உதயநிதி ஸ்டாலின்: நீண்ட கால நண்பர் விஜய்யின் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்..!

“ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். நீண்ட கால நண்பர் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்.” என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விஜய்யின் தவெக முதல் மாநாட்டுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களின் கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார். அப்போது, “ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். தமிழ்நாட்டில் பல கட்சிகள் உதயமாகியுள்ளன. ஆனால் மக்கள் ஆதரவைப் பெறுவது தான் முக்கியம். பல கட்சிகள் காணாமல் போயும் உள்ளன. ஒரு தயாரிப்பாளராக நான் முதலில் தயாரித்ததே விஜய் படம் தான். அந்த வகையில் நீண்ட கால நண்பர் விஜய்யின் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்.” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

தவெக முதல் மாநில மாநாடு ஆரவாரம் தொடங்கியது..! தொண்டர்கள் உற்சாகம் ..!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு தொடங்கியது. விஜய் மாநாட்டு திடலுக்கு வருகை தந்ததை பார்த்ததும், மாநாட்டு திடலில் கூடியிருந்த தொண்டர்கள், நடிகர் விஜய்யின் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

கடந்த பிப்ரவரி 19 -ஆம் தேதி தமிழக அரசியலில் களமிறங்குவதாக அறிவித்த நடிகர் விஜய் அதன் பிறகு கட்சியின் கொடி மற்றும் கட்சி பாடலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். இதைத் தொடர்ந்து மாநாடு தொடர்பான அறிவிப்பு வெளியானது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று பிற்பகல் 3 மணிக்கு விஜய் திரைப்படங்களில் இடம்பெற்ற அரசியல் பேசும் பாடல்கள் இசைக்கப்பட்டன. பின்னர் தவெக கட்சியின் கொடிப் பாடல் இசைக்கப்பட்டது. அத்தனை தொடர்ந்து, விஜய், மாநாட்டில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.

மேலும் மாநாட்டுப் பந்தலில் இருந்த மேடையில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் சோபனா அமர்ந்திருக்க, மாநாடு துவக்கத்தில் 41 கலைஞர்கள் சேர்ந்து பறையாட்டம், தேவராட்டம், ஒயிலாட்டம் மயிலாட்டம் உள்ளிட்ட தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்களின் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் மாநாடு தொடங்கியது. மேலும் கோயம்புத்தூரைச் சேர்ந்த 27 பேர் அடங்கிய குழு வள்ளிக்கும்மி ஆட்டம் ஆடுகின்றனர். இதனை தொடர்ந்து மாலை 4 .03க்கு மேடைக்கு வந்த கட்சியின் தலைவர் விஜய் மேடைக்கு உற்சாகமாக வந்து தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார்.

கருணாஸ்: “விஜய் கொள்கை சித்தாந்தம் குறித்து சொன்னால் பின்னர் பார்ப்போம்…! ”

மதுரையில் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் நடிகர் கருணாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “விஜய் கட்சி மற்றும் கூட்டணி குறித்த கேள்விக்கு விஜய் கொள்கை சித்தாந்தம் குறித்து சொன்னால் பின்னர் பார்ப்போம். ” என முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் தெரிவித்தார்.

இது தொடர்பாக மதுரையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த கருணாஸ், “முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத் தலைவருமான கருணாஸ் தமிழம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார். இதற்காக மாவட்டம் தோறும் தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறேன். மேலும் முத்துராமலிங்க தேவரின் குருபூஜையையொட்டி, தேசத்துக்கு போராடியவர்களின் போராட்டங்கள், தியாகங்கள் குறித்து எடுத்துரைத்து பேச தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக பயணித்து சொற்பொழிவாற்ற திட்டமிட்டுள்ளேன். சமூக வலைதளங்களில் தற்போதைய இளைஞர்கள் மத்தியில் தவறான வரலாறு சென்றடைவதை மாற்றி உண்மை வரலாற்றை மக்களை சந்தித்துப் பேசுவேன். இதற்காக தமிழக காவல்துறையினரிடம் அனுமதி கேட்டுள்ளேன்.

விஜய் கட்சி மற்றும் கூட்டணி குறித்த கேள்விக்கு விஜய் கொள்கை சித்தாந்தம் குறித்து சொன்னால் பின்னர் பார்ப்போம். இப்போதைய நிலையில் விஜய் கூட தனித்து நிற்க முடியாது. நான் தனித்து நின்றால் நானும் எனது மனைவியும் தவிர யாரும் ஓட்டு போடமாட்டார்கள். இது தான் களத்தில் யதார்த்தம் என கருணாஸ் தெரிவித்தார்.

