பாஜக இணைந்த 12 மணி நேரத்தில் பாஜகவில் இருந்து விலகிய இஸ்லாமியர்கள்..

நாகப்பட்டினம் லோக்சபா தொகுதியில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வை. செல்வராஜ், அதிமுக சார்பில் சுர்சித் சங்கர், பாஜக சார்பில் எஸ்.ஜி.எம் ரமேஷ், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா உள்ளிட்டோர் களமிறங்கி உள்ளனர். இந்நிலையில், பாஜக வேட்பாளர் எஸ்.ஜி.எம் ரமேஷை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாகப்பட்டினம் அவுரி திடலில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது நாகூர் பகுதியை சேர்ந்த சமது என்பவர் மேலும் சில இஸ்லாமியர்களோடு பாஜகவில் இணைந்தார்.

இந்நிலையில், அண்ணாமலை முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து 12 மணி நேரத்தில் அவர் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஒட்டுமொத்த சமுதாயமும், தனது குடும்பமும் பாஜகவில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பாஜகவில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார் சமது. நாகூர் தர்காவில் பரம்பரை ஆதினமாக இருக்கும் சமது, அதிமுகவில் இருந்து, அமமுகவுக்கும், பின்னர் காங்கிரஸ் கட்சிக்கும் மாறினார். தேர்தல் சமயத்தில், காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு மாறிய நிலையில், தனது குடும்பத்தினரே எதிர்ப்பு தெரிவித்ததால் பாஜகவில் இருந்தும் விலகியுள்ளார்.

முத்தரசன் வாய் கொழுப்புடன் ஆணவத்துடன் பேசி வரும் அண்ணாமலை..!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

அதன்வரிசையில், ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்றத் தொகுதியில் பாஜக கூட்டணி கட்சி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வேணுகோபால் வேட்பாளரை ஆதரவாக அண்ணாமலை பிரச்சாரம் செய்தார். அப்போது, “1980இல் நடந்த விஷயங்களை எல்லாமே சம்பந்தமே இல்லாமல் திமுக இப்போது பேசி வருகிறார்கள். இந்தி- சமஸ்கிருதம், வடக்கு- தெற்கு எனப் பேசி வருகிறார்கள். அந்த பிஞ்சு போன செருப்பை அவர்கள் இன்னும் தூக்கி எறியவில்லை” என்று அவர் பேசினார்.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பலர் தங்கள் இன்னுயிரை ஈந்த நிலையில், அதைப் பிஞ்சு போன செருப்பு என அண்ணாமலை பேசியது சர்ச்சையானது. பல அரசியல் கட்சியினரும் ரும் அண்ணாமலை பேச்சைக் கடுமையாகச் சாடி வருகிறார்கள். அண்ணாமலையின் இந்த கருத்து குறித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் பேசுகையில், அண்ணாமலைக்கு இந்திய வரலாறு, தமிழ்நாட்டு வரலாறு, மொழி வரலாறு எதுவும் தெரியவில்லை என்று வாய் கொழுப்புடன் ஆணவத்துடன் பேசி வரும் அண்ணாமலைக்கு கோவை தொகுதியில் டெபாசிட் கூட கிடைக்காது என முத்தரசன் தெரிவித்துள்ளார்.

செல்லூர் ராஜு: கூமுட்டையாகத் தான் அண்ணாமலை இருக்கிறார்…!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

