வி.செந்தில் பாலாஜி: ஆண்டுதோறும் இந்த பயிற்சிக்கு லண்டன் போவாங்க..!? 11-ல் ஒன்றுதான் அண்ணாமலை..!

லண்டன் பயிற்சிக்காக ஆண்டுதோறும் 3 ஐஏஎஸ், 3 ஐபிஎஸ் அதிகாரிகள் 10, 12 பேர் 15 பேர் வரை அந்த குழுவில் செல்கின்றன்ர். எந்த இடத்திலும் மக்கள் செல்வாக்கு இல்லாத நபர்களுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வெளியிடுகின்றன என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கரூர் மற்றும் கிருஷ்ணராயபுரம் சட்டப் பேரவைத் தொகுதி பொதுமக்களை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி சந்தித்து மனுக்கள் பெறும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கரூர் மாநகராட்சி 47-வது வார்டு கோடங்கிப்பட்டி பட்டாளம்மன் கோயில் அருகில் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்றது. ஆட்சியர் மீ.தங்கவேல் தலைமை வகித்தார். காவல் கண்காணிப்பாளர் கே.பெரோஸ்கான் அப்துல்லா, எம்எல்ஏக்கள் ரா.இளங்கோ (அரவக்குறிச்சி), க.சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), கரூர் மாநகராட்சி மேயர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி “துணைமேயர் ப.சரவணன் இப்பகுதிக்கு செய்த பணிகளை தெரிவித்தார். கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் அனைத்து நிகழ்ச்சிகளும் இங்கு தான் தொடங்கப்பட்டு வருகிறது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் கரூர் மாநகராட்சியில் விடுப்பட்ட பகுதிகளில் ரூ.476 கோடியில் புதைசாக்கடை பணிகள், ரூ.113 கோடியில் புதிய காவிரி குடிநீர் திட்டம் என ஏராளமான திட்டங்களை முதல்வர் வழங்கி வருகிறார். நிறைய திட்டங்கள் கொண்டு வரப்படும்” என்றார். மேலும் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.

பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, “தமிழக முதல்வர், எந்த காலத்திலும் குறிப்பாக மின்வாரியம் சம்பந்தமாக அதானியை சந்திக்கவில்லை என ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதற்கு பிறகும் அந்த அறிக்கை குறித்து கருத்துக்கள் முன் வைக்கப்படுகிறது. ஒன்று ஒரு முறை படித்து தெரிந்திருக்கலாம். படித்து புரியவில்லை என்றால் பலமுறை படித்து யோசித்திருக்கலாம். புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் தெரிந்தவர்களிடம் விளக்கத்தை கேட்டு, சரி பண்ணி கொள்ளலாம். படித்தும் புரியவில்லை, தெரிந்தவர்களிடம் கேட்டும் புரிந்து கொள்ள பக்குவமும் இல்லை. அந்தளவுக்கு அறிவுத்திறனும் இல்லை.

ஒரு கருத்தை பேசும் போது, மாற்றுக் கருத்தை முன் வைக்கிறோம். இந்த 3 ஆண்டுகளில் அதானி நிறுவனத்துடன் எந்தவிதமான வர்த்தக தொடர்புகள் இல்லை என தெளிவாக கூறியுள்ளோம். பாஜகவில் யாரும் ஜாமீனில் வந்து அமைச்சராகவில்லையா? அவர்கள் சொல்லக்கூடிய குற்றசாட்டு என்பது ரூ.7.01 மின்சாரம் வாங்கியது. இது கடந்த ஆட்சியில் போடப்பட்ட மின் ஒப்பந்தம். அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட நிதி என்பது உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்கு நிலுவையில் உள்ளது. நாங்கள் தடையாணை கேட்டோம். வழங்கப்படவில்லை. அதனால், அந்த நிதி விடுவிக்கப்பட்டிருக்கிறது.

நாங்கள் ஒப்பந்தம் போட்டதை போல, எங்கள் அரசு ஒப்பந்தம் போட்டதை போல ஒரு தோற்றத்தை மக்கள் மத்தியில் உருவாக்க முயற்சி செய்கின்றனர். அந்த முயற்சி ஒரு போதும் எடுபடாது, அது மக்களுக்கு தெளிவாக தெரியும். தமிழக முதல்வர் வழங்கக்கூடிய சிறப்பு திட்டங்களையும், பொற்கால ஆட்சியையும் மக்கள் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் மீண்டும் வென்று தமிழக முதல்வர் ஆட்சிப் பொறுப்பை ஏற்பார்கள் இது மக்கள் மனதில் வைத்திருக்க கூடிய அன்பு, பாசம். இதுதான் யதார்த்த நிலை.