ஹெச்.ராஜா: திராவிட கட்சிகளின் வாக்குகளைத்தான் விஜய் பிரிப்பார்..!

விஜய் திராவிடக் கட்சிகளுக்குத்தான் போட்டியாளராக இருப்பார், விஜய் அரசியலுக்கு வருவதால் பாஜகவுக்கு பாதிப்பில்லை. திராவிடக் கட்சிகளின் வாக்குகளைத்தான் அவர் பிரிப்பார் என ஹெச்.ராஜா கருத்து தெரிவித்தார்.

உலகிலேயே அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட பாஜக நாடு முழுவதும் கடந்த 2-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி வைத்தார். தற்போது பாஜகவில் 10 கோடி உறுப்பினர்கள் உள்ள நிலையில் மொத்தம் 11 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்குடன் பாஜக பயணிக்கிறது. அதேபோல, தமிழகத்தில் ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

மதுரையில் நேற்று நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்ப்பு முகாமில், புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கிய பாஜக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஹெச்.ராஜா, பின்னர் செய்தியாளர்களிடம் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, அமெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்தி, இந்தியாவுக்கு எதிரானவர்களை சந்தித்துள்ளார். தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே, மத்திய அரசு நிதி வழங்கும். அவ்வாறு ஏற்றுக்கொண்டால், தமிழக அரசுக்கு மத்திய அரசின் கல்வி நிதி உடனடியாக வந்தடையும்.

மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்குமாறு பாஜகவுக்கு திருமாவளவன் அழைப்பு விடுக்கவில்லை. மது அருந்தாத உறுப்பினர்களைக் கொண்ட கட்சி என்பதால், எங்களை அழைக்காமல் இருந்திருக்கலாம். விஜய் திராவிடக் கட்சிகளுக்குத்தான் போட்டியாளராக இருப்பார், விஜய் அரசியலுக்கு வருவதால் பாஜகவுக்கு பாதிப்பில்லை. திராவிடக் கட்சிகளின் வாக்குகளைத்தான் அவர் பிரிப்பார் என ஹெச்.ராஜா கருத்து தெரிவித்தார்.

ரோஜா அதிரடி: சிரஞ்சீவி கட்சியில் சேராத நான்..! விஜய் கட்சியில் சேருவேனா…!

கடந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில், ஆந்திர மாநில சுற்றுலாத்துறை, இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பதவி நடிகை ரோஜா வகித்தவர். தமிழர்கள் அதிகம் வசிக்கும் சட்டமன்ற தொகுதியான நகரியில் தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்றவர்.

ஜெகனின் நம்பிக்கைக்கு பாத்திரமான ரோஜா, 2024-ல் நடந்த தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிட்டு, தெலுங்கு தேசம் வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். அத்தேர்தலில் ஜெகனின் கட்சி படுதோல்வியை சந்தித்ததையடுத்து அக்கட்சியை சேர்ந்தவர்கள் என்னவானார்கள் என மக்கள் கேட்கும் அளவிற்கு அவர்கள் மக்களிடமிருந்து தூரமாகி விட்டனர்.

இந்நிலையில், ‘இந்து தமிழ் திசை’ கான பேட்டியில் ரோஜா பேசுகையில், நடிகர் விஜய் தொடங்கி உள்ள தமிழக வெற்றிக் கழகத்தில் நீங்கள் இணையப்போவதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வருகின்றன. அது உண்மையா? இது தெலுங்கு தேசம் கட்சியின் பொய் பிரச்சாரம். நான் ஏன் விஜய் கட்சியில் இணைய வேண்டும்? எனக்கு விஜய் அவ்வளவு நெருக்கம் கூட இல்லை.

பிரஜா ராஜ்ஜியம் கட்சியை சிரஞ்சீவி தொடங்கும் போதே நான் அக்கட்சியில் சேரவில்லை. விஜய் கட்சியில் ஏன் சேரப்போகிறேன்? நான் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியிலேயே நீடிப்பேன். வேறு எந்த கட்சியிலும் சேர மாட்டேன் என ரோஜா தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலினை புகழ்ந்த ரஜினிகாந்த்..!

நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் அமைந்த கொடியை அறிமுகம் செய்தார். இந்த கொடியில் இரண்டு பக்கம் யானை வைக்கப்பட்டு உள்ளது. நடுவில் வாகை மலர் வைக்கப்பட்டு உள்ளது. அதை சுற்றி ஸ்டார்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த கொடி முழுக்க முழுக்க தமிழ், தமிழ் தேசியம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதை பார்க்க முடிகின்றது.