அதன்வரிசையில், ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்றத் தொகுதியில் பாஜக கூட்டணி கட்சி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வேணுகோபால் வேட்பாளரை ஆதரவாக அண்ணாமலை பிரச்சாரம் செய்தார். அப்போது, “1980இல் நடந்த விஷயங்களை எல்லாமே சம்பந்தமே இல்லாமல் திமுக இப்போது பேசி வருகிறார்கள். இந்தி- சமஸ்கிருதம், வடக்கு- தெற்கு எனப் பேசி வருகிறார்கள். அந்த பிஞ்சு போன செருப்பை அவர்கள் இன்னும் தூக்கி எறியவில்லை” என்று அவர் பேசினார்.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பலர் தங்கள் இன்னுயிரை ஈந்த நிலையில், அதைப் பிஞ்சு போன செருப்பு என அண்ணாமலை பேசியது சர்ச்சையானது. பல அரசியல் கட்சியினரும் ரும் அண்ணாமலை பேச்சைக் கடுமையாகச் சாடி வருகிறார்கள். இந்தச் சூழலில் அண்ணாமலையின் இந்த கருத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கடுமையாக எதிர்வினையாற்றி உள்ளார். செய்தியாளர்களிடம் நல்ல சிரித்துப் பேசிக் கொண்டு இருந்தவர் அண்ணாமலையின் இந்த கருத்து குறித்துக் கேட்டதும் டென்ஷன் ஆனார்.

அப்போது, “அவரே ஒரு செருப்பு சமானம் தான். சுதந்திரப் போராட்டத்திற்கு ஈடான ஒரு போராட்டம். மொழிக்காக உயிர் நீத்த தியாகிகளைக் கொண்டது தான் தமிழ் இனம். தமிழருக்கு என்று தனியாக ஒரு குணம் இருக்கிறது. மொழிக்காகப் போராடி உயிர் நீத்த வரலாறு தமிழர்களுக்கு இருக்கிறது. என்ன காரணம் காங்கிரஸ் பேரியக்கத்தை வேரோடு வேராக அழித்து, 52 ஆண்டுகள் ஆட்சி இன்னும் தமிழகத்தில் அவர்கள் ஆட்சிக்கு வரவே முடியாத சூழல் தான் இருக்கிறது. தேசிய கட்சிக்கு அப்படியொரு நிலைமையை ஏற்படுத்தியதே தமிழர்கள் தான். அதைக் கொச்சைப்படுத்துகிறார் என்றால் அது அவரது குணம், தரம் ஆகியவற்றைக் காட்டுகிறது.

தம்பி அண்ணாமலை கிட்ட நான் ஒரு கேள்வி கேட்கிறேன். இந்தி படித்தவர்கள் அதிகம் பேர் ஏன் தமிழ்நாட்டுக்கு வேலை தேடி வந்துள்ளனர். ஆனால் இங்கே தமிழும் ஆங்கிலமும் படித்தவர்கள் வெளிநாடுகளிலும் இஸ்ரோவிலும் இருக்கிறார்கள். பல உயர்ந்த பொறுப்புகளில் இருக்கிறார்கள். இதெல்லாம் அண்ணாமலைக்குத் தெரிய வேணாமா. இது கூட தெரியாத கூமுட்டையாகத் தான் அண்ணாமலை இருக்கிறார். அப்படி தான் அவரை பார்க்க வேண்டும்” என செல்லூர் ராஜு தெரிவித்தார்.

சீட் கம்பெனி போல..! அதிக வாக்குகள் பெற்றுத்தரும் நிர்வாகிகளுக்கு கார், பைக் பரிசு.. !

