பழனிசாமி: செந்தில் பாலாஜி தான் அமைதிப்படை அமாவாசை..! சேகர் பாபு அரசியல் வியாபாரி…!

ஒரு ஐந்தாண்டு காலத்தில் திமுக, அதிமுக இரண்டு கட்சி சின்னத்திலும் தேர்தலில் நின்ற நபர் செந்தில் பாலாஜி, அவரைப் போன்று தான் அமைச்சர் சேகர் பாபு இவர்கள் இருவரும் அரசியல் வியாபாரிகள் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பு அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, 2026 -ஆம் ஆண்டு நிச்சயம் அதிமுக ஆட்சியை கொண்டு வருவோம். திமுக ஆட்சி முடிவுக்கு வர இன்னும் 13 அமாவாசை தான் என பேசி இருந்தார். இந்த பழனிசாமியின் பேச்சுக்கு செந்தில் பாலாஜி பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர் செந்தில் பாலாஜி தமது எக்ஸ் பக்கத்தில், ‘‘நாம முன்னுக்கு வரணும்னா நாய் என்ன… மனுஷன் என்ன? ஏறி மிதிச்சு போயிட்டே இருக்கணும்’’ ‘அமைதிப்படை’ படத்தில் வரும் டயலாக் இது. அதில் வரும் ‘அமாவாசை’ கேரக்டர் தான் எடப்பாடி பழனிசாமி. பலரை ஏறி மிதித்து, ஊர்ந்து சென்று, பதவியைப் பிடித்த பழனிசாமி, ‘’திமுக ஆட்சிக்கு இன்னும் 13 அமாவாசைதான் இருக்கிறது’’ என பழனிசாமியை செந்தில் பாலாஜி கடுமையாக விமர்சித்து இருந்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சனத்திற்கு, சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தி​யாளர்​களின் கேள்விக்கு பழனிசாமி பதிலளித்தார். அப்போது, செந்தில் பாலாஜிக்கு அமைதிப்படை அமாவாசை என்ற பெயர் பொருத்தமானது. ஐந்து கட்சிக்கு சென்று திமுகவிற்கு வந்துள்ளார். இனிமேல் எந்த கட்சிக்கு செல்வார் என்று தெரியாது. ஒரு ஐந்தாண்டு காலத்தில் திமுக, அதிமுக இரண்டு கட்சி சின்னத்திலும் தேர்தலில் நின்ற நபர் செந்தில் பாலாஜி. இவரைப் போன்று தான் அமைச்சர் சேகர் பாபு பேசி வருகிறார். ஒவ்வொரு மாதமும் அமாவாசை வரும்போது திமுக ஆட்சி காலத்தில் ஆட்சி காலம் கலைந்து கொண்டே இருக்கிறது.

இவர்கள் எல்லாம் அரசியல் வியாபாரிகள். உண்மையான விசுவாசி என்றால் ஒரே கட்சியில் இருக்க வேண்டும். கட்சி ஆரம்பித்த போது அதிமுகவில் சேர்ந்தேன். அந்த கட்சியை நேசித்தேன். அதனால் எனக்கு பொதுச் செயலாளர் என்று அங்கீகாரம் கிடைத்துள்ளது. சந்தர்ப்ப சூழ்நிலையை கருதி வேடந்தாங்கல் பறவைகள் போன்று அவ்வப்போது வந்து செல்பவர்கள். இவர்கள் எல்லாம் எங்களைப் பற்றி பேசுவதற்கு அருகதை கிடையாது என பழனிசாமி பதிலளித்தார்.

செந்தில் பாலாஜி: ‘அமைதிப்படை’ படம் ‘அமாவாசை’ தான் எடப்பாடி பழனிசாமி…!

