கமலா ஹாரிஸுக்கு ராகுல் காந்தி கடிதம்: நம்பிக்கையினை ஒருங்கிணைக்கும் உங்களின் செய்தி பலரை ஊக்குவிக்கும்…!

கமலா ஹாரிஸின் உற்சாகமான தேர்தல் பிரச்சாரத்துக்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அவரின் நம்பிக்கைச் செய்தி பலரை ஊக்குவிக்கும் என தெரிவித்துள்ளார்.

பதவியில் இருந்து வெளியேறும் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு ராகுல் காந்தி எழுதிய கடிதத்தில், அதிபர் தேர்தலில் உங்களின் உற்சாகமான பிரச்சாரத்துக்காக உங்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நம்பிக்கையினை ஒருங்கிணைக்கும் உங்களின் செய்தி பலரை ஊக்குவிக்கும்.

ஜோ பைடனின் நிர்வாகத்தின் கீழ் இந்தியாவும், அமெரிக்காவும் உலகின் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளில் தங்களின் ஒத்துழைப்பை ஆழப்படுத்தியுள்ளன. ஜனநாயக மதிப்பீடுகளுக்கான நமது பகிரப்பட்ட அர்ப்பணிப்பு இனியும் நமது நட்புறவினை வழிநடத்தும்.

துணை அதிபராக மக்களை ஒன்றிணைப்பதற்கும், பொதுவான ஒரு நிலைப்பாட்டினைக் கண்டறிவதற்குமான உங்களின் உறுதி நினைவு கூரப்படும். உங்களின் எதிர்கால முயற்சிகள் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் என ராகுல் காந்தி அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி: நாள் முழுவதும் உழைத்தாலும் கடைசியா ஒண்ணுமே இல்லைங்க ..!

நாள் முழுவதும் உழைத்தாலும் முடிவில் எதுவும் மிஞ்சவில்லை என்பது தான் இந்தியாவின் கடும் உழைப்பாளிகள் மற்றும் நடுத்தர வர்கத்தின் இன்றைய நிலை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் சலூன் ஒன்றில் தாடியை டிரிம் செய்து கொள்ள சென்ற ராகுல் காந்தி முடி திருத்துபவருடன் உரையாடிய விடியோவை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், சலூன் கடைக்காரர் அஜித், நாள் முழுவதும் உழைத்தாலும் நாளின் முடிவில் சேமிக்கக்கூடிய வகையில் எதுவும் மிஞ்சவில்லை என்று ராகுல் காந்தியிடம் வருத்தத்துடன் கூறினார். இது குறித்து பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, அஜித் கூறிய எதுவும் மிச்சமில்லை என்ற வார்த்தைகளும் அவரது கண்ணீரும் தான் இன்றிய இந்தியாவின் கடினமாக உழைக்கும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் நிலை என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

முடி திருத்துபவர்கள் முதல் செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் வரை குயவர்கள் முதல் தச்சர்கள் வரை தொழிலாளர்களின் சொந்த கடை, சொந்த வீடு என்ற கனவையும், அவர்களது சுய மரியாதையையும் குறையும் வருவாய், அதிகரிக்கும் பணவீக்கம் கொள்ளையடித்து விட்டதாக ராகுல் சாடியுள்ளார்.

எனவே தொழிலாளர்களின் வருமானத்தை அதிகரிக்க செய்யும் குடும்பங்களுக்கு சேமிப்பை மீண்டும் கொண்டு வரும் புதிய திட்டங்கள் தான் இன்றைய தேவை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும், இந்த சமூகத்தில் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம், கடின உழைப்புக்கு ஏற்ற முன்னேற்றம் கிடைக்க வேண்டும் என ராகுல் வலியுறுத்தியுள்ளார்.

ராகுல் காந்தி கேள்வி: ராணுவத்தினருக்கான சலுகைகள் அக்னி வீரர்களுக்கு கிடைக்காதது ஏன்..!?