மத்திய அரசு நிறுவனமான சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவுடன் சேர்ந்து ஒப்பந்தம் போட்டுள்ளோம். அவர்கள் யாரிடம் கொள்முதல் செய்கிறார்கள் என்பது தெரியாது. எவ்வளவு மின்சாரம் பெறுவதற்கான தொகையை அந்த நிறுவனத்திடம்தான் கொடுப்போம். எந்த தனியார் நிறுவனங்களுக்கும் கொடுப்பதில்லை. அப்படி எந்த ஒப்பந்தமும் கிடையாது. அதைத்தான் தெளிவாக சொன்னோம்.

நாட்டிலேயே மிகக் குறைந்த யூனிட் ஒன்றுக்கு ரூ.2.61 என்ற அளவில் கொள்முதல் செய்வது தமிழ்நாடு மின்சார வாரியம்தான். இந்த 3 ஆண்டு கால ஆட்சியில் அரசு மீது ஏதாவது ஒரு புகார்களை சொல்லிவிட முடியாதா, மக்கள் மத்தியில் ஒரு அவப்பெயரை உருவாக்கிட முடியாதா என்பதை பூதக்கண்ணாடி போட்டு சல்லடை போட்டு தேடுகின்றனர். தேடி தேடி பார்க்கின்றனர்.

சில முயற்சிகளும் எடுக்கின்றனர். அவர்களின் முயற்சிகள் தோல்வியில் முடிகிறது. அந்த விரக்தியில்தான் அறிக்கைகள் வருகிறது. அறிக்கைகள் மற்றும் விமர்சனங்களை பார்த்து நாங்கள் ஒரு போதும் அஞ்சுவதும் இல்லை, சிந்தித்ததும் இல்லை. சரியான அறிக்கையாக இருந்தால் அதை நாங்கள் யோசித்து பார்ப்போம், அறிக்கையில் என்ன இருக்கிறது என்பதை பார்ப்போம்.

சிலர் வெளிநாடுக்கு போய் படித்ததாகக் கூறுகின்றனர். அந்த குழுவில் 11 பேர் சென்றனர். அதில், சேலம் ஆட்சியராக இருந்த ஐஏஎஸ் அதிகாரியான ரோகிணி சென்றிருந்தார். ஆனால் அதுகுறித்து தகவல் இல்லை. யாரும் படிக்காததை படித்து வந்தது போலவும், அந்த படிப்பினால் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்குபோல செய்திகள் வருகின்றன.

ஆண்டுதோறும் இந்த பயிற்சிக்கு 10, 12 பேர் 15 பேர் வரை செல்கின்றன்ர. அந்த குழுவில் 3 ஐஏஎஸ், 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடம் பெற்றிருந்தனர். எந்த இடத்திலும் மக்கள் செல்வாக்கு இல்லாத நபர்களுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வெளியிடுகின்றன. அந்த பயிற்சிக்கு அரசியல்வாதிகளும் செல்லலாம், பத்திரிக்கையாளர்களும் செல்வார்கள்.

மத்திய அரசு அவர்களை தேர்வு செய்து அனுப்பி வைக்கிறது. அந்த 11-ல் ஒன்றுதான் அவர். மக்களிடத்தில், மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தக் கூடிய தமிழக முதல்வரை தமிழக மக்கள் வெகுவாக பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். தொடர்ந்து மக்கள் ஆதரவை வழங்கி வருகின்றனர். வரும் சட்டப் பேரவைத் தேர்தலிலும் ஆதரவை மக்கள் வழங்குவார்கள். 2026 தேர்தலிலும் திமுக தான் வெற்றி பெறும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

எஸ்.வி.சேகர்: பாஜக என்ன சொன்னாலும் சரி சொல்லும் முட்டாள் பிராமணர்..! தமிழ்நாட்டுக்காரன் நடக்கும் பிராமணர்..!

பாஜக என்ன சொன்னாலும் சரி என்று சொல்லும் ஒரு முட்டாள்தனமான பிரிவு, ஜாதி, சடங்கு, சம்பிரதாயம் எல்லாவற்றையும் வீட்டிற்குள் வைத்துக் கொள்ள வேண்டும், வெளியில் வந்தால் தமிழ்நாட்டுக்காரன், இந்தியன் என்று இருக்க வேண்டும் என்று இருவிதமான பிராமணர்கள் தமிழகத்தில் உள்ளார்கள் என முன்னாள் பாஜக நிர்வாகி எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

சென்னை மந்தைவெளியில் உள்ள எஸ்.வி சேகர் இல்லத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.அப்போது, “தமிழ்நாட்டில் பாஜக 25 ஆண்டுகள் ஆனாலும் ஆட்சிக்கு வரவே முடியாது. ஒழுங்காக படிக்காத காரணத்தால் தான் அண்ணாமலை அரசியலுக்கு வந்தார். இங்கு சரியாக இல்லை என்று தான் வெளிநாடு படிக்க சென்று இருக்கிறார். அண்ணாமலை வாயை திறந்தால் பொய். தமிழகத்தில் ஒரு பிராமணர் கூட இல்லாமல் அனைவரையும் ஒழித்துக் கட்டிவிட்டார்.

