உலக அளவில் கச்சா எண்ணெய் விலை சரிவு: பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.14 குறைக்க அன்புமணி வலியுறுத்தல்..!

உலக அளவில் தேவை குறைந்திருப்பதன் மூலம் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய நிலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.13.60, ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.13.82 குறைக்கப்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்திருக்கிறது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 68 அமெரிக்க டாலராக குறைந்திருக்கும் நிலையில், அதற்கு இணையாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளைக் குறைக்க இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

இந்தியாவில் கடைசியாக கடந்த மார்ச் 14-ஆம் நாள் பெட்ரோல், டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டது. அப்போது உலக சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 89.94 டாலராக இருந்தது. அப்போது இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்க விலை ரூ. 55.69 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.56.45 ஆகவும் இருந்தது. இப்போது கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் 68 டாலராக குறைந்து விட்ட நிலையில், ஒரு லிட்டர் பெட்ரோல், டீசலின் அடக்கவிலை முறையே ரூ.42.09, ரூ.42.63 ஆக குறைந்திருக்கிறது.

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கும் போதெல்லாம் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தும் எண்ணெய் நிறுவனங்கள், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும் போதும் அதன் பயன்களை மக்களுக்கு வழங்க வேண்டும். கச்சா எண்ணெய் விலை அதிகரித்த போது, சில காலம் பெட்ரோல், டீசல் விலைகள் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தவில்லை என்பது உண்மை தான். ஆனால், அதனால் ஏற்பட்ட இழப்பை விட, அதிக லாபத்தை கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்த காலத்தில் பெட்ரோல், டீசலை அதிக விலைக்கு விற்றதன் மூலம் எண்ணெய் நிறுவனங்கள் ஈட்டியுள்ளன.

உலக அளவில் தேவை குறைந்திருப்பதன் மூலம் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய நிலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.13.60, ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.13.82 குறைக்கப்பட வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கடந்த பல ஆண்டுகளாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு ஒரளவாவது நிவாரணம் வழங்கும் வகையில் பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முன்வர வேண்டும்” என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பெட்ரோல் விலை ரூ.120-ஐ கடந்து விற்பனை…! மக்கள் வேதனை ..!

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை மத்திய அரசு நிர்ணயித்து வந்த நிலையில், திடீரென எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ள மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதன்விளைவாக தற்போது, சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் தினசரி பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மேலும் சட்டீஸ்கர், மகாராஷ்டிராவுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் மத்திய பிரதேசத்தின் எல்லைப் பகுதி மாவட்டமான பாலகாட்டிலுள்ள அனுப்பூரில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் நேற்று லிட்டருக்கு 36 காசுகள் விதமும், 37 காசுகள் விதமும் அதிகரித்து இதனைத்தொடர்ந்து பெட்ரோல் விலை ரூ.120.40 ஆகவும், டீசல் விலை ரூ.109.17 ஆகவும் விற்கப்பட்டது. இதனால் மத்தியப் பிரதேசமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசை கண்டித்து தி.மு.க., கூட்டணி கட்சிகள் நாடு முழுவதும் போராட்டம்

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் டந்த மாதம் 20-ந் தேதி எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் காணொலிக்காட்சி வழியாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மத்தியில் ஆளும் பாஜக அரசு பெட்ரோல் – டீசல் – சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்தும், 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பொருளாதார சீரழிவு, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், தனியார் மயமாக்கல், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது குறித்தும், பிகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.


இந்தக் கூட்டத்தில், மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து நாடு முழுவதும் செப்டம்பர் 20-ந் தேதி முதல் செப்டம்பர் 30-ந் தேதி வரை பல்வேறு போராட்டங்களை நடத்துவது என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, தி.மு.க. தலைமையிலான அனைத்து கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று காலை 10 மணிக்கு தமிழகம் முழுவதும் கண்டன போராட்டம் நடைபெற்று கொண்டுள்ளது.

அதன்வரிசையில் வேளச்சேரி மேற்கு பகுதி செயலாளர் சகோதரர் அரிமா SU.SEKAR அவர்கள் முன்னிலையில் 178-வது வட்டக் கழக #செயலாளர் சேவை மாமணி அண்ணன் K.N.DAMOTHARAN அவர்கள் தலைமையில் கழக உடன்பிறப்புகள் அனைவரும் வட்டக் கழக பகுதிகளில் ஆங்காங்கே வீடுகள்தோறும் கழக கொடியேற்றி ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில் மக்கள் விரோத மற்றும் ஜனநாயக விரோத போக்கில் மத்திய அரசு செயல்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பினர். வேளாண் சட்டத்தை திரும்ப பெறவும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை குறைக்கவும் கோஷமிட்டனர்.

நிர்மலா சீதாராமன்: ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டுவரக் கூடாது என அனைத்து உறுப்பினர்களும் கருத்து

45-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில்  நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நிர்மலா சீதாராமன் கூறியது  ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டுவரக் கூடாது என அனைத்து உறுப்பினர்களும் கருத்து தெரிவித்துள்ளனர் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து மக்கள் நிதி மய்யம் போராட்டம்

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் நிதி மய்யம் மத்திய மாநில அரசுகளின் வரி பயங்கரவாதத்தினால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை நாளுக்கு நாள் உயர்கிறது. மக்களின் வயிற்றில் அடிக்கும் இந்த அராஜகப் போக்கினைக் கண்டித்து நேற்று  தமிழகமெங்கும் மநீம போராட்டத்தில் ஈடுபட்டது.



கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து இறுதி சடங்கு செய்வது பெண்கள் ஒப்பாரி

 

பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்து மதுரை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மேலப்பொன்னகரம் பகுதி குழு சார்பில் தலையில் முக்காடு போட்டு பெண்கள் ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடைபெற்றது.

விலை உயர்வை கண்டிக்கும் வகையில், கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து இறுதி சடங்கு செய்வது போன்றும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தென்காசி மாவட்டம் சிவகிரியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், தமிழக மக்களுக்கு தட்டுப்பாடின்றி தடுப்பூசி கிடைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.