அரசு ஊழியர்களுக்கான ஆயுள் காப்பீடு மற்றும் விபத்துக் காப்பீடு கட்டணமின்றி வழங்க தமிழக அரசு ஏற்பாடு

அரசு ஊழியர்களுக்கான ஆயுள் காப்பீடு மற்றும் விபத்துக் காப்பீடு ஆகியவற்றை 7 முன்னோடி வங்கிகள் மூலமாகக் கட்டணமின்றி வழங்க, இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக நமது அரசு ஏற்பாடு செய்துள்ளது! இதற்கான MoU இன்று மேற்கொள்ளப்பட்டது.

சட்டமன்றக் கூட்டத்தொடரில் அறிவித்தபடி, தனிநபர் வங்கிக் கடன், கல்விக்கடன், வீட்டுக்கடன் ஆகியவற்றையும் வட்டிச் சலுகைகளுடன் வழங்கப் பேச்சுவார்த்தை நடத்தி ஏற்பாடு செய்துள்ளோம்!

மேலும், இன்றைய நிகழ்வில்,211.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோவை புறநகர்ப் பகுதியான பிளிச்சியில் கட்டப்படவுள்ள புதிய சிறைச்சாலை – சிறைக்காவலர் குடியிருப்புகள். சென்னை மற்றும் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 457.14 கோடி ரூபாயில் கட்டப்படவுள்ள காவலர் குடியிருப்புகள் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினேன்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு: செப்டம்பர் 6-ந் தேதி காவலர் நாளாக கொண்டாடப்படும்

தமிழ்நாட்டின் அமைதிக்கு காவல்துறைதான் காரணம். அவர்களுக்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம். ஆகையால் அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் செப்டம்பர் 6-ந் தேதி காவலர் நாள் கொண்டாடப்படும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் கடந்த மாதம் 14-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் பட்ஜெட்டும், அதற்கு மறுநாள் வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிறகு இரு பட்ஜெட் மீதான விவாதம் 5 நாட்கள் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக மார்ச் 24-ந் தேதி முதல் சட்டசபைக் கூட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப் பட்டு அதன் மீது விவாதமும் அமைச்சர்களின் பதிலுரையும் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் தமிழக சட்டசபைக் கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று காவல் துறை, தீயணைப்பு மீட்பு பணிகள் துறைக்கான மானியக் கோரிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து இருந்தார். தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, பல்வேறு தடைகளையும் தாண்டிதான் திராவிட மாடல் ஆட்சி சாதித்து வருகிறது. சட்டம் ஒழுங்கு சீர்குலைய இது மணிப்பூரும் அல்ல, காஷ்மீரும் அல்ல.

தமிழ்நாட்டின் அமைதிக்கு காவல்துறைதான் காரணம். அவர்களுக்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம். குற்றச்சம்பவங்களுக்கு உடனடியாக தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதால் அமைதி நிலவுகிறது. குடியிருப்புகளை சுற்றி சந்தேக நடமாட்டம் இருந்தால் காவல்துறையினருக்கு தகவல் கூறுங்கள். ஆண்டுதோறும் செப்டம்பர் 6-ந் தேதி காவலர் நாள் கொண்டாடப்படும்.

காவலர் நாள் கொண்டாடப்படும் தினத்தில் சிறந்த காவலர்களுக்கு பதக்கம் வழங்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் காவலர்களுக்கு மருத்து பரிசோதனை செய்துகொள்ள வழிவகை செய்யப்படும். காவல்துறை சிறப்பாக செயல்பட்டால் மட்டும் போதாது, ஒட்டுமொத்த சமூகமும் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். குற்றம் நடந்த உடன் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கும் நபர்களை பாராட்டுகிறேன் என மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

நரேந்திர மோடிக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி: “நான் காலில் ஊர்ந்து போய் விழுபவனும் அல்ல…நான் அழுது புலம்புபவனும் அல்ல…”

“நாங்கள் நிதி கேட்பது தமிழ்நாட்டு மக்களின் உரிமை… நான் அழுது புலம்புபவனும் அல்ல.. யார் காலில் ஊர்ந்து போய் விழுபவனும் அல்ல என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் பாம்பன் பாலத்தை கடந்த 6-ந் தேதி திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை காங்கிரஸ் – திமுக கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தது.

அப்போது இருந்ததை விடவும் கடந்த 10 ஆண்டுகளில் 3 ஆண்டுகளில் அதிக நிதியை அளித்து இருக்கிறோம். ரயில்வே துறைக்கு மட்டும் பட்ஜெட்டில் 7 மடங்கு நிதியை அதிகரித்து உள்ளோம். இவற்றை செய்த பின்னரும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள். அவர்களால் அழ மட்டுமே முடியும். அவர்கள் அழுதுவிட்டு போகட்டும். அவர்களால் வேறு எதுவும் செய்ய முடியாது என நரேந்திர மோடி பேசி இருந்தார்.

பிரதமர் நரேந்திர மோடி பேசியிருந்த நிலையில், அவரது பேச்சுக்கு மறைமுகமாக மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்து உள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தமிழகத்துக்கு அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வந்திருந்தார்.

அப்போது அவர் பேசுகையில், எவ்வளவு கொடுத்தாலும் இங்கே இருப்பவர்கள் அழுகிறார்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றார். நாங்கள் கேட்பது அழுகை அல்ல, நான் மிகுந்த அடக்கத்துடன் பிரதமருக்கு நினைவுபடுத்த விரும்புவது ஒன்றைத்தான். கையேந்தி நிற்க மாநில அரசுகள் பிச்சைக்காரர்களா என்ன? என்று நீங்கள் சொன்னதை நினைவு படுத்துகிறேன். மத்திய அரசிடம் கையேந்தி நிற்க மாநில அரசுகள் என்ன பிச்சைக்காரர்களா என்று முதலமைச்சராக இருந்தபோது மோடி கேட்டார்.

பிரதமரான உடனேயே மாநிலங்கள் நிதி கேட்டால் அழுவதாக மோடி விமர்சிக்கிறார். மாநிலங்கள் அழுவதாக மோடி கூறுவது எந்த வகையில் நியாயம்? ஆனால், இப்போது மத்திய அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? நீங்கள் கேட்டதையே, இப்போது நாங்கள் கேட்டால் மட்டும் அழுகிறேன் என்பதா? நான் கேட்பது அழுவது அல்ல, தமிழ்நாட்டின் உரிமை. நான் அழுது புலம்புபவனும் அல்ல, ஊர்ந்து சென்று பதவி கேட்பவனும் அல்ல. உறவுக்குக் கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம். தமிழ்நாட்டில் 2026-லும் திராவிட மாடல் ஆட்சிதான் அமையும். டெல்லியின் ஆளுமைக்கு தமிழ்நாடு என்றைக்கும் அடிபணியாது” மு.க.ஸ்டாலின் எனப் பேசினார்.

