கோடநாடு எஸ்டேட்டில் காவல் பொது ஆய்வாளர் சுதாகர் நேரில் ஆய்வு

நாளுக்குநாள் திடீர், திடீர் திருப்பங்கள் ஏற்பட்டு வரும் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டதோடு, பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளையடித்தது தொடர்பாக சயான் உள்பட 10 பேரை கோத்தகிரி காவல்துறை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் கோடநாடு வழக்கில் சம்பந்தப்பட்டதாக கருதப்படுபவர்களிடம் விசாரணை நடத்தி ரகசிய வாக்குமூலம் பெறப்படுகிறது. இந்நிலையில் ஊட்டியில் நேற்று முன்தினம் காலையில் கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம், மேற்கு மண்டல காவல் பொது ஆய்வாளர் சுதாகர் தலைமையில் சுமார் 2½ மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு, ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டது.மேலும் தற்கொலை செய்து கொண்ட சி.சி.டி.வி. கேமரா ஆபரேட்டர் தினேஷ் குறித்து, அவருடன் பணியாற்றி வந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். இதன் காரணமாக கோடநாடு வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ளது.