பழனிசாமி கேள்வி: தொப்புள் கொடி அறுத்த இர்பான் விவகாரத்தில் வானுக்கும் பூமிக்கும் குதித்த மா.சு.! இப்போ என்னாச்சு?

குழந்தையின் தொப்புள் கொடியை அறுத்த யூ டியூபர் மீது உரிய நடவடிக்கை எடுப்பேன்’ என்று முதலில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், அந்த நபர் வாரிசு அமைச்சர் உதயநிதியுடன் அமர்ந்து சாப்பிடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளிவந்தவுடன் அப்படியே பம்மி பதுங்குவதும், இது கொலைக் குற்றமா? என்று பத்திரிகையாளர்களிடமே கேள்வி கேட்பதும் பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தமிழகத்தில் தற்போது நடைபெறும் நிர்வாகத் திறனற்ற திரு. ஸ்டாலினின் விடியா தி.மு.க. ஆட்சியில், மக்கள் நல்வாழ்வுத் துறை, மக்களின் உயிர் காக்கும் துறையா? அல்லது மக்களின் உயிரைப் பறிக்கும் துறையா? என்ற சந்தேகம் அப்பாவி மக்களின் மனதில் எழுந்துள்ளது.

அரசு மருத்துவமனைகளுக்குச் செல்லும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு கடந்த 42 மாத கால திமுக ஆட்சியில் நடைபெறும் கொடுமைகள் கணக்கிலடங்கா! சென்னை, வியாசர்பாடி கன்னிகாபுரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி திரு. ரவி என்பவரின் 17 வயது மகளும், கால்பந்து வீராங்கனையுமான கல்லூரி மாணவி பிரியா, கால் தசைப் பிடிப்புக்காக பெரியார் நகர் மருத்துவமனைக்கு 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சிகிச்சைக்காக சென்ற போது, அரசு மருத்துவப் பணியாளர்களின் அலட்சியத்தாலும், கவனக் குறைவாலும் அவரது வலது காலை இழந்ததோடு, அவரது உயிரையும் பறிகொடுத்தது இன்னும் தமிழக மக்களின் மனதில் இருந்து அகலவில்லை.

சென்னை, ஓட்டேரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்த திரு. கோதண்டபாணி அவர்களின் 7 வயது பெண் குழந்தைக்கு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்ததால், வலது கால் ஊனம் ஏற்பட்டதாகவும், பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், தலைமைச் செயலகத்தில் தனது மகளுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட அவலமும் நடந்தேறியது.

2023-ஜூன் மாதம் கடலூர் மாவட்டம், கோதண்டராமபுரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி திரு. கருணாகரன், சளி தொல்லையால் அவதியுற்ற தனது மகள் சாதனாவை கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, மருத்துவப் பணியாளர்களின் அலட்சியத்தால் சளிக்கு ஊசி போடுவதற்கு பதிலாக, இரண்டு முறை நாய் கடி ஊசி போட்ட அவலமும் நடந்தேறியது.

இரத்த தானத்தின் அவசியத்தை வலியுறுத்த எத்தனையோ வழிமுறைகள் இருக்கையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் இரத்த தானத்தின் அவசியத்தை வலியுறுத்த, விளம்பர மோகத்துடன் மதுரையில் 10 கி.மீ. தூரத்திற்கு குருதிதான விழிப்புணர்வு மாரத்தான்-ஐ விடியா திமுக ஆட்சியின் சுகாதாரத் துறை அமைச்சர் நடத்தியபோது, கண்டிப்பாக மாணவர்கள் இதில் கலந்துகொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறை வற்புறுத்தியதாகவும், அதனால் மாரத்தான் ஓட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்களில், மதுரை தியாகராயர் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மாணவர் தினேஷ் மயங்கி விழுந்து 23.7.2023 அன்று உயிரிழந்த சம்பவம்.

14.11.2023 நாளிட்ட எனது அறிக்கையில், சென்னை மாநகர ஆணையாளர், அடிபட்ட தனது உதவியாளருக்கு (திரு. ராமன்) மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக, 24 மணி நேரமும் செயல்பட வேண்டிய சென்னை மாநகராட்சி மருத்துவமனைக்குச் சென்றபோது, அங்கு ஒரு மருத்துவர்கூட இல்லாத நிலையில், தனியார் மருத்துவமனையில் தனது உதவியாளருக்கு மருத்துவம் பார்த்துள்ளார்.

