உதயநிதி ஸ்டாலின்: டெல்லியில் இருந்து வரட்டும் .. லோக்கலில் இருந்து வரட்டும்.. 2026 தேர்தல் திமுக கூட்டணிக்கே வெற்றி..!

யாராக இருந்தாலும், எதிர்த்து யார் வந்தாலும், எப்பேர்பட்ட கூட்டணி அமைச்சாலும், எந்த திசையில் இருந்து வந்தாலும், டெல்லியில் இருந்து வந்தாலும் சரி.. லோக்கலில் இருந்து வந்தாலும் சரி.. வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் திமுகவுக்கே வெற்றி என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர், மரகதம் கந்தசாமி மண்டபம் முன்பு புதிதாக வெண்கலத்தால் அமைக்கப்பட்ட கலைஞரின் திருவுருவ சிலை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, கலைஞர் சிலையை திறந்து வைத்து பேசினார்.

அப்போது, கடந்த மக்களவைத் தேர்தலில் 100 சதவீத வெற்றியை கொடுத்தீர்கள். எல்லாருக்கும் நன்றி.. இன்றிலிருந்து நாம் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்குவோம். நம் திட்டங்கள் எல்லாத்தையும் மக்களிடம் கொண்டு போய் சேர்ப்போம். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பயனாளிகள் இருக்காங்க. அவர்கள் ஒவ்வொருவரையும் தொடர்பு கொண்டு பிரச்சாரத்தை தொடங்குவோம். கலைஞரின் சிந்தனைகளை, எழுத்துகளை மக்களிடம் கொண்டு செல்லவே கலைஞர் சிலைகள் திறக்கப்படுகிறது.

2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றிபெற்று தலைவரை முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வைப்போம். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் யாராக இருந்தாலும், எதிர்த்து யார் வந்தாலும், எப்பேர்பட்ட கூட்டணி அமைச்சாலும், எந்த திசையில் இருந்து வந்தாலும், டெல்லியில் இருந்து வந்தாலும் சரி.. லோக்கலில் இருந்து வந்தாலும் சரி.. திமுகவுக்கே வெற்றி என்பதை இந்நேரத்தில் சொல்லிக்கொள்கிறேன் என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

உதயநிதி ஸ்டாலின்: சிலர் குறைசொல்கிறார்கள்..! அவர்களுக்கு பதில்சொல்ல வேண்டிய அவசியம் இல்லை..!

திமுக அரசின் திட்டங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் ஏதோ ஒருவகையில் நிச்சயம் பயனளித்துக் கொண்டு இருக்கின்றன. ஆனால் சிலர் மட்டும் குறைசொல்கிறார்கள். அவர்களுக்கு நாம் வார்த்தைகளால் பதில்சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர், மரகதம் கந்தசாமி மண்டபம் முன்பு புதிதாக வெண்கலத்தால் அமைக்கப்பட்ட கலைஞரின் திருவுருவ சிலை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில், உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, கலைஞர் சிலையை திறந்து வைத்தார்.

அதன் பின்னர், விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி அரங்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த விழாவில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 688 ஊராட்சிகளுக்கு கலைஞர்ஸ்போர்ட்ஸ் கிட் 33 வகையான விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 825 தொகுப்புகளை வழங்கினார். மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 295 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.34.34 கோடி மதிப்பில் வங்கி கடன் இணைப்புகளையும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் விளையாட்டு உபகரணங்களையும் – வங்கி கடன் இணைப்புகளையும் பெற்ற பயனாளிகளை வாழ்த்தி உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, திராவிட மாடல் அரசு விளையாட்டுதுறைக்கு தருகின்ற முக்கியத்துவத்தின் காரணத்தால் ஆண்களுக்கு நிகராக பெண்களும் விளையாட்டு துறையை நோக்கி வருகிறார்கள்.