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதன்வரிசையில், கிருஷ்ணகிரி மக்களவை தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றுத் தரும், பாமக, பாஜக மாவட்ட செயலாளர்கள், வாக்குச்சாவடி முகவர்களுக்கு கார், இருச்சக்கர வாகனம், ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும் என பாஜக வேட்பாளர் நரசிம்மன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி, கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி உள்ளிட்ட 6 தொகுதிகளைக் கொண்டது. இந்த மக்களவைத் தொகுதியில் அதிமுக, பாஜக, காங்கிரஸ், நாம் தமிழர் உட்பட அரசியல் கட்சியைச் சேர்ந்த 12 வேட்பாளர்கள், 15 சுயேச்சைகள் உட்பட 27 களத்தில் உள்ளனர். இதனிடையே கட்சியினர் ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிகளிலும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம், ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் எம்பி நரசிம்மன் போட்டியிடுகிறார். இவர் பாஜகவில் மாநில செய்தி தொடர்பாளராகவும் உள்ளார். நேற்று, ஊத்தங்கரையில் நடந்த அறிமுகக் கூட்டத்தில் பாஜக வேட்பாளர் நரசிம்மன் பேசும்போது, “ஊத்தங்கரை சட்டப்பேரவை தொகுதிகளில் அதிக வாக்குகள் பெற்று தரும் பாமக, பாஜக மாவட்ட செயலாளர்களுக்கு கார் பரிசாக வழங்கப்படும். இதே போல் எந்த வாக்குச்சாவடியில் அதிக வாக்குகள் கிடைக்கிறேதோ, அந்த வாக்குச்சாவடி முகவர்களுக்கு இருசக்கர வாகனம் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஊத்தங்கரை சட்டமன்ற பாஜக பொறுப்பாளர் எம்ஆர்.ராஜேந்திரன், “ஊத்தங்கரையில் உள்ள 257 வாக்குச்சாவடிகளில், பாஜகவிற்கு அதிக வாக்குகள் பெற்று தரும் வாக்குச்சாவடி முகவர்களுக்கு ரூ.1 லட்சம், ரூ-.70 ஆயிரம், ரூ-.50 ஆயிரம், ரூ-.10 ஆயிரம் என ரொக்க பரிசுகள் வழங்கப்படும்” என்றார். பாஜக, பாமக நிர்வாகிகள் களப்பணியில் தீவிரம் காட்டிடும் வகையில் பல்வேறு திட்டங்களை வேட்பாளர் நரசிம்மன் அறிவித்து இருப்பது சீட் கம்பெனி நடத்துகிறாரா என்று பாலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அண்ணாமலை பிரச்சாரம்: பிஞ்சு போன செருப்பை அவர்கள் தூக்கி எறியவில்லை..!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர், வேணுகோபாலை ஆதரித்து அண்ணாமலை பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், மத்தியில், மீண்டும் நமது நரேந்திர மோடி 400 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்பது உறுதி என்றார்.

தமிழ்நாட்டுக்கு மோடி எதுவும் செய்யவில்லை என்று பிரச்சாரம் செய்கிறார்கள். 45 லட்சம் விவசாயிகளுக்கு ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.30 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. சிலிண்டருக்கு ரூ.400 மானியம் தரப்படுவதால் 40 லட்சம் பேர் பயனடைகின்றனர். பயனாளியின் வங்கிக் கணக்கில் மத்திய அரசு நேரடியாகப் பணம் செலுத்திவிடுவதால் இவர்களால் கமிஷன் அடிக்க முடியவில்லை. அதனால்தான் மத்திய அரசு தமிழகத்திற்கு எதுவுமே செய்யவில்லை என்று கூறுகின்றனர்.

மேலும் பேசிய அண்ணாமலை, “1980ல் பேசிய அதே விஷயத்தை சம்பந்தமே இல்லாமல் இன்றைக்கும் பேசுகிறார்கள். இந்தி, சமஸ்கிருதம், வடக்கு தெற்கு என திமுக பேசிக் கொண்டிருக்கிறது. இன்னும் அந்த பிஞ்சு போன செருப்பை அவர்கள் தூக்கி எறியவில்லை.” என அண்ணாமலை பேசினார்.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஏராளமானோர் தங்கள் இன்னுயிரை ஈந்த நிலையில், இந்தி எதிர்ப்பு போராட்டத்தை பிஞ்சு போன செருப்பு எனக் குறிப்பிட்டு அண்ணாமலை பேசியுள்ளதாக கண்டனங்கள் எழுந்துள்ளன. அண்ணாமலை தனது பேச்சுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் குரல்கள் எழுந்துள்ளன.