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் போட்டியிடாமல் புறமுதுகிட்டு ஓடும் 23-ம் புலிகேசி பழனிசாமி என அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார். நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, 2026 -ஆம் ஆண்டு நிச்சயம் அதிமுக ஆட்சியை கொண்டு வருவோம். திமுக ஆட்சி முடிவுக்கு வர இன்னும் 13 அமாவாசை தான் என பேசி இருந்தார். இந்த பழனிசாமியின் பேச்சுக்கு செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி தமது எக்ஸ் பக்கத்தில், ‘‘நாம முன்னுக்கு வரணும்னா நாய் என்ன… மனுஷன் என்ன? ஏறி மிதிச்சு போயிட்டே இருக்கணும்’’ ‘அமைதிப்படை’ படத்தில் வரும் டயலாக் இது. அதில் வரும் ‘அமாவாசை’ கேரக்டர் தான் எடப்பாடி பழனிசாமி. பலரை ஏறி மிதித்து, ஊர்ந்து சென்று, பதவியைப் பிடித்த பழனிசாமி, ‘’திமுக ஆட்சிக்கு இன்னும் 13 அமாவாசைதான் இருக்கிறது’’ என நேற்று பேசியிருக்கிறார். ஆட்சியை இழந்த இந்த நான்கு ஆண்டுக் காலத்தில் அமாவாசையையென உருட்டியே அரசியல் செய்து கொண்டிருக்கிறார் பழனிசாமி.

“2024-ம் வருடம் சட்டசபைக்கும் தேர்தல் வரும். இன்னும் 27 அமாவாசைகள் மட்டுமே ஸ்டாலின் முதலமைச்சராக இருக்க முடியும். மீண்டும் அதிமுக அரசு தமிழகத்தில் அமையும்’’ – 2022 பிப்ரவரி 12. சேலம், தாரமங்கலம். “இன்னும் 28 அமாவாசைகள் மட்டுமே திமுக அரசு ஆட்சியில் இருக்கும்’’ – 2024 ஜனவரி 25. எக்ஸ் தள பதிவு. “திமுக ஆட்சியின் ஆயுட் காலம் 19 அமாவாசைகள்தான். நாட்கள் எண்ணப்படுகின்றன’’ – 2024 செப்டம்பர் 20. X தளப்பதிவு.

இப்படி ஒவ்வொரு அமாவாசைக்கும் பழனிசாமி கணக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார். அமாவாசைகள்தான் கடந்து சென்று கொண்டிருக்கிறன. ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் போட்டியிடாமல் புறமுதுகிட்டு ஓடும் 23-ம் புலிகேசி பழனிசாமி, இன்னும் நூறு பெளர்ணமிகளுக்கு மாண்புமிகு தளபதிதான் முதலமைச்சராக தொடர்வார் என்பதை 2026-ல் உணர்ந்து கொள்வார் என செந்தில் பாலாஜி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

செந்தில் பாலாஜி: ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் புறமுதுகிட்டு ஓடும் 23 -ஆம் புலிகேசி பழனிசாமி..!

செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்பு துறையில் CTR நிர்மல் குமார் புகார்..!

மின் வாரியத்துக்கு டிரான்ஸ்பார்மர்கள் வாங்கியதில் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பை ஏற்படுத்தியதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அதிமுக புகார் தெரிவித்துள்ளது. கடந்த 2011-16 அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை 3 மோசடி வழக்குகளை பதிவு செய்த நிலையில் MP., MLA க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்குகளின் விசாரணை நடைபெற்று வருகின்றது.

இந்த வழக்குகளின் அடிப்படையில், செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக, அவரை அமலாக்கத் துறை 2023 ஜூன் 14-ல் கைது செய்து சிறையிலடைத்தது. 471 நாள் சிறைவாசத்துக்கு பிறகு கடந்த செப்டம்பரில் நிபந்தனை ஜாமீனில் செந்தில் பாலாஜி வெளியே வந்தார். தொடர்ந்து அவருக்கு அவர் ஏற்கனவே வகித்து வந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை துறை ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், அவர் மீது அதிமுக IT பிரிவு இணைச் செயலாளர் CTR நிர்மல் குமார், தமிழக காவல் துறையின் லஞ்ச ஒழிப்புத்துறையில் நேற்று காலை புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், ‘தமிழக மின்சார துறையில் 2021 முதல் 2023-ஆம் ஆண்டு வரை சுமார் 45 ஆயிரத்து 800 டிரான்ஸ்பார்மர்கள் வாங்குவதற்கு ரூ.1,182 கோடிமதிப்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது.