நம் அரசின் திட்டங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் ஏதோ ஒருவகையில் நிச்சயம் பயனளித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் சிலர் மட்டும் குறைசொல்கிறார்கள். அவர்களுக்கு நாம் வார்த்தைகளால் பதில்சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே காலத்தில் இறங்கிய முதலமைச்சர்..!

கோயம்புத்தூரில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை, கோயம்புத்தூர் தங்கநகை தயாரிப்பாளர்கள் சங்கம், கோயம்புத்தூர் தங்க நகைக்கடை சங்கம், தங்கபொன் சங்கம், கோயம்புத்தூர் பொற்கொல்லர் கவுன்சில், கோயம்புத்தூர் கைவினைஞர்கள் தங்கநகை தயாரிப்பாளர்கள் சங்கம், சான்றளிக்கப்பட்ட பொற்கொல்லர் சங்கம்.

தமிழ்நாடு விஸ்வகர்மா பேரவை, சுவாமி விவேகானந்தா கலாச்சார சங்கம், டைமண்ட் இந்தியா, ராயல் பெங்கால் சங்கம், டி.எம்.கே. தங்க நகை உற்பத்தியாளர்கள் மற்றும் அனைத்து தொழிலாளர் நல சங்கம். கோயம்புத்தூர் பொற்கொல்லர் சங்கம், தென் மாவட்ட மாநாட்டு வகுப்பு தமிழ் விஸ்வகர்மா உறவின்முறை சங்கம், கோவை மாவட்ட தங்கநகை கூலி தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் போன்ற பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் சந்தித்து, அனைத்து வசதிகளுடன் கூடிய தங்க நகை தொழில் பூங்கா அமைத்து தர வேண்டும் என்றும், பொற்கொல்லர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்ந்திட உதவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம் அளித்தனர்.

கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட முதலமைச்சர் அவர்கள், தங்கநகை தயாரிக்கும் கைவினைஞர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், கோயம்புத்தூர், தர்மராஜா கோயில் வீதி, கெம்பட்டி காலனியில் உள்ள தங்கநகை தயாரிப்பு பட்டறைகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, பொற்கொல்லர்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

அப்போது கோவை தங்கநகை தயாரிப்பாளர்கள் கூட்டு குழுமத்தின் தலைவர் ரகுநாதன் சுப்பையா முதலமைச்சர் அவர்களிடம், பொற்கொல்லர்களின் வாழ்வாதாரம் உயர்வதற்கும், தொழில் முன்னேற்றத்திற்கும் தேவையான உதவிகளை செய்திடுமாறு கோரிக்கை விடுத்தார். அவர்களது கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்த முதலமைச்சர், நம்பிக்கையுடன் இருங்கள், அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என தெரிவித்தார்.

கோயம்புத்தூர், தங்க நகை சார்ந்த கைவினைப் பொருட்களுக்கு புகழ்பெற்றது மட்டுமல்லாமல் இக்கைவினை பொருட்களின் தனித்தன்மையின் காரணமாக உள்நாடு மற்றும் வெளிநாடு சந்தைகளில் அதிகம் விரும்பப்படுகிறது. இங்கு சுமார் 2,000 முறையான நகை தயாரிப்பு கூடங்கள் மற்றும் சுமார் 40,000 வீட்டிலேயே அமையப்பெற்ற நகை தயாரிப்பு கூடங்கள் செயல்பட்டு, அவற்றின் வாயிலாக 1,50,000 நபர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். பெரும்பாலான கூடங்கள் பாதுகாப்பின்மை, உற்பத்தி அளவை அதிகரிப்பதற்கான முறையான கடன் பெறுவதில் சிரமம், சோதனை வசதியின்மை போன்ற சிக்கல்களை எதிர்கொள்கின்றன.

 

செல்வப்பெருந்தகை: திமுக – காங்கிரஸ் கூட்டணி எஃகு கோட்டை போன்றது..!” யாரும் சிதைக்க முடியாது..!