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் பீரங்கி பயிற்சி மையத்தில் அக்னிபத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பீரங்கி குண்டு வெடித்ததில் கோஹில் விஷ்வராஜ் சிங், சைபத் ஷீத் ஆகிய 2 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பற்றி மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் பக்கத்தில், பீரங்கி பயிற்சியில் குண்டு வெடித்து இறந்த 2 வீரர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்.

இந்த சம்பவம் அக்னி வீரர் திட்டம் பற்றிய கேள்விகளை மீண்டும் எழுப்புகிறது. ராணுவத்தில் பணியாற்றி வீரமரணமடைந்த வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம், இதர சலுகைகள் ஆகியவை அக்னி வீரர்களுக்கு குறித்த நேரத்தில் கிடைக்குமா? அக்னி வீரர்கள் திட்டத்தில் சேர்ந்த வீரர்களுக்கு பென்சன் மற்றும் சலுகைகள் கிடைப்பது இல்லை ஏன்? இரண்டு வீரர்களுக்கும் பொறுப்புகள், தியாகம் ஆகியவை ஒன்று தான்.

ஆனால் வீர மரணத்துக்கு பின் ஏன் இந்த பாகுபாடு? ஒரு ராணுவ வீரரின் உயிர் இன்னொரு ராணுவ வீரரின் உயிரை விட ஏன் மதிப்புமிக்கது என்று பிரதமர் மோடியும், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங்கும் பதில் சொல்ல வேண்டும். இதற்கு எதிராக போராடுவேன் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

தலித் சமுதாயத்தை சேர்ந்த அஜய் துக்காராம் மற்றும், அஞ்சனா துக்காராம் உடன் மதிய உணவை சமைத்து சாப்பிட்ட ராகுல் காந்தி

தலித் சமுதாயத்தை சேர்ந்த அஜய் துக்காராம் மற்றும், அஞ்சனா துக்காராம் உடன் மதிய உணவை சமைத்து சாப்பிட்ட ராகுல் காந்தி
எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அவர்கள் பட்டியலினத்தவர் மற்றும் பிறப்படுத்தப்பட்டோருக்கு பங்களிப்பை வழங்கிய அரசியல் சாசனத்தை பாதுகாப்போம் என தெரிவித்துள்ளார்.

மகராஷ்டிரா மாநிலம் கோலாப்பூருக்கு சென்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பட்டியலினத்தை சேர்ந்த அஜய் துக்காராம் சனதே மற்றும் அஞ்சனா துக்காராம் சனடே ஆகியோரின் இல்லத்திற்கு சென்று இருந்தார். பட்டியலினத்தவரின் உணவு பழக்க வழக்கங்கள் பற்றி கேட்டறிந்து கலந்துரையாடிய ராகுல் காந்தி, அவருடன் இணைந்து சமையல் வேலைகளில் உதவி செய்ததோடு ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தினார்.

இந்நிலையில், ராகுல் காந்தி இது தொடர்பாக வீடியோ ஒன்றை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், இன்றும் தலித் சமூக மக்கள் சமையலறை பற்றி வெகு சிலருக்கே தெரியும். தலித் சமூக மக்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. அவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள், எப்படி சமைக்கிறார்கள் என்பதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில், அஜய் துக்காராம் மற்றும், அஞ்சனா துக்காராம் உடன் மதிய உணவை சமைத்து சாப்பிட்டேன்.

அவரது வீட்டிற்கு என்னை மரியாதையுடன் அழைத்து, சமையலறையில் அவருக்கு உதவ எனக்கு வாய்ப்பளித்தார். நாங்கள் இருவரும் சேர்ந்து ‘ஹர்ப்யாச்சி பாஜி’ என்ற கறியை தயாரித்தோம். பட்டியலினத்தவர்களின் உணவு பழக்க வழக்கங்கள் குறித்த விழிப்புணவு குறைவாக இருப்பதாகவும், அவர்களின் கலாச்சாரத்தை ஆவணப்படுத்தபட வேண்டியதும், அவசியம் குறித்தும் கலந்துரையானேன். பட்டியலினத்தவர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு அரசியல் சாசனம், பங்களிப்பையும் உரிமைகளையும் வழங்கி இருப்பதாக தெரிவித்த ராகுல் காந்தி, அந்த அரசியல் சாசனத்தை தாங்கள் பாதுகாப்போம் என பதிவிட்டுள்ளார்.

