மக்களவையில் அமித் ஷா ஆவேசம்: “மாய தோற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம்”

மணிப்பூர் விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் இன்று நடந்த விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார். அப்போது, “பிரதமர் நரேந்திர மோடி மீது, இந்த அரசு மீது நம்பிக்கை போய்விடவில்லை. மாய தோற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளனர். எதிர்க்கட்சிகளின் உண்மையான குணம் என்ன என்பதை இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் அம்பலப்படுத்தும்.

அரசைப் பாதுகாக்க ஊழல் செய்வது என்பதுதான் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் குணம். சுதந்திரத்துக்குப் பிறகு மிகப் பெரிய அளவில் நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்ற பிரதமர் என்றால், அவர் நரேந்திர மோடிதான். மக்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகப் பெரிய புகழ் இருக்கிறது. நாட்டு மக்களுக்காக அவர் ஓய்வின்றி உழைக்கிறார். நாள்தோறும் 17 மணி நேரம் தொடர்ச்சியாக அவர் உழைக்கிறார். ஒருநாள்கூட அவர் விடுப்பு எடுத்துக்கொண்டது கிடையாது. மக்கள் அவர் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் என்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது. இந்த அரசு என்னவெல்லாம் செய்திருக்கிறது என்பதை நான் இப்போது கூறுகிறேன். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று கூறுவதையே வழக்கமாகக் கொண்ட கூட்டணி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி. வெறும் கடனை தள்ளுபடி செய்வதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. மாறாக, கடன் வாங்க வேண்டிய தேவை ஏற்படாத நிலையை உருவாக்குவதற்கான அமைப்பு முறையை நாங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

நாங்கள் விவசாயிகளுக்குக் கொடுத்திருப்பது இலவசங்கள் அல்ல. மாறாக, அவர்கள் தங்களை தற்சார்பு அடையச் செய்வதற்கான நடவடிக்கை. நரேந்திர மோடி அரசு வரலாற்றுச் சிறப்பு மிக்க சில முடிவுகளை எடுத்து, வாரிசு அரசியலுக்கும் ஊழலுக்கும் முடிவு கட்டி இருக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் குணம் என்பது அதிகாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதுதான். ஆனால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, கொள்கைகளைப் பாதுகாக்க போராடுகிறது.

அனைவருக்கும் வங்கிக் கணக்கு திட்டத்தை காங்கிரஸ் ஏன் எதிர்த்தது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஏழைகளுக்காக மத்திய அரசு ஒரு ரூபாய் வழங்கினால் அதில் 15 பைசாதான் அவர்களைச் சென்றடைகிறது என பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி சொன்னார். ஆனால், இன்று முழு தொகையும் ஏழைகளைச் சென்றடைகிறது” என்று அமித் ஷா உரையாற்றினார்.

மக்களவையில் ஸ்மிருதி இராணி: “இந்தியா ஊழல் செய்யாததால் நீங்கள் இந்தியா இல்லை”

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, “மணிப்பூரில் பாரத மாதா கொல்லப்பட்டுவிட்டார்” என கூறி குற்றம் சாட்டினார். அவரது இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, “முதல்முறையாக ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பாரத மாதாவின் மரணம் குறித்துப் பேசுகிறார். அவரது கூட்டணி கட்சி உறுப்பினர்கள் எல்லோரும் கை தட்டுகிறார்கள்.

நீங்கள் இந்தியா கிடையாது. இந்தியா ஊழல் செய்யாததால் நீங்கள் இந்தியா இல்லை. இந்தியா தகுதியை நம்புகிறது; வாரிசு அரசியலை அல்ல. நாடு சுதந்திரம் அடையும் முன் வெள்ளையனே வெளியேறு என்ற முழக்கத்தை நாடு முழங்கியது. இதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். இன்று நாடு, ஊழலே இந்தியாவைவிட்டு வெளியேறு என்கிறது; வாரிசு அரசியலே நாட்டை விட்டு வெளியேறு என்கிறது. தகுதியைத்தான் இந்தியா கோருகிறது.