மு.க.ஸ்டாலின்: “என்னை செயல்பட வைப்பது என்னுடைய எதிரிகள்” என தந்தை பெரியார் சொல்வார்..!

தந்தை பெரியார் அடிக்கடி ஒன்றைச் சொல்வார், “என்னை செயல்பட வைப்பது, என்னுடைய தோழர்கள் அல்ல; என்னுடைய எதிரிகள்” என்று சொல்வார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னையில் திமுக சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று நடைபெற்றது.

இந்த மாநாட்டில் கலந்துகொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “இந்த மாநாட்டின் முக்கியமான நிகழ்ச்சியாக, மாநிலங்களவை உறுப்பினரும், மத்திய முன்னாள் அமைச்சருமான கபில் சிபல், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி – மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம் ஆகியோரைக் கொண்ட, “ஒரே நாடு ஒரு தேர்தல்” என்ற கலந்துரையாடல் ஏற்பாடு செய்து, அவர்களும் தங்களுடைய வாதங்களை அழுத்தமாக வைத்திருக்கிறார்கள். இன்றைய காலக்கட்டத்தில் மிகத் தேவையான உரையாடல் இது.

இந்த மாநாடு வாயிலாக, நான் அனைவருக்கும் சொல்லிக்கொள்ள விரும்புவது, மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பாஜகவை பொறுத்த வரைக்கும், ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே உடை, ஒரே உணவு என்று ஒற்றைப் பண்பாட்டை நோக்கி நாட்டை நகர்த்த பார்க்கிறது. அதற்காகத்தான் ஒரே தேர்தல் என்று கிளம்பி இருக்கிறார்கள். ஒரே அரசு என்ற நிலையை உருவாக்க மாநிலங்களை அழிக்கப் பார்க்கிறார்கள்.

பாஜகவைப் பொறுத்தவரைக்கும் பெரும்பாலும் குறுகிய கால செயல் திட்டமாக இருக்காது. நீண்டகால செயல்திட்டமாகத்தான் இருக்கும். இப்போது நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் என்று சொல்பவர்கள், காலப்போக்கில் நாட்டுக்கே ஒரே தேர்தல்தான் என்று சொல்லும் நிலைமையை உருவாக்க நினைக்கிறார்கள். இது ஒற்றையாட்சிக்குதான் வழிவகுக்கும். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இது, தனிமனிதர் ஒருவரிடம்தான் அதிகாரத்தைக் கொண்டு சென்று சேர்க்கும்.

இது, பாஜக என்ற கட்சிக்கே கூட நல்லதல்ல. இன்றைக்கு பிரதமராக இருக்கும் நரேந்திர மோடியைச் சர்வாதிகாரியாக ஆக்கத்தான் இந்தச் சட்டம் பயன்படும். பாஜகவும், பாஜகவுக்கு மூளையாக இருந்து செயல்படும் அமைப்புகளும் விரிக்கும் வலையில், இன்று அரசியல் காரணங்களுக்காக பாஜகவை ஆதரிக்கும் கூட்டணிக் கட்சிகள் விழுந்துவிடக் கூடாது. இந்தச் சட்டத்தை ஆதரிக்கக் கூடாது என்று இந்தக் கூட்டத்தின் வாயிலாகக் கோரிக்கை வைக்கிறேன். பாஜக ஆட்சியை ஆதரிப்பது, உங்கள் தனிப்பட்ட விருப்பம். ஆனால், இந்தியாவின் கூட்டாட்சிக் கருத்தியலுக்கே முரணான சட்டங்களை, மக்களாட்சி மேல் நம்பிக்கை வைத்திருக்கும் எந்த அரசியல் அமைப்புகளும் ஆதரிக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஒரு திட்டத்தை அறிவித்தபோது, நம்மைப் போன்ற அரசியல் இயக்கங்களைக் கடந்து, வெளியில் இருந்து எதிர்த்தவர், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் மரியாதைக்குரிய எஸ்.ஒய்.குரேஷி. “பல முறை தேர்தல்கள் நடத்துவதால், தேர்தல் செலவு அதிகமாகிறது” என்று பாஜக தரப்பு சொன்னபோது, “ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால்தான் அதிகமான செலவாகும். தேர்தலுக்கான கருவிகளும், ஆட்களும், பாதுகாப்பும் ஒரே நேரத்தில் தேவைப்படுவதால் செலவு அதிகமாகத்தான் ஆகும்” என்று குரேஷி சரியாகச் சொன்னார்.

இந்தச் சூழலில், இந்திய அரசியலமைப்பை கூட்டாட்சிக் கருத்தியலைக் காக்க ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை நாம் இறுதி வரை எதிர்த்தாக வேண்டும். ஏன் என்றால், நான் முன்பே சொன்னது போன்று, பாஜகவின் செயல் திட்டங்கள் நீண்ட காலத்துக்கானது. தங்களின் செயல் திட்டங்களுக்கு இடையூறாக இருப்பவர்களுக்கு எதிரான கருத்துருவாக்கங்களை மெதுவாகச் சமூகத்தில் விதைப்பார்கள்.

அதற்கு துணையாகப் பல எடுபுடிகளை பேச வைப்பார்கள். தங்களின் கையில் இருக்கும் ஊடகங்களை வைத்தே பொய்ச் செய்திகளை பரப்புவார்கள். விவாதங்களைக் கட்டமைப்பார்கள். அளவில்லாத அவதூறுகளை அள்ளி இறைப்பார்கள். பச்சையான பொய்களால் கொச்சைப்படுத்துவார்கள். பாஜகவின் வாட்ஸ்அப் யூனிவர்சிட்டி தீயாக வேலை செய்யும். இதையெல்லாம் கடந்துதான் நாம் போராட வேண்டும்,வெற்றி பெற வேண்டும்.

இப்போது கூட, இந்திய நாட்டையும், அரசியலமைப்புச் சட்டத்தையும், மக்களாட்சியையும் காக்கத்தான் நாம் போராடிக் கொண்டு இருக்கிறோம். ஆனால், நம்மை அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானவர்களாகச் சித்தரிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி . எந்த ஆளுநர்? மரபுப்படி, நிறைவாக பாடப்படும் நாட்டுப்பண் பாடலுக்குக்கூட நிற்காமல் வெளியேறிய ஆளுநர். இருந்தாலும், மத்திய அரசுக்கு நான் வைக்கும் கோரிக்கை என்பது, நான் ஆளுநரை விமர்சிக்கிறேன் என்று அவரை மாற்றிவிடாதீர்கள். அவர் பேசப் பேசத்தான் பாஜக அம்பலப்படுகிறது. திராவிடக் கொள்கைகள் மேலும் மேலும் மக்களிடம் சென்று சேருகிறது.

