திண்டுக்கல் சீனிவாசன்: கலர் கலராக வண்ணம் தீட்டிய ரெயில்களை இயக்கி மக்களின் பணம் சுரண்டும் மத்திய அரசு ..!?

தமிழகத்தில் மின் கட்டணம், குடிநீர், கழிவு நீர் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பத்திர பதிவு கட்டணம் உயர்வு,சட்டம்-ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.

இதன்படி மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் தலைமையில் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடக்கிறது. மாநகராட்சிக்குட்பட்ட வட்டங்கள் மற்றும் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் இன்று காலை 10.30 மணி அளவில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் திரண்டு மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரையில் நடைபெற்ற சங்கிலி போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், “அண்ணாவால் வளர்ந்த கட்சி, எம்.ஜி.ஆரால் வளர்க்கப்பட்ட கட்சி இன்று உதயநிதியிடம் சென்றுள்ளது. கலர் கலராக வண்ணம் தீட்டிய ரெயில்களை இயக்கி மக்களிடம் பணம் சுரண்டும் அரசாக மத்திய அரசு உள்ளது. அதைக் கண்டிக்க வேண்டிய மாநில அரசு வேடிக்கை பார்க்கிறது. வரும் சட்டசபை தேர்தலில் 200 இடங்களுக்கும் மேலாக அதிமுக வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது” என திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.

சமையல் எண்ணெய் வகைகளுக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியது..!

சுத்திகரிக்கப்படாத பாமாயில், சோயா எண்ணெய், சன் ஃபிளவர் ஆயில் ஆகியவற்றுக்கான இறக்குமதி வரி 5.5%லிருந்து 27.5%ஆகவும் சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய்களுக்கான இறக்குமதி வரி 13.75%லிருந்து 35.75%ஆக உயர்ந்துள்ளது. எண்ணெய் வகைகளுக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியதை அடுத்து, சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.25 வரை கிடுகிடு உயர்ந்துள்ளது.

இதுதொடர்பாக நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்ட அறிப்பில், ‛‛Crude வகை சோயாபீன், சூரியகாந்தி மற்றும் பாமாயில் உள்ளிட்ட சமையல் எண்ணெய்களின் மீதான அடிப்படை சுங்க வரி பூஜ்ஜியத்தில் இருந்து 20 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த 3 வகையான சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களின் இறக்குமதி வரி என்பது 12.5 சதவீத்தில் இருந்து 32.5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

உலகில் அதிகளவில் சமையல் எண்ணெய் இறக்குமதி நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ள நிலையில் நம் நாட்டுக்கு தேவையான உணவு பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது மத்திய அரசு இறக்குமதி வரியை நிர்ணயம் செய்துள்ளது.இந்தியாவை பொறுத்தவரை தாவரங்கள் மூலம் கிடைக்கும் எண்ணெய் வித்துகளின் வழியாக உற்பத்தியாகும் சமையல் எண்ணெயின் தேவையில் 70 சதவீதத்தை இறக்குமதி மூலமாக தான் பூர்த்தி செய்து வருகிறது.

குறிப்பாக இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்தில் இருந்து அதிகளவில் பாமாயில் நமக்கு இறக்குமதியாகிறது. அதேபோல் அர்ஜென்டினா, பிரேசில், ரஷ்யா, உக்ரைனில் இருந்து சோயாபீன் எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் இறக்குதி செய்யப்படுகிறது. இந்நிலையில் தான் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு அதிரடியாக உயர்த்தி உள்ளது.

மோடியின் கால் விரல் நகத்தில் உள்ள தூசுக்கு கூட சமமாக மாட்டீர்கள்…! மக்கள் போட்ட பிச்சையில் எம்பியாகியுள்ளீர்கள்…!

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது திமுக எம்பி கனிமொழி பேசிய போது, தமிழகத்தின் வரலாறு பிரதமர் மோடிக்கு தெரியுமா? நாடாளுமன்றத்தில் செங்கோலை வைத்து அது சோழர் பரம்பரையில் இருந்து வந்ததாக சொன்னீர்கள். கண்ணகியின் கோபத்தால் பாண்டியனின் செங்கோல் தகர்ந்த கதை உங்களுக்கு தெரியுமா. எங்கள் மீது இந்தியை திணிப்பதை விட்டுவிட்டு சிலப்பதிகாரத்தை படியுங்கள். அதில் உங்களுக்கான பாடம் நிறைய உள்ளது. இவ்வாறு கனிமொழி பேசியிருந்தார்.

இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். அவர் என் மண் என் மக்கள் பாதயாத்திரையின் போது தொண்டர்கள், பொதுமக்கள் மத்தியில் பேசியது, சகோதரி கனிமொழி அவர்கள் முதலில் பெரியாரை பற்றி படிக்க வேண்டும். பெரியார் சிலப்பதிகாரத்தை பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த 1951 -ம் ஆண்டு ஜூலை 22 ஆம்தேதி சேலத்தில் ஒரு மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் தந்தை பெரியார், கணவன் கோவலன் இறந்த நிலையில் கோபம் கொண்ட கண்ணகி ஒரு பக்கம் கொண்டையை எடுத்து மதுரை மீது எறிகிறாளாம். அது உடனே தீப்பிழம்பாக மாறி மதுரையையே சுட்டு எரித்துவிடுகிறதாம்.

இதை நம்ப முடிகிறதா. பாண்டியன் மன்னன் செய்த தவறுக்கு மதுரை மக்கள் சாம்பலாக வேண்டுமா. இதுதான் கற்புக்கரசிக்கு இலக்கணமா என பெரியார் கேள்வி எழுப்பியிருந்தார். எனவே பிரதமர் மோடியை சிலப்பதிகாரம் படிக்கச் சொல்ல வேண்டாம். பெரியார் சிலப்பதிகாரத்தை பற்றி என்ன சொல்லி இருக்கிறார் என நீங்கள் படியுங்கள்.

ஊழலுக்கு பிறந்தவர்கள் நீங்கள். சிறை சென்று திரும்பியவர்கள், 2ஜி முறைகேட்டில் சிக்கியவர்கள். கலைஞர் டிவியில் 3000 கோடி பணபரிவர்த்தனையில் சிக்கி சிறைக்கு சென்றவர். நீங்கள் எல்லாம் மோடியின் கால் விரல் நகத்தில் உள்ள தூசுக்கு கூட சமமாக மாட்டீர்கள். ஏதோ கருணாநிதி என்ற பெயர் இருப்பதால் மக்கள் போட்ட பிச்சையில் எம்பியாகியுள்ளீர்கள்.

நீங்கள் எல்லாம் பிரதமர் குறித்து பேசவே கூடாது. அவரை பற்றி நாடாளுமன்றத்தில் பேச எந்த தகுதியும் கிடையாது. பிரதமர் இரவும் பகலும் நாட்டு மக்களுக்காக உழைத்து வருகிறார். எதை படிக்க வேண்டும் என்பது அவருக்கு தெரியும். அதனால்தான் திருக்குறளை படிக்கிறார், அதனால்தான் கனியன் பூங்குன்றனாரை படிக்கிறார். அதனால்தான் சிலப்பதிகாரத்தையும் படிக்கிறார் என மிகவும் காட்டமாக விமர்சித்துள்ளார்.

மத்திய அரசுக்கு TTV தினகரன் கண்டனம்

TTV தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூடங்குளத்தில் மேலும் ஓர் அணுக்கழிவு மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது கண்டனத்திற்குரியது.

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகவும், நாடாளுமன்றத்தில் அணுசக்தி துறை அளித்த உறுதிமொழிக்கு மாறாகவும் அளிக்கப்பட்டிருக்கும் இந்த அனுமதியை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இப்படி ஓர் அணுக்கழிவு மையம் அமைவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.தினகரன் என தெரிவித்துள்ளார்

டெல்லியில் விவசாய அமைப்புகள் போராட்டம் 300 நாள் நிறைவு

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த நவம்பர் மாதம் முதல் போராட்டங்கள் நடந்து வருகின்றனர். இந்த விவசாய அமைப்புகளுடன் மத்திய அரசு 10-க்கும் மேற்பட்ட முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. 3 புதிய சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக இருப்பதால் இந்த பிரச்சினையில் முட்டுக்கட்டை நீடித்து வருகிறது.

இந்நிலையில் விவசாய அமைப்புகள் டெல்லியில் மேற்கொண்டுள்ள போராட்டம் நேற்றுடன் 300 நாள்களை நிறைவு செய்துள்ளது. இதுகுறித்து சம்யுக்த கிசான் மோர்ச்சா வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லி எல்லையில் லட்சக்கணக்கான விவசாயிகள் அமைதியாக நடத்தி வரும் அறப்போர் 300 நாள்களைக் கடந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசுக்கு தெளிவாகத் தெரிந்தாலும் மத்திய அரசு அவற்றை ஏற்க மறுகின்றனர், எனவே எங்களின் கோரிக்கைகளை ஏற்கும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர்.