சும்மா திமுகவை திட்டிக் கொண்டிருந்தால் அவர்களால் வளரவே முடியாது. திமுக ஒழுங்காக ஆட்சி செய்யவில்லை என்றால் நாடாளுமன்ற தேர்தலில் எப்படி 40 தொகுதிகளில் வெற்றி பெற்றார்கள்? அனைத்து ஓட்டுகளையும் திமுகவினரே போட்டார்களா? பிராமணர் சமூகத்தை யாரும் பெரிய வாக்கு வங்கியாக பார்க்கவில்லை. பிராமணர்கள் 7 சதவீதம் இருக்கிறார்கள்.

ஆனால், 3 சதவீதம் என்கிறார்கள். பிராமணர்களில் 50 சதவிகிதம் பேர் கையில் செல்போன் கூட இல்லாமல் உள்ளார்கள். தினசரி கூலி வேலை, கட்டிட வேலை, புரோகிதம் போன்ற பணிகளை தான் செய்கிறார்கள். EWS எந்த இட ஒதுக்கீட்டுக்கும் எதிரானது அல்ல. தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இதில், 7 பேராவது பிராமண எம்.எல்.ஏ.க்கள் இருக்க வேண்டும். ஜெயலலிதா இருந்தவரை ஒரு 3 பேர் இருந்தார்கள். இப்போது ஒருவர் கூட இல்லை.

பிராமணர் நல வாரியம் அமைப்போம் என்று நாளை திமுக அறிவித்தால், அவர்களுக்காக பிரச்சாரம் செய்வேன். ஆனால் எந்தக் கட்சியிலும் சேர மாட்டேன். எந்த கட்சி இதைச் சொன்னாலும் அதற்கு ஆதரவாக நான் பிரச்சாரம் செய்வேன். யாராக இருந்தாலும் தனது சமூகத்திற்காக பேசுவது சரி. ஆனால் எந்தக் காரணத்திற்காகவும் மற்ற சமூகத்தை குறைத்து பேசுவது தவறான அயோக்கியத்தனமான செயல். இருவிதமான பிராமணர்கள் தமிழகத்தில் உள்ளார்கள்.

பாஜக என்ன சொன்னாலும் சரி என்று சொல்லும் ஒரு முட்டாள்தனமான பிரிவு இருக்கிறார்கள். ஜாதி, சடங்கு, சம்பிரதாயம் எல்லாவற்றையும் வீட்டிற்குள் வைத்துக் கொள்ள வேண்டும். வெளியில் வந்தால் தமிழ்நாட்டுக்காரன், இந்தியன் என்று இருக்க வேண்டும். எல்லா இடத்திலும் சாதியை தூக்கிக்கொண்டு அலைய முடியாது. தமிழக பாஜகவில் ஒரு பிராமணர்கள் கூட இல்லாத நிலையை அண்ணாமலை கொண்டு வந்துள்ளார். நான் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் இல்லை.

ஆனால், அவர் பிரதமர் என்பதால் மோடியின் புகைப்படங்கள் என் வீட்டில் இருக்கிறது. என் வீட்டில் வந்து பாருங்கள் ஜெயலலிதா, கலைஞர் புகைப்படமும் தான் இருக்கிறது. எப்போது பள்ளிக்கூடத்தில் நீ என்ன சாதி என்று கேட்பதை நிறுத்துகிறார்களோ, அதுவரை சாதியை நிறுத்த முடியாது இது உண்மை. சமூகத்திற்கு நல்லது செய்ய அரசியலுக்கு வந்து, அது எனக்கு தவறாக முடிந்துவிட்டது. என்னை கட்சி அரசியலுக்கு கொண்டு வந்தது ஜெயலலிதா தான். வேற்றுமையை பெரிதாக்கி வெறுப்பை வளர்த்தால் வாழ்வு சுமூகமாக இருக்காது.

பொதுவெளியில் பேசும்போது, என்ன பேச வேண்டும் என்பதை விட, எதை பேசக்கூடாது என்பதை தெரிந்திருக்க வேண்டும். மைக்கை பார்த்ததும் வாந்தி எடுப்பது போல் பேசக்கூடாது. கஸ்தூரி பேசியது மிகவும் கண்டிக்கத்தக்க செயல். தமிழ்நாட்டில் குஷ்பு போல் நமக்கு எதிர்காலம் இருக்கும் என்று கஸ்தூரி இப்படி பேசி இருக்கலாம். தனக்கு அண்ணாமலை வாய்ப்பு கொடுப்பார் என நினைத்திருக்கலாம். ஆனால் அது ரிவர்ஸில் வொர்க் அவுட் ஆகிவிட்டது.

