தமிழகம் முன்னேறிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையே தேவை என்று உணர்ந்து, பாஜகவை சேர்ந்த, கரூர் மாவட்ட முன்னாள் இளைஞரணி தலைவர் M.K.கணேசமூர்த்தி மற்றும் 30-க்கும் மேற்பட்ட பாஜகவை சேர்ந்த இளைஞர்கள் செந்தில் பாலாஜி முன்னிலையில் தங்களை திமுகவில் இணைந்தனர்.
Tag: Karur District
சத்துணவு அமைப்பாளர் அலட்சியம்: சத்துணவு முட்டைகள் அழுகிய நிலையில் இருந்ததால் பணியிடை நீக்கம்
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தொண்டமாங்கினம் ஊராட்சி, கவுண்டம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த முட்டைகள் அழுகிய நிலையில் இருப்பதாக புகார் வந்தது. இதனை தொடர்ந்து நேற்று மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் பள்ளியில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பள்ளிக்குழந்தைகளுக்கு வழங்குவதற்காக வரப்பட்டுள்ள முட்டைகளை சரிபார்த்து வாங்காமல் இருந்ததற்காகவும், பெறப்பட்ட முட்டைகளை ஒருவார காலம் ஆகியும் குழந்தைகளுக்கு முறையாக வழங்காமல் வைத்திருந்ததற்காகவும், தனது பணியில் அலட்சியத்துடன் இருந்ததாலும் சத்துணவு அமைப்பாளர் ஜெயந்தியை பணியிடை நீக்கம் செய்ய ஆட்சியர் பிரபுசங்கர் உத்தரவிட்டார்.