திமுக – காங்கிரஸ் கூட்டணி இணக்கமாகவும், வலிமையாகவும், எஃகு கோட்டை போன்ற உறுதியடனும் இருக்கிறது. இண்டியா கூட்டணியை யாரும் சிதைக்க முடியாது. இதில் எந்த சந்தேகமும் இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடியில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை சீரமைத்து, வலிமைப்படுத்துவதற்கான கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, கட்சியின் தேசிய செயலாளர் சூரஜ் ஹெக்டே, காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் ராஜேஸ்குமார், முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய செல்வப்பெருந்தகை, “நாட்டுக்கு சுதந்திரத்தை வாங்கி கொடுத்தது காங்கிரஸ் கட்சி. வேறு கட்சியினரால் இதைக் கூற முடியுமா? காங்கிரஸ் கட்சியால் மட்டுமே கூற முடியும். காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தம் எல்லோருக்கும் சேர்ந்த சித்தாந்தம். அந்த அளவுக்கு காங்கிரஸ் கட்சி கொள்கை கோட்பாடு உள்ளது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒரு கொடி பறக்கிறது என்றால் அது காங்கிரஸ் கட்சியின் கொடி தான்.

கூட்டணி குறித்து பேசும்போது கூட்டணி கட்சியினர் கிராம கமிட்டி உள்ளதா எனக் கேட்கிறார்கள். 100 சதவீதம் கிராமக் கமிட்டி கட்டமைப்பை உருவாக்க இருக்கிறோம். கிராம கமிட்டி மற்றும் பூத் கமிட்டிகளை அமைக்கும் வரை நாங்கள் தூங்கப் போவதில்லை. மற்ற கட்சியினர் எல்லாம் எங்களிடம் கமிட்டி உள்ளது என கூறுகிறார்கள். அதுபோல எங்களிடம் 100 சதவீதம் கமிட்டி இருக்கும்.

எதைப் பற்றியும் கவலைப்படாமல், மக்களைப் பற்றி மட்டுமே கவலைப்படும் தலைவர் ராகுல் காந்தி தான். மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்றால் காங்கிரஸ் கட்சி இந்தியாவில் தலைமை ஏற்க வேண்டும். ராகுல் காந்தி தலைமை ஏற்க வேண்டும் என நாம் ஆசைப்பட்டால் மட்டும் போதாது, கடுமையாக உழைக்க வேண்டும்; கட்சியை பலப்படுத்த வேண்டும்” என செல்வப்பெருந்தகை பேசினார்.

மாவட்ட முன்னாள் நிர்வாகி உட்பட 30-க்கும் மேற்பட்ட பாஜகவினர் திமுகவில் இணைந்தனர்..!

தமிழகம் முன்னேறிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையே தேவை என்று உணர்ந்து, பாஜகவை சேர்ந்த, கரூர் மாவட்ட முன்னாள் இளைஞரணி தலைவர் M.K.கணேசமூர்த்தி மற்றும் 30-க்கும் மேற்பட்ட பாஜகவை சேர்ந்த இளைஞர்கள் செந்தில் பாலாஜி முன்னிலையில் தங்களை திமுகவில் இணைந்தனர்.

சீமானுக்கு கீதா ஜீவன் பதிலடி: திமுகவிற்கு எவரும் பாடம் எடுத்து கூச்சல் போட வேண்டியதில்லை..!

தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுத்து கூச்சல் போட வேண்டியதில்லை என சீமானுக்கு, அமைச்சர் கீதா ஜீவன் பதிலளித்துள்ளார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது அறிக்கையில், ‘‘தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை நடைமுறையில் உள்ள நிலையில், வன்முறைக்கு இலக்காகும் பெண்களுக்கு உதவ தமிழக அரசு அமைக்கும் உதவி மையத்தில் பணிபுரிய தமிழ், ஆங்கிலம், இந்தி என மும்மொழி தெரிந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்தி தெரிந்தால்தான் வேலைவாய்ப்பு என்று திமுக அரசு கூறுவது அப்பட்டமான இந்தி திணிப்பாகும்’’ என சீமான் அந்த அறிக்கையில் தெரிவித்து இருந்தார்.