நாட்டில் அவசரநிலையைப் பிறப்பித்த கட்சி காங்கிரஸ். 1984-ல் சீக்கியர்களுக்கு எதிராக கலவரத்தில் ஈடுபட்ட கட்சி காங்கிரஸ். ஜம்மு காஷ்மீரில் கிரிஜா திக்கோ என்ற பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாகக் கொல்லப்பட்டதைத் தெரிவித்த திரைப்படத்தை பிரச்சாரம் என்று கூறிய கட்சி காங்கிரஸ். அதே கட்சிதான், தற்போது மணிப்பூர் குறித்துப் பேசுகிறது.

அவையில் பேசிய ராகுல் காந்தி தான் மேற்கொண்ட யாத்திரை குறித்தும், ஜம்மு காஷ்மீரில் மீண்டும் 370 சட்டப்பிரிவு அமல்படுத்தப்படும் என்று உறுதி அளித்ததாகவும் கூறினார். (அவையில் இருந்து ராகுல் காந்தி வெளியேறியதைச் சுட்டிக்காட்டி) அவையில் இருந்து வெளியேறிய நபரால் சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வரவும் முடியாது; ஒன்று மதம் மாறுங்கள்; இல்லாவிட்டால் கொல்லப்பட தயாராகுங்கள்; இல்லாவிட்டால் காஷ்மீரைவிட்டு வெளியேறுங்கள் என்று பண்டிட் மக்களை அச்சுறுத்துபவர்கள் காப்பாற்றப்படவும் மாட்டார்கள். மணிப்பூர் குறித்து விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை. நாங்கள் அவையில் இருக்கிறோம். ஆனால், அவர்கள் அவையில் இல்லை” என பேசினார்.

ராகுல் காந்தி லக்னோ விமான நிலையத்தில் திடீர் தர்ணா..!!!

உத்திர பிரதேசத்தில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டாத்தில் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும் தீவிரமாக பங்கேறு வருகின்றனர். லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஷ்ரா மற்றும் மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பக்கத்து கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் திகுனியாவில் திரண்டனர். அப்போது அந்த வழியாக பாஜகவினரின் வாகன அணிவகுப்பு ஒன்று வந்தது. இதில் கார் ஒன்று விவசாயிகள் மீது பயங்கரமாக மோதியதில் 2 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் பாஜகவினர் வந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதன்காரணமாக அங்கு வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் லகிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள் இன்று அதிகாலை பன்வீர்பூர் கிராமத்திற்கு சென்றார். அப்போது காவல்துறையினர், பிரியங்கா காந்தியை அந்த கிராமத்திற்குள் அனுமதிக்காமல் கிராம எல்லையிலேயே காவல்துறையினர் கைது செய்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இன்று லகிம்பூர் செல்ல இருந்த நிலையில், உத்திரபிரதேச அரசு அனுமதி மறுத்த நிலையில், லகிம்பூர் செல்ல ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு உத்தரப்பிரதேச அரசு அனுமதி வழங்கப்பட்டு அவர்களுடன் மேலும் 3 பேர் மட்டும் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

இதன்காரணமாக டெல்லி விமான நிலையத்திலிருந்து உத்தரபிரதேச மாநிலம் லக்னோ விமான நிலையத்திற்கு வந்த ராகுல்காந்தி, பஞ்சாப் மற்றும் சட்டீஸ்கர் முதலமைச்சர்கள் ஆகியோர் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

பின்னர் லக்னோ விமான நிலையத்தில் நிருபர்களிடம் ராகுல் காந்தி கூறுகையில், உத்தரபிரதேச அரசால் எனக்கு என்ன அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், காவல்துறையினர் என்னை விமான நிலையத்திலிருந்து வெளியே செல்ல விடவில்லை.