ராகுல் காந்தி: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், ரூ. 1200-க்கு விற்கப்படும் எரிவாயு சிலிண்டர் ரூ. 500-க்கு தருவோம்…!

அதானியின் முத்ரா துறைமுகத்தில் கிலோ கணக்கில் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வருகின்ற 5-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இறுதிக் கட்டப் பிரசாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், ஜஜ்ஜார் மாவட்டத்தில் உள்ள பஹதுர்கர் பகுதிக்கு வருகை தந்த ராகுல் காந்தி, வாகனப் பேரணியில் ஈடுபட்டு காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். தொடர்ந்து, பஹதுர்கரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார்.

அப்போது, பணமதிப்பிழப்பு மற்றும் தவறான ஜிஎஸ்டியை அமல்படுத்தி வங்கிகளின் கதவுகளை மூடிவிட்டார் நரேந்திர மோடி. அவர் அதானி-அம்பானிக்கு மட்டுமே நன்மை செய்ய விரும்புகிறார். இன்று 2-3 கோடீஸ்வரர்களுக்கு உதவுவதற்காக அரசை நடத்துகிறது பாஜக என்பது நாடு முழுவதும் தெரியும். ஹரியாணாவில் இருந்து அதிகமானோர் ராணுவத்தில் சேருவார்கள். அக்னீவீர் திட்டத்தை அறிமுகம் செய்து அதனை மோடி முடக்கிவிட்டார்.

அக்னிவீர் என்பது ராணுவ வீரர்களின் தியாகி அந்தஸ்தையும், ஓய்வூதியத்தையும் திருடும் திட்டமாக உள்ளது. அனைவருக்கும் போதைப் பொருள் பிரச்சினை இருப்பது தெரியும். நான் மோடியிடம் ஒன்று கேட்கிறேன். அதானியின் முத்ரா துறைமுகத்தில் கிலோ கணக்கில் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?.

நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், ரூ. 1200-க்கு விற்கப்படும் எரிவாயு சிலிண்டர் ரூ. 500-க்கு தருவோம். ஹரியாணா விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையையும் வழங்குவோம். இந்தியாவில் உள்ள தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஏழை மக்களுக்கு கிடைக்கும் அனைத்து அரசியலமைப்பு தருவது. இந்தியாவின் அனைத்து குடிமக்களும் சமம் என்று அரசியலமைப்பில் எழுதப்பட்டுள்ளது.

ஆனால், கோடீஸ்வரர்களின் கோடிக்கணக்கான ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்யும் மோடி, பெண்கள் மற்றும் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யவில்லை என்றால், அது அரசியலமைப்பின் மீதான தாக்குதலாகும்” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி கேள்வி: அதானியின் முத்ரா துறைமுகத்தில் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது..!?

ஹரியானா பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி…! பிரதமர் நரேந்திர மோடியின் கடவுள் அதானி..!

ஹரியானா சட்டபேரவை தேர்தலையொட்டி, அம்பாலா, நாராயண்கார் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது,‘‘ காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கொள்கை ரீதியான மோதல் நடக்கிறது. ஒரு புறம் நீதி, இன்னொருபுறம் அநீதி. மோடி தலைமையிலான பாஜக அரசு தொழிலதிபர்களுக்காக வேலை பார்க்கிறது. சாமானியர்கள் வாழ்வதற்கே போராடும் போது அதானியின் வங்கி கணக்கில் சுனாமி போல் பணம் கொட்டி வருகிறது. சாமானிய மக்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் புயல் போல் வெளியேறுகிறது.

