சல்மான் கானின் மாஜி காதலி: லாரன்ஸ் பிஷ்னாய் ஒன்றும் குழந்தை அல்ல; அவர் மக்களை கொல்கிறார்; இதை ஏற்க முடியாது..!

லாரன்ஸ் பிஷ்னாய் ஒன்றும் குழந்தை அல்ல; அவர் மக்களை கொல்கிறார்; இதை ஏற்க முடியாது. வரும் நவம்பரில் லாரன்ஸ் பிஷ்னாயை சந்தித்து பேச விரும்புகிறேன் என சல்மான் கானின் மாஜி காதலி பேட்டி அளித்துள்ளார்.

மகாராஷ்டிரா அரசியல் தலைவரும், நண்பருமான பாபா சித்திக் கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னாய் கும்பல் மீண்டும் கொலை மிரட்டல் விடுத்ததை அடுத்து, தனது பாதுகாப்புக்காக ரூ.2 கோடி மதிப்பிலான புல்லட் புரூப் காரை சல்மான் கான் வாங்கியுள்ளார்.

இந்திய வாகன சந்தையில் கிடைக்காத புல்லட் ஷாட்களை கூட தடுக்கும் திறன் கொண்ட கண்ணாடி கவசங்கள் உள்ள கார், துபாயில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் காரை இந்தியாவுக்குக் கொண்டுவர நிறைய பணம் செலவாகும் என்று கூறுகின்றனர். இந்த வெடிமருந்துகளை கண்டறிந்து எச்சரிக்கும் அமைப்பு, உள்ளே யார் இருக்கிறார்கள் என்பதை அடையாளம் காண முடியாத வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, சல்மான் கான் மற்றும் அவரது தந்தைக்கு எதிராக குண்டு துளைக்காத வாகனம் இறக்குமதி செய்யப்பட்டது. இந்நிலையில், சல்மான் கான் தொகுத்து வழங்கும் தனியார் டிவி நிகழ்ச்சியின் படப்பிடிப்பிற்காக சுமார் 60 பேர் கொண்ட பாதுகாப்பு குழுவை அவர் நியமித்துள்ளார்.

இந்நிலையில், சல்மான் கானின் முன்னாள் காதலி சோமி அலி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, லாரன்ஸ் பிஷ்னாய் சமூகத்தினருக்கும், அவர்கள் மான்களை கடவுளாக வழிபாடு செய்வதற்கும் உள்ள தொடர்பு சல்மான் கானுக்கு தெரியாது. அதுகுறித்து அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். லாரன்ஸ் பிஷ்னாய் ஒன்றும் குழந்தை அல்ல; அவர் மக்களை கொல்கிறார்; இதை ஏற்க முடியாது. வரும் நவம்பரில் லாரன்ஸ் பிஷ்னாயை சந்தித்து பேச விரும்புகிறேன்; அவருடைய மூளையில் ஏற்பட்டுள்ள தவறான பதிவுகளை சரி செய்ய விரும்புகிறேன்.

அவருக்கு உளவியல் சிகிச்சை அளிப்பேன். தன்னை ஒரு கேங்க்ஸ்டர் என்று அழைத்துக் கொள்கிறார். சட்டம் படித்துள்ளார்; வழக்கறிஞராக பிரபலம் அடைய வேண்டியது தானே; தொலைகாட்சிகளில் டிஆர்பி வேண்டுமானால், வக்கீலாக மாறி டிஆர்பியை எடுங்கள்’ என்றார். கடந்த சில ஆண்டுக்கு முன் சல்மான் கானும், சோமி அலியும் காதலித்து வந்தனர்.

நடிகை ஐஸ்வர்யா ராய்க்காக சல்மான் கான் தன்னை விட்டு பிரிந்து சென்றதாக சோமி அலி ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார். அதன்பிறகு, பல சந்தர்ப்பங்களில் சல்மான் கான் மீது அவர் குற்றம் சாட்டி வந்தார். ஆனால் இப்போது லாரன்ஸ் பிஷ்னாயிடம் பேச்சுவார்த்தை நடத்தி ல்மான் கானுக்கு உதவ விரும்புவதாக சோமி அலி கூறியது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சோமி அலி : லாரன்ஸ் பிஷ்னாய் சட்டம் படித்துள்ளார்..! வழக்கறிஞராக பிரபலம் அடைய வேண்டியது தானே..!

சல்மான் கானை விடாது துரத்தும் மான்..! சல்மான் கான் உயிருடன் இருக்க வேண்டுமா ரூ.5 கோடி கொடுங்க..!

நடிகர் சல்மான் கான் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், அவருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், சல்மான் கான் உயிருக்கு ரூ.5 கோடி பேரம் பேசப்பட்டிருக்கிறது என மும்பை போக்குவரத்து காவல் பிரிவுக்கு மர்ம நபர்களால் மெசேஜ் அனுப்பப்பட்டு உள்ளது.

