ஆப்கானிஸ்தானில் பதவி ஏற்கும் விழாவில் ரஷியா, பாகிஸ்தான், சீனாவுக்கு அழைப்பு

அமெரிக்க படைகள் கடந்த மே மாத இறுதியிலிருந்து ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தொடங்கிய நிலையில் 15-ந் தேதி ஆப்கானிஸ்தான் முழுவதுமாக தலிபான்கள் வசம் வந்தது. இதையடுத்து தாலிபன்களால் கொல்லப்படலாம் என அஞ்சினாரா அதிபர் அஷ்ரப் கனி தப்பிச் சென்றார். இதற்கிடையில் தலிபான்களுக்கு பயந்து ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்கள் அண்டை நாடுகளுக்கு தப்பி செல்ல முயற்சித்து வருகின்றனர். அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை விமானங்கள் மூலமாக பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் இறங்கின.

ஆனால் இதை எல்லாம் கண்டு கொள்ளாமல் தலிபான்கள் ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறார்கள். இதைதொடர்ந்து ஆப்கான் தலைநகர் கந்தகாரில் தலிபான் தலைவர்கள் ஒன்று கூடி பேச்சுவார்த்தை நடத்தினர். ஆப்கானிஸ்தானில் அரசு அமைப்பது இறுதி கட்டத்தில் உள்ளதாகவும், புதிய அரசு பதவி ஏற்கும் விழாவுக்கு பாகிஸ்தான், துருக்கி, கத்தார், ரஷியா, சீனா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு தலிபான்கள் அழைப்பு விடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.