அரசின் பாதுகாப்பு பட்ஜெட்டில் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் அதானிக்கு செல்கிறது. பதிலுக்கு மோடியும், பாஜகவும் அதானியிடம் இருந்து முழு ஆதரவைப் பெறுகின்றன. அதானி தனது நண்பர் மோடியின் முகத்தை 24 மணி நேரமும் பல செய்தி சேனல்களில் காட்டுகிறார். பிரதமர் மோடியின் கடவுள் அதானி. அதானி என்ன சொன்னாலும் மோடி செய்கிறார்.

மும்பை விமான நிலையம் வேண்டும், இமாச்சலப் பிரதேசத்தில் ஆப்பிள் வணிகம் வேண்டும், காஷ்மீரில் ஆப்பிள் – வால்நட் வணிகம் தேவை, விவசாயிகளின் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தேவை என அதானி எதையெல்லாம் கேட்டாரோ அவை அனைத்தையும் அவருக்கு மோடி தருகிறார்’’ என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

ராகுல் காந்தி: ஏழைகளின் பணம் பணக்காரர்கள் வசம் செல்ல ‘சக்கரவியூகம்’ அமைக்கப்படுள்ளது..!

ஹரியானா சட்டபேரவை தேர்தலையொட்டி, குருக்ஷேத்திரம் தானேசரில் நடந்த பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது,‘‘ ஏழைகளின் பணம் ஒரு சில பணக்காரர்கள் வசம் செல்ல வசதியாக மகாபாரதத்தில் உள்ள ‘சக்கரவியூகம்’ போன்றே தற்போது ‘சக்கரவியூகம்’ உருவாக்கப்பட்டு, அதற்குப் பின்னால் பிரதமர் மோடி, அமித்ஷா, அதானி, அம்பானி, தோவல், மோகன் பகவத் ஆகியோர் இருக்கிறார்கள்.

இந்த நாட்டின் ஏழை மக்களின் பணம் 20 முதல் 25 பில்லியனர்களின் கைகளுக்குச் செல்ல வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். ஒரு சில கோடீஸ்வரர்கள் மகிழ்ச்சியாக வாழவும், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பசியுடன் இருக்கும் இந்தியா எங்களுக்கு வேண்டாம்.

இந்த நிலை தொடர விட மாட்டோம், இதை மாற்ற, இந்த அமித் ஷா-மோடியின் சக்கரவியூகத்தை உடைக்க வேண்டும். நான் மோடியிடம் இந்தியாவின் இளைஞர்கள் அபிமன்யு அல்ல, அவர்கள் அர்ஜுனன்கள். அவர்கள் உங்கள் சக்கரவியூகத்தை இரண்டே நிமிடங்களில் உடைத்துவிடுவார்கள் என்று சொன்னேன்’ என ராகுல் காந்தி பேசினார்.

ராகுல் காந்தி: சாமானியர்கள் வாழ்வதற்கே போராட்டம்..! அதானியின் வங்கி கணக்கில் சுனாமி போல் பணம் கொடுக்கிறது..!

ஹரியானா சட்டபேரவை தேர்தலையொட்டி, அம்பாலா, நாராயண்கார் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது,‘‘ காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கொள்கை ரீதியான மோதல் நடக்கிறது. ஒரு புறம் நீதி, இன்னொருபுறம் அநீதி. மோடி தலைமையிலான பாஜக அரசு தொழிலதிபர்களுக்காக வேலை பார்க்கிறது. சாமானியர்கள் வாழ்வதற்கே போராடும் போது அதானியின் வங்கி கணக்கில் சுனாமி போல் பணம் கொட்டி வருகிறது. சாமானிய மக்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் புயல் போல் வெளியேறுகிறது.