மக்களுக்கும் மாநில சுயாட்சி முழக்கத்தின் நியாயங்கள் புரிகிறது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இன்று முழுவதும் இந்த மாநாட்டில், நம்முடைய கட்சியினர் திராவிடவியல் குறித்து அழுத்தமாக உணர்வோடு பேசுவதற்கான தூண்டுகோலாக இருப்பவரும் நம்முடைய ஆளுநர்தான். தந்தை பெரியார் அடிக்கடி ஒன்றைச் சொல்வார், “என்னை செயல்பட வைப்பது, என்னுடைய தோழர்கள் அல்ல; என்னுடைய எதிரிகள்” என்று சொல்வார். அப்படிப்பட்ட கொள்கை எதிரிகளை பண்பாட்டு எதிரிகளைத்தான் நாம் இன்றைக்குப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

இன்றைய எதிரிகள் கருத்தியல் மோதலுக்கு தயாராக இல்லை. ஏன் என்றால், கருத்தியல் ரீதியாக பேசினால் அவர்களால் ஒருபோதும் வெற்றிபெற முடியாது. அதனால்தான், அவதூறுகளை ஆயுதங்களாக எடுக்கிறார்கள். அந்த துரோகக் கூட்டத்தைத் துடைத்தெறிய வேண்டிய கடமை – சட்டப் போராளிகளான உங்களுக்கு இருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை காக்கும் கடமை நமக்கு இருக்கிறது. இந்தியா முழுமைக்கும் சமூகநீதியை உருவாக்கித் தந்து பாதுகாக்கும் கடமையும் நமக்கு இருக்கிறது.

எனவே, இங்கிருக்கும் சட்டப் போராளிகளுக்கு நான் சொல்லிக் கொள்வது, நீங்கள் கொள்கைப் போராட்டத்திலும் உதவ வேண்டும்; தேர்தல் களத்திலும் உதவ வேண்டும். தேர்தல் நேரத்தில் உங்களுடைய ‘வார் ரூம்’ பணிகள் மகத்தானது, பாராட்டுக்குரியது. இந்த நேரத்திலும் அதை நினைத்து நான் மகிழ்கிறேன்.2019 முதல் நடந்த அனைத்து தேர்தல்களிலும் நாம் தொடர்ந்து வெற்றி பெறுவதற்கு உங்களுடைய பணிகளும் முக்கியக் காரணம். இந்த வெற்றிப் பயணம் 2026-லும் தொடர வேண்டும்.

2026 தேர்தல் வெற்றி என்பது, நம்முடைய திராவிட மாடல் ஆட்சிக்கு, மக்கள் அளிக்கப் போகும் மகத்தான அங்கீகாரமாக அமையப் போகிறது. திமுக ஆட்சி மீண்டும் அமைய இந்தியா முழுமைக்கும் திராவிடக் கோட்பாடுகளை வென்றெடுக்க திமுக சட்டத்துறை சளைக்காமல் சமரசம் இல்லாமல் உழைக்க வேண்டும். சட்டத்துறை சார்பில், வழக்கறிஞர்கள் நலனுக்காக இன்றைக்கு ஐந்து கோடி ரூபாய் கொடுத்திருக்கிறீர்கள். அதை ஆக்கபூர்வமான திட்டங்களில் பயன்படுத்திக் கொள்ள என்.ஆர்.இளங்கோவை ஒரு செயல் திட்டம் வகுக்கச் சொல்லி இருக்கிறேன். அதனடிப்படையில், அதற்கான அறிவிப்புகள் வரும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

பழனிசாமி பேச்சு: ஸ்டாலின் ஆட்சியில் மக்களுக்கு திருநெல்வேலி அல்வா கொடுக்கிறார்கள்..!

நான் ஆட்சிப் பொறுப்பேற்ற போது கடுமையான குடிநீர் பஞ்சம் இருந்தது. ரயில் மூலம் குடிநீர் கொண்டு வந்தோம். ஸ்டாலின் செயலற்ற முதலமைச்சர். பொம்மை முதலமைச்சராக உள்ளார். ரேஷன் கடையில் தற்போது பொருள் கிடைப்பதில்லை. திருநெல்வேலி அல்வா கொடுக்கிறார்கள் என பழனிசாமி தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சர் MGR-இன் 108-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி கண்ணகி நகரில் நேற்று நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, “நாட்டு மக்களுக்காகவே வாழ்ந்த MGR மற்றவர்கள் தங்களுடைய வீட்டுக்காக வாழ்கிறார்கள். இந்த இயக்கத்தில் இருப்பது நமக்கு மிகப்பெரிய பெருமை. எம்ஜிஆரை புகழ்ந்தால்தான் மற்றவர்கள் கட்சி நடத்த முடியும். அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க தலைவர் MGR. 1962-ஆம் ஆண்டு MLA -யாக வந்தார்; அவர் மக்களோடு மக்களாக இருந்து மக்கள் சேவை செய்து முதல்வரானார்.

தற்போது தமிழகத்தில் மகன் ஆட்சியில் அமர வேண்டும், கொள்ளு பேரனும் ஆட்சிக்கு வர வேண்டும் என நினைக்கும் கட்சி தமிழகத்தில் ஆட்சியில் உள்ளது. MGR விட்டு சென்ற பணியை ஜெயலலிதா அவர்கள் நிறைவேற்றினார்கள். இந்த இரு பெரும் தலைவர்களுக்கு வாரிசு இல்லை நாம்தான் அவர்களுக்கு வாரிசு. தமிழகம் முதன்மை மாநிலமாக இருப்பதற்கு காரணம் நம்முடைய தலைவர்கள். தொண்டர்கள் நிறைந்த கட்சி அதிமுக. அதிமுகவில் வாரிசு இல்லை திமுகவில் வாரிசு உள்ளது. ஜல்லிக்கட்டில் பார்த்திருப்பீர்கள்.