மேலும், அவரை மேல் சிகிச்சைக்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்ப அவசரக் கட்டுப்பாட்டு அறை மூலம் ஆம்புலன்ஸை அழைத்தும், மிகுந்த காலதாமதத்திற்குப் பின்னரே ஆம்புலன்ஸ் வந்துள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளின் செயல்படாத தன்மைக்கு இது ஒரு சிறந்த உதாரணமாக உள்ளது. இந்த விடியா திமுக ஆட்சியில் பல ஆண்டுகளாக துறையின் உயர் அதிகாரியாக இருந்த அவரது உதவியாளருக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண மக்களின் நிலை என்ன?

அதே அறிக்கையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் பரம்பூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சரும், கழக சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சி. விஜயபாஸ்கர் அவர்கள் ஆய்வுக்காகச் சென்றபோது, அங்கு அரசு மருத்துவர்கள் இல்லாததால் விபத்தில் காயமடைந்த நோயாளி பலமணி நேரம் காயத்துடன் அவதியுற்றதையடுத்து, டாக்டர் விஜயபாஸ்கர், தான் ஒரு மருத்துவர் என்ற முறையில் விபத்தில் காயமடைந்தவருக்கு முதலுதவி அளித்து ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிகழ்வும் நடைபெற்றுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்றரை வயது பெண் குழந்தை இதய நோயால் பாதிக்கப்பட்டு சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பெண் குழந்தையின் வலது கை நீக்கப்பட்டதுடன், உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகி கடைசியில் தங்கள் குழந்தையை இழந்துவிட்டோம் என்று அந்தக் குழந்தையின் தாய் கண்ணீருடன் பேட்டி அளித்தது அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்துள்ளன.

மேலும், 2023 தீபாவளி அன்று சிவகங்கை அரசு மருத்துவமனையில் வெடி விபத்தில் காயமடைந்த சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லாமல், மருத்துவப் பணியாளர்கள் சிகிச்சை அளித்த நிகழ்வும் ஊடகங்களில் வெளிவந்துள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரிரு நாட்களுக்கு முன்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் இறந்த குழந்தையின் உடல் ஈவு இரக்கம் இல்லாமல் கட்டைப் பையில் வைத்துக் கொடுத்த அவலம் அரங்கேறியுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதற்கு முன்பு ஒருமுறை அட்டைப் பெட்டியில் வைத்து உயிரிழந்த பிஞ்சுக் குழந்தையின் உடல் கொடுக்கப்பட்டது.

அப்போதே இதற்கு நான் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தேன். கடந்த மாதம் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவர்கள் தங்குவதற்கான விடுதியை பணிகள் முடிந்தும், பயன்பாட்டிற்கு திறந்து வைக்காத காரணத்தால், சென்ற மாதம் பணி முடித்து 30 கி.மீ. தூரமுள்ள தனது வீட்டில் ஒய்வெடுக்கச் சென்ற மருத்துவர் மனோரஞ்சிதன் சாலை விபத்தில் தனது இன்னுயிரை இழந்துள்ளார். இதற்குக் காரணம் பணிகள் முடிந்தும், மருத்துவர்கள் தங்கும் விடுதியை இந்த அரசு திறக்காததே என்று மருத்துவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இப்படி பல நிகழ்வுகளை அடுக்கிக்கொண்டே போகலாம். கடந்த வாரம் கிண்டி மருத்துவமனையில் நோயாளியின் உதவியாளர் மருத்துவரைத் தாக்கிய சம்பவமும், அதைத் தொடர்ந்து மருத்துவர்கள் மற்றும் அரசு மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி ஆர்ப்பாட்டமும் நடந்தேறியது. இந்நிலையில், அடுத்த நாள் சிகிச்சைக்கு வந்த (விக்னேஷ்) நோயாளிக்கு உரிய சிகிச்சை அளிக்காத காரணத்தால் அவர் உயிரிழந்த சோகமும், அதைத் தொடர்ந்து, பாதிப்படைந்த குடும்பத்தினரின் அழுகுரல் காண்போரை கண் கலங்க வைத்தது.