நடிகர் விஜய் தனது கட்சி கொடியை அறிமுகப்படுத்திய சில நாட்களிலே, ஒரு காலத்தில் அரசியலுக்கு வருவதாக சொல்லி, பின்னர் பின்வாங்கிய நடிகர் ரஜினிகாந்த்க்கு அழைத்து அவர் வாயால் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பாராட்டி திமுக சார்பாக கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ரஜினிகாந்த் பேசினார். அரசியலுக்கு வந்து கடினமாக உழைத்து தனக்கென பாணியை உருவாக்கி உதயநிதி ஸ்டாலின் உள்ளார். தனக்கொரு நல்ல அரசியல் எதிர்காலம் இருக்கு என்று நிரூபிக்கும் வகையில் உதயநிதி செயல்படுகிறார். அதோடு நிற்காமல், எந்த மாதிரியான விமர்சனங்களையும் ஆக்கப்பூர்வமாக எடுத்துக்கொண்டு கையாண்டவர் கலைஞர். தற்போது சிலர் விமர்சனம் செய்கின்றனர்.

ஆனால், பிறர் மனதை நோகடிக்கும் வகையில் விமர்சனங்கள் உள்ளன. பிறர் மனதை நோகடிக்கும் வகையில் விமர்சனங்கள் கூடாது. உலகில் எந்தவொரு தலைவருக்கும் இந்த மாதிரி ஒரு நூற்றாண்டை யாரும் கொண்டாடி இருக்க மாட்டார்கள். கொண்டாடவும் முடியாது திமுகவினர் ஆலமரம் போன்றவர்கள்; அவர்கள் எந்தப் புயல் அடித்தாலும் தாங்கி நிற்பார்கள்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் மிகப்பெரிய வெற்றி” ராஜ்நாத் சிங் ஏன் கருணாநிதியை 30 நிமிடம் புகழ்ந்தார்? ஒரு கட்சியை கட்டி காப்பது என்பது மிக கடினம், அதை சிறப்பாக செய்கிறார் முதலமைச்சர். முதலமைச்சர் கையில் புத்தகத்தை பெற்றதில் பெருமை என்று கூறினார் . மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டு: எப்போதுமே பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய மாணவர்கள் ஒரு பிரச்சனையாக இருக்க மாட்டார்கள். அவர்களை ஈஸியாக சமாளித்து விடுவார்கள். ஆனால் பழைய மாணவர்களை சமாளிப்பது சாதாரண விஷயம் அல்ல.. இங்கு ஏகப்பட்ட பழைய ஸ்டூடன்ஸ் உள்ளனர். அவர்கள் சாதாரண பழைய ஸ்டூடன்ஸ் இல்லை. அசாத்தியமானவங்க.. எல்லோரும் ரேங்க் வாங்கிவிட்டு வகுப்பறையை விட்டு போகமாட்டேன் என உட்கார்ந்து கொண்டுள்ளனர். அவர்களை சமாளிப்பது எல்லாம் சாதாரணமாங்க, என ரஜினிகாந்த் புகழ்ந்து பேசினார்.

பிரேமலதா விஜயகாந்த் விஜய் அரசியலை சினிமா போன்று எடுத்துக் கொள்ள முடியாது…!

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு, 71 டாட்டு கலைஞர்களால் 71 பேருக்கு 71 நிமிடங்களில் விஜயகாந்தின் முகம் கையில் டாட்டுவாக வரையும் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்வு கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற உள்ளது. இந்நிகழ்வை கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யுடனான சந்திப்பு கூட்டணிக்கானது அல்ல. நட்புணர்வோடு நடைபெற்ற ஒன்று. விஜய் எங்களுக்கு புதியவர் கிடையாது. தனது கட்சியின் கொடி அறிமுகத்துக்கு முன்பாக எங்களது வீட்டுக்கு வந்து, மறைந்த தலைவர் விஜயகாந்தின் படத்துக்கு மரியாதை செலுத்தி, ஆசீர்வாதம் வாங்கி சென்றார். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

விஜய் புத்திசாலியான, அமைதியான பையன். நிச்சயமாக பிரச்சினைகளை எல்லாம் சமாளிப்பார். அதேபோல விஜய் திரை உலகில் நிறைய சவால்களை சந்தித்து இருக்கிறார். ஆனால் அரசியலை சினிமா போன்று எடுத்துக் கொள்ள முடியாது. அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் யோசித்து தான் எடுத்து வைக்க வேண்டும். இது ஒரு குடும்ப சந்திப்பு போன்றுதான் எங்களுக்கு அமைந்தது என பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கொடியில் “யானை” பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு..!