அரசின் பாதுகாப்பு பட்ஜெட்டில் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் அதானிக்கு செல்கிறது. பதிலுக்கு மோடியும், பாஜகவும் அதானியிடம் இருந்து முழு ஆதரவைப் பெறுகின்றன. அதானி தனது நண்பர் மோடியின் முகத்தை 24 மணி நேரமும் பல செய்தி சேனல்களில் காட்டுகிறார். பிரதமர் மோடியின் கடவுள் அதானி. அதானி என்ன சொன்னாலும் மோடி செய்கிறார்.

மும்பை விமான நிலையம் வேண்டும், இமாச்சலப் பிரதேசத்தில் ஆப்பிள் வணிகம் வேண்டும், காஷ்மீரில் ஆப்பிள் – வால்நட் வணிகம் தேவை, விவசாயிகளின் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தேவை என அதானி எதையெல்லாம் கேட்டாரோ அவை அனைத்தையும் அவருக்கு மோடி தருகிறார்’’ என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

Rahul Gandhi: பங்குச்சந்தையில் சிறு முதலீட்டாளர்கள் பணத்தில் லாபம் பார்த்தவர்கள் யார் யார்?

இந்திய பங்குச்சந்தைகள் (SEBI) தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையிலும், கடந்த 3 ஆண்டில் சிறு பங்குமுதலீட்டாளர்கள் எப் அண்ட் ஓ வர்த்தகத்தில் ரூ1.8 லட்சம் கோடியை இழந்துள்ளனர். இதை வைத்து பெரு நிறுவனங்கள் சில லாபம் பார்த்துள்ளன. அவ்வாறு லாபம் பார்த்தவர்கள் யார் யார் என்ற பட்டியலை SEBI பகிரங்கமாக வெளியிட வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்திய பங்கு பரிவர்த்னை வாரியம் (SEBI) சமீபத்தில் வெளியிட்ட புள்ளி விவரத்தில், ‘‘கடந்த 2023-24 நிதியாண்டில் பங்குச்சந்தையில் எப் அண்ட் ஓ ஊக வணிகத்தில் முதலீடு செய்த 73 லட்சம் சிறு முதலீட்டாளர்கள், அதாவது 91 சதவீதம் பேர், பணத்தை இழந்துள்ளனர்.

அதாவது, ஒருவருக்கு தலா ரூ1.2 லட்சம் வீதம் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோல் 2021-22 முதல் 2023-24 வரையிலான 3 நிதியாண்டுகளில் மட்டும் ஒரு கோடிக்கும் அதிகமான சில்லறை பங்கு முதலீட்டாளர்கள் தலா ரூ2 லட்சம் வீதம் இழந்துள்ளனர். இதன்படி இந்த வர்த்தகத்தில் இவர்களுக்கு ஏற்பட்டுள்ள மொத்த இழப்பு ரூ1.8 லட்சம் கோடி’’ என தெரிவித்துள்ளது. பொதுவாக ஊக வணிகத்தில், பணம் இழப்பு மிக அதிகமாக இருக்கும்.

ஆனால், ஒரு ஒப்பந்தம் (ஆப்ஷன்) வாங்கும்போது அதன் எதிர்கால விலையை சரியாக ஊகிப்பவர்கள் மட்டுமே லாபம் அடைகின்றனர். இவ்வாறு ஊகிக்க முடிந்த பெரிய நிறுவனங்கள், பெரும் புள்ளிகள் சிலர் லாபம் அடைந்துள்ளதாக கருதப்படுகிறது. இது குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பங்குகளின் விலையை முன்பே ஊகித்து செய்யப்படும் எப் அண்ட் ஓ வணிகம் கடந்த 5 ஆண்டுகளில் 45 மடங்கிற்கு மேல் வளர்ச்சி பெற்றுள்ளது.

ஆனால் இந்த வணிகத்தில் ஈடுபட்ட 90 சதவீத சிறு முதலீட்டாளர்கள் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.1.8 லட்சம் கோடியை இழந்துள்ளனர். ஆனால் இவர்களின் முதலீட்டால் லாபம் பார்த்த பெரும் புள்ளிகளின் பெயர்களை SEBI பகிரங்கமாக வெளியிட வேண்டும்’ என ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.