சீமான் அறிக்கைக்கு பதிலளித்து அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்ட அறிக்கையில், சமூக நலத்துறையின் கீழ் இயங்கும், சமூக நல ஆணையரகம் மூலம் பாதிப்புக்கு உள்ளாகும் மகளிருக்கு உதவ பெண்களுக்கான கட்டுப்பாட்டு மையம், “மகளிர் உதவி எண். 181” சென்னையில் செயல்பட்டு வருகிறது. மகளிர் உதவி எண் கட்டுப்பாட்டு மையத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பும் வகையில், tn.gov.in என்ற இணையதளத்தில் ஆட்சேர்ப்புக்கான அறிவிக்கை, சமூக நல ஆணையரக இணை இயக்குநரால் பதிவேற்றம் செய்யப்பட்டது.

அதில் “அழைப்பு ஏற்பாளர்” என்று குறிப்பிடப்பட்டுள்ள பணியிடத்துக்கு தேவையான தகுதிகள் என தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி என தவறுதலாக பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த ஆட்சேர்ப்புக்கான அறிவிக்கை தமிழக அரசின் கவனத்துக்கு வந்தவுடன், அவ்விளம்பரம் உடனடியாக இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டு, தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரிந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று திருத்தப்பட்ட ஆட்சேர்ப்பு அறிவிக்கை உடனடியாக பதிவேற்றம் செய்யப்பட்டது.

மேலும், தவறுதலாக இணையத்தில் பதிவேற்றம் செய்த இணை இயக்குநர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாய்மொழியாம் தமிழ் மொழியினை உயிருக்கும் மேலாய் மதிக்கும் திமுக தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அனைத்து அரசுத் துறைகளிலும் தமிழ் மட்டுமே முக்கிய மொழியாக உள்ளது. நீதிமன்றம், மத்திய அரசுடனான கடிதப் போக்குவரத்து போன்றவற்றுக்கு மட்டுமே ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது.

தமிழ்த்தாய் வாழ்த்து, அய்யன் திருவள்ளுவருக்கு வள்ளுவர் கோட்டமும், 133 அடியில் வானுயர சிலையும் அமைத்தது, உலகத் தமிழ் மாநாடு நடத்தியது, தமிழுக்கு செம்மொழி சிறப்பு பெற்றுத் தந்தது என எண்ணிலடங்கா பெருமைகள் கொண்டது தான் திமுக வரலாறு. தமிழர் பெருமை கூறும் கீழடி அருங்காட்சியகம் அமைத்து, உலகத்தின் பார்வையை நம் மீது திருப்பியது அண்மைக் கால வரலாறு. மேலும், அரசுப்பணிகளில் தமிழ் மொழியில் பயின்றவருக்கு முன்னுரிமை அளித்து அரசாணை வெளியிட்டது திராவிட மாடல் அரசு.

தமிழக அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழக இளைஞர்களை 100 சதவீதம் நியமனம் செய்யும் பொருட்டு, அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தாள் தகுதித் தேர்வாக கட்டாயமாக்கப்பட்டது. இவ்வாறாக தமிழ்மொழி வளர்ச்சிக்கான இவ்வரசின் பல்வேறு சாதனைகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

ஒரு அரசு அலுவலர் செய்த தவறை வைத்துக் கொண்டு அரசியல் செய்யும் நிலையில் சிலர் உள்ளதைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது. தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுத்து கூச்சல் போட வேண்டியதில்லை. இதனால் மக்கள் ஏமாறப் போவதில்லை என அந்த அறிக்கையில் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

வானதி சீனிவாசன் கோரிக்கை: முதலமைச்சர் அடிக்கடி கோயம்புத்தூர் வரவேண்டும்..!

