மோகன் பாகவத்: தலித் மற்றும் நலிவுற்ற மக்களை இந்துக்கள் ஆதரிக்க வேண்டும்..!

மகாராஷ்டிராவின் நாக்பூரிலுள்ள RSS தலைமையகத்தில் நேற்று விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது. இதில் RSS தலைவர் மோகன் பாகவத் பேசுகையில், வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுகின்றனர். அவர்களுக்கு இந்தியா மட்டுமன்றி ஒட்டுமொத்த உலகமும் உதவி செய்ய வேண்டும். கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனை பெண் டாக்டர் உயிரிழப்பு அவமானகரமான செயல். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க நாம் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும்.

தர்மம் என்பது ஒரு மதம் கிடையாது. இது இந்தியாவின் அடையாளம். இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் இடையிலான போரால் உலகளவில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்ற கவலை அதிகரித்து வருகிறது. நாம் பன்முகத்தன்மை வாய்ந்த சமூகத்தில் வாழ்கிறோம். இதில் பிளவு ஏற்படுத்த சிலர் முயற்சி செய்கிறார்கள்.

ஒட்டுமொத்த இந்து சமுதாயத்துக்காகவே வால்மீகியும் ரவிதாஸும் ராமாயணத்தை எழுதினர். இந்த இரு துறவிகளின் பிறந்தநாளையும் ஒன்றுபட்டு கொண்டாடவேண்டும். இதில் பிரிவினையை அனுமதிக்கக்கூடாது. சாதி பிரிவினைகளுக்கு இந்துக்கள் இடம் அளிக்கக்கூடாது. தலித், நலிவுற்ற மக்களை இந்துக்கள் ஆதரிக்க வேண்டும் என மோகன் பாகவத் பேசினார்.

Uddhav Thackeray : பாஜக மற்ற கட்சிகளை உடைப்பது மற்றும் வேட்டையாடுவத்தில் இந்துத்துவா உடன் உடன்படுகிறாரா?

மகாராஷ்டிரா மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தலில் நடைபெற உள்ளது. இதில் பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் என ஒரு கூட்டணியும் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் என ஒரு கூட்டணியாகவும் களம் காண்கின்றன.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே, சரத பவார் கூட்டணிக்கு அமோக வெற்றி பெற்றது. அதேபோல அந்த வெற்றியை சட்டமன்ற தேர்தலிலும் தொடர இந்த கூட்டணி முனைப்புடன் செயல்பாடு வருகின்றது. அதேவேளையில் நாடாளுமன்ற தேர்தலில் அடைந்த தோல்வியை சட்டமன்ற தேர்தல் வெற்றியால் சரிக்கட்ட பாஜக கூட்டணி விரும்புகிறது.

இந்நிலையில் பாஜக தலைவருக்கு அமித் ஷா, எதிர்க்கட்சி தலைவர்களை பிரிக்க உத்தரவிட்டுள்ளார் என உத்தவ் தாக்கர் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக உத்தவ் தாக்கரே கூறுகையில் “சமீபத்திய நாக்பூர் பயணத்தின்போது, அமித் ஷா பூட்டிய அறைக்குள் பாஜக தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது எதிர்க்கட்சி தலைவர்களை பிரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன் என்னையும் சரத் பவாரையும் அரசியலில் ஈடுபடுவதை நிறுத்தவும் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் ஏன் பூட்டிய அறைக்குள் பேசுகிறார்? அவர் இங்கே மக்கள் முன் பேசி வேண்டும்.

உத்தவ் தாக்கரே மற்றும் சரத் பவாரை ஏன் அரசியலில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும். அப்படி என்றால்தான் பாஜகவால் மகாராஷ்டிராவை கொள்கை அடிக்க முடியும். 30 வருடத்திற்கு மேலாக எங்களுடன் கூட்டணியில் இருந்த பாஜக பிரிந்தது. எனினும், சிவசேனா 63 இடங்களில் வெற்றி பெற்றது.

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்ற கட்சிகளை உடைப்பது மற்றும் வேட்டையாடுவது தொடர்பான பாஜகவின் இந்துத்துவா உடன் உடன்படுகிறாரா? என ஆச்சரியப்படுகிறேன். வருகின்ற தேர்தல் அதிகாரத்தை பற்றியது அல்ல. அவை மகாராஷ்டிரா கொள்ளையடிக்கப்படுவதைத் தடுக்க முக்கியமானவை என உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.