நாங்கள் எங்கள் காரில் செல்ல விரும்புகிறோம். ஆனால் காவல்துறையினர் எங்களை அவர்கள் வாகனத்தில் அழைத்துச் செல்ல விரும்புகிறார்கள். எனது வாகனத்தில் செல்ல அனுமதிக்குமாறு அவர்களிடம் கேட்டேன். அவர்கள் ஏதோ திட்டமிடுகிறார்கள். நான் எப்படி செல்ல வேண்டும் எனக்கூற சட்டம் ஏதும் உள்ளதா? இங்கு என்ன நடக்கிறது என்பதை சரியாக காட்டுங்கள் என்றார்.

நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு அதிகாரிகள் லகிக்பூர் செல்ல அனுமதி வழங்கினர். அதனை தொடர்ந்து ராகுல் காந்தி தலைமையிலான 5 பேர் கொண்ட காங்கிரஸ் குழு வன்முறையால் பாதிக்கப்பட்ட லகிம்பூர் கேரிக்கு லக்னோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர்

ராகுல் காந்தி : காவலில் வைக்கப்பட்டுள்ளவர் உண்மையான காங்கிரஸ்காரர். இறுதிவரை போராடுபவர்

உத்திர பிரதேசத்தில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டாத்தில் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும் தீவிரமாக பங்கேறு வருகின்றனர். லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஷ்ரா மற்றும் மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பக்கத்து கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் திகுனியாவில் திரண்டனர். அப்போது அந்த வழியாக பாஜகவினரின் வாகன அணிவகுப்பு ஒன்று வந்தது. இதில் கார் ஒன்று விவசாயிகள் மீது பயங்கரமாக மோதியதில் 2 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் பாஜகவினர் வந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதன்காரணமாக அங்கு வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் லகிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக சென்ற காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்திக்கு அனுமதி மறுத்த காவல்துறை  அவரை தடுப்புக்காவலில் வைத்துள்ளனர். இதனிடையே, காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி  தனது டுவிட்டர் பக்கத்தில், “காவலில் வைக்கப்பட்டுள்ளவர் எதற்கும் அஞ்சாதவர், உண்மையான காங்கிரஸ்காரர். இறுதிவரை போராடுபவர். இந்த சத்தியாகிரகம் ஓயாது” எனப் பதிவிட்டுள்ளார்.

அமரீந்தர் சிங்: சித்துவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டால் அவருக்கு எதிராக பலம் வாய்ந்த வேட்பாளரை நிறுத்துவேன்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், முன்னாள் பாஜக மாநிலங்களவை உறுப்பினருமான நவஜோத் சிங் சித்து 2017ஆம் ஆண்டு பாஜகவிலிருந்து காங்கிரஸ் கட்சி தாவினார்.தற்பொழுது பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்குக்கும், மாநில காங்கிரஸ் தலைவரான நவஜோத் சிங் சித்துவுக்கும் இடையே உட்கட்சி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது.

இதனையடுத்து, மேலிடம் கொடுத்த அழுத்தம் மற்றும் அவமானத்தின் காரணமாக அமரீந்தர் சிங் சமீபத்தில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். சித்து ஆதரவாளரான சரண்ஜித் சிங் சன்னி புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், அமரிந்தர் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், பஞ்சாப்பிற்கு மிகவும் ஆபத்தானவர் சித்து. வரப்போகும் சட்டசபை தேர்தலில் சித்து முதல் மந்திரி ஆவதை தடுக்க எந்த தியாகத்தையும் நான் செய்வேன்.