அதிமுகவை அழிக்கவும் உடைக்கவும் பலர் முயற்சிக்கின்றனர். கட்சியை யாராலும் அழிக்கவும் முடியாது, முடக்கவும் முடியாது, ஒழிக்கவும் முடியாது. இது உயிரோட்டம் உள்ள கட்சி, தெய்வ பிறவிகள் உருவாக்கிய கட்சி. MGR உருவாக்கிய கட்சி, ஜெயலலிதா கட்டிக் காத்த கட்சி. அதிமுகவுக்கு எதிராக எத்தனை வழக்குகள் வந்தாலும் அது நிலைக்காது; சட்டப்படி அதிமுக நம்மிடம் உள்ளது, யாரும் அதை பற்றி கவலை பட தேவையில்லை. எதிரிகள் சூழ்ச்சி செய்து கட்சியை அழிக்க நினைக்கிறார்கள். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அதனை முறியடிக்க வேண்டும்.

நம்முடைய தலைவர்கள் பல சோதனைகளை கடந்து கட்சியை நடத்தினார்கள். நாமும் அது மாதிரியான சோதனைகளை சந்தித்து கொண்டு இருக்கிறோம். 2026-ஆம் ஆண்டு கண்டிப்பாக அதிமுக ஆட்சியை கொண்டு வருவோம். திமுக ஆட்சி முடிவுக்கு வர இன்னும் 13 அமாவாசை தான். இந்த ஆட்சியில் 4 ஆண்டு காலம் முதல்வர் ஸ்டாலின் என்ன செய்தார். தன்னுடைய மகனை துணை முதல்வர் ஆக்கியது தான் அவர் செய்த சாதனை. போட்டோ ஷூட் செய்வார், வெறும் விளம்பரம் மட்டுமே. தினம் ஒரு விளம்பரம், தினம் ஒரு அறிவிப்பு, ஒரு குழு அமைப்பார், இந்த அரசாங்கம் குழு அரசாங்கம், குழு போட்டவுடன் முடித்து விடுகின்றனர். புதிய அறிவிப்பு வராத நாளே இல்லை.

அதிமுக ஆட்சியில் கடுமையான கொரோனா காலம் மக்களின் உயிரைக் காப்பாற்ற தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. கொரோனா காலத்தில் ஆயிரம் ரூபாய் கொடுத்தோம். 36 ஆயிரம் கோடி மக்களுக்காக செலவழித்தோம். 11 மாதம் ரேஷன் கடைகளில் அனைத்தும் இலவசமாக கொடுத்தோம். ரேஷன் கடையில் தற்போது பொருள் கிடைப்பதில்லை. திருநெல்வேலி அல்வா கொடுக்கிறார்கள். நான் ஆட்சிப் பொறுப்பேற்ற போது கடுமையான குடிநீர் பஞ்சம் இருந்தது. ரயில் மூலம் குடிநீர் கொண்டு வந்தோம். ஸ்டாலின் செயலற்ற முதலமைச்சர். பொம்மை முதலமைச்சராக உள்ளார்.

7.5 சதவீதம் ஏழை மாணவர்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கனவை நிறைவேற்றினோம். ஏழை மக்கள் இருக்கும் பகுதியினை தேர்வு செய்து அம்மா கிளினிக் தொடங்கப்பட்டது. 2000 அம்மா மினி கிளினிக்கினை இவர்கள் ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன் மூடிவிட்டனர். அதிமுக அரசில் கொண்டு வந்த அனைத்தையும் நிறுத்துவது தான் இந்த ஆட்சியின் சாதனை. ஒரு மருத்துவக் கல்லூரி கொண்டு வரவில்லை. 11 அரசு மருத்துவ கல்லூரி நாங்கள் கொண்டு வந்தோம். இன்ஜினியரிங் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி புதிய பள்ளிகள் தொடங்கினோம்.

இந்தியாவிலேயே தமிழகம் கல்வியில் முதல் மாநிலமாக இருப்பதற்கு காரணம் அதிமுக தான். மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீதம், விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீதம் என இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. தாலிக்கு தங்கம் நிறுத்தப்பட்டுவிட்டது. மடிக்கணினி திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது. வீட்டு மக்களுக்காக ஆட்சி செய்வது தான் திமுக. மக்களுக்கு ஆட்சி செய்வது அண்ணா திமுக. மெட்ரோ ரயில் திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது

தற்போது திமுக ஆட்சியில் ஆமை வேகத்தில் மெட்ரோ ரயில் திட்டம் நடைபெறுகிறது. மீண்டும் அதிமுக ஆட்சி வந்து விரைவாக திட்டம் நிறைவேற்றப்படும். தமிழகத்தில் அனைத்து திட்டங்களையும் நாங்கள் தான் கொண்டு வந்தோம். ஆனால், ஸ்டிக்கர் ஒட்டி கொண்டது திமுக. திமுக அரசு செய்யும் தவறுகளை பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் சரியாக சொன்னாலோ திமுக அரசு காணாமல் போய்விடும். அனைத்து தரப்பு மக்களுக்கும் அதிமுக அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தது. திமுக தேர்தல் 522 அறிவிப்புகளை வெளியிட்ட திமுக அரசு. அதில் 20 சதவீதம் அறிவிப்புகளை கூட நிறைவேற்றவில்லை.

அதிமுகவின் நிர்பந்தம் காரணமாக பல்வேறு திட்டங்கள் தற்போது கொண்டுவரப்பட்டுள்ளது. அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று சொல்லிவிட்டு ஓட்டை உடைசல் தேறாத பேருந்துகளை முன் பின் பெயிண்ட் அடித்து விட்டு இலவசமாக பயணம் செய்ய வைக்கிறார். அதிமுக அட்சியில் 15 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டது. திமுக ஆட்சியில் சுமார் 2000 பேருந்து மட்டுமே வாங்கப்பட்டுள்ளது. நான் சட்டப்பேரவையில் பேசுவதை நேரலையில் ஒளிபரப்பு செய்தால் திமுகவுக்கு சாவு மணி தான். சோழிங்கநல்லூர் தொகுதியில் மேடவாக்கம் பாலம், வேளச்சேரி மேம்பாலம், மத்திய கைலாஷ் பாலம் இப்படி பல பாலங்களை இந்த பகுதியில் அமைக்கப்பட்டது.

அதிக கனமழை பெய்யும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது. விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ரெட் அலர்ட் கொடுத்தவுடன் தேவையான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள் ஆட்சியில் பல புயல்கள் வந்தது, சிறப்பாக சமாளித்தோம். பொதுமக்களுக்கு சிறப்பான சேவை செய்தோம். ஒரு புயல் வந்தாலே திமுக அரசு காணாமல் போய்விடும்.