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். இதற்காக டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பொதுச் செயலாளரான என். ஆனந்த் கட்சியை பதிவு செய்தார். இதையடுத்து வெளியிடப்பட்ட அறிக்கையில் 2026 சட்டப்பேரவை தேர்தல்தான் இலக்கு என விஜய் அறிவித்து இருந்தார்.

இதைத் தொடர்ந்து, கட்சியில் 2 கோடி உறுப்பினர் சேர்க்கைக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கட்சியின் தலைவர் விஜய் சிவப்பு, மஞ்சள் ஆகிய இரு நிறங்களுடன் இரண்டு போர் யானைகள், நடுவில் வாகை மலருடன் இருக்கும் வகை வடிவமைக்கப்பட்ட கொடியை அறிமுகம் செய்தார்.

தமிழக வெற்றிக் கழகம் நிறுவனர் விஜய் கொடியை அறிமுகம் செய்த ஒரு சில மணித்துளிகளில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் பி.ஆனந்தன் வெளியிட்ட வீடியோ பதிவில், “1968-ம் ஆண்டு சின்னம் ஒதுக்கீட்டு சட்டத்தின் அடிப்படையில், இந்திய தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஒரு சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. அதன்படி, யானை சின்னத்தை அசாம், சிக்கிம் தவிர வேறு எந்த மாநிலத்திலும் எந்த அரசியல் கட்சிகளும் எந்த வடிவத்திலும் பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை வடிவமைக்கும்போது இச்சட்டம் தொடர்பாக அவர்களின் கவனத்துக்கு வந்திருக்காது என தெரியவந்தது.

இதனால் அக்கட்சித் தலைமையை தொடர்பு கொள்ளுமாறு பகுஜன் சமாஜ் மத்திய தலைமையிடம் இருந்து அறிவுறுத்தல் பெறப்பட்டது. அதனடிப்படையில் தவெக நிர்வாகி வெங்கட் என்பவரை தொடர்பு கொண்டோம். கட்சிகளுக்குள் முரண்பட்ட கருத்துகள் வந்துவிடக் கூடாது என்பதற்காக சட்ட ஆவணங்களையும் மத்திய தலைமையின் அறிவுறுத்தல்படி அனுப்பியுள்ளோம். இந்த விவகாரம் குறித்து பரிசீலித்து முடிவெடுப்பதாக சொல்லியிருக்கின்றனர். அது நல்ல முடிவாக இருக்கும் என நம்புகிறோம்,” என பி.ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில், “சகோதரர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் இரண்டு யானைகள் இடம் பெற்றிருப்பது விதிகளை மீறும் செயலாகும். மேலும், தேர்தல் காலங்களில் வாக்காளர்கள் மத்தியில் இது மிகப் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே, உடனடியாக கட்சிக் கொடியில் இடம்பெற்றுள்ள யானைகளை அகற்ற வேண்டும் என அன்புடன் கேட்டு கொள்கிறேன். மீறும் பட்சத்தில் இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்க்கொள்ள பகுஜன் சமாஜ் கட்சி தயாராக உள்ளது என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்,” என பி.ஆனந்தன் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை பெற்றோர் முன்னிலையில் அறிமுகம் செய்த விஜய்..!

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். இதற்காக டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பொதுச் செயலாளரான என். ஆனந்த் கட்சியை பதிவு செய்தார். இதையடுத்து வெளியிடப்பட்ட அறிக்கையில் 2026 சட்டப்பேரவை தேர்தல்தான் இலக்கு என விஜய் அறிவித்து இருந்தார்.

இதைத் தொடர்ந்து, கட்சியில் 2 கோடி உறுப்பினர் சேர்க்கைக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அனைத்து நிலையிலான நிர்வாகிகளும் உறுப்பினர் சேர்க்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக கடந்த 19-ஆம் தேதி பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் மஞ்சள் நிறத்துடன் நடுவில் விஜய் படம் இருப்பது போன்ற கட்சிக் கொடியை ஏற்றி விஜய் ஒத்திகை பார்த்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில், இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கட்சியின் தலைவர் விஜய் சிவப்பு, மஞ்சள் ஆகிய இரு நிறங்களுடன் இரண்டு போர் யானைகள், நடுவில் வாகை மலருடன் இருக்கும் வகை வடிவமைக்கப்பட்ட கொடியை அறிமுகம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் திரளாக பங்கேற்றனர். விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் சோபா சந்திரசேகர் இருவரும் கலந்து கொண்டனர்.