சித்துவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டால் அவருக்கு எதிராக பலம் வாய்ந்த வேட்பாளரை நிறுத்துவேன். மூன்று வாரங்களுக்கு முன்பாக நான் ராஜினாமா செய்ய இருப்பதாக கூறிய போது, தொடர்ந்து பதவியில் நீடிக்குமாறு சோனியா காந்தி என்னை கேட்டுக்கொண்டார். எனக்கு தந்திர வித்தையெல்லாம் தெரியாது. காந்தி குடும்பத்தினருக்கும் இது பற்றி தெரியும். ராகுல், பிரியங்கா எனது பிள்ளைகளை போன்றவர்கள் அனுபவமற்றவர்கள் அவர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்” என தெரிவித்தார்.

ராகுல்காந்தி: இந்திய-சீன எல்லையில் புதிய போர் அபாயம்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அந்த பதிவில், “எல்லைகளில் புதிய போர் அபாயத்தை சந்தித்து வருகிறோம். அதை அலட்சியப்படுத்துவது நல்லதல்ல” என்று அவர் கூறியுள்ளார்.

சம்பித் பத்ரா: ராகுல் குழப்பத்தில் இருக்கிறார்

கொரோனா தொற்று அலைகள் தொடர்பாக ராகுல் காந்தி, நேற்று கட்சியின் வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். இதற்கு பதிலடி கொடுக்கிற விதத்தில் பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா, டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில், நேற்றையில் இருந்தே நாங்கள் இதைப்பற்றி அஞ்சி வந்தோம்.

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் எப்போதெல்லாம் நல்லது நடக்கிறதோ, அப்போதெல்லாம் அதைத் தடம் புரளச்செய்வதற்காக காங்கிரசும், ராகுலும் எதையாவது செய்கிறார்கள். நாங்கள் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கிறபோதெல்லாம் ராகுல் காந்தியும், காங்கிரசும் அந்த முயற்சிகளை தடம்புரளச் செய்யும் விதத்தில் அரசியல் செய்கிறார்கள்.

உள்ளபடியே எங்கள் பாதையில் தடைகளை ஏற்படுத்துவதற்காக காங்கிரஸ் உண்மையாகவே ஓய்வு ஒழிச்சலின்றி உழைக்கிறது. ராகுல் குழப்பத்தில் இருக்கிறார். காங்கிரஸ் முரண்பாடான கோரிக்கைகளை முன்வைக்கிறது என தெரிவித்தார்.

ராகுல் காந்தி: “இப்போது கொரோனா மீது கவனம் செலுத்துவதே எனது நோக்கம்”

டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தலைமையில், எதிர்க்கட்சி தலைவர்கள் நேற்று கூடி நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம், அடுத்த ஆண்டு நடக்க உள்ள உ.பி. சட்டசபை தேர்தல், அடுத்த நாடாளுமன்ற தேர்தல், 3-வது அணி அமைத்தல் உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதற்கிடையே கொரோனா தொற்று பற்றிய வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய ராகுல் காந்தியிடம், எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் பற்றி நிருபர்கள் கேள்விகள் எழுப்பினர். ஆனால் அவற்றுக்கு பதில் அளிப்பதை ராகுல் காந்தி தவிர்த்தார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “இப்போது கொரோனா மீது கவனம் செலுத்துவதுதான் எனது நோக்கம்.

நாங்கள் நினைக்கும் திசையில் அரசு செயல்படவேண்டும் என்று சுட்டிக்காட்டுவதுதான் எனது நோக்கம். எனவே இதில் இருந்து உங்களை அல்லது என்னை திசை திருப்ப மாட்டேன். அரசியலில் என்ன நடக்கிறது என்று உங்களுக்கு தெரியும். இங்கும், அங்கும் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். அதைப்பற்றி விவாதிக்க ஒரு நேரம், இடம் உள்ளது என தெரிவித்தார்.

ராகுல் காந்தியின் 51 பிறந்த நாளை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்கள் வழங்கல்

ராகுல் காந்தியின் 51 பிறந்த நாளை முன்னிட்டு செங்கல்பட்டு வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் 151 பேருக்கு அத்தியாவசிய பொருட்கள் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலானா மற்றும் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் S.R.ராஜா வழங்கினர்.