மருத்துவர்களின் கோரிக்கையை காலத்தே பரிசீலித்திருந்தால், இந்த நோயாளியின் இறப்பை இந்த அரசு தடுத்திருக்க முடியும். மருத்துவர்கள் மீதான தாக்குதல் அடிக்கடி நிகழ்ந்து வரும் நிலையில், அவ்வப்போது மருத்துவர்கள் அரசிடம் எடுத்துக் கூறிய நிலையில், மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தப்படுவதால்தான் மருத்துவர்கள் பொங்கி எழுந்ததாகத் தெரிவிக்கின்றனர். எனவே, மருத்துவர்களின் பாதுகாப்புக்கு இந்த அரசு உரிய உத்தரவாதத்தை அளித்திருந்தால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது. 2021-ல் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து மருத்துவத் துறையில் தொடர்ந்து நடக்கும் பல விரும்பத் தகாத நிகழ்வுகளை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் அடிக்கடி இந்த அரசின் கவனத்திற்கு சுட்டிக்காட்டி வரும் நிலையில், அவைகளைத் தீர்த்துவைப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல், எனக்கு முரண்பாடான பதில்களை அளிப்பதிலேயே இந்தத் துறையை கவனிக்கும் மந்திரி மா. சுப்பிரமணியம் குறியாக இருந்து, திறமையற்ற முறையில் செயல்படுகிறாரே தவிர, மக்களின் உயிரைக் காக்கும் பணியில் அக்கறையின்றி இருப்பது வேதனையான ஒன்றாகும்.

சட்ட விரோதமாக செயல்பட்டு, ‘குழந்தையின் தொப்புள் கொடியை அறுத்த யூ டியூபர் மீது உரிய நடவடிக்கை எடுப்பேன்’ என்று முதலில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், அந்த நபர் வாரிசு அமைச்சர் உதயநிதியுடன் அமர்ந்து சாப்பிடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளிவந்தவுடன் அப்படியே பம்மி பதுங்குவதும், இது கொலைக் குற்றமா? என்று பத்திரிகையாளர்களிடமே கேள்வி கேட்பதும் பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே இந்த யூ டியூபர் இர்ஃபான், குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்தியதற்கும் எந்தவிதமான நடவடிக்கையும் இந்த அரசு எடுக்கவில்லை என்பது புரியாத புதிர்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் சாதனைத் துறையாக விளங்கிய மக்கள் நல்வாழ்வுத் துறை, திரு. ஸ்டாலினின் விடியா திமுக ஆட்சியில் சர்ச்சைக்குரிய துறையாக மாறி, நோயாளிகளின் உயிருடன் விளையாடுவது கடும் கண்டனத்திற்குரியது. தவறிழைத்தவர்கள் சாமான்ய மக்களாக இருந்தால் அவர்களுக்கு சட்டத்தை தீவிரமாக கடைபிடிப்பதும், உச்ச குடும்பத்திற்கு நெருக்கமானவர்களாக இருந்தால் சட்டத்தை காற்றில் பறக்கவிடுவதுமாக, மக்களைக் காக்கும் மருத்துவத் துறையை சீரழித்து, முதலமைச்சரின் குடும்பத்துக்கு கொத்தடிமை வேலை பார்ப்பவர்கள் மட்டுமே மந்திரிகளாக செயல்படுவார்கள் என்று எழுதப்படாத விதி ஒன்றை பொம்மை முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் உருவாக்கி செயல்படுவது சர்வாதிகாரத்தின் உச்சம். தமிழக மக்கள் பொறுமைசாலிகள் மட்டுமல்ல – திறமைசாலிகள்… நேரம் வரும் போது இந்த அராஜக ஆட்சியாளர்களை ஓட ஓட விரட்டி அடிக்கப்போவது திண்ணம்.” என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

H .ராஜா: அதிமுகவை பாஜகவோடு வைத்துக்கொள் என நாங்கள் யாரும் மனு போடவில்லை..!

