ராஜ்நாத் சிங்: தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் அரசியல் வரைபடத்தை உருவாக்குவதில் கருணாநிதிக்கு முக்கிய பங்கு உண்டு..!

முன்னாள் முதலமைச்சரும் மறைந்த திமுக தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நூறு ரூபாய் நினைவு நாணயம் வெளியிடப்படுகிறது. இந்த நாணையத்தை கருணாநிதியின் பிறந்த நாளான கடந்த ஜுன் 3-ஆம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் இந்த நாணயம் குறிப்பிட்ட தேதியில் வெளியிட முடியாமல் போனது.

நாணயத்திற்கான நடைமுறைகள் முடிந்த நிலையில், நாணய வெளியீட்டு விழாவை இன்று நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் இன்று நடக்கிறது. மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கருணாநிதி நூற்றாண்டை குறிக்கும் விதமாக 100 ரூபாய் நினைவு நாணயத்தில் தமிழ் வெல்லும்’ என்ற வாசகம் போதித்த கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டார். அதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.

பின்னர் விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவில் பெருந்தன்மையோடு கலந்து கொண்டுள்ள மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அதிகாரிகள், விழாவில் பங்கேற்றுள்ள அனைவரையும் வரவேற்பதாகக் கூறினார். நாணய வெளியீட்டுக்காக ஒத்துழைத்தமைக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். இந்த விழாவுக்கு திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் முன்னிலை வகித்து வரவேற்பு உரையாற்றினார்.

தொடர்ந்து முதலமைச்சர் விழாவில் சிறப்புரையாற்றினார். அப்போது அவர், “அனைத்துக் கட்சியினருடனும் நட்பு பாராட்டும் ராஜ்நாத் சிங் கருணாநிதி நினைவு நாணயத்தை வெளியிட பொருத்தமானவர். சுதந்திர தினத்தன்று மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடியை ஏற்றும் உரிமையை கருணாநிதி பெற்றுத் தந்தவர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை இந்தியாவே கொண்டாடுகிறது. மாநில உரிமைகளுக்காகப் போராடிய கருணாநிதி நெருக்கடி நேரங்களில் நாட்டுக்கு கைகொடுத்தார். தமிழகத்தில் நடப்பது ஒரு கட்சி சார்ந்த அரசல்ல; இங்கே ஓர் இனத்தில் அரசு நடக்கிறது.” போன்ற கருத்துகளை முன்வைத்தார்.

தொடர்ந்து பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், “கருணாநிதி துணிச்சல் மிக்க தலைவர். தலைசிறந்த நிர்வாகி. 1960 முதல் தற்போது வரை ஆதிக்கம் செலுத்தும் கட்சியாக திமுகவை வளர்த்தவர். விளிம்புநிலை மக்களுக்கு தரமான வாழ்க்கை நிலையை கொண்டு வந்தவர். 1989லேயே மகளிருக்கான சுய உதவிக் குழுக்களை கொண்டுவந்தவர். பாலின சமத்துவம் பேணும் வகையில் மகளிர் சுய உதவித் திட்டத்தை அவர் கொண்டு வந்தார். பல்வேறு தேசிய கட்சிகளுடன் நல்லுறவைப் பேணியவர். தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் அரசியல் வரைபடத்தை உருவாக்குவதில் கருணாநிதிக்கு முக்கிய பங்கு இருக்கிறது. கூட்டாட்சி தத்துவத்துக்கு பாடுபட்ட கருணாநிதி நாட்டின் நலனுக்காகவும் குரல் கொடுத்தவர்.” என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம் சூட்டினார்.

அந்தரத்தில் தொங்கி..! வயநாட்டில் சிகிச்சையளித்த சபீனாவுக்கு கல்பனா சாவ்லா விருது..!

நாட்டின் 78-வது சுதந்திர தினம் இன்று 15-ஆம் தேதி நாட்டு மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் காலை 9 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றியேற்றினார்.

