக் கொடுப்பார் என கூறப்படுகிறது. அவரது நிறுவனத்தில் இருந்து வெளியேறி விட்டாலும் தனிப்பட்ட முறையில் விஜய்யுடன் இணைந்து அவர் பணியாற்றுவார் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சீமான் இது தொடர்பாக பேசுகையில்,” தேர்தல் வியூக வகுப்புகளில் எனக்கு உடன்பாடு இல்லை. சமூகத்தைப் பற்றி தெரியாதவர்களை அரசியல் கட்சித் தலைவர்கள் அழைக்கிறார்கள். பணக் கொழுப்பு கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? பணக் கொழுப்பு அதிகமாக இருந்தால் இதெல்லாம் தேவைப்படும்” என விமர்சித்து இருந்தார். இதையடுத்து சீமானுக்கு தவெகழகத்தினர் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் நாம் தமிழர் – தமிழக வெற்றிக் கழகத்தினர் இடையே சமூக வலைதளங்களில் மோதல் வெடித்துள்ளது.

இது தொடர்பாக தவெக கொள்கை பரப்பு இணை செயலாளர் சம்பத்குமார் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,” ஊடகவியலாளர்கள் ஒலிவாங்கியை நீட்டிவிட்டால் அண்ணன் சீமான் எதையாவது உளருவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார். சமகால சமூகச் சூழலில் அரசியல் கட்சிகள் தேர்தல் வியூக வடிவமைப்பாளர்களை நியமிப்பதன் அவசியத்தை புரிந்துகொள்ளாமல் பணக் கொழுப்பு என்று பகிரங்கமாக அறிவித்துள்ள அண்ணன் சீமானுக்கு நடைமுறை அரசியல் யதார்த்தம் புரியவில்லை என்று தான் அர்த்தமாகிறது.

ஒவ்வொரு தேர்தலிலும் கட்டுத்தொகையை இழப்பதையே தேர்தல் வியூகமாகக் கொண்ட அண்ணன் சீமான் இன்னும் எத்தனை ஆண்டுகள் “வென்றால் மகிழ்ச்சி,. தோற்றால் பயிற்சி” என்று நாம் தமிழர் உறவுகளை உசுப்பேத்திக் கொண்டே இருக்கப் போகிறாரோ தெரியவில்லை? திரள் நிதி வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ள அண்ணன் சீமானுக்கு திறமையாளர்களின் ஆலோசனைகளை பெறுவது தவறாக தெரிவது ஆச்சரியமன்று. அண்ணே, நாங்கள் சட்டமன்றத்தில் பேசுவதற்காக அரசியல் செய்கிறோம், நீங்கள் பட்டிமன்றத்தில் பேசுவது தான் அரசியல் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறுவது எப்படி என்று சிந்திக்கிறோம் நீங்கள் தமிழ் தேசிய அரசியலை எப்படி வெற்றி பெறாமல் வைத்திருப்பது என்று சிந்திக்கிறீர்கள்.

பிரபாகரனிசத்தை முன்வைத்து கட்சி தொடங்கிய நீங்கள் இப்போது சீமானிசத்தில் கொண்டு போய் கட்சியை நிறுத்தியிருக்கிறீர்கள். ஒன்று சொல்லட்டுமா அண்ணே, எங்கள் தலைவர் தளபதி விஜய் தன் ரசிகர்களை அரசியல் கட்சியின் தொண்டர்களாக உருமாற்றம், செய்து வருகிறார். நீங்கள் உங்கள் கட்சியின் தொண்டர்களை உங்கள் ரசிகர்களாக உருமாற்றம் செய்து வருகிறீர்கள். உங்களோடு என்றும் எங்களுக்கு ஒத்து போகாது அண்ணே” என சம்பத்குமார் தெரிவித்துள்ளார்.

எல்லா தேர்தலிலும் கட்டுத்தொகை இழப்பது தான் தேர்தல் வியூகமா..!?

ஒவ்வொரு தேர்தலிலும் கட்டுத்தொகையை இழப்பதையே தேர்தல் வியூகமாகக் கொண்டவர் சீமான் என தவெக கொள்கை பரப்பு இணை செயலாளர் சம்பத்குமார் விமர்சித்துள்ளார் . தவெக ஆரம்பித்துள்ள நடிகர் விஜய் ஏற்கனவே ஜான் ஆரோக்யசாமி, ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட தேர்தல் வியூக நிபுணர்களை கட்சியில் இணைத்து இருக்கிறார். இந்நிலையில் பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோரையும் அவர் சந்தித்தார்.