மக்கள் துன்பப்படும்போது ஓடோடி உதவி செய்வது தான் நல்ல அரசு. அது அதிமுக மட்டுமே. எதைக் கேட்டாலும் நிதி இல்லை என்கிறார். திமுகவின் அறக்கட்டளையில் ஏராளமான நிதி உள்ளது, அதை எடுத்து மக்களுக்கு செலவு செய்யுங்கள். கார் பந்தயம் தேவையா? ஏற்கனவே இருங்காட்டு கோட்டையில் கார் பந்தயம் நடத்த போதுமான இடவசதி உள்ளது. மக்கள் வரிப்பணத்தை ஊதாரியாக திமுக அரசு செலவு செய்கிறது.

திமுக அரசியல் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. அதிமுக அரசியல் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. அதிமுக ஆட்சியில் விலைவாசி உயரும்போது கூட்டுறவுத் துறை மூலம் பொருட்களை வாங்கி விலைவாசியை கட்டுப்படுத்தினோம். கட்டுமான பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் வீடு கட்ட முடியாமல் பொதுமக்கள் தவிர்த்து வருகின்றனர்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் கொடுமை ஆளாக்கப்பட்டதால் அந்த பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தால் எஃப்ஐஆர் கசிந்துவிட்டது, பாலியல் தொல்லையில் ஈடுபட்ட ‘யார் அந்த சார்?’ என்று நாங்கள் கேட்டோம். பல மந்திரிகள் முன்னுக்கு பின் முரணாக அறிக்கை விடுகிறார்கள். பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் இதில் ஈடுபட்டவர்கள் கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும். அதிமுக ஆட்சி மலரும்.

அந்த பெரும்புள்ளி யார் என்று வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படும். அவை மாண்பை தொடர்ந்து சீரழித்தது திமுக தான். நாங்கள் ஒன்றும் சட்டமன்றத்தின் அவை மாண்பை சீரழிக்கவில்லை. நீட் ரத்து செய்ய ரகசியம் இருக்குது என்றார். என்ன ஆனது என கேட்டோம். மத்திய அரசாங்கத்தின் கையில் உள்ளது என்று சொல்கின்றனர். நாங்களும் அதுதான் சொன்னோம்.

ஸ்டாலின் அரசு திவால் ஆகப் போகிறது. திமுக அரசு 356 கோடி கடன் உள்ளது. இந்த பணம் எங்கே போனது? புதிய திட்டங்கள் எதுவும் கொண்டு வரப்படவில்லையே? இதனை சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினோம் பதில் இல்லை. நாங்கள் ஆறு மாவட்டத்தை உருவாக்கினோம். நீங்கள் ஒரு மாவட்டத்தை கூட உருவாக்கவில்லை. பல கல்லூரிகள் கொண்டு வந்தோம். நீங்கள் ஒரு கல்வி நிறுவனத்தை கூட கொண்டு வரவில்லை. கரோனாவால் வருமானம் இல்லாமல் ஆட்சியை செய்தோம் நல்ல வருவாய் இருந்தும் தமிழகத்திற்கு அதிக கடன் உள்ளது.

இந்த கடனால் நம் மீது வரி சுமை அதிகரித்துள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வரியை குறைப்போம் என சொன்னீர்கள். ஆனால் வரியை உயர்த்தி விட்டீர்கள். மின்சார கட்டணம், வீட்டு வரி, தொழிற்சாலை வரி, தொழில் வரி உயர்ந்துள்ளது. மக்கள் மீது வரி மேல் வரி போடும் ஆட்சி தான் ஸ்டாலின் அரசு. இந்தியாவில் அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. அந்த சாதனையைதான் ஸ்டாலின் படைத்துள்ளார்,” என பழனிசாமி பேசினார்.

மு.க. ஸ்டாலின்: “ஆளுநர் பேசப் பேசத்தான் பாஜக அம்பலப்படுகிறது..!”

நான் ஆளுநரை விமர்சிக்கிறேன் என்று அவரை மாற்றிவிடாதீர்கள். அவர் பேசப் பேசத்தான் பாஜக அம்பலப்படுகிறது. திராவிடக் கொள்கைகள் மேலும் மேலும் மக்களிடம் சென்று சேருகிறது. மக்களுக்கும் மாநில சுயாட்சி முழக்கத்தின் நியாயங்கள் புரிகிறது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இன்று முழுவதும் இந்த மாநாட்டில், நம்முடைய கட்சியினர் திராவிடவியல் குறித்து அழுத்தமாக உணர்வோடு பேசுவதற்கான தூண்டுகோலாக இருப்பவரும் நம்முடைய ஆளுநர்தான்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னையில் திமுக சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “இந்த மாநாட்டின் முக்கியமான நிகழ்ச்சியாக, மாநிலங்களவை உறுப்பினரும், மத்திய முன்னாள் அமைச்சருமான கபில் சிபல், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி – மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம் ஆகியோரைக் கொண்ட, “ஒரே நாடு ஒரு தேர்தல்” என்ற கலந்துரையாடல் ஏற்பாடு செய்து, அவர்களும் தங்களுடைய வாதங்களை அழுத்தமாக வைத்திருக்கிறார்கள். இன்றைய காலக்கட்டத்தில் மிகத் தேவையான உரையாடல் இது.

இந்த மாநாடு வாயிலாக, நான் அனைவருக்கும் சொல்லிக்கொள்ள விரும்புவது, மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பாஜகவை பொறுத்த வரைக்கும், ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே உடை, ஒரே உணவு என்று ஒற்றைப் பண்பாட்டை நோக்கி நாட்டை நகர்த்த பார்க்கிறது. அதற்காகத்தான் ஒரே தேர்தல் என்று கிளம்பி இருக்கிறார்கள். ஒரே அரசு என்ற நிலையை உருவாக்க மாநிலங்களை அழிக்கப் பார்க்கிறார்கள்.

பாஜகவைப் பொறுத்தவரைக்கும் பெரும்பாலும் குறுகிய கால செயல் திட்டமாக இருக்காது. நீண்டகால செயல்திட்டமாகத்தான் இருக்கும். இப்போது நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் என்று சொல்பவர்கள், காலப்போக்கில் நாட்டுக்கே ஒரே தேர்தல்தான் என்று சொல்லும் நிலைமையை உருவாக்க நினைக்கிறார்கள். இது ஒற்றையாட்சிக்குதான் வழிவகுக்கும். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இது, தனிமனிதர் ஒருவரிடம்தான் அதிகாரத்தைக் கொண்டு சென்று சேர்க்கும்.