ஆனால், சுதாகர் ரெட்டி போன்ற பாஜக தலைவர்களே அதனை எதிர்த்துவிட்டார்கள். தமிழ்நாடு பாஜகவில் கஸ்தூரிக்கு கதவு மூடப்பட்டு விட்டது. ஆந்திராவிலும் வழக்கு போட்டுவிட்டார்கள். கஸ்தூரி இனிமேல் தனி கட்சி ஆரம்பித்தால் வேண்டுமானால் எதிர்காலம் இருக்கும். ஏனென்றால் என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம்.” என எஸ்.வி.சேகர் தெரிவித்தார்.

எஸ்.வி.சேகர்: அண்ணாமலை வாயை திறந்தால் பொய்..! ஒழுங்காக படிக்காத காரணத்தால் தான் அரசியலுக்கு வந்தார்..!

ஒழுங்காக படிக்காத காரணத்தால் தான் அண்ணாமலை அரசியலுக்கு வந்தார். இங்கு சரியாக இல்லை என்று தான் வெளிநாடு படிக்க சென்று இருக்கிறார். அண்ணாமலை வாயை திறந்தால் பொய் என முன்னாள் பாஜக நிர்வாகி எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

சென்னை மந்தைவெளியில் உள்ள எஸ்.வி சேகர் இல்லத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.அப்போது, “தமிழ்நாட்டில் பாஜக 25 ஆண்டுகள் ஆனாலும் ஆட்சிக்கு வரவே முடியாது. ஒழுங்காக படிக்காத காரணத்தால் தான் அண்ணாமலை அரசியலுக்கு வந்தார். இங்கு சரியாக இல்லை என்று தான் வெளிநாடு படிக்க சென்று இருக்கிறார்.

அண்ணாமலை வாயை திறந்தால் பொய். தமிழகத்தில் ஒரு பிராமணர் கூட இல்லாமல் அனைவரையும் ஒழித்துக் கட்டிவிட்டார். சும்மா திமுகவை திட்டிக் கொண்டிருந்தால் அவர்களால் வளரவே முடியாது. திமுக ஒழுங்காக ஆட்சி செய்யவில்லை என்றால் நாடாளுமன்ற தேர்தலில் எப்படி 40 தொகுதிகளில் வெற்றி பெற்றார்கள்? அனைத்து ஓட்டுகளையும் திமுகவினரே போட்டார்களா? பிராமணர் சமூகத்தை யாரும் பெரிய வாக்கு வங்கியாக பார்க்கவில்லை.

பிராமணர்கள் 7 சதவீதம் இருக்கிறார்கள். ஆனால், 3 சதவீதம் என்கிறார்கள். பிராமணர்களில் 50 சதவிகிதம் பேர் கையில் செல்போன் கூட இல்லாமல் உள்ளார்கள். தினசரி கூலி வேலை, கட்டிட வேலை, புரோகிதம் போன்ற பணிகளை தான் செய்கிறார்கள். EWS எந்த இட ஒதுக்கீட்டுக்கும் எதிரானது அல்ல. தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இதில், 7 பேராவது பிராமண எம்.எல்.ஏ.க்கள் இருக்க வேண்டும். ஜெயலலிதா இருந்தவரை ஒரு 3 பேர் இருந்தார்கள். இப்போது ஒருவர் கூட இல்லை.

பிராமணர் நல வாரியம் அமைப்போம் என்று நாளை திமுக அறிவித்தால், அவர்களுக்காக பிரச்சாரம் செய்வேன். ஆனால் எந்தக் கட்சியிலும் சேர மாட்டேன். எந்த கட்சி இதைச் சொன்னாலும் அதற்கு ஆதரவாக நான் பிரச்சாரம் செய்வேன். யாராக இருந்தாலும் தனது சமூகத்திற்காக பேசுவது சரி. ஆனால் எந்தக் காரணத்திற்காகவும் மற்ற சமூகத்தை குறைத்து பேசுவது தவறான அயோக்கியத்தனமான செயல். இருவிதமான பிராமணர்கள் தமிழகத்தில் உள்ளார்கள்.

பாஜக என்ன சொன்னாலும் சரி என்று சொல்லும் ஒரு முட்டாள்தனமான பிரிவு இருக்கிறார்கள். ஜாதி, சடங்கு, சம்பிரதாயம் எல்லாவற்றையும் வீட்டிற்குள் வைத்துக் கொள்ள வேண்டும். வெளியில் வந்தால் தமிழ்நாட்டுக்காரன், இந்தியன் என்று இருக்க வேண்டும். எல்லா இடத்திலும் சாதியை தூக்கிக்கொண்டு அலைய முடியாது. தமிழக பாஜகவில் ஒரு பிராமணர்கள் கூட இல்லாத நிலையை அண்ணாமலை கொண்டு வந்துள்ளார். நான் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் இல்லை.

