கருணாஸ் பேச்சு: பாலியல் குற்றங்கள் கடந்த 15 ஆண்டுகளாகவே அதிகரித்து கொண்டே வருகிறது..!

சமீப காலமாக அதிகரித்துள்ள பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பான கேள்விக்கு, சமீபமாக அதிகரிக்கவில்லை. கடந்த 15 ஆண்டுகளாகவே அதிகரித்து கொண்டே வருகிறதுஎன முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார். கடந்த இரு வாரங்களாக பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து ஆசிரியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருச்சி என்று பல்வேறு மாவட்டங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்தன.

இதன் காரணமாக தமிழக அரசு சட்டம் ஒழுங்கை சரி வர கவனிக்கவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. எதிர்க்கட்சிகள் தரப்பில் பெண்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்று விமர்சிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து கருணாஸ் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது, எனது பிறந்தநாளை முன்னிட்டு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் ஆசி பெற வந்தேன். இந்த பிறந்தநாளை முன்னிட்டு இளைஞர்கள் மத்தியில் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் சிவகாசியில் வரும் பிப்ரவரி 22, 23 ஆகிய தேதிகளில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிறைவாக இருக்கிறது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் எந்த தவறும் நடக்கக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். தொடந்து சமீப காலமாக அதிகரித்துள்ள பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பான கேள்விக்கு, சமீபமாக அதிகரிக்கவில்லை. கடந்த 15 ஆண்டுகளாகவே அதிகரித்து கொண்டே வருகிறது. அதற்கு காரணம் இன்றைக்கு நாம் வாழும் வாழ்க்கை முறைதான். செல்ஃபோன் பயன்பாடு அதிகரிப்பால் தவறான விஷயங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுகிறது.

இதனை ஊடகங்கள் பெரிதுபடுத்தும் போது, அதனை பார்த்து மற்றவர்கள் அதே தவறை செய்கிறார்கள். இதனால் பாலியல் தொல்லை உள்ளிட்ட பிரச்சனைகள் அதிகரிக்கிறது என்பதே எனது கருத்து. ஆகவே, அப்படி நடக்கக் கூடிய ஒவ்வொரு விஷயங்களிலும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கிறது என கருணாஸ் தெரிவித்தார்.

புதுச்சேரி தொழில் நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் வடமாநில மாணவி கூட்டு பலாத்கார முயற்சியா..!?

சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகர் என்பவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். ஒட்டுமொத்த தமிழகத்திலும் இந்த சம்பவம் ஏற்படுத்திய அதிர்வு இன்னும் தணியவில்லை. அதற்குள் புதுச்சேரி தொழில் நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் செடி, கொடிகள் அடர்ந்துள்ள பகுதியில் காதலனுடன் தனிமையில் பேசிக்கொண்டு இருந்த வடமாநில மாணவியை ஒரு கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி காலாப்பட்டில் இயங்கி வரும் புதுச்சேரி பொறியியல் கல்லூரி, சில ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக் கழகமாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை என பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு வடமாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவர் பல்கலைக்கழக விடுதியில் தங்கி முதலாமாண்டு இளநிலை பொறியியல் படிப்பு படித்து வருகிறார். இந்த மாணவி இதே கல்லூரியில் படிக்கக்கூடிய மாணவர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

கடந்த 11-ஆம் தேதி சனிக்கிழமை விடுமுறை என்பதால், இருவரும் கல்லூரி வளாகத்தில் வேதியியல் பிரிவு கட்டிடத்தின் பின்புறம் செடி, கொடிகள் அடர்ந்துள்ள பகுதியில் தனிமையில் பேசிக்கொண்டடு இருந்தனர். அப்போது அங்கு திடீரென வந்த 3 பேர் கும்பல், அங்கிருந்த ஜோடியிடம் சென்று இங்கு என்ன செய்கிறீர்கள்? எதற்காக வந்தீர்கள் எனக்கேட்டு தகராறு செய்துள்ளனர். மேலும் மாணவனை அந்த கும்பல் சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்த மாணவியை அந்த கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்து உள்ளனர்.

அந்த மாணவி கும்பலிடம் தப்பியோட முயன்றுள்ளார். ஆனால் அந்த கும்பல் மாணவியை மீண்டும் துரத்தி பிடித்து சரமாரியாக தாக்கி கூட்டு பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க மாணவி கத்தி கூச்சலிட்ட, பயந்து போன அவர்கள் மாணவியை விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்துள்ளது. இதில் உடல் முழுவதும் படுகாயம் அடைந்த மாணவி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று பல்கலைக்கழக விடுதிக்கு திரும்பி உள்ளார்.

பாதிக்கப்பட்டவர் வடமாநில மாணவி என்பதால் காவல்துறைக்கு செல்ல பயந்து, பல்கலைக்கழக நிர்வாகத்திடம் நடந்த சம்பவங்கள் குறித்து புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் வெளியே வந்தால் பல்கலைக்கழகத்துக்கு கெட்டப்பெயர் ஏற்படும் என்பதால் இச்சம்பவத்தை மூடி மறைத்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

ஹெச்.ராஜா: பாலியல் வன்கொடுமை..! கிறிஸ்தவர்கள் தொடர்புடைய பள்ளிகளை பற்றி அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசிவதில்லை..!?

பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா, திருச்சியில் 40-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியும், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதுபற்றி பேசவில்லை. கிறிஸ்தவர்கள் தொடர்பு இருப்பதால்தான் பேசவில்லையா? என தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜன சங்கம் கட்சி தலைவர் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா 108-வது பிறந்தநாள் விழா சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. அவரது படத்துக்கு பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர், செய்தியாளர்களள் சந்திப்பில் ஹெச்.ராஜா பேசுகையில், நாடு முழுவதும் 24-ம் தேதி வரை 5 கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். பழநி பஞ்சாமிர்தம் குறித்து கருத்து தெரிவித்த இயக்குநர் மோகன் ஜியை கைது செய்தது முறையற்றது. நீதிமன்றமும் அதையே சொல்லி, தமிழக அரசு, காவல் துறைக்கு பலத்த அடி கொடுத்துள்ளது. அதேநேரம், பிரதமர் குறித்து அவதூறாக பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசனை முதலமைச்சர் இன்னும் பதவி நீக்கம் செய்யவில்லை.

விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் விஜயகாந்துடன் மக்கள்நல கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தன. ஆனால், அந்த கூட்டணிக்கு வெறும் 6 சதவீத வாக்குகள்தான் கிடைத்தன. அதனால், திமுக நினைப்பதுபோலவே, விசிக ஒன்றும் தவிர்க்க முடியாத பெரிய அரசியல் சக்தி இல்லை.

மேலும் பேசிய ஹெச்.ராஜா, மகாவிஷ்ணு விவகாரத்தில் 2 தலைமை ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், திருச்சியில் 40-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியும், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதுபற்றி பேசவில்லை. கிறிஸ்தவர்கள் தொடர்பு இருப்பதால்தான் பேசவில்லையா? என ஹெச்.ராஜா தெரிவித்தார்.