இது, பாஜக என்ற கட்சிக்கே கூட நல்லதல்ல. இன்றைக்கு பிரதமராக இருக்கும் நரேந்திர மோடியைச் சர்வாதிகாரியாக ஆக்கத்தான் இந்தச் சட்டம் பயன்படும். பாஜகவும், பாஜகவுக்கு மூளையாக இருந்து செயல்படும் அமைப்புகளும் விரிக்கும் வலையில், இன்று அரசியல் காரணங்களுக்காக பாஜகவை ஆதரிக்கும் கூட்டணிக் கட்சிகள் விழுந்துவிடக் கூடாது. இந்தச் சட்டத்தை ஆதரிக்கக் கூடாது என்று இந்தக் கூட்டத்தின் வாயிலாகக் கோரிக்கை வைக்கிறேன். பாஜக ஆட்சியை ஆதரிப்பது, உங்கள் தனிப்பட்ட விருப்பம். ஆனால், இந்தியாவின் கூட்டாட்சிக் கருத்தியலுக்கே முரணான சட்டங்களை, மக்களாட்சி மேல் நம்பிக்கை வைத்திருக்கும் எந்த அரசியல் அமைப்புகளும் ஆதரிக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஒரு திட்டத்தை அறிவித்தபோது, நம்மைப் போன்ற அரசியல் இயக்கங்களைக் கடந்து, வெளியில் இருந்து எதிர்த்தவர், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் மரியாதைக்குரிய எஸ்.ஒய்.குரேஷி. “பல முறை தேர்தல்கள் நடத்துவதால், தேர்தல் செலவு அதிகமாகிறது” என்று பாஜக தரப்பு சொன்னபோது, “ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால்தான் அதிகமான செலவாகும். தேர்தலுக்கான கருவிகளும், ஆட்களும், பாதுகாப்பும் ஒரே நேரத்தில் தேவைப்படுவதால் செலவு அதிகமாகத்தான் ஆகும்” என்று குரேஷி சரியாகச் சொன்னார்.

இந்தச் சூழலில், இந்திய அரசியலமைப்பை கூட்டாட்சிக் கருத்தியலைக் காக்க ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை நாம் இறுதி வரை எதிர்த்தாக வேண்டும். ஏன் என்றால், நான் முன்பே சொன்னது போன்று, பாஜகவின் செயல் திட்டங்கள் நீண்ட காலத்துக்கானது. தங்களின் செயல் திட்டங்களுக்கு இடையூறாக இருப்பவர்களுக்கு எதிரான கருத்துருவாக்கங்களை மெதுவாகச் சமூகத்தில் விதைப்பார்கள்.

அதற்கு துணையாகப் பல எடுபுடிகளை பேச வைப்பார்கள். தங்களின் கையில் இருக்கும் ஊடகங்களை வைத்தே பொய்ச் செய்திகளை பரப்புவார்கள். விவாதங்களைக் கட்டமைப்பார்கள். அளவில்லாத அவதூறுகளை அள்ளி இறைப்பார்கள். பச்சையான பொய்களால் கொச்சைப்படுத்துவார்கள். பாஜகவின் வாட்ஸ்அப் யூனிவர்சிட்டி தீயாக வேலை செய்யும். இதையெல்லாம் கடந்துதான் நாம் போராட வேண்டும்,வெற்றி பெற வேண்டும்.

இப்போது கூட, இந்திய நாட்டையும், அரசியலமைப்புச் சட்டத்தையும், மக்களாட்சியையும் காக்கத்தான் நாம் போராடிக் கொண்டு இருக்கிறோம். ஆனால், நம்மை அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானவர்களாகச் சித்தரிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி . எந்த ஆளுநர்? மரபுப்படி, நிறைவாக பாடப்படும் நாட்டுப்பண் பாடலுக்குக்கூட நிற்காமல் வெளியேறிய ஆளுநர். இருந்தாலும், மத்திய அரசுக்கு நான் வைக்கும் கோரிக்கை என்பது, நான் ஆளுநரை விமர்சிக்கிறேன் என்று அவரை மாற்றிவிடாதீர்கள். அவர் பேசப் பேசத்தான் பாஜக அம்பலப்படுகிறது. திராவிடக் கொள்கைகள் மேலும் மேலும் மக்களிடம் சென்று சேருகிறது.

மக்களுக்கும் மாநில சுயாட்சி முழக்கத்தின் நியாயங்கள் புரிகிறது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இன்று முழுவதும் இந்த மாநாட்டில், நம்முடைய கட்சியினர் திராவிடவியல் குறித்து அழுத்தமாக உணர்வோடு பேசுவதற்கான தூண்டுகோலாக இருப்பவரும் நம்முடைய ஆளுநர்தான். தந்தை பெரியார் அடிக்கடி ஒன்றைச் சொல்வார், “என்னை செயல்பட வைப்பது, என்னுடைய தோழர்கள் அல்ல; என்னுடைய எதிரிகள்” என்று சொல்வார். அப்படிப்பட்ட கொள்கை எதிரிகளை பண்பாட்டு எதிரிகளைத்தான் நாம் இன்றைக்குப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

இன்றைய எதிரிகள் கருத்தியல் மோதலுக்கு தயாராக இல்லை. ஏன் என்றால், கருத்தியல் ரீதியாக பேசினால் அவர்களால் ஒருபோதும் வெற்றிபெற முடியாது. அதனால்தான், அவதூறுகளை ஆயுதங்களாக எடுக்கிறார்கள். அந்த துரோகக் கூட்டத்தைத் துடைத்தெறிய வேண்டிய கடமை – சட்டப் போராளிகளான உங்களுக்கு இருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை காக்கும் கடமை நமக்கு இருக்கிறது. இந்தியா முழுமைக்கும் சமூகநீதியை உருவாக்கித் தந்து பாதுகாக்கும் கடமையும் நமக்கு இருக்கிறது.

எனவே, இங்கிருக்கும் சட்டப் போராளிகளுக்கு நான் சொல்லிக் கொள்வது, நீங்கள் கொள்கைப் போராட்டத்திலும் உதவ வேண்டும்; தேர்தல் களத்திலும் உதவ வேண்டும். தேர்தல் நேரத்தில் உங்களுடைய ‘வார் ரூம்’ பணிகள் மகத்தானது, பாராட்டுக்குரியது. இந்த நேரத்திலும் அதை நினைத்து நான் மகிழ்கிறேன்.2019 முதல் நடந்த அனைத்து தேர்தல்களிலும் நாம் தொடர்ந்து வெற்றி பெறுவதற்கு உங்களுடைய பணிகளும் முக்கியக் காரணம். இந்த வெற்றிப் பயணம் 2026-லும் தொடர வேண்டும்.