சுப்பிரமணியன் சுவாமி: நிர்மலா சீதாராமன் மோடியிடம் பணம் கொடுங்கள்” என்று கேட்டிருக்க வேண்டும்..!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு நிதி அமைச்சராக இருப்பவர் நிர்மலா சீதாராமன் இவரது பதவிக்காலம் வரும் 2028-ம் ஆண்டுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில் TIMES NOW Summit 2024-ல் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் கலந்துகொண்டார். அப்போது, “என்னிடம் இந்த முறை மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறீர்களா? என்று கேட்டார்கள். எங்கள் கட்சித் தலைவர் இதுபற்றி கேட்டார். ஒரு வாரம் இதுகுறித்து யோசித்துப்பார்த்தேன். பின்பு அவர்களிடம் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். எங்கள் கட்சியின் தேசியத் தலைவர் நட்டா, ’தெற்கில் வேண்டுமானால் போட்டியிடுகிறீர்களா? தமிழ்நாடோ, ஆந்திராவோ, நீங்களே தேர்ந்தெடுங்கள்’ என்று கேட்டார்.

ஆனால் நான் தேர்தலில் போட்டியிடும் அளவு பணம் என்னிடம் இல்லை என சொல்லிவிட்டேன். கட்சியும் பெருந்தன்மையாக அதை ஏற்றுக்கொண்டது” என தெரிவித்து இருந்தார். இந்தச் சூழலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “தேர்தலில் போட்டியிடுவதற்கு என்னிடம் பணம் இல்லை” என தெரிவித்திருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது பற்றி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது எக்ஸ் பக்கத்தில், மோடியிடம் பல்வேறு பதவிகளில் பணியாற்றிய அவர், போட்டியிட “எவ்வளவு பணம் கொடுங்கள்” என்று கேட்டிருக்க வேண்டும். மேலும் அவர் 2004-05 மற்றும் 2022-23க்கான வருமான வரி அறிக்கையை வெளியிட்டிருக்க வேண்டும். இல்லையென்றால் உண்மையான காரணத்தை அவள் சொல்ல வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி பதிவிட்டுள்ளார்.

தடா பெரியசாமி தடாலடி: பாஜகவில் ஜால்ரா அடிப்பவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது…!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், பாஜக மாநில பட்டியலின அணி தலைவர் தடா பெரியசாமி சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் பழனிசாமியை சந்தித்து அவரது முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தடா பெரியசாமி, “பாஜகவின் தவறான முடிவுகளால் அழுத்தம் ஏற்பட்டு அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைத்துள்ளேன். எனது சொந்த தொகுதி சிதம்பரம். இந்நிலையில் சிதம்பரம் தொகுதியில் நான் வேட்பாளராக நிற்பதற்கு வேலைகளை செய்துவந்தேன். பாஜகவும் அந்த தொகுதியில் என்னை வேலை பார்க்கச் சொல்லியது. ஆனால், திடீரென வேறு ஒரு வேட்பாளரை அறிவித்தார். அத்தொகுதிக்காக நான் நிறைய வேலைகளை செய்து வைத்திருந்தேன். ஆனால், என்னை கேட்காமல் வேறு வேட்பாளரை நிறுத்தியது எனக்கு மிகப்பெரிய வருத்தம்.

எனது தொகுதிக்கு வந்தபோதுகூட அண்ணாமலை என்னிடம் இந்த தொகுதியில் நிற்பீர்களா என்று கேட்டார். வாய்ப்பு கொடுத்தால் நிற்பேன் என்றேன். அவர் தான் இந்த தொகுதியில் வேலையை தொடங்குங்கள் என்றார். அவரை நம்பி தொகுதியில் வேலை பார்த்தேன். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.

பட்டியலின சமூகத்தினருக்கு பாஜகவில் அங்கீகாரம் இல்லை. எனவே தான், எனக்கான அங்கீகாரத்தை தேடும் வகையில் அதிமுகவில் இணைந்துகொண்டேன். பாஜகவில் ஜால்ரா அடிப்பவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. உழைப்பவர்களுக்கு அக்கட்சியில் அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை. பாஜக எதிராக பிரச்சாரம் செய்ய வாய்ப்பு கொடுத்தால் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்வேன்.