ஆனால், அவர் பிரதமர் என்பதால் மோடியின் புகைப்படங்கள் என் வீட்டில் இருக்கிறது. என் வீட்டில் வந்து பாருங்கள் ஜெயலலிதா, கலைஞர் புகைப்படமும் தான் இருக்கிறது. எப்போது பள்ளிக்கூடத்தில் நீ என்ன சாதி என்று கேட்பதை நிறுத்துகிறார்களோ, அதுவரை சாதியை நிறுத்த முடியாது இது உண்மை. சமூகத்திற்கு நல்லது செய்ய அரசியலுக்கு வந்து, அது எனக்கு தவறாக முடிந்துவிட்டது. என்னை கட்சி அரசியலுக்கு கொண்டு வந்தது ஜெயலலிதா தான். வேற்றுமையை பெரிதாக்கி வெறுப்பை வளர்த்தால் வாழ்வு சுமூகமாக இருக்காது. பொதுவெளியில் பேசும்போது, என்ன பேச வேண்டும் என்பதை விட, எதை பேசக்கூடாது என்பதை தெரிந்திருக்க வேண்டும். மைக்கை பார்த்ததும் வாந்தி எடுப்பது போல் பேசக்கூடாது.

கஸ்தூரி பேசியது மிகவும் கண்டிக்கத்தக்க செயல். தமிழ்நாட்டில் குஷ்பு போல் நமக்கு எதிர்காலம் இருக்கும் என்று கஸ்தூரி இப்படி பேசி இருக்கலாம். தனக்கு அண்ணாமலை வாய்ப்பு கொடுப்பார் என நினைத்திருக்கலாம். ஆனால் அது ரிவர்ஸில் வொர்க் அவுட் ஆகிவிட்டது. ஆனால், சுதாகர் ரெட்டி போன்ற பாஜக தலைவர்களே அதனை எதிர்த்துவிட்டார்கள். தமிழ்நாடு பாஜகவில் கஸ்தூரிக்கு கதவு மூடப்பட்டு விட்டது. ஆந்திராவிலும் வழக்கு போட்டுவிட்டார்கள். கஸ்தூரி இனிமேல் தனி கட்சி ஆரம்பித்தால் வேண்டுமானால் எதிர்காலம் இருக்கும். ஏனென்றால் என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம்.” என எஸ்.வி.சேகர் தெரிவித்தார்.

லண்டனில் இருந்து அண்ணாமலை: புரிஞ்சு போச்சு..! “விடியலுக்கு இதுதான் அர்த்தமா..!?

உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகி உள்ள நிலையில், திமுகவில் வாரிசு அரசியல் நிலவுவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் விமர்சித்து பதிவிட்டுள்ளார். “விடியல்” என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன என்பதை மக்கள் இப்போது புரிந்துகொண்டுள்ளனர். அவர்களுக்கு விடியல், அவர்களின் குடும்பத்திற்கு விடியல் என அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அண்ணாமலைக்கு பதிலாக தமிழக பாஜக தலைவராக தமிழிசை சௌந்தரராஜன் விரைவில் நியமனமா..!?

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் சென்னையில் ஆலோசனை நடைபெற்றது. அண்ணாமலை இல்லாமல் ஆலோசனை நடைபெற்ற விவகாரம் தமிழக பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில், அண்ணாமலை இல்லாமல் கட்சியை வளர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

தமிழகத்தில் பாஜக மாநில தலைவராக அண்ணாமலை தலைமை பொறுப்பு ஏற்று அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பொதுத்தேர்தல்களில் போட்டியிட்டார். ஆனால், பாஜக தோல்வி சந்தித்தது. இந் நிலையில், பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததால் தான் அதிமுக தோல்வி அடைந்தது என்று அதிமுக கட்சியில் பரவலாக பேசப்பட நிலையில் அதிமுக – பாஜக இடையே கடும் வார்த்தை போர் மூண்டது.

ஒரு கட்டத்தில் அதிமுக மறைந்த தலைவர்களை அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்தார். இதனால் கோபம் அடைந்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக – பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டார். அதன் பின்னர் கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக தனித்தனியே போட்டியிட்டு 40 இடங்களிலும் இரண்டு கட்சிகளும் மண்ணை கவ்வியது.

தொடர்ந்து தமிழக தேர்தல்களில் பாஜக தோல்வி அடைந்தாலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகத்தில அனைத்துக்கட்சிகளையும், தலைவர்களையும் விமர்சித்து வந்தார். இதனால் பாஜக நிர்வாகிகள் இடையே அண்ணாமலைக்கு கெட்ட பெயர் உருவானது.

இந்நிலையில், அண்ணாமலை திடீரென அரசியல் தொடர்பான 3 மாதம் படிப்புக்காக கடந்த ஆகஸ்டு 29-ஆம் தேதி இங்கிலாந்து புறப்பட்டு சென்றார். அண்ணாமலை வெளிநாடு சென்றதால், தமிழக பாஜகவுக்கு இடைக்கால தலைவர் நியமிக்கப்படலாம் என்று கூறப்பட்டது.