முதலமைச்சர் வருகையையொட்டி கோயம்புத்தூரில் பல்வேறு பகுதிகளில் சாலைகள் அமைக்கப்படுகிறதென்றால் அடிக்கடி முதலமைச்சர் கோயம்புத்தூர் வரவேண்டும் என்று கோரிக்கை வைப்பேன் என பாஜக MLA வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.  கோயம்புத்தூர் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகில் பேருந்து நிழற்குடை திறப்பு விழா இன்று நடைபெற்றது. கோயம்புத்தூர் தெற்கு தொகுதி MLA வானதி சீனிவாசன் நிழற்குடையை திறந்து வைத்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்களின் வானதி சீனிவாசன் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, கோயம்புத்தூர் தெற்கு தொகுதிக்கு அதிகமான நிதி அங்கன்வாடிகளுக்குத்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் விமான நிலைய விரிவாக்கத்துக்கு தேவையான நிலத்தை தமிழக அரசு ஆர்ஜிதம் செய்து மத்திய அரசிடம் ஒப்படைத்துள்ள நிலையில், அந்த நிலம் முழுவதும் காலி செய்து வழங்கப்படவில்லை. இதனால் விரிவாக்க திட்ட கட்டமைப்பு பணிகள் தொடங்குவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதுகுறித்த விவரம் மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து மத்திய அரசு கேட்கும் தகவல்களை தமிழக அரசு விரைவில் அனுப்ப வேண்டும் என முதலமைச்சரின் கோயம்புத்தூர் வருகையின் போது வலியுறுத்தப்படும். வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் பாஜகவின் லட்சியம். உணவு சார்ந்து மொழி சார்ந்து பாஜக மீது வைக்கப்படும் விமர்சனங்கள் உண்மையல்ல. கடந்த முறை முதலமைச்சர் கோயம்புத்தூர் வந்தபோது பல கோரிக்கைகள் உள்ளடக்கிய மனுவை வழங்கினேன். அவற்றில் சில நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து நடிகர் விஜய் கருத்து கூறியுள்ளார். உண்மையில் சாதக பாதகங்களை யோசிக்க வேண்டும். மற்றவர்கள் கூறுகிறார்கள் என்பதற்காக எதிர்க்கக் கூடாது. முதலமைச்சர் வருகையையொட்டி கோயம்புத்தூரில் பல்வேறு பகுதிகளில் சாலைகள் அமைக்கப்படுகிறதென்றால் அடிக்கடி முதலமைச்சர் கோயம்புத்தூர் வரவேண்டும் என்று கோரிக்கை வைப்பேன்முதலமைச்சர் வருகையையொட்டி கோயம்புத்தூரில் பல்வேறு பகுதிகளில் சாலைகள் அமைக்கப்படுகிறதென்றால் அடிக்கடி முதலமைச்சர் கோயம்புத்தூர் வரவேண்டும் என்று கோரிக்கை வைப்பேன் என பாஜக MLA வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

விஜய் பாணியில் ஸ்டாலின் அட்டாக்: புதுசா கட்சி தொடங்குறவன் எல்லாம் திமுக அழியணும்னு நினைக்கிறாங்க..!

யார் யாரோ, வருகிறவர்கள் எல்லாம் புதிது புதிதாக கட்சித் தொடங்குபவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும், ஒழிய வேண்டும், என்று கூறி வருகின்றனர் என விஜய் பாணியில் மு.க. ஸ்டாலின் பதிலளித்து உள்ளார்.

நடிகர் விஜய் புதிதாக தொடங்கியுள்ள தவெக முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி நடைபெற்றது. மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது தான் எங்களின் கொள்கை. கொள்கை ரீதியாக பாஜகவும், அரசியல் ரீதியாக திமுகவும் எங்கள் எதிரிகள் என திமுக குறித்து கடும் விமர்சனங்களை விஜய் முன்வைத்டூ இருந்தார்.

