எல்.முருகன்: பாஜகவில் தமிழகத்தில் 10 கோடி உறுப்பினர்கள்..! 11 கோடி உறுப்பினர்கள் சேர்ப்பது இலக்கு..!

தமிழகத்தில் தற்போது பாஜகவில் 10 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். மொத்தம் 11 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்கு என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறினார். நீலகிரி மாவட்டம் குன்னூரில் பாஜக உறுப்பினர் சேர்க்கையை நேற்று தொடங்கி வைத்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாடு முழுவதும் பாஜக உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த 2-ஆம் தேதி பிரதமர் மோடி உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி வைத்தார். உலகிலேயே அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட கட்சி பாரதிய ஜனதா கட்சியாகும். தற்போது பாஜகவில் 10 கோடிஉறுப்பினர்கள் உள்ளனர். மொத்தம் 11 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்குடன் பாஜக பயணிக்கிறது. அதேபோல, தமிழகத்தில் ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம் என எல்.முருகன் தெரிவித்தார்.

மாநிலங்களவை உறுப்பினராக எல்.முருகன் போட்டியின்றி தேர்வு

கடந்த 21 ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை பதவிக்கான வேட்பாளராக எல்.முருகன் பாஜக சார்பில் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் முன்னிலையில் எல்.முருகன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெற இருந்த நிலையில், மத்திய இணைய அமைச்சர் எல் முருகன் போட்டியின்றி எம்பியாக தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எல்.முருகன்: அரசியலமைப்பு சட்டத்தை எழுதிய அம்பேத்கரை அவமதிக்கும் செயல்

பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 68-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான சென்னை கமலாலயத்தில் அவரது உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன், அமைப்பு பொதுசெயலாளர் கேசவ விநாயகம், பொதுசெயலாளர் கரு.நாகராஜன், வி.பி. துரைசாமி உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டு சியாமா பிரசாத் முகர்ஜியின் உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் எல்.முருகன் அளித்த பேட்டியில், தி.மு.க. தேர்தல் அறிக்கையில் என்னென்ன சொன்னார்களோ, அது கவர்னர் உரையில் இடம் பெறாதது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. ஒன்றிய அரசு என்று அரசியலமைப்பு சட்டத்தில் எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. இது அரசியலமைப்பு சட்டத்தை எழுதிய அம்பேத்கரை அவமதிக்கும் செயல் என தெரிவித்தார்.