வாய்ப்பு கிடைக்காத என்னைப் போல் நிறைய பேர் இதே மனநிலையில் உள்ளனர். தற்போது நான் மட்டும் விலகியுள்ளேன். ஒருவாரத்தில் நிறைய பேர் பாஜகவில் இருந்து கட்சி மாறுவார்கள்.” என தடா பெரியசாமி தெரிவித்தார்.

“எங்கும் இந்தி! எதிலும் இந்தி!” என மாற்றியதுதான் மோடி அரசின் அவலச் சாதனை..!!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதன்வரிசையில், தமிழக பாஜக பூத் தலைவர்களுடன் நமோ செயலி வாயிலாக ‘எனது பூத், வலிமையான பூத்’ என்ற பெயரில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

அப்போது, “தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என ஒவ்வொரு கருத்துக்கணிப்புகளும் தெரிவிக்கிறது. திமுக அரசின் மீது மக்கள் வெறுப்பின் உச்சத்துக்கு சென்றிருக்கிறார்கள் என தமிழக மக்களை நான் பார்க்கும் போது தெரிகிறது. மத்திய அரசின் நல்ல திட்டங்களை மக்களிடம் சென்று சேர விடாமல், திமுக அரசு தடுத்து நிறுத்துகின்றனர். தடுத்து நிறுத்த முடியாத திட்டங்களில், அவர்களது ஸ்டிக்கரை ஒட்டுகிறார்கள்.” என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்து இருந்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் விமர்சனத்துக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,

“நேற்று மாலைச் செய்தி: தாய்மொழியாகத் தமிழ் வாய்க்கவில்லை என வருந்துகிறார் பிரதமர் மோடி!

நேற்று காலைச் செய்தி: அழகிய தமிழ்ச்சொல் ‘வானொலி’ இருக்க ஆகாசவாணி என்பதே பயன்பாட்டுக்கு வரும்.

மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது!. தமிழர்கள் எப்படி நம்புவார்கள்?. கெட்டிக்காரன் புளுகாவது எட்டு நாள் நிற்கும்; ஆனால், மோடியின் கண்ணீர்?.

ஒரு பக்கம் கண்ணைக் குத்திக் கொண்டே, மறுபக்கம் கண்ணீர் வடிப்பது என்ன மாதிரியான தமிழ்ப் பாசம்?. கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில் பரப்புரை செய்த அவர் இப்போது இந்தியில் மட்டுமே பேசுவதன் மர்மம் என்ன?

பிரதமர் மோடி அவர்களே… கருப்புப் பணம் மீட்பு, மீனவர்கள் பாதுகாப்பு, 2 கோடி வேலைவாய்ப்பு, ஊழல் ஒழிப்பு போல் காற்றில் கரைந்த உங்கள் கேரண்டிகளில் ஒன்றுதான், அகவை ஐந்தான விமானங்களில் தமிழில் அறிவிப்பு!

விமானங்களில் மட்டுமல்ல; தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் கூட தமிழிலோ ஆங்கிலத்திலோ பேசும் பாதுகாப்புப் படையினர் இல்லை.

“எங்கும் இந்தி! எதிலும் இந்தி!” என மாற்றியதுதான் மோடி அரசின் அவலச் சாதனை!. தமிழ்த்தோல் போர்த்தி வரும் வஞ்சகர் கூட்டத்துக்கு ஏமாற்றமே பரிசாகும்!” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

அடிப்படை விஷயம் கூட தெரியல அண்ணாமலைக்கு ..!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதி. இதனால் பரபரப்புக்கு நாளுக்கு நாள் பஞ்சமில்லை. கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் அண்ணாமலை, வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், அவரது வேட்பு மனுவில் குளறுபடி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது.

அப்போது பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்பு மனுவை ஏற்பதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். இதற்கு அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அண்ணாமலை வேட்பு மனுவில் விவரங்கள் முழுமையாக நிரப்பப்படவில்லை எனக் கூறி, அதிமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சியினர் ஆட்சேபனை தெரிவித்தனர்.