2026 சட்டமன்றத் தேர்தலில் பிரசாந்த் கிஷோர் பல்வேறு வியூகங்களை தவெகவிற்கு வகுத்துக் கொடுப்பார் என கூறப்படுகிறது. அவரது நிறுவனத்தில் இருந்து வெளியேறி விட்டாலும் தனிப்பட்ட முறையில் விஜய்யுடன் இணைந்து அவர் பணியாற்றுவார் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சீமான் இது தொடர்பாக பேசுகையில்,” தேர்தல் வியூக வகுப்புகளில் எனக்கு உடன்பாடு இல்லை. சமூகத்தைப் பற்றி தெரியாதவர்களை அரசியல் கட்சித் தலைவர்கள் அழைக்கிறார்கள். பணக் கொழுப்பு கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? பணக் கொழுப்பு அதிகமாக இருந்தால் இதெல்லாம் தேவைப்படும்” என விமர்சித்து இருந்தார். இதையடுத்து சீமானுக்கு தவெகழகத்தினர் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் நாம் தமிழர் – தமிழக வெற்றிக் கழகத்தினர் இடையே சமூக வலைதளங்களில் மோதல் வெடித்துள்ளது.

இது தொடர்பாக தவெக கொள்கை பரப்பு இணை செயலாளர் சம்பத்குமார் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,” ஊடகவியலாளர்கள் ஒலிவாங்கியை நீட்டிவிட்டால் அண்ணன் சீமான் எதையாவது உளருவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார். சமகால சமூகச் சூழலில் அரசியல் கட்சிகள் தேர்தல் வியூக வடிவமைப்பாளர்களை நியமிப்பதன் அவசியத்தை புரிந்துகொள்ளாமல் பணக் கொழுப்பு என்று பகிரங்கமாக அறிவித்துள்ள அண்ணன் சீமானுக்கு நடைமுறை அரசியல் யதார்த்தம் புரியவில்லை என்று தான் அர்த்தமாகிறது.

ஒவ்வொரு தேர்தலிலும் கட்டுத்தொகையை இழப்பதையே தேர்தல் வியூகமாகக் கொண்ட அண்ணன் சீமான் இன்னும் எத்தனை ஆண்டுகள் “வென்றால் மகிழ்ச்சி,. தோற்றால் பயிற்சி” என்று நாம் தமிழர் உறவுகளை உசுப்பேத்திக் கொண்டே இருக்கப் போகிறாரோ தெரியவில்லை? திரள் நிதி வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ள அண்ணன் சீமானுக்கு திறமையாளர்களின் ஆலோசனைகளை பெறுவது தவறாக தெரிவது ஆச்சரியமன்று. அண்ணே, நாங்கள் சட்டமன்றத்தில் பேசுவதற்காக அரசியல் செய்கிறோம், நீங்கள் பட்டிமன்றத்தில் பேசுவது தான் அரசியல் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறுவது எப்படி என்று சிந்திக்கிறோம் நீங்கள் தமிழ் தேசிய அரசியலை எப்படி வெற்றி பெறாமல் வைத்திருப்பது என்று சிந்திக்கிறீர்கள்.

பிரபாகரனிசத்தை முன்வைத்து கட்சி தொடங்கிய நீங்கள் இப்போது சீமானிசத்தில் கொண்டு போய் கட்சியை நிறுத்தியிருக்கிறீர்கள். ஒன்று சொல்லட்டுமா அண்ணே, எங்கள் தலைவர் தளபதி விஜய் தன் ரசிகர்களை அரசியல் கட்சியின் தொண்டர்களாக உருமாற்றம், செய்து வருகிறார். நீங்கள் உங்கள் கட்சியின் தொண்டர்களை உங்கள் ரசிகர்களாக உருமாற்றம் செய்து வருகிறீர்கள். உங்களோடு என்றும் எங்களுக்கு ஒத்து போகாது அண்ணே” என சம்பத்குமார் தெரிவித்துள்ளார்.