மேலும் விஜய் பேசுகையில், பிளவுவாத அரசியல், ஊழல் மலிந்த அரசியல் ஆகிய இரண்டையும் எதிர்க்க போகிறோம். மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி எனக் கூறி ஏமாற்றுகின்றனர். எங்கள் கட்சி வண்ணம் தவிர வேறு வண்ணத்தை எங்கள் மீது பூச முடியாது. மதச்சார்பற்ற சமூக நீதி கொள்கையை முன்னிறுத்தி செயல்படுவோம் என விஜய் பேசினார்.

தொடர்ந்து பேசுகையில், திராவிட மாடல் என்ற பெயரில் பெரியார், அண்ணா புகைப்படங்களை வைத்து கொண்டு தமிழ்நாட்டை சுரண்டும் குடும்ப சுயநல அரசியல் செய்பவர்கள்தான் தான் தங்களது அரசியல் எதிரி இவ்வாறு ஆளுங்கட்சியான திமுகவை தாக்கி விஜய் பேசியிருந்தார்.

விஜய் மாநாட்டில் பேசியது குறித்து அண்மையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, எல்லாவற்றுக்கும் எங்களின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலளித்துள்ளார். அதற்கு மேல் பதில் சொல்ல விரும்பவில்லை என நாசுக்காக தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னை கொளத்தூர் தொகுதியில் முதல்வர் படைப்பகத்தை திறந்து வைத்து, அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது, திமுக அரசு சிறப்பாகச் செயல்படுவது சிலருக்கு பிடிக்கவில்லை. யார் யாரோ, வருகிறவர்கள் எல்லாம் புதிது புதிதாக கட்சித் தொடங்குபவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும், ஒழிய வேண்டும், என்று கூறி வருகின்றனர்.

அவர்களுக்கெல்லாம் நான் பணிவோடு கேட்டுக் கொள்வது, நான்கு ஆண்டுகளைத் தொடக்கூடிய நிலையில் இந்த ஆட்சி செய்திருக்கக்கூடிய சாதனைகளை எண்ணிப் பார்க்க வேண்டும். அண்ணா கூறுவதுபோல் ஒரே வார்த்தையில் சொல்வதென்றால், வாழ்க வசவாளர்கள்! அதைத்தான் நானும் சொல்ல விரும்புகிறேன். எங்களுடைய போக்கு, மக்களுக்கு செய்யக்கூடியதுதான்.

தேவையில்லாமல் எல்லோருக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. தேவையும் இல்லை. எங்களுடைய நேரத்தை வீணடிக்க நாங்கள் விரும்பவில்லை. மக்களுக்கான பணி செய்வதற்கே எங்களுக்கு நேரம் போதவில்லை. எந்த நம்பிக்கையோடு மக்கள் இந்த ஆட்சியை எங்களிடம் ஒப்படைத்தார்களோ அந்த நம்பிக்கையைக் காப்பாற்றுவோம்” என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

எடப்பாடி பழனிசாமி: திமுக ஆட்சியில் பட்டியல் இன மக்களுக்கு எந்தவித பாதுகாப்பு இல்லை..!

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் பட்டியல் இன மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது. திமுக ஆட்சியில் பட்டியல் இன மக்களுக்கு எந்தவித பாதுகாப்பும் கிடையாது. என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் எடப்பாடியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அதன் பின்னர், அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, அதிமுக மக்களுக்காக தொடங்கி, உழைக்கிற கட்சியாக உள்ளது. தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் இருந்தபோது நிறைய திட்டங்களை மக்களுக்காக செய்துள்ளோம். அப்படி இருக்கும் போது தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அதிமுகவை எப்படி விமர்சிப்பார்? அவர் விமர்சிக்காதது மற்றவர்களின் ஆதங்கமாக உள்ளது. மேலும் தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் திமுக ஆட்சியில் நடக்கும் ஊழல்கள் குறித்து விசாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