அதிமுகவை பாஜகவோடு வைத்துக்கொள் என நாங்கள் யாரும் அந்தக் கட்சியை கூட்டணிக்கு வருமாறு மனு செய்யவும் இல்லை என பாஜக மூத்த தலைவர் H. ராஜா தெரிவித்தார்.. புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களின் கேள்விக்கு H. ராஜா பதிலளித்தார். அப்போது, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையைப் பற்றி விமர்சிக்கும் அளவுக்கு மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதியிடம் அரசியல் ஞானம் இல்லை. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அரசு மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதைப் பற்றி மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் பேச மறுக்கிறார்.

தமிழகத்தில் 10 ஆயிரத்து 500 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் போலிகளாகவும், 950 உதவிப் பேராசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணிபுரிவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு பேருந்துகள் கூட தரமானதாக இல்லாததால் மக்கள் அச்சத்துடனேயே பயணிக்க வேண்டியுள்ளது. இவ்வாறாக, தமிழக அரசில் ஒரு துறைகூட திறமையானதாக இல்லை. தமிழக அரசிடம் உள்ள குறைகளை சுட்டிக்காட்டத்தான் எதிர்க்கட்சிகளால் முடியுமே தவிர, அவற்றை சரி செய்ய முடியாது. தமிழக அரசு மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர்.

வரும் தேர்தலில் பாஜகவோடு கூட்டணி இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறி இருக்கிறார். எனில், நாங்கள் யாரும் அந்தக் கட்சியை கூட்டணிக்கு வருமாறு மனு செய்யவும் இல்லை. அவர்களுக்காக காத்திருக்கவும் இல்லை. அதே வேளையில், கூட்டணியைப் பற்றி அகில இந்திய தலைமைதான் முடிவெடுக்கும். அந்த முடிவை செயல்படுத்தும் இடத்தில்தான் மாநில பாஜக உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு மக்களிடம் ஆதரவு இல்லை என்பது வரும் 23-ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவு மூலம் தெரிந்துவிடும்.

தமிழகத்தில் கடந்த கால சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஒரே ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. அதிலும், வெற்றி பெற்ற மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, சட்டப்பேரவைக்குள் செல்ல பயந்து அதையும் ராஜினாமா செய்தார். அதே வேளையில், அதற்கு முன்பு திமுகதான் ஆட்சியில் இருந்தது. ஆகையால், வரும் 2026 தேர்தலில் 200 இடங்களில் வெல்வோம் என்று திமுக கனவு காண்கிறது என H .ராஜா தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலின்: இன்னும் ஒரு ரெய்டு போதும்.. அதிமுகவையே பாஜகவுடன் பழனிசாமி இணைத்து விடுவார்..!

எந்த நேரத்திலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என கூறி வந்த எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் ஐ.டி ரெய்டு நடந்த மறுநாளே ‘தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து பேசிக் கொள்ளலாம்’ எனச் சொல்லிவிட்டார். இன்னும் ஒரு ரெய்டு நடந்தால் போதும்.. அதிமுகவையே பாஜகவுடன் இணைத்தாலும் இணைத்து விடுவார். என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் சென்னை ஆர்.கே.நகர் பகுதியில், எளியோர் எழுச்சி நாள் எனும் பெயரில் 48 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்து மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், “திமுக அரசின் திட்டங்களை மக்கள் கொண்டாடுவதைப் பார்த்து எடப்பாடி பழனிசாமிக்கு கோவம் வருகிறது. வரத்தான் செய்யும். மக்கள் நமது திட்டங்களை கொண்டாடுவதைப் பார்த்து அவருக்கு எரிச்சல் வருகிறது. முதலமைச்சரை மக்கள் வாழ்த்துவதால் எடப்பாடி பழனிசாமிக்கு வயிற்றெரிச்சல். அரசின் திட்டங்களுக்கு கலைஞர் பெயரை வைப்பது பற்றி எடப்பாடி பழனிசாமி கேள்வி கேட்கிறார். தனது 96-வது வயது வரை தமிழ்நாட்டுக்காக, தமிழ்நாட்டு மக்களுக்காக ஓயாது உழைத்த கலைஞர் பெயரை மக்கள் நல திட்டங்களுக்கு சூட்டாமல் வேறு யார் பெயரை வைப்பது?