ஆவணங்களை ஆய்வு செய்ததில் மின் மாற்றிகள் வாங்கியதில் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. டெண்டர் விதிகளை பின்பற்றாமல் வெளிப்படைத்தன்மை இல்லாமல் டெண்டர் விடப்பட்டதே இந்த இழப்புக்கு காரணம். மேலும், 26,300 ட்ரான்ஸ் பார்மர்களை வாங்குவதற்கு விடப்பட்ட டெண்டரில், ஒரே விலைக்கு பெரும்பாலான நிறுவனங்கள் விண்ணப்பித்து இருக்கும் நிகழ்வும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

தமிழக மின்வாரியத்தில் நிதி கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்த ஒருவர் மூலமாக, இந்த ஊழல் நடைபெற்றுள்ளது. இந்த டெண்டரை எடுத்த நிறுவனத்துக்கு ரூ.397 கோடி ரூபாய் லாபம் கிடைக்க உதவியுள்ளனர். ஆகையால், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதும் சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என CTR நிர்மல் குமார் அளித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாவட்ட முன்னாள் நிர்வாகி உட்பட 30-க்கும் மேற்பட்ட பாஜகவினர் திமுகவில் இணைந்தனர்..!

தமிழகம் முன்னேறிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையே தேவை என்று உணர்ந்து, பாஜகவை சேர்ந்த, கரூர் மாவட்ட முன்னாள் இளைஞரணி தலைவர் M.K.கணேசமூர்த்தி மற்றும் 30-க்கும் மேற்பட்ட பாஜகவை சேர்ந்த இளைஞர்கள் செந்தில் பாலாஜி முன்னிலையில் தங்களை திமுகவில் இணைந்தனர்.

செந்தில் பாலாஜி: ஸ்டாலின் சொன்ன வார்த்தை..! “உங்கள் கைகளை இறுகப் பற்றிக் கொள்கிறேன்”

“என்னை தாங்கிப் பிடித்துள்ள தாயுமானவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள் கோடி. பல நூறு ஆண்டுகள் பெரும் தவம் செய்தாலும், உலகு காக்கும் உயர் கொள்கைக் கொண்டவரின் இந்த உன்னதமான அன்பை பெற இயலுமோ? உங்கள் கைகளை இறுகப்பற்றிக் கொள்கிறேன்.. வாழ்நாள் முழுமைக்கும்.!” என நெகிழ்ந்து செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு பல கட்ட சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து, கடந்த 26 -ஆம் தேதி சென்னை புழல் சிறையில் இருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். செந்தில் பாலாஜிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி திமுக மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில், ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜிக்கு 471 நாட்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் பிணை கிடைத்திருக்கிறது. எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது. கைது செய்து சிறையிலேயே வைத்து விடுவதால் சகோதரர் செந்தில் பாலாஜியின் உறுதியைக் குலைக்க நினைத்தார்கள். முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன். உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது!” என பதிவிட்டு இருந்தார்.

அதைத்தொடர்ந்து, தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு, மீண்டும் செந்தில் பாலாஜி அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார். முன்னர் செந்தில் பாலாஜி கவனித்து வந்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை இலாகாக்கள் மீண்டும் அவருக்கு வழங்கப்பட்டு உள்ளது. சென்னை தலைமைச் செயலகம் சென்று, கோப்புகளில் கையெழுத்திட்டு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக மீண்டும் பொறுப்புகளை செந்தில் பாலாஜிஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இணைத்தது குறித்தும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், மற்ற 4 புதிய அமைச்சர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தும் அறிக்கை வெளியிட்டார் அந்த அறிக்கையில், செந்தில் பாலாஜியின் தியாகம் குறித்துக் கூறி இருந்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். அதனைக் குறிப்பிட்டு நெகிழ்ந்து போய் முதல்வர் ஸ்டாலினுக்கு செந்தில் பாலாஜி நன்றி தெரிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜி எக்ஸ் பக்கத்தில், “செந்தில்பாலாஜியின் தியாகத்தை நான் வாழ்த்தியதைச் சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவரை வைத்து கழகத்துக்கு எதிரான சதிச் செயல்களைச் செய்ய ஒரு கூட்டம் திட்டமிட்டது. அதற்கு விலையாக 15 மாத சிறையை ஏற்றதுதான் தியாகம். தன்னால் இயக்கத்துக்குக் களங்கம் வரக்கூடாது என்று நினைப்பவர்களால்தான் இந்த இயக்கம் இயங்குகிறது’ என இன்றைய அறிக்கையில் என்னை தாங்கிப் பிடித்துள்ள தாயுமானவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள் கோடி. வாழ்நாள் முழுமைக்கும்: பல நூறு ஆண்டுகள் பெரும் தவம் செய்தாலும், உலகு காக்கும் உயர் கொள்கைக் கொண்டவரின் இந்த உன்னதமான அன்பை பெற இயலுமோ? உங்கள் கைகளை இறுகப் பற்றிக் கொள்கிறேன்.. வாழ்நாள் முழுமைக்கும்.!” என நெகிழ்ந்து செந்தில் பாலாஜி பதிவிட்டுள்ளார்.

தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்: காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டியவரை மந்திரி ஆக்கி கையெழுத்து இட வைக்கலாமா..!?

செந்தில் பாலாஜி காவல் நிலையம் சென்று கையெழுத்திட வேண்டுமென்று வழக்காடு மன்றம் சொன்னவரை மந்திரி ஆக்கி கையெழுத்து இட வைக்கலாமா? என பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் எக்ஸ் பக்கத்தில், செந்தில் பாலாஜி மீது வழக்கு போட்டது தற்போதைய முதல்வர்…. எதிர்க்கட்சியில் இருக்கும் பொழுது துரோகி தன் கட்சிக்கு வந்தவுடன் தியாகியா ?

சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டா சிறை சென்றார். தியாகி என்று கூறுவதற்கு? INDI… கூட்டணி இந்த ஜாமீனை கொண்டாடுகிறது இது ஜாமீன் தானே தவிர விடுதலை அல்ல .

காவல் நிலையம் சென்று கையெழுத்திட வேண்டுமென்று வழக்காடு மன்றம் சொன்னவரை மந்திரி ஆக்கி கையெழுத்து இட வைக்கலாமா? என சிந்திக்கிறது திமுக. முறைகேடு செய்வதில் உறுதியாக இருந்தவரை சிறையில் உறுதியாக இருந்தார் என்று பாராட்டுகிறார் முதல்வர். 471 நாட்கள் சிறையில் வைத்திருந்தது பலமுறை வழக்காடு மன்றத்தினால் ஜாமீன் மறுக்கப்பட்டதனால். மத்திய அரசினால் அல்ல .

எமர்ஜென்சி காலத்தில் கூட இந்த அடக்குமுறை இல்லை என முதல்வர் சொல்கிறார் எமர்ஜென்சி அடக்குமுறை கொண்டு வந்தவரோடு கூட்டணியில் இருந்து கொண்டு. ஆக ஒட்டுமொத்தமாக முறைகேடு வழக்கில் கைதான வரை உறுதியானவர் என்றும் பாராட்டுவது வேடிக்கை என தமிழிசை சவுந்தரராஜன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சீமான் விமர்சனம்: திமுகவில் இருந்தால் தியாகம்…! அடுத்தக் கட்சியில் இருந்தால் அது ஊழல்வாதியா..?

செந்தில் பாலாஜிக்கு எதிராக அதிமுக ஆட்சியில் திமுக தொடர்ந்த வழக்கில்தான், அவர் சிறை சென்று வந்துள்ளார். அவரை சிறைக்கு அனுப்பியதே திமுகதான் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துளார்.

சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது, “நமது நாட்டில் எதுதான் பரபரப்பு இல்லை. லட்டு பரபரப்பு. ஜிலேபி பரபரப்பு. பஞ்சாமிர்தம் பரபரப்பு. ஜாமீன் கிடைப்பது பரபரப்பு, என்று பரபரப்புக்கு பஞ்சமே இல்லை.” என சீமான் பரபரப்பாக பேசினார்.

அப்போது செந்தில் பாலாஜி ஜாமீன் குறித்து முதல்வர் ஸ்டாலின், தியாகம் பெரிது, உறுதி அதனினும் பெரிது என்று கூறியிருப்பது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, “திருடுவது, கமிஷன் வாங்குவது, லஞ்சம் பெறுவது, டாஸ்மாக் சரக்கை கூடுதலாக விலைவைத்து விற்பனை செய்வது, 10 ரூபாயைக் கூட்டி விற்பது, நேரம்காலம் இல்லாமல் விற்பனை செய்வது, கள்ளச்சரக்கு ஓட்டுவது, இவையெல்லாம் தியாகத்தில் வருகிறது. எனவேதான், அவருடைய தியாகத்தைப் போற்றியுள்ளார்.