2026 தேர்தல் வெற்றி என்பது, நம்முடைய திராவிட மாடல் ஆட்சிக்கு, மக்கள் அளிக்கப் போகும் மகத்தான அங்கீகாரமாக அமையப் போகிறது. திமுக ஆட்சி மீண்டும் அமைய இந்தியா முழுமைக்கும் திராவிடக் கோட்பாடுகளை வென்றெடுக்க திமுக சட்டத்துறை சளைக்காமல் சமரசம் இல்லாமல் உழைக்க வேண்டும். சட்டத்துறை சார்பில், வழக்கறிஞர்கள் நலனுக்காக இன்றைக்கு ஐந்து கோடி ரூபாய் கொடுத்திருக்கிறீர்கள். அதை ஆக்கபூர்வமான திட்டங்களில் பயன்படுத்திக் கொள்ள என்.ஆர்.இளங்கோவை ஒரு செயல் திட்டம் வகுக்கச் சொல்லி இருக்கிறேன். அதனடிப்படையில், அதற்கான அறிவிப்புகள் வரும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சங்கமம் நிகழ்ச்சியில் சிறுவனிடம் ஒன்ஸ் மோர் கேட்ட மு.க.ஸ்டாலின்…!

சென்னை சங்கமம் நிகழ்ச்சியின் நிறைவு நாளில், மல்லர் கம்பத்தில் ஏறி சாகசம் செய்து அசத்திய சிறுவனிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்ஸ் மோர் கேட்டார். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக பண்பாட்டுத் துறை சார்பாக சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் சூழலில், நடப்பாண்டும் ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கியது. இதனை சென்னை கீழ்ப்பாக்கம் ஏகாம்பரநாதர் கோவிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முரசு கொட்டி தொடங்கி வைத்தார். இந்நிலையில் சென்னை சங்கமம் நிகழ்ச்சியின் கடைசி நாள் விழா நேற்று அண்ணா நகரில் உள்ள கோபுரப் பூங்காவில் நடைபெற்றது.

இந்த கலை நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கண்டு ரசித்தார். அந்த நிகழ்ச்சியில் விழுப்புரத்தைச் சேர்ந்த கை கொடுக்கும் கை குழுவினர் சார்பாக மல்லர் கம்பம் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களின் திறமையை வெளிப்படுத்தினர்.

அதேபோல் பம்பை இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த இரு நிகழ்ச்சிகளை பார்த்து வியந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உடனடியாக மேடையேறி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கை கொடுத்து பாராட்டுகளை தெரிவித்தார். இதனால் கிராமியக் கலைஞர்களும் உற்சாகமடைந்தனர்.

இந்த நிகழ்ச்சியின் போது சிறுவன் ஒருவன், மல்லர் கம்பில் ஏறிய சாகசம் செய்ததோடு, ஸ்டைலாக மேடையில் நின்று கைகளையும், தொடையையும் தட்டி காட்டிய சம்பவம் அனைவரையும் கவர்ந்தது. இதனைத் தொடர்ந்து பொன்னாடை போர்த்திய போது அந்த சிறுவனிடம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மீண்டும் அதுபோல் முஷ்டியை தட்டி செய்து காட்ட முடியுமா என மு.க.ஸ்டாலின் கேட்டது பார்வையாளர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது.

மு.க.ஸ்டாலின் பெருமிதம்: உரிமை மறுக்கப்பட்ட மக்களின் குரலாய்ப் பிறந்த நீதிக்கட்சி..!

19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20-ஆம் நூறாண்டின் முற்பகுதியில் சென்னை மாகாணத்தில் பிராமணர்கள், மொத்த மக்கள்தொகையில் தங்கள் சதவிகிதத்தை விட மிக அதிக அளவில் அரசு பணிகளில் இடம் பெற்றிருந்ததும், பிறஜாதியினரை பிராமணர்கள் நடத்தும் விதத்தில் வெகுண்ட மற்ற ஜாதியினர் இடையே வகுப்புவாரியாகப் பிரிவினை ஏற்பட்டு இருந்தது. இப்பிரிவினைக்கு முக்கிய காரணங்கள். 20-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் பிராமணரல்லாதோருக்காக ஒரு அரசியல் அமைப்பை உருவாக்க நடந்த பல முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்து.

அதன்பின்னர் மருத்துவர்கள் சி.நடேசன், டி.எம்.நாயர் மற்றும் வழக்கறிஞர் பி.டி.ராஜன், சர் பிட்டி தியாகராயர் ஆகியோரால் 1916-ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம் தேதி நீதிக்கட்சி என்ற ஒரு கட்சியை சென்னை மாகாணத்தில் நிறுவினர். தமிழ்நாட்டின் சமூக – அரசியல் விழிப்புணர்வில் நீதிக்கட்சி முக்கிய பங்கு வகித்தது. சமூக நீதி மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் உரிமைகளுக்காக நீதிக்கட்சி குரல் கொடுத்தது.

இந்நிலையில், இன்றைய திராவிட மாடலுக்குப் பாதை அமைத்த சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி உருவான நாள் இன்று: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவு கூர்ந்துள்ளார். உரிமை மறுக்கப்பட்ட மக்களின் குரலாய்ப் பிறந்த நீதிக்கட்சி வாரிசுகளாய், நமது உரிமைகளை மீட்டெடுத்து நிலைநாட்டும் பயணத்தில் உழைப்பைச் செலுத்திடுவோம் வென்றிடுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் எனும் உரிமையை வழங்கிச் சமூகநீதிப் புரட்சி, இலவசக் கட்டாயக் கல்வி மற்றும் காலை உணவுத் திட்டத்தை முன்னோடியாகத் தொடங்கிக் கல்விப் புரட்சி, இந்து சமய அறநிலையச் சட்டம் மூலம் சமத்துவப் புரட்சி – என நூறாண்டுகளுக்கு முன்பே இன்றைய திராவிட மாடலுக்குப் பாதை அமைத்த நீதிக்கட்சி உருவான நாள் இன்று.

உரிமை மறுக்கப்பட்ட மக்களின் குரலாய்ப் பிறந்த நீதிக்கட்சி வாரிசுகளாய், நமது உரிமைகளை மீட்டெடுத்து நிலைநாட்டும் பயணத்தில் உழைப்பைச் செலுத்திடுவோம்! வென்றிடுவோம்! என மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மு.க. ஸ்டாலின்: அரசு திட்டங்களை செயல்படுத்த தடைகளை தகர்த்து செந்தில் பாலாஜி கம்பேக் ..!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி கம்பேக் கொடுத்துள்ளார், செந்தில் பாலாஜி தடையெல்லாம் தகர்த்து வந்துள்ளார், என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில், கோயம்புத்தூர் காந்திபுரத்திலுள்ள அனுப்பர்பாளையம் கிராமத்தில் ரூ.300 கோடி மதிப்பில் 8 தளங்களுடன் 1,98,000 சதுரடி பரப்பில் தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டும் பணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டி கட்டுமானப் பணியை தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், கோயம்புத்தூரில் தான் தமிழ் புதல்வன் திட்டம் துவங்கப்பட்டது. இன்று இந்த நிகழ்வில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு மாவட்டமாக சென்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு வருகிறேன். கோயம்புத்தூருக்கு இதுவரை 3 முறை வந்து, பல்வேறு அரசு நிகழ்வுகளில் கலந்துகொண்டு திட்டங்களை துவக்கி வைத்துள்ளேன்.