அண்ணாமலைக்கான வாக்கு எந்த தொகுதியில் இருக்கிறது என்பது வேட்புமனுவில் முறையாக தெரிவிக்கப்படவில்லை, அண்ணாமலையின் வேட்பு மனுவும் முழுமையாக முறையாகவும் நிரப்பப்படவில்லை. எனவே அண்ணாமலையின் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என அதிமுக, நாம் தமிழர் கட்சியினர் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். எனினும், அண்ணாமலையின் வேட்பு மனுவை ஏற்பதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

இந்நிலையில், கோயம்புத்தூர் லோக்சபா தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் அண்ணாமலையின் வேட்பு மனு செல்லாது என அறிவிக்க கோரி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அதிமுக மனு கொடுத்துள்ளது. மேலும், அண்ணாமலையின் வேட்பு மனுவை செல்லாது என அறிவிக்க கோரி நீதிமன்றத்திலும் அதிமுக வழக்கு தொடர உள்ளதாகவும் அதிமுக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக வழக்கறிஞர், “அண்ணாமலை வேட்பு மனுவில் தவறுகள் இருப்பதாக கூறி அவரது மனு பரிசீலனையை நிறுத்தி வைக்க கோரினோம். தேர்தல் நடத்தும் அலுவலராக இருக்கும் மாவட்ட ஆட்சியர் மிகப்பெரிய தவறு செய்திருக்கிறார்.

தேர்தல் வேட்பு மனு பிரமாண பத்திரங்கள் ஃபார்ம் 26, Non Judicial பத்திரத்தில் போட வேண்டும். நீதிமன்றம் அல்லாத முத்திரைத் தாளில் தான் போட வேண்டும். ஆனால், ஐ.ஐ.எம்-ல் படித்ததாகவும் உலகிலேயே பெரிய புத்திசாலி என்பது போலவும் பேசும் அண்ணாமலை, நீதிமன்ற கட்டண பத்திரத்தில் அஃபிடவிட் தாக்கல் செய்துள்ளார். Indian Non Judicial பத்திரம் மூலம் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதிமுறைக்கு மாறாக, நீதிமன்ற பயன்பாட்டிற்கான, ‘India Court Fee’ பத்திரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். நேற்று இரவு வரை, அண்ணாமலை தாக்கல் செய்த அஃபிடவிட்டை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யாமல் வைத்திருந்தார்கள். அதற்கான காரணம் என்ன என்பது இப்போதுதான் புரிகிறது. Court Fee’ பத்திரத்தில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதன் காரணமாகவே அதனை தாமதமாக பதிவேற்றியுள்ளனர்.

ஐ.ஐ.எம்மில் படித்தவரா இப்படி?: எத்தனையோ, சுயேட்சை வேட்பாளர்கள், கையெழுத்து கூட போடத் தெரியாதவர்கள் கூட தேர்தலில் போட்டியிடுகிறார்கள். ஆனால், IIM-ல் படித்திருக்கிறேன், ஐபிஎஸ் பாஸ் பண்ணியிருக்கேன், எனக்கு எல்லாம் தெரியும் எனச் சொல்லும் அண்ணாமலை, நீதிமன்றக் கட்டண பத்திரத்தில் போட்டுள்ளார். நீதிமன்ற முத்திரைத்தாள், நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கு பயன்படுத்தும் பத்திரம். இதில் எப்படி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்? இதை தேர்தல் அலுவலர் கவனிக்கவில்லையா அல்லது, கவனித்தும், ஆளும் பாஜகவுக்கு கைப்பாவையாக இந்திய தேர்தல் ஆணையம் செயல்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது.

அவசர அவசரமாக: அண்ணாமலை வேட்பு மனுவில் குளறுபடி இருக்கிறது என்று சொன்னோம். ஆனால், எங்கள் ஆட்சேபனையை காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் கண்மூடித்தனமாக அவசர அவசரமாக அண்ணாமலை வேட்பு மனுவை இதனால் தான் ஏற்றார்களா என்று சந்தேகம் வருகிறது. நான் ஜெயித்தால் மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என கோவை மக்களிடம் வாக்குறுதி அண்ணாமலை அளிக்கிறார்.