ஆனால், தமிழக பாஜகவை வழிநடத்த ஒருங்கிணைப்பாளராக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, மாநில துணை தலைவர்கள் எம்.சக்கரவர்த்தி, பி.கனகசபாபதி, மாநில பொதுச்செயலாளர்கள் எம்.முருகானந்தம், ராம சீனிவாசன், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் 6 பேர் கொண்ட குழுவை டெல்லி மேலிடம் கடந்த ஆகஸ்டு மாதம் 30-ஆம் தேதி நியமித்தது.

அண்ணாமலை வெளிநாடு சென்றுள்ளதை பயன்படுத்திக் கொண்டு தமிழகத்தில் பாஜக கட்சியை வளர்க்க டெல்லி தலைவர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். இதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த சில வாரங்களாக அடிக்கடி தமிழகம் வருகிறார். தமிழகத்தில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசுவதுடன், பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.

இதன் ஒரு கட்டமாக இரு நாட்களுக்கு முன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஒரு வங்கி கெஸ்ட் ஹவுசில் தமிழக பாஜகவின் 2-ஆம் கட்ட தலைவர்களை அழைத்து பேசினார். இந்த கூட்டத்திற்கு, அண்ணாமலையின் ஆதரவாளரான கரு. நாகராஜன் உள்ளிட்ட தலைவர்களையும், அதேபோன்று முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆதரவாளர்களையும் அழைக்கவில்லை.

இந்த கூட்டத்தில் நிர்மலா சீதாராமனின் தீவிர ஆதரவாளரான வானதி சீனிவாசன், மாநில செயலாளர் சூர்யா, கறுப்பு முருகானந்தம், பால்கனகராஜ், கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 7 முக்கிய நிர்வாகிகளை தனியாக அழைத்து நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தியுள்ளார். அண்ணாமலை நடவடிக்கையால் தமிழக பாஜகவில் எந்த வளர்ச்சியும் இல்லை. 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் தமிழகத்தில் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் தமிழகத்தில் பாஜக காலூன்ற எந்த மாதிரியான கூட்டணியை ஏற்படுத்த வேண்டும், கட்சி தலைமை இதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து நிர்மலா சீதாராமன் தீவிர ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனையின் மூலம் தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை நீக்கி விட்டு, நிர்மலா சீதாராமனின் ஆதரவாளர் ஒருவர் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அண்ணாமலை தமிழகத்தில் இல்லாத நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கடி தமிழகம் வருவது, நிர்வாகிகளை அழைத்து பேசுவது பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாமலைக்கு எதிராக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை..!

Tamilisai Soundararajan: அண்ணாமலை பார்ட் டைம் ஆக அரசியல் பணியாற்றவில்லை…! புல் டைம் அரசியல்வாதி..!

அண்ணாமலை பார்ட் டைம் ஆக அரசியல் பணியாற்றவில்லை. புல் டைம் ஆக பணியாற்றி வந்தவர் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். கோயம்புத்தூரில் பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று கோயம்புத்தூர் சென்றார்.

அப்போது விமான நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். ‘‘பெரிய நிகழ்ச்சிகள் 2 மாதங்களுக்கு நடத்த வேண்டாம் என மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளது. இதனால், உறுப்பினர் சேர்க்கையில் மும்முரமாக இருக்கிறோம். அண்ணாமலை பார்ட் டைம் ஆக அரசியல் பணியாற்றவில்லை. புல் டைம் ஆக பணியாற்றி வந்தவர்.

தற்போது, அண்ணாமலை படிக்க சென்று இருக்கிறார். படித்துவிட்டு வரட்டும். பாஜக சார்பில் எப்போதும் போல் பணியாற்றி வருகிறோம். அதற்குள் என்ன பிரச்னை உங்களுக்கு. பிரச்னை இல்லாமல் இருப்பதுதான் உங்களுக்கு இப்போது பிரச்னையாக இருக்கிறதா?. பாஜகவில் பிரச்னை எதுவும் இல்லை’’ என தமிழிசை சவுந்தரராஜன் பதிலளித்தார்.

மேலும், ‘‘அண்ணாமலை இல்லை என்பதால் பிரச்னை இல்லையா?’’ என கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘‘அப்படி எல்லாம் ஒன்றும் சொல்லவில்லை. நீங்கள் ஏதாவது பிரச்னை செய்யாதீர்கள்’’ என்றார். ‘‘அன்னபூர்ணா உரிமையாளர் மன்னிப்பு கேட்ட வீடியோவை வானதி நாங்கள் வெளியிடவில்லை என கூறிய நிலையில், அண்ணாமலை வீடியோவுக்கு மன்னிப்பு கேட்டு இருந்தாரே’’ என கேள்வி எழுப்பியபோது, ‘‘உட்கட்சி ரீதியான விஷயத்திற்கு பதில் அளிக்க முடியாது. பிரச்னை, பிரச்னை என கூறி ஏதாவது பிரச்னை உண்டாக்கி விட்டுவிடாதீர்கள்’’ என தமிழிசை சவுந்தரராஜன் பதிலளித்தார்.

