மத்திய அரசு அறிவிப்பு: நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது..!

மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் கல்வி, இலக்கியம், மருத்துவம், விளையாட்டு, சமூகப்பணி, தொழில்துறை என்று பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கும் என பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025ஆம் ஆண்டு மொத்தமாக 139 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் 23 பெண்கள் உற்பட 7 பேருக்கு பத்ம விபூஷன் விருதும், 19 பேருக்கு பத்ம பூஷன் விருதும், 113 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கனவே பத்மஸ்ரீ விருதுகள் 10 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பத்மபூஷன் விருதினை தமிழ்நாட்டில் இருந்து 3 பேர் பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் பத்ம பூஷன் விருதுகள் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கலைத்துறையில் நடிகர் அஜித் குமார், நடிகை சோபனா சந்திரகுமார், தொழில் மற்றும் வர்த்தகம் துறையில் நல்லி குப்புசாமிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்குமார் புகார்: சீமான் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்..!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உடன் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இருப்பது போன்று எடிட் செய்யப்பட்ட போலியான Photo-வை வைத்து, ஏமாற்றி பல கோடி ரூபாய் திரள் நிதி பெற்றுப் பிழைப்பு நடத்தி வருவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் அஜித்குமார் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக வழக்கறிஞர் அஜித்குமார் காவல்துறை இயக்குநர் மற்றும் மதுரை மாநகர் காவல் ஆணையர், ஆகியோருக்கு ஆன்லைன் மற்றும் பதிவு தபால் மூலம் அனுப்பியுள்ள புகார் மனுவில், இன்று தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை கிளம்பி இருக்கும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், தமிழ் இனத்தின் தலைவர் திரு. பிரபாகரன் அவர்களுடன் இணைந்து இருக்கும் புகைப்படங்கள் எடிட்டிங் செய்யப்பட்டது என சினிமா இயக்குனர் திரு. சங்ககிரி ராஜ்குமார் கூறியுள்ளார்.

கடந்த 15 ஆண்டுகளாக திரு. பிரபாகரன் அவர்களின் பெயரை கூறி கட்சி நடத்தி வரும் சீமான், பல இலட்சம் இளைஞர்களின் தமிழ் உணர்வை தூண்டி தவறான பாதையில் அழைத்துச் சென்றுகொண்டு இருக்கிறார். பிரபாகரன் அவர்களின் நெருக்கமாக இருந்ததாக தொடர்ந்து இத்தனை ஆண்டுகளாக தமிழக மக்களை ஏமாற்றி வந்துள்ளார். ஆக பல ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் பொய்யான புகைப்படங்களை வெளியிட்டு கோடி கணக்கான தமிழ் மக்களின் உணர்வை புண்படுத்தி இருக்கிறார்கள்.

இந்த புகைப்பட மோசடி மூலம் தமிழ் மக்களை ஏமாற்றி பல கோடிகளை திரள் நிதி மூலம் திரட்டி அரசியல் பிழைப்பு நடத்தி வருகிறார். ஆகவே சமூகம் அவர்கள் எடிட் செய்யப்பட்ட போலியான புகைப்படத்தை வைத்துக்கொண்டு வெளிநாட்டு வாழ் தமிழர்களையும், இலங்கைத் தமிழர்களையும், தமிழகத் தமிழர்களையும் ஏமாற்றி பல கோடி ரூபாய் திரளநிதி பெற்று பிழைப்பு நடத்தி வரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சைமன் என்கின்ற சீமான் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்தும் அந்த போலியான புகைப்படத்தை உருவாக்கி கொடுத்த இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் மற்றும் செங்கோட்டையன் என்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வழக்கறிஞர் அஜித்குமார் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

24H கார் ரேஸில் அஜித் குமார் அணி 3-வது இடத்தை பிடித்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகம்..!

துபாயில் நடைபெற்ற 24H கார் ரேஸில் 911 ஜிடி3 ஆர் என்ற பிரிவில் அஜித் குமார் ரேஸிங் அணி 3-வது இடம் பிடித்து அசத்தியுள்ளது. ஒட்டுமொத்த ரேஸில் 23-வது இடம் பிடித்திருப்பதால், அஜித் குமார் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த போட்டிக்கு பின் சக ஓட்டுநர்களுடன் அஜித் குமார் கொண்டாடிய வீடியோ ட்ரெண்டாகி வருகிறது.

அஜித் குமார் 2010-ஆம் ஆண்டுக்கு பின் அதாவது 15 ஆண்டுகளுக்கு பின் கடந்த சில மாதங்களாக கார் ரேஸிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக அஜித் குமார் உடல் எடையை குறைத்து ஃபிட்னஸிலும் கவனம் செலுத்தினார். இதன்காரணமாக துபாய் 24H சீரிஸ் ரேஸ் அதாவது 24 மணி நேரம் தொடர்ச்சியாக கார் ஓட்டும் பந்தயத்தில் அஜித் குமாரின் ரேஸிங் அணி அதாவது 3 முதல் 4 ஓட்டுநர்கள் இருக்கும் அணி பங்கேற்பது தெரியவந்தது. ஒருவர் தலா 6 மணி நேரம் என்ற கணக்கில் 24 மணி நேரம் ஓட்டும் பந்தயத்தில் அஜித் குமாரின் ரேஸிங் அணி மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து நேற்று ரேஸ் தொடங்குவதற்கு முன்பாக Porsche GT4 போட்டியில் அஜித் குமார் கார் ஓட்டுவதாக தெரியவந்தது. இதனால் அஜித் குமாரை காண்பதற்காக ரசிகர்கள் ஏராளமாக கூடினர். இந்நிலையில் 24H சீரிஸ் ரேஸ் முடிவடைந்த நிலையில் அஜித் குமார் ரேஸிங் அணி சிறப்பாக செயல்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் Porsche 911 GT3 Cup (992) 3-வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. மொத்தமாக 568 லேப்கள் ஓட்டியுள்ள நிலையில், 24 மணி நேரத்தில் 26 முறை கார் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் Razoon ரேஸிங் அணிக்காக அஜித் குமார் கார் ஓட்டியத்தில் அந்த அணி 17-வது இடத்தில் பிடித்தது. மேலும் அஜித் குமார் அணி 3-வது இடத்தை பிடித்துள்ளதால், சக ஓட்டுநர்களுடன் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அதன்பின் இந்திய தேசியக் கொடியுடன் கொண்டாடிய அஜித் குமாருக்கு இந்திய ரசிகர்கள் வாழ்த்து கூறினர். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.