கூவத்தூரில் ஊர்ந்து போன கரப்பான் பூச்சி பெயரை வைக்கலாமா? இல்லை மறைந்த தலைவர்கள் பெயர்களையோ வைக்கலாமா? எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் பெயரை வைத்தாலும் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ள மாட்டார். அவருக்கு இப்போது அமித்ஷா, மோடி பெயரை வைக்க வேண்டும்.

எந்த நேரத்திலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என 3 மாதங்களுக்கு முன்பு கூறி வந்த எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் அண்மையில் ஐ.டி ரெய்டு நடந்த மறுநாளே ‘தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து பேசிக் கொள்ளலாம்’ எனச் சொல்லிவிட்டார். இன்னும் ஒரு ரெய்டு நடந்தால் போதும்.. அதிமுகவையே பாஜகவுடன் இணைத்தாலும் இணைத்து விடுவார். அந்தளவுக்குத்தான் இன்றைக்கு அதிமுக நிலைமை இருக்கிறது” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலின் கேள்வி: கலைஞர் பெயரை வைக்காமல் கூவத்தூரில் ஊர்ந்து போன கரப்பான் பூச்சி பெயர் வைக்கலாமா..!?

தனது 96-வது வயது வரை தமிழ்நாட்டுக்காக, தமிழ்நாட்டு மக்களுக்காக ஓயாது உழைத்த கலைஞர் பெயரை மக்கள் நல திட்டங்களுக்கு சூட்டாமல் வேறு யார் பெயரை வைப்பது? கூவத்தூரில் ஊர்ந்து போன கரப்பான் பூச்சி பெயரை வைக்கலாமா? என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை ஆர்.கே.நகரில் சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில், ‘எளியோர் எழுச்சி நாள்’ என்ற பெயரில் இன்று 48 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்த திருமணத்தை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி 48 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தார். இந்த திருமண விழாவில், 48 ஜோடிகளுக்கு தலா ரூ. 25 ஆயிரம் மொய், கட்டில், மெத்தை, பீரோ மற்றும் மிக்சி என 30 வகையான பொருட்கள் அடங்கிய சீர் வரிசைகளும் வழங்கப்பட்டன.

அதைத்தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், “திமுக அரசின் திட்டங்களை மக்கள் கொண்டாடுவதைப் பார்த்து எடப்பாடி பழனிசாமிக்கு கோவம் வருகிறது. வரத்தான் செய்யும். மக்கள் நமது திட்டங்களை கொண்டாடுவதைப் பார்த்து அவருக்கு எரிச்சல் வருகிறது. முதலமைச்சரை மக்கள் வாழ்த்துவதால் எடப்பாடி பழனிசாமிக்கு வயிற்றெரிச்சல். அரசின் திட்டங்களுக்கு கலைஞர் பெயரை வைப்பது பற்றி எடப்பாடி பழனிசாமி கேள்வி கேட்கிறார். தனது 96-வது வயது வரை தமிழ்நாட்டுக்காக, தமிழ்நாட்டு மக்களுக்காக ஓயாது உழைத்த கலைஞர் பெயரை மக்கள் நல திட்டங்களுக்கு சூட்டாமல் வேறு யார் பெயரை வைப்பது?

கூவத்தூரில் ஊர்ந்து போன கரப்பான் பூச்சி பெயரை வைக்கலாமா? இல்லை மறைந்த தலைவர்கள் பெயர்களையோ வைக்கலாமா? எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் பெயரை வைத்தாலும் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ள மாட்டார். அவருக்கு இப்போது அமித்ஷா, மோடி பெயரை வைக்க வேண்டும்.

எந்த நேரத்திலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என 3 மாதங்களுக்கு முன்பு கூறி வந்த எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் அண்மையில் ஐ.டி ரெய்டு நடந்த மறுநாளே ‘தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து பேசிக் கொள்ளலாம்’ எனச் சொல்லிவிட்டார். இன்னும் ஒரு ரெய்டு நடந்தால் போதும்.. அதிமுகவையே பாஜகவுடன் இணைத்தாலும் இணைத்து விடுவார். அந்தளவுக்குத்தான் இன்றைக்கு அதிமுக நிலைமை இருக்கிறது” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

பழனிசாமி: சர்வே பணியில் கல்லூரி மாணவர்கள் யாரும் இறந்தால் அதற்கு தமிழக அரசே முழு பொறுப்பு ..!