Tamilisai Soundararajan: அன்னபூர்ணா விவகாரம்..! அண்ணாமலை வீடியோவுக்கு மன்னிப்பு கேட்டு இருந்தாரே..!’’

கோவை அன்னபூர்ணா உரிமையாளரிடம் மன்னிப்பு கோரிய அண்ணாமலை..!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடனான தனிப்பட்ட சந்திப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோவை பொதுவெளியில் பாஜகவினர் பகிர்ந்தமைக்காக கோவை அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசனிடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மன்னிப்புக் கோரியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சராக செயல்பட்டு வரும் நிர்மலா சீதாராமன்அடிக்கடி பல்வேறு தொழிலதிபர்களுடன் ஆலோசனைகளையும், கலந்துரையாடல் நிகழ்ச்சிகளையும் மேற்கொண்டு தொழில் துறையினர் மத்திய அரசின் வரி விதிப்பு உள்ளிட்ட விவகாரங்களால் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் பற்றி எடுத்துரைப்பது வழக்கம்.

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் தொழிலதிபர்கள் கூறும் கருத்து, அதற்கு நிர்மலா சீதாராமன் அளிக்கும் பதில் உள்ளிட்டவை சில சமயங்களில் விவாதத்தை கிளப்பும். அந்த வகையில் தான் நேற்று முன்தினம் ஒரு சம்பவம் கோயம்புத்தூரில் நடந்தது. அதாவது கோயம்புத்தூர் கொடிசியாவில் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அன்னப்பூர்ணா குழுமத்தின் உரிமையாளர் சீனிவாசன் பேசுகையில், ‛‛உங்க பக்கத்தில் உள்ள எம்எல்ஏ எங்களின் ரெகுலர் கஸ்டமர். எங்கள் ஜிஎஸ்டி பில்லை பார்த்து சண்டை போடுறாங்க. இந்த அம்மா வருவாங்க.. ஜிலேபி சாப்பிடுவாங்க. காரம் சாப்பிடுவாங்க.. அதன்பின் காபி சாப்பிடுவாங்க. எல்லாவற்றிற்கும் வேறு வேறு ஜிஎஸ்டி. ஸ்வீட்டிற்கு 5 சதவீத ஜிஎஸ்டி. காரத்திற்கு 12 சதவீத வரி என்றால் சண்டை போடுவாங்க.

பன்னுக்கு ஒரு ஜிஎஸ்டி.. உள்ளே இருக்கும் கிரீமிற்கு ஒரு ஜிஎஸ்டி வைத்துள்ளனர். கஸ்டமர்கள். நீ பன்னு கொடு. நானே கிரீமை வைத்துக்கொள்கிறேன் என்கிறார்கள். குறைத்தால் எல்லாவற்றிக்கும் குறையுங்கள். தயவு செய்து அதை கொஞ்சம் ஆலோசனை செய்யுங்கள். ஒரே மாதிரி வரி போடுங்கள். கணினியே திணறுகிறது. ஜிஎஸ்டி அலுவலர்கள் குழம்புகிறார்கள். எல்லாவற்றிற்கும் ஒரே இன்புட்தான். ஒரே கிட்சன்தான். ஆனால் வேறு வேறு ஜிஎஸ்டியால் அதிகாரிகள் குழம்புகிறார்கள்” என சீனிவாசன் தெரிவித்தார்.

இவரது இந்த பேச்சு வலைதலங்களில் வேகமாக பரவியது. இதனை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அதிகமாக பகிர்ந்து நிர்மலா சீதாராமனை விமர்சனம் செய்தனர். இந்நிலையில், அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து மன்னிப்பு கோரியுள்ளதாக வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. பாஜக அரசின் இந்த செயலுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு குரல் வலுத்து வருகின்றது.

இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில், அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில், அன்னபூர்ணா ஹோட்டல்களின் உரிமையாளர் சீனிவாசனுடன் நான் பேசினேன். இந்த எதிர்பாராத சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தேன். அன்னபூர்ணா சீனிவாசன் தமிழகத்தின் வணிக சமூகத்தின் தூணாக இருக்கிறார். மாநில மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகிறார். இந்த விவகாரத்தை உரிய மரியாதையுடன் முடித்து வைக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்” என அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

39 வயது அண்ணாமலையை விடுங்கள்…! 70 வயதுடைய எடப்பாடி பழனிசாமி பேசியது சரியா ஜெயக்குமார் விளக்கம் கொடுக்கட்டும்..!