முன்னதாக, காலை 8.45 மணிக்கு சுதந்திர தின விழா நிகழ்ச்சிக்கு கோட்டை கொத்தளத்திற்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முப்படை அதிகாரிகள், டிஜிபி சங்கர் ஜிவால், சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை காவல் ஆணையர் அருண் ஆகியோரை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிமுகம் செய்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, சென்னை கோட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பிறகு, கோட்டை கொத்தளத்தின் மேல் உள்ள கொடியேற்றும் இடத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்து, தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து, தமிழக மக்களுக்கு சுதந்திர தின உரை நிகழ்த்துகிறார். இதனை தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை கவுரவிக்கும் விதமாக விருதுகள் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார். அந்தவகையில், நர்ஸ் சபீனாவுக்கு கல்பனா சாவ்லா விருதும், மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு தகைசால் விருதும் வழங்கினார் தமிழக முதல்வர். அந்தவகையில், தமிழ்நாட்டிற்கும், தமிழின வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த “தகைசால் தமிழர்” என்ற பெயரிலான விருது, ரூ.10 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்று வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான விருதுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், இலக்கியவாதியுமான மூத்த தலைவர் குமரி அனந்தன் தேர்வு செய்யப்பட்ட நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கையால், இந்த விருதினை குமரி அனந்தன் பெற்றார்.

அதேபோல, கல்பனா சாவ்லா விருது, செவிலியர் சபீனாவுக்கு வழங்கப்பட்டது. வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களுக்கு தமிழகத்தின் கூடலூரை சேர்ந்த செவிலியர் சபீனா, ஜிப்லைன் மூலம் ஆற்றைக் கடந்து சென்று சிகிச்சை அளித்தது குறித்த குறித்த குறும்படம் ஒளிபரப்பப்பட்டது. செவிலியர் சபீனாவின் இந்த வீர செயலுக்காக அவருக்கு தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், செவிலியர் சபீனாவிற்கு கல்பனா சாவ்லா விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றினார்..!

நாட்டின் 78-வது சுதந்திர தினம் இன்று 15-ஆம் தேதி நாட்டு மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் காலை 9 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றியேற்றினார்.

முன்னதாக, காலை 8.45 மணிக்கு சுதந்திர தின விழா நிகழ்ச்சிக்கு கோட்டை கொத்தளத்திற்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முப்படை அதிகாரிகள், டிஜிபி சங்கர் ஜிவால், சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை காவல் ஆணையர் அருண் ஆகியோரை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிமுகம் செய்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, சென்னை கோட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பிறகு, கோட்டை கொத்தளத்தின் மேல் உள்ள கொடியேற்றும் இடத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்து, தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.. இதையடுத்து, தமிழக மக்களுக்கு சுதந்திர தின உரை நிகழ்த்துகிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திராவிட மாடல் ஆட்சியின் மூன்றாண்டு சாதனை மலர் வெளியீடு..!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், திராவிட மாடல் அரசு 2021-ஆம் ஆண்டு மே திங்கள் 7-ஆம் நாள் ஆட்சிப் பொறுப்பேற்று மூன்றாண்டுகள் நிறைவடைந்ததையொட்டி தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ’தமிழரசு’ இதழின் மூலம் “தலை சிறந்த மூன்றாண்டு! தலை நிமிர்ந்த தமிழ்நாடு!” என்னும் பெயரில் மூன்றாண்டு சாதனை மலரை வெளியிட்டார். திராவிட மாடல் அரசு 2021-ஆம் ஆண்டு மே திங்கள் 7-ஆம் நாள் பொறுப்பேற்று மூன்றாண்டுகள் நிறைவடைந்து; நான்காம் ஆண்டிலும் தொடர்ந்து சிறப்பான பல திட்டங்களைச் செயல்படுத்திப் பல்வேறு துறைகளிலும் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

திராவிட மாடல் அரசு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து, நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்து, பல்வேறு புதுமையான திட்டங்களை நிறைவேற்றி தமிழ்நாடு, இந்திய அளவில் படைத்துள்ள சாதனைகள் ஒன்றிய அரசின் நிதிஆயோக் – நிர்யாத் அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கைகள் நாட்டிற்குப் பறைசாற்றியுள்ளன. அதாவது, தமிழ்நாடு இந்தியாவில் உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் முதல் மாநிலம், தொழில் வளர்ச்சியில் முன்னணி மாநிலம், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியில் முதலிடம், ஜவுளித் துணிகள் ஏற்றுமதியில் முதலிடம், மருத்துவத் துறையில் முன்னணி மாநிலம், மகளிர் முன்னேற்றத்தில் தமிழ்நாடு முதலிடம், கர்ப்பிணிப் பெண்கள் சுகதாரத்தில் தமிழ்நாடு முதலிடம், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு முதலிடம், மகப்பேற்றுக்குப் பிந்தைய சிசு கவனிப்பில் முன்னணி மாநிலம் என பல்வேறு திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு.