கடந்த 3 ஆண்டுகளில் அறிவித்த அறிவிப்புகளின் நிலை குறித்து அமைச்சர்களை ஆய்வு செய்யச் செல்ல அறிவித்து, முதலீடுகள் ஈர்ப்புக்காக அமெரிக்கா சென்றேன். அங்கிருந்து வந்த பின்பு அமைச்சர்களிடம் திட்டங்களின் நிலை குறித்து கேட்டதோடு, ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வு செய்யும் பணிகளை கோயம்புத்தூரில் இருந்து துவங்கியுள்ளேன்.

நேற்று முதல் கோயம்புத்தூர் மாவட்ட மக்களின் கோரிக்கைகளை கேட்டுள்ளோம். கோயம்புத்தூர் மாவட்டத்தில் அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி கம்பேக் கொடுத்துள்ளார். செந்தில் பாலாஜி தடையெல்லாம் தகர்த்து வந்துள்ளார். கோயம்புத்தூரில் நூலகத்தோடு சேர்ந்து அறிவியல் மையம் அமைய வேண்டும் என்ற கோரிக்கை வந்தது. கோவையில் தந்தை பெரியார் பெயரில் இந்நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்கப்படும்.

சென்னையில் அண்ணா நூலகம், மதுரை கலைஞர் நூலகம் உள்ளது போல கோயம்புத்தூரில் இந்த பெரியார் நூலகம் உருவாகவுள்ளது. இதன் திறப்பு விழா ஜனவரி, 2026-ல் நடைபெறவுள்ளது. நேற்று எல்காட் நிறுவனத்தின் புதிய தகவல் தொழில்நுட்ப கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது. செம்மொழி பூங்கா பணிகளை ஆய்வு செய்தேன். அதுவும் விரைந்து முடிக்கப்பட்டு ஜூன் மாதம் திறக்கப்படும்.

சென்னையின் கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை, மதுரை கலைஞர் நூல்கம், ஜல்லிக்கட்டு அரங்கம், கீழடி அருங்காட்சியகம் ஆகியவை குறித்த காலத்தில் இந்த ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. கோவையில் 35 ஆண்டு கால பிரச்சினையாக இருந்த நில விடுவிப்பு கோரிக்கைக்கு நேற்று ஆணைகள் வழங்கப்பட்டு, 10 ஆயிரம் குடும்பங்கள் பயனடைந்துள்ளன.

தங்க நகை தொழிலாளர்கள் குறைகளை கேட்டறிந்து நேரடியாக அவர்களின் இடத்திற்குச் சென்றேன். உலக அளவில் முக்கிய தங்க நகை மையமாக விளங்கும் கோயம்புத்தூரில் தொழில் பூங்கா அமைக்கப்படும் அதில் ஆய்வகமும் அமையவுள்ளது. இதனால், அதிக வேலைவாய்ப்பு உருவாகும். விமான நிலைய விரிவாக்கம், சூலூரில் தொழில் மையம் மற்றும் கோயம்புத்தூரில் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் விதமாக மேற்கு புறவழிச்சாலை, குடிநீர் திட்டங்கள், பாதாளச் சாக்கடை திட்டங்கள் ஆகியவை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

நாடாளுமன்ற தேர்தலில் அறிவித்த வாக்குறுதிகளில் முக்கிய வாக்குறுதியான கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் துவங்கவுள்ளது. இந்தியாவின் தகவல் தொழில் நுட்ப மையமாக கோயம்புத்தூர் உள்ளது. கோயம்புத்தூர் எல்காட் வளாகத்தில் 17.17 ஏக்கர் பரப்பளவில் மேலும் ஒரு ஐடி பூங்கா அமைக்கப்படும். இதனால் 31 ஆயிரம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள்.

சின்னியம்பாளையம் முதல் நீலாம்பர் வரை 5 கி.மீ தூரத்திற்கு உயர்மட்ட மேம்பால சாலை நீட்டிக்கப்படும். தொண்டாமுத்தூரில் யானை புகாத வகையில் நவீன பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படும். ஆனைமலை கூட்டு குடிநீர் திட்டம் மேம்படுத்தப்படும். 295 பொள்ளாச்சி கிராமங்களுக்காக கூட்டுக் குடிநீர் திட்டம் மேம்படுத்தப்படும்.

கோயம்புத்தூர் மாநகரில் புனரமைக்கப்படாத சாலைகள், பாதாளச் சாக்கடையால் பாதிப்படைந்த சாலைகள், மண் சாலைகள் ஆகியவற்றை மேம்படுத்த ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு, மக்களுக்கான பணிகள் தொடர்ந்து செய்யப்பட்டு, தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்து, சிறந்த மாநிலமாக உள்ளது. இப்போது, தெற்கு தான் வடக்கிற்கும் வாரி வழங்குகிறது என மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

தேவர் அரங்கம் திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கருணாஸ் நன்றி..!

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் புதிய அரங்கத்தை கட்டி திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, முக்குலத்தோர் புலிப்படை கட்சீி தலைவர் கருணாஸ் நன்றி தெரிவித்துள்ளார். முக்குலத்தோர் புலிப்படைக்கட்சி தலைவர் சே. கருணாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பசும்போன் முத்துராமலிங்க தேவர் நினைவை போற்றும் வகையில், ஆண்டுதோறும் அக்டோபர் 30-ல் தேவர் ஜெயந்தி விழாவை தமிழ்நாடு அரசு விழாவாக கொண்டாடுகிறது.

அவரது நினைவிடம் அருகில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான தற்காலிக பந்தல் அமைக்கப்பட்டு வந்தது. அது தற்பொழுது தமிழ்நாடு அரசால் நிரந்தர அரங்கமாக மாறியிருப்பது பாராட்டுக்குரியது. ரூ.1.55 கோடி மதிப்பீட்டில், அமைக்கப்பட்ட அரங்கத்தை தமிழக முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மக்கள் கோரிக்கையை ஏற்று இவ்வரங்கத்தை திறந்து வைத்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கருணாஸ் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.