கடந்த 1998-ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் படப்பிடிப்பின்போது, அரிய வகை மானை வேட்டையாடியதாக சல்மான் கான் மீது குற்றச்சாட்டு இருக்கிறது. இதனை குறிப்பிட்டு, அவர் பிஷ்னோய் இன மக்களிடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிலர் வலியுறுத்தி வருகின்றனர். சல்மான் கான் செய்த குற்றத்திற்காக அவருக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என்று, மாஃபியா கும்பல் தலைவனான லாரன்ஸ் பிஷ்னோய் அறிவித்திருக்கிறார்.

இந்த அறிவிப்பையடுத்து, சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்தன. அவருக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்பட்ட மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சரான பாபா சித்திக் சமீபத்தில் கொல்லப்பட்டார். அவரை கொன்றது லாரன்ஸ் பிஷ்னோய் கேங்தான் என்று சொல்லப்படுகிறது. தற்போது லாரன்ஸ் குஜராத் சிறையில் இருந்தாலும், அங்கிருந்தவாரே அவரது ஆட்களை கொண்டு பல்வேறு குற்ற செயல்களை செய்து வருகிறார்.

இப்படிபட்ட சூழ்நிலையில், சல்மான் கானுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவாகியுள்ளார். இதனால் சல்மான் கானுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தாலும், இந்த அச்சுறுத்தலால் படப்பிடிப்புகளில் நிம்மதியாக பங்கேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், சல்மான் கான் உயிருடன் இருக்க வேண்டும் எனில் ரூ.5 கோடி வேண்டும் என்று மர்ம நபர்கள், மும்பை போக்குவரத்து காவல்துறைக்கு மெசேஜ் அனுப்பியுள்ளனர்.

மும்பை போக்குவரத்து காவல்துறையின் வாட்ஸ்அப் எண்ணுக்கு வந்த மெசேஜில், “லாரன்ஸ் பிஷ்னோய் உடனான பகையை முடிவுக்கு கொண்டு வந்து, சல்மான் கான் உயிருடன் இருக்க வேண்டும் எனில், ரூ.5 கோடி கொடுக்க வேண்டும். கொடுக்க தவறினால், பாபா சித்திக்கை விட சல்மான் கானின் நிலை மோசமடைந்துவிடும். இந்த அச்சுறுத்தலை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்” என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

உதயநிதி ஸ்டாலின்: “இது F4 பந்தயம் தான்…! F1 பந்தயத்தில் கூட நாய்குட்டி, முயல்குட்டி, மான்குட்டி எல்லாம் ஓடிவரும்…!

“ரேஸ் தடத்தில் ஒரு நாய்குட்டி ஓடி வந்ததை கூட விமர்சனம் செய்தனர். இது F4 பந்தயம் தான். F1 பந்தயத்தில் கூட நாய்குட்டி, முயல்குட்டி, மான்குட்டி எல்லாம் ஓடிவரும். இதுகூட தெரியாத அறிவாளிகள்தான் இது கார் ரேஸா, நாய் ரேஸா என்று நம்மை விமர்சனம் செய்தனர்என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னையில் நடந்த F4 கார் பந்தயத்தில் பணியாற்றிய அதிகாரிகள், ஊழியர்கள் அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “விளையாட்டுத் துறையை சார்ந்த அத்தனை பேருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கார் பந்தயம் நடந்து முடியும் வரை அடிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வந்து வேலை செய்த தூய்மை பணியாளர்களுக்கும் என்னுடைய நன்றிகள். இதனை நடத்துவதற்கான மிகப்பெரிய சவாலே இந்த பந்தயம் மிக முக்கியமான ஒரு பகுதியில் நடந்ததுதான். மக்கள் நடமாட்டம், வாகன நெரிசல் மிகுந்த பகுதியில் நடப்பதால் கண்டிப்பாக டிராபிக் ஜாம் ஆகும்.

அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி இந்த போட்டியை எப்படியாவது நிறுத்திவிடவேண்டும் என்று நிறைய பேர் பிளான் செய்தனர். ஆனால் ஒரு பக்கம் பந்தயம் நடந்து கொண்டிருந்தது. இன்னொரு பக்கம் டிராபிக் சரியான முறையில் நகர்ந்து கொண்டிருந்தது. அதை பார்த்து நம்மை விமர்சித்தவர்கள் கூட பாராட்ட தொடங்கிவிட்டனர்.

சின்ன விபத்து நடந்தால் கூட அதை ஊதி பெரிதாக்க நிறைய பேர் காத்திருந்தனர். ரேஸ் தடத்தில் ஒரு நாய்குட்டி ஓடி வந்ததை கூட விமர்சனம் செய்தனர். இது F4 பந்தயம் தான். F1 பந்தயத்தில் கூட நாய்குட்டி, முயல்குட்டி, மான்குட்டி எல்லாம் ஓடிவரும். இதுகூட தெரியாத அறிவாளிகள்தான் இது கார் ரேஸா, நாய் ரேஸா என்று நம்மை விமர்சனம் செய்தனர்.

ஆனால் அதையெல்லாம் தவிடுபொடியாக்கி இவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறோம். கார் பந்தயம் தேவையா? அவசியமா? என்று விமர்சித்தவர்கள் எல்லாம் இதை நடத்தவில்லை என்றாலும் விமர்சித்திருப்பார்கள்” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.