திமுக கூட்டணி பலமாக இருப்பதாக சொல்வது நம்பத்தகுந்ததாக இல்லை. 3 ஆண்டு காலம் எந்த ஒரு போராட்டத்தையும் நடத்தாத திமுக கூட்டணி கட்சிகள், தற்போது ஒவ்வொரு போராட்டமாக அறிவித்து வருகிறார்கள். கூட்டணி ஆட்சி குறித்து காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். இவ்வளவு பிரச்சனைகளை வைத்துக்கொண்டு திமுக கூட்டணி பலமாக இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் பட்டியல் இன மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது. திமுக ஆட்சியில் பட்டியல் இன மக்களுக்கு எந்தவித பாதுகாப்பும் கிடையாது. அதிமுகவில் எந்த ஒரு பிளவும் இல்லை. கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீது பொதுக்குழு உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றி நீக்கப்பட்டுள்ளார்கள். அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு இனிமேல் இடம் கிடையாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

விஜயலட்சுமி: உங்க கட்சியில் உள்ள ஓட்டைகளை எல்லாம் சரி செய்யுங்கள் சீமான்..! விஜய் கூமுட்டையா..!?

தவெக முதல் மாநில மாநாடு முடிந்த பின்னர் பல அரசியல் இயக்கங்கள் விஜய் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மிகவும் காட்டமாகவே விமர்சித்தார். ஒரு கட்டத்தில், விஜய்யை கூமுட்டை எனவும் லாரி அடித்துச் செத்துப்போவாய் எனவும் சீமான் கூறியது அரசியல் நாகரீகத்தினை அவமதிக்கும் வகையில் இருப்பதாக தவெக தொண்டர்கள் தெரிவித்தனர்.

விஜய்யுடன் ப்ரண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகை விஜயலட்சுமி ஏற்கனவே சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வீடியோ வெளியிட்டும் உள்ளார். தமிழ்நாடு காவல்துறையில் புகாரும் அளித்துள்ளார். இந்நிலையில், விஜய்யை மோசமாக விமர்சித்த சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ” என்ன மிஸ்டர் சீமான், சாபமெல்லாம் விடுகின்றீர்கள்? விஜய் அண்ணனுக்கு ரோட்டின் இந்தப் பக்கம் இரு, அல்லது அந்தப் பக்கம் இரு, நடுவில் இருந்தால் லாரி அடித்துச் செத்துப்போவீர்கள் என சாபம் எல்லாம் விடுகின்றீர்கள்.

நீங்க என்ன ரொம்ப உத்தமரா மிஸ்டர் சீமான். நான் உங்க ரூட்டுக்கே வரேன். அண்ணன் விஜய், திமுக என இவர்கள் எல்லாம் உங்கள் பார்வையில் கொள்கை ரீதியாகத்தானே தவறாக உள்ளதாக கூறுகின்றீர்கள். கொள்கை ரீதியாக தவறு செய்பவர்களே லாரி அடித்துச் செத்துப்போவர்கள் என்றால், எங்களைப் போன்ற பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்த நீங்க, எது அடித்துச் சாகமாட்டீர்கள் மிஸ்டர் சீமான். முதலில் உங்க கட்சியில் உள்ள ஓட்டைகளை எல்லாம் சரி செய்யுங்கள். திருச்சி சூர்யா உங்களின் ஆபாச வீடியோக்களை வெளியிட்டு, உங்களின் மானத்தினை வாங்கப்போகின்றாராம். முதலில் அதைப்போய் கவனியுங்கள்.

திமுகவுக்கு என்ன செய்ய வேண்டும் என திமுகவுக்குத் தெரியும், விஜய் அண்ணனுக்கு என்ன செய்யனும்னு விஜய் அண்ணனுக்குத் தெரியும். நீங்கதான் கூமுட்டை மாதிரி அலைஞ்சுட்டு இருக்கீங்க. எனவே உத்தமர் போலவும், கண்ணகி மாதிரியும் சாபம் எல்லாம் விடாதீங்க. நான் தான் உங்களுக்கு 24 மணி நேரமும் சாபம் விட்டுக்கொண்டு உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரப்பி வருகின்றனர்.