ஒருவேளை அண்ணாமலை வெற்றி பெற்றாலும், தவறான ஸ்டாம்ப் பேப்பரில் அஃபிடவிட் தாக்கல் செய்ததால் அவரது வெற்றி உறுதியாக செல்லாது என அறிவிக்கப்படும். எனவே கோவை மக்கள் வாக்குகளை வீணாக்க வேண்டாம். படித்தும் தற்குறியாக இருக்கும் அண்ணாமலைக்கு வாக்குகளை செலுத்தி வீணாக்கி விடாதீர்கள். எங்கள் மாநில தலைமை அலுவலகம் மூலம் தேர்தல் ஆணையத்திலும் புகார் அளித்துள்ளோம். விரைவாக நீதிமன்றத்திற்கும் கொண்டு செல்வோம்.” எனத் தெரிவித்துள்ளனர்.

வருண் காந்தி உருக்கம்: மூன்று வயது சிறுவனாக இருந்தபோது எனது தாயின் விரல்களைப் பிடித்துக்கொண்டு முதல்முறையாக பில்பித் தொகுதி வந்தேன்..!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தின் பில்பித் தொகுதியின் எம்பியாக இருப்பவர் வருண் காந்தி. 2009-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் அவர் இத்தொகுதியில் வெற்றி பெற்றார். மேலும் 1996-ல் இருந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த தொகுதியின் எம்பியாக வருண் காந்தி அல்லது அவரது தாயார் மேனாகா காந்தி இருந்துள்ளனர். இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தின் சுல்தான்பூர் எம்பியாக இருக்கும் மேனகா காந்திக்கு அந்த தொகுதியை பாஜக மீண்டும் வழங்கி இருக்கிறது. அதேநேரத்தில், பில்பித் தொகுதி வருண் காந்திக்கு மறுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, வருண் காந்தி எழுதியுள்ள கடிதத்தில், “கணக்கில் அடங்காத உணர்வுபூர்வமான நினைவுகளோடு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். மூன்று வயது சிறுவனாக இருந்தபோது எனது தாயின் விரல்களைப் பிடித்துக்கொண்டு முதல்முறையாக பில்பித் வந்ததை நினைத்துப் பார்க்கிறேன். அப்போது, இந்த தொகுதிக்காக நான் பணியாற்றுவேன் என்றோ, இந்த தொகுதி மக்கள் எனது குடும்பமாக மாறுவார்கள் என்றோ நான் நினைக்கவில்லை.

பில்பித் தொகுதி மக்களுக்கு சேவை செய்வதற்காக கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பாகவே எம்பி பதவியை கருதினேன். எளிமை, இரக்கம் என மதிப்புமிக்க பல பாடங்களை இந்த தொகுதியில் இருந்தே நான் கற்றேன். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அளவில் மட்டுமல்லாது, தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல்வேறு மாற்றங்களை பில்பித் ஏற்படுத்தியது .

பில்பித் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி முடிவுக்கு வரலாம். ஆனால், தொகுதி மக்களுடனான எனது உறவு இறுதி மூச்சு இருக்கும் வரை முடிவுக்கு வராது. எம்.பி.யாக இல்லாவிட்டாலும், உங்கள் மகனாக வாழ்நாள் முழுவதும் உங்களுக்காக சேவை செய்வேன். உங்களுக்காக எனது கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்.

எளிய மக்களின் குரலை பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காகவே நான் அரசியலுக்கு வந்தேன். அந்தப் பணியை தொடர்ந்து மேற்கொள்ள உங்கள் ஆசியை வேண்டுகிறேன். பில்பித் தொகுதி மக்களின் அன்பும் நம்பிக்கையும் அரசியலுக்கு அப்பாற்பட்டது. நான் உங்களோடு இருந்தேன்; இருக்கிறேன்; எப்போதும் இருப்பேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.