நாட்டின் விடுதலைக்காக, வ.உ.சி போல சிறையில் செக்கிழுத்தவர்கள், 9-10 ஆண்டுகளாக சிறையில் செத்து மடிந்து, தூக்கில் தொங்கியவர்கள் நினைத்துதான் எனக்கு கோபம் வருகிறது. செந்தில் பாலாஜி பிணையில் வந்ததற்கு பெயர் தியாகம் என்றால், நம் முன்னோர்கள் செய்ததற்கு பெயர் என்ன? இந்த நாட்டில் மணல் அள்ளி விற்பது, மலையைக் குடைந்த விற்பது, சாராயம் காய்ச்சுவது எல்லாம் தியாகத்தில் வருகிறது.

வீரதீர செயல்களில் பெருமைமிக்க செயல்களில் இவையெல்லாம் வருகிறது. இந்த வழக்கை போட்டது யார்? திமுக. அதிமுக ஆட்சியில் திமுக தொடர்ந்த வழக்கில் தான் செந்தில் பாலாஜி சிறை சென்று வந்துள்ளார். எனவே, அவரை சிறைக்கு அனுப்பியவர்களும் திமுகதான். இப்போது ஜாமீனில் வரும்போது, வருக வருக, வீரதீர தியாக செயல் என்று கூறுவதும் திமுகதான்.

திமுகவில் இருந்தால் தியாகம். அடுத்தக் கட்சியில் இருந்தால் அது ஊழல் குற்றச்சாட்டாகிவிடும். அவர் அமைச்சராக எந்த தடையும் இல்லை என்பதால், திமுக அவரை மீண்டும் அமைச்சர் ஆக்குவார்கள். யார் அதிகமாக வசூலித்து கப்பம் கட்டுகிறார்களோ அவர் நல்ல அமைச்சர், அவ்வளவுதான்.” என சீமான் கடுமையான விமர்ச்சித்தார்.

சற்றுநேரத்தில் செந்தில் பாலாஜி விடுதலை..! பிணை உத்தரவாதங்களை ஏற்றது சென்னை முதன்மை அமர்வு..!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை பதிவு செய்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார். தற்போது செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் சார்பில் வழக்கறிஞர் ராம் சங்கர் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதி மன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, ஏ.ஜி.மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து கடந்த ஆகஸ்டு மாதம் 20-ந் தேதி தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.

இதைதொடர்ந்து, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. எப்போது செந்தில் பாலாஜி விடுதலையாகி வருவார் என அவரது ஆதரவாளர்கள் சிறை வாசலில் குவிந்து காத்துக் கிடக்கின்றனர்.

செந்தில் பாலாஜி நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்ட உத்தரவு இன்னும் கிடைக்கவில்லை என்றும், உச்சநீதிமன்ற உத்தரவு நகல் கிடைத்த பிறகு இதில் முடிவு எடுக்கிறேன் என சென்னை முதன்மை அமர்வு நீதிபதி கார்த்திகேயன் தெரிவித்திருந்தார்.

மேலும், வழக்கின் விசாரணையை பிற்பகலுக்கு நீதிபதி கார்த்திகேயன் தள்ளி வைத்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை சற்று நேரம் முன்பு நீதிபதி கார்த்திகேயன் விசாரித்தார். அப்போது, “உச்சநீதிமன்ற தீர்ப்பில் சில குழப்பங்கள் உள்ளன. பிணை உத்தரவாதங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டாம். விசாரணை அதிகாரி முன்பு தாக்கல் செய்யுங்கள்.

பிணை உத்தரவாதங்களை நீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடவில்லை” என நீதிபதி தெரிவித்திருந்தார். அதற்கு, “விசாரணை அதிகாரி முன்பு இந்த நேரத்தில் எப்படி பிணை உத்தரவாதத்தை தாக்கல் செய்ய முடியும் என செந்தில் பாலாஜி தரப்பி தெரிவித்தது. இதனால், செந்தில் பாலாஜி சிறையில் இருந்து ஜாமினில் இன்று வெளியே வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜியின் பிணை உத்தரவாதங்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏற்றது. இரு நபர் பிணை ஏற்கப்பட்டதால் சென்னை புழல் சிறையில் இருந்து சற்றுநேரத்தில் செந்தில் பாலாஜி விடுதலையாகிறார். சிறையில் இருந்து விடுவிக்கும் உத்தரவு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டது.

உச்சநீதிமன்ற தீர்ப்பில் குழப்பம்..! செந்தில் பாலாஜி ஜாமினில் இன்று வெளியே வருவதில் சிக்கல்..!