சென்னையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில், எடப்பாடி பழனிசாமி குறித்த அவரது பேச்சுக்கு அதிமுகவினர் ஆற்றிவரும் எதிர்வினை குறித்து செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு, “எடப்பாடி பழனிசாமி மீது நான் வைத்த விமர்சனம், நூறு சதவீதம் என்னைப் பொறுத்தவரை சரி. அதிலிருந்து நான் ஒரு புள்ளி அளவுகூட பின்வாங்க மாட்டேன். அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் ஒவ்வொருவரும், தினந்தோறும் என்னை திட்டலாம். என்னை தற்குறி என்று கூறலாம். படிப்பு குறித்து பேசி கொச்சைப்படுத்தலாம். நான் செய்யக் கூடிய வேலையை கொச்சைப்படுத்தலாம். ஆட்டை வெட்டலாம். இதெல்லாம் அவர்கள் செய்யலாம்.

நான் அப்படியே கையைக் கட்டிக்கொண்டு, என்னை மன்னித்து விடுங்கள் அண்ணா, உங்களுக்கு 40 வருட அனுபவம் இருக்கிறது. எனக்கு 3 வருட அனுபவம்தான் இருக்கிறது, என்று சொல்வதற்காக நான் வரவில்லை. கை, காலைப் பிடித்து, வேலை செய்யாமல் உழைக்காமல் நான் வந்ததாக கூறுகின்றனர். விடிய விடிய படித்தது எனக்கு தெரியும். விடிய விடிய பால் கறந்தது எனக்கு தெரியும். விடிய விடிய எங்க அப்பாவுடன் மண்வெட்டி பிடித்த கை. இருபது வருடங்கள் ஆனாலும், இன்னும் காப்புக் காய்ச்சிருக்கிறது பாருங்கள். இதெல்லாம் எனக்குத் தெரியும்.

மேலும் ஜெயக்குமார் அரசியல் அனுபவம் தங்களுக்கு இருப்பதாக கூறுகிறாரா? 39 வயது அண்ணாமலையை விடுங்கள். 70 வயதுடைய எடப்பாடி பழனிசாமி பேசியது சரியா என்று ஜெயக்குமார் விளக்கம் கொடுக்கட்டும். கையை, காலைப் பிடித்து இந்தப் பதவிக்கு வந்ததாக கூறுகின்றனர். ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவராக எப்படி நடந்து கொண்டிருக்கிறேன்.

கர்நாடகாவில் பாஜக அரசாக இருந்தாலும் உண்ணாவிரதம் நடக்கிறது. மத்தியப் பிரதேச அரசின் முதலமைச்சர் பாஜகவைச் சேர்ந்தவராக இருந்தாலும், வரவேற்க நான் செல்வது இல்லை. ஒரு தேசியக் கட்சியைச் சேர்ந்தவனாக இருந்தாலும், தமிழகத்தை முதன்படுத்தி அரசியல் செய்து கொண்டிருக்கிறேன். எதற்காக? தமிழக மக்கள் அந்த அரசியலை விரும்புகின்றனர், எதிர்பார்க்கின்றனர். காங்கிரஸ் போன்று பாஜக இருக்கக் கூடாது என்று நினைக்கின்றனர். எனவே, அதிமுகவினர் குய்யோ, முய்யோ என்று கத்துவதை விட்டுவிட வேண்டும்.

70 வயதுக்கு மேல் உள்ள தலைவர்கள் தலைக்கு ‘டை’ அடித்துவிட்டால், இளைஞர் என்று நினைத்துக் கொள்கின்றனர். இன்றைக்கு இருக்கக் கூடிய முன்னாள் அமைச்சர்களும் தலைக்கு ‘டை’ அடித்துவிட்டால் தங்களை இளைஞராக நினைத்துக் கொள்கின்றனர். இளைஞர் என்பது ‘டை’ அடிப்பதில் இல்லை, பேச்சு, செயல், ஆற்றலில் இருக்க வேண்டும். அதனால்தான் திரும்பவும் சொல்கிறேன், என்னைப் பற்றி பேசினால், நானும் திரும்பவும் பேசுவேன்.

53 வயது ராகுல் காந்தி இளைஞர் என்று சொல்லும் அளவுக்கு மோசமாக போய்விட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் இளைஞரணி தலைவராக எத்தனை ஆண்டு காலம் இருந்தார்? உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி தலைவர் அவருக்கு வயது 50. எங்களுடைய கட்சியில் 35 வயதுக்கு மேல் ஒருநாள் இருந்தாலும் இளைஞரணி தலைவராக இருக்க விடமாட்டேன். அதை மூன்று வருடமாக கடைபிடிக்கின்றோம். தரம் தாழ்ந்து யாரையும் விமர்சிக்கவில்லை. நான் கையை, காலைப் பிடித்து வந்ததாக அதிமுகவினர் கூறினர். அதற்கு பதிலளிக்க வேண்டியது என் கடமை, உரிமை. என்னுடைய நாற்காலிக்கு அந்த மரியாதை இருக்கிறது. பாஜகவின் மாநிலத் தலைவர் பதவிக்கான இருக்கைக்கு நான் மரியாதை கொடுக்க வேண்டும். அதற்காக நான் பதில் சொல்லியிருக்கிறேன்,” எனஅண்ணாமலை தெரிவித்தார்.