மத்திய அரசு, வேளாண் நிலங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றுவதற்கு திட்டமிட்டு, சர்வே செய்திட நிதி ஒதுக்கிய நிலையில், தமிழக அரசு வேளாண் கல்லூரி மாணவர்களை வைத்து இந்தப் பணியை மேற்கொண்ட நிலையில் பாம்புகள், விஷ ஜந்துகள் கடித்த மாணவர்கள் யாரும் இறந்தால் அதற்கு தமிழக அரசே முழு காரணம் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களின் பழனிசாமி பதிலளித்தார். அப்போது, “கடந்த அதிமுக ஆட்சியில் மின்சார கொள்கை திட்டம் வகுக்கப்பட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓலா, டாடா, டெல்டா உள்ளிட்ட பல்வேறு புதிய தொழிற்சாலைகள் கொண்டு வரப்பட்டன.

நீர் மேலாண்மை திட்டங்கள், மருத்துவ கல்லூரி உட்பட புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இது இந்த மாவட்டத்தில் மட்டும் தொடங்கப்பட்ட திட்டங்கள். ஆனால், தமிழக முதல்வர் ஸ்டாலின், அதிமுக ஆட்சியில் எந்தத் திட்டமும் கொண்டு வரப்படவில்லை என்கிற புழுகு மூட்டையை அவிழ்த்து விடுகிறார்.

மத்திய அரசு, வேளாண் நிலங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றுவதற்கு திட்டமிட்டு, சர்வே செய்திட நிதியும் ஒதுக்கியுள்ளது. ஆனால் தமிழக அரசோ வேளாண் கல்லூரி மாணவர்களை வைத்து இந்தப் பணியை மேற்கொள்கிறது. இப்பணியை மேற்கொண்ட மாணவர்களை பாம்புகள், விஷ ஜந்துகள் கடித்துள்ளன. மாணவர்கள் யாரும் இறந்தால் அதற்கு தமிழக அரசே முழு காரணம். இப்பணிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவர்களை பயன்படுத்துவதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என பழனிசாமி தெரிவித்தார்.

திமுக அரசு மக்கள் பணத்தை ஊதாரித்தனமாக செலவிடுகிறது..!

திமுக அரசு மக்கள் பணத்தை ஊதாரித்தனமாக செலவிடுகிறது..!

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த ஆலச்சாம்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் ரூ 72.85 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற பல்வேறு திட்டங்களை அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

பின்னர், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பேசியதாவது: “நான் முதன் முதலில் சேவல் சின்னத்தில் போட்டியிட்ட போது, ஆலச்சாம்பாளையம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் கூடுதலாக பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். மேலும் பேசிய பழனிசாமி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி, வாழ்க்கை சீரழியும் நிலை உருவாகியுள்ளது.

எங்கு பார்த்தாலும் போதைப் பொருள் தங்கு தடையின்றி கிடைக்கிறது. போதைப் பொருள் விற்பனையால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது. இதை பலமுறை தெரிவித்தும், சுட்டிக்காட்டியும் திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போதைப் பொருள் விற்பனையை தடுக்க முடியாத திறமையற்ற பொம்மை முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் இருப்பதால் இளைஞர்களின் எதிர்காலம் வீணாகி வருகிறது.

மேலும் பேசிய பழனிசாமி மக்களின் தேவைகளை நிறைவேற்ற வழியின்றி, கார் பந்தயம் நடத்த திமுக அரசு தயாராகி வருகிறது. கார் பந்தயம் நடத்த இருங்காட்டுக் கோட்டையில் இடம் இருக்கும் போது, அதை விட்டு விட்டு மக்கள் நடமாட்டமும், போக்குவரத்து நெருக்கடியும் மிகுந்த சாலையில், மக்களின் வரிப்பணத்தில் கார் பந்தயம் நடத்த திமுக அரசு துடிக்கிறது. மக்கள் பணத்தை ஊதாரித்தனமாக செலவிடுகிறார்கள். விளையாட்டு துறை அமைச்சர் விளையாட்டாக செய்து கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது என தெரிவித்தார்.