மேலும் வேளாண் உற்பத்தியில் முன்னணி மாநிலம், தோல் பொருள்கள் ஏற்றுமதியில் தலைசிறந்த மாநிலம், மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம், பொறியியல் சார்ந்த பொருள்கள் ஏற்றுமதியில் இரண்டாம் இடம், தொழில் வளர்ச்சிக்கான 50 சிறப்புப் பொருளாதார மண்டலங்களை ஏற்படுத்தியதில் தமிழ்நாடு முதலிடம் போன்ற சாதனைகளை படைத்து வருகிறது. இவை குறித்துச் சான்றோர்களும், பத்திரிகைகளும், ஊடகங்களும் பாராட்டி வருகின்றன. இவையல்லாமல் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் காலை உணவுத் திட்டம் தெலுங்கானா மாநிலத்திலும், கனடா நாட்டிலும் பின்பற்றப்படுகின்றது.

இந்த அரசின், “நான் முதல்வன்” போன்ற வேறு பல திட்டங்களும் இந்திய அளவிலும், வெளிநாட்டிலும் புகழ் பரப்பிவரும் சூழ்நிலையில், திராவிட மாடல் அரசு கடந்த மூன்றாண்டு காலத்தில் பல்வேறு துறைகளிலும் நிறைவேற்றியுள்ள திட்டங்கள், அவற்றின் பயன்கள் ஆகியவற்றைத் துறைவாரியாகத் தொகுத்து தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ’தமிழரசு’ இதழின் மூலம் “தலை சிறந்த மூன்றாண்டு! தலை நிமிர்ந்த தமிழ்நாடு!” என்னும் பெயரில் மூன்றாண்டு சாதனை மலரை சிறப்பாகத் தயாரித்துள்ளது. இச்சாதனை மலரில் பல்வேறு பெருமக்களின் கட்டுரைகளாக, மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி எழுதிய “தமிழ்நாட்டின் நலன்கள் உறுதி செய்யப்பட்டுவிட்டது”.

தமிழ்நாடு திட்டக்குழு துணைத் தலைவர் ஜெ. ஜெயரஞ்சன் எழுதிய, “விடியல் பயணம் ஒரு சமூக நீதித்திட்டம்”, சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் நாகநாதன் அவர்கள் எழுதிய, “திராவிட மாடல் தத்துவமும் தனித்துவமும்”, பேராசிரியர் ராஜன் குறை அவர்கள் எழுதிய “மூன்றாண்டு காலத்தில் முதன்மைச் சாதனைகள், வழக்கறிஞர் அ.அருள்மொழி அவர்கள் எழுதிய, “வினைத்திட்பம்’ கொண்ட முதலமைச்சர்”, கல்வி ஆலோசகர் திரு.ஜெயபிரகாஷ் காந்தி அவர்கள் எழுதிய, “கல்விக் கட்டமைப்பில் உயரம் தொட்ட முதலமைச்சர்”, திரு.கனகராஜ் அவர்கள் எழுதிய, “முற்றுகைக்கு மத்தியிலும் மூன்றாண்டு சாதனைகள்”, பத்திரிகையாளர் திரு.திலீப் மண்டல் அவர்கள் எழுதிய, “ஒருங்கிணைந்த வளர்ச்சியும் சமூக நீதியும் தமிழ்நாட்டின் திராவிட மாடல்” போன்ற மலர்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு அரசைப் பாராட்டியுள்ளன.

மேலும் பத்திரிகையாளர் சங்கீதா கந்தவேல் அவர்கள் எழுதிய, “பெண்களுக்கான மேம்பாட்டுக்கு வழிகோலும் திராவிட மாடல்”, பத்திரிகையாளர் திரு.அருள் எழிலன் அவர்கள் எழுதிய, “தமிழ்நாட்டைப் பின்தொடரும் இந்தியா” ஆகிய கட்டுரைகளும், இம்மலரில் இடம் பெற்றுத் தமிழ்நாடு அரசைப் பாராட்டியுள்ளன. இத்தகைய பாராட்டு மொழிகளுடன், அழகிய வடிவமைப்புடனும், பல்வேறு வண்ணப் புகைப்படங்களுடனும் இந்த மூன்றாண்டு சாதனை மலர் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நகராட்சி ஆணையராகும் நகராட்சி தூய்மை பணியாளர் மகள்…!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நகராட்சி நிர்வாகத்துறை தொடர்பான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும், டிஎன்பிஎஸ்சி மூலம் நகராட்சி நிர்வாகத்துறைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார். இதில், நகராட்சி ஆணையர்களுக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

அதன்படி நகராட்சி ஆணையருக்கான பணி நியமன ஆணை பெற்ற துர்கா என்பவர் கூறும்போது, ‘‘தமிழக அரசின் அனைத்து சலுகைகளையும் பயன்படுத்தி படித்தாலே நாம் நல்ல நிலைக்கு உயரலாம். நான் அரசுப்பள்ளி, அரசுக் கல்லூரியில்தான் படித்தேன். டிஎன்பிஎஸ்சி பயிற்சியின்போதும், அரசு பயிற்சி மையத்தையும் பயன்படுத்திக் கொண்டேன். தற்போது நான் பணி ஆணை வாங்கப் போகிறேன்.

என் தந்தை மன்னார்குடி நகராட்சியில் தூய்மைப் பணியாளராகதான் பணியாற்றினார். என் அப்பா நல்ல துணி போட்டதில்லை, என் வளர்ச்சிக்காக அவர் பலவற்றை இழந்தார். நல்ல உணவு கூட அவருக்கு கிடையாது. என் அப்பா, என் தாத்தா எல்லோரும் தூய்மைப் பணியாளர்களாக இருந்தார்கள். நான் இன்று நகராட்சி ஆணையராகியுள்ள நிலையில், இன்றில் இருந்து எங்கள் தலைமுறையே மாற்றம் காணப் போகிறது. இந்த வாய்ப்பை அளித்த அரசுக்கும், முதல்வருக்கும் நன்றி’’ என தெரிவித்தார்.

துர்காவின் குடும்ப பின்னணி: “மன்னார்குடி புதுப்பாலத்தில் வசித்து வரும் துர்காவின் அப்பா சேகர், அம்மா லதா, துர்கா என எங்களோடது சின்ன குடும்பம். துர்காவின் அப்பா மன்னார்குடி நகராட்சியில் தொடக்கத்தில் ரூ.800 சம்பளத்துக்கு தூய்மைப் பணியாளராக வேலைக்கு சேர்ந்தார். துர்காவின் அப்பா, சாக்கடையில் இறங்கி வேலை செய்வதை பல முறை பார்த்து கண் கலங்கி இருக்கிறாராம்.

மன்னார்குடியில், பள்ளியில் படித்து பத்தாம் வகுப்பு, ப்ளஸ் டூவில் பள்ளியில் முதல் மார்க் எடுத்து, மன்னார்குடி அரசுக் கல்லூரியில் சேர்ந்து கல்லூரி படிப்பை முடித்துள்ளார். குடும்பச் சூழல் காரணமாக திருமணம் முடிய, அப்பாவின் ஆசையும், என் கனவும் நிறைவேறாமல் போய்விட்டதே என்று வருந்திய நிலையில், துர்காவின் லட்சியத்தைப் புரிந்துகொண்ட அவருடைய கணவர் நிர்மல்குமார், அவருக்கு பக்கபலமாக இருந்து டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத வைத்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் வெளியான டி.என்.பி.எஸ்.சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள துர்கா, நகராட்சி ஆணையர் பதவியைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

‘இண்டியா’ கூட்டணிக் கட்சிகள் ஒற்றுமையின் மூலம், பாசிச பாஜகவுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்..!

மத்திய அரசின் பாரபட்சமான நிதி ஒதுக்கீட்டை கண்டித்தும், மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சி கோட்பாட்டை பாதுகாக்கும் வகையிலும், டெல்லி, ஐந்தர்மந்தரில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாற்றினார்.

அப்போது, “இந்தப் போராட்டத்தில் பங்கெடுக்க சகாவு பினராயி விஜயன் எனக்கு அழைப்பு விடுத்திருந்தார். நான் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டு, நேற்றுதான் தாயகம் திரும்பினேன். அதன் காரணமாக, என்னால் இந்தப் போராட்டத்தில் பங்கெடுக்க முடியவில்லை. எங்களுடைய கட்சியின் சார்பாக அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மற்றும் எம்.பிக்களை அனுப்பினேன்.

கேரளத்தில் இருந்து மக்கள் பணியாற்ற வேண்டிய உங்களை டெல்லிக்கு வந்து போராட்டம் நடத்த வைத்த மிக மோசமான அரசியல் சூழலை நினைத்து வருத்தப்படுகிறேன். நேற்று கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா டெல்லிக்கு வந்து போராட்டம் நடத்தி இருக்கிறார். இன்று திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களால் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. நிதிப் பகிர்வில் தங்களின் மாநிலத்துக்கு பாரபட்சம் காட்டப்படுவதற்கு எதிராக எல்லா மாநிலங்களும் போராட்டம் நடத்துகிற சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்குக் காரணமான மத்திய பாஜக அரசு மக்கள் மன்றத்தில் பதில் சொல்ல வேண்டிய நாள் வெகு தொலைவில் இல்லை.

சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, தமிழகத்தின் முதலமைச்சர் கருணாநிதியிடம் ஒரு கருத்தை சொன்னார். “தமிழகத்தின் கோரிக்கைக்காக நீங்கள் ஒரு முறை கூட டெல்லிக்கு வரத் தேவையில்லை. அப்படி ஒரு சூழ்நிலையை உருவாக்க மாட்டேன், தமிழகத்தில் இருந்தபடியே சொன்னால் போதும், நிறைவேற்றித் தருவேன்” என்று சொன்னார். மாநிலங்களை மதிக்கிற, மாநில மக்களையும் மதிக்கின்றவர்களாக முந்தைய பிரதமர்கள் இருந்தார்கள். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி, மாநிலங்களை முனிசிபாலிட்டிகளை போல நினைக்கிறார்.

மாநிலங்கள் இருப்பதோ, மாநிலங்களுக்கு முதலமைச்சர்கள் இருப்பதோ, அவருக்குப் பிடிக்கவில்லை. இத்தனைக்கும் குஜராத் மாநில முதலமைச்சராக இருந்து, அதன்பிறகு பிரதமர் ஆனவர் அவர். ஆனால், பிரதமர் ஆனதும் அவர் செய்த முதல் செயல், மாநிலங்களின் உரிமையைப் பறித்ததுதான். நிதி உரிமையை பறித்தார்; கல்வி உரிமையை பறித்தார்; மொழி உரிமையை பறித்தார்; சட்ட உரிமையை பறித்தார்.

மாநிலங்களின் நிதி உரிமையை பறிப்பது ஆக்ஸிஜனை நிறுத்துவதற்குச் சமம். அதைத்தான் பாஜக அரசு செய்து வருகிறது. இது ஏதோ எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் நடக்கிறது என்று பாஜக முதலமைச்சர்கள் நினைக்க வேண்டாம். நாளை உங்கள் மாநிலங்களுக்கும் இதே கதிதான் என்று எச்சரிக்கையாகவே சொல்ல விரும்புகிறேன். பாஜக அரசின் இந்த எதேச்சாதிகார நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழக அரசு உறுதியோடு போராடி வருகிறது. அதே பாணியில், கேரள முதலமைச்சர் காம்ரேட் பினராயி விஜயனும் போராடி வருகிறார்.

ஜிஎஸ்டி வரி விதிப்புக்குப் பிறகு மாபெரும் நிதி நெருக்கடிப் பேரிடரை எல்லா மாநில அரசுகளும் சந்திக்கிறோம். அனைத்து மாநில அரசுகளையும் ஒன்றிணைத்து ஆளக்கூடிய மத்திய அரசு, இந்த நிதி நெருக்கடியை நீக்குகிற வகையில் செயல்பட வேண்டும். ஆனால் அப்படி செயல்படவில்லை. மாநிலங்கள் வளர்ச்சிப் பணிகளுக்காக கடன் வாங்குவதற்கு கூட தடையை ஏற்படுத்துகிறார்கள். மாநிலங்களுடைய பொதுச் செலவினங்களுக்கு நிதியளிப்பதற்கான பொதுக்கடன் என்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, மாநில சட்டமன்றத்தின் தனிப்பட்ட அதிகார வரம்புக்கு உட்பட்டது. மக்களுக்கு எல்லா நன்மைகளையும் செய்வது மாநில அரசுகள்தான்.

மாநில அரசிடம் தான் எல்லா அன்றாடத் தேவைகளையும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அதற்கு பாஜக அரசு முட்டுக்கட்டை போடுகிறது. இதை எல்லாரும் ஒன்று சேர்ந்து எதிர்த்தாக வேண்டும். ‘இண்டியா’ கூட்டணிக் கட்சிகள் நம்முடைய ஒற்றுமையின் மூலமாக, இந்திய அரசைக் கைப்பற்றி, பாசிச பாஜகவுக்கு முற்றுப்புள்ளி வைப்போம். அனைத்து மாநிலங்களையும் மதிக்கும், சமமாக நடத்தும் கூட்டாட்சி இந்தியாவை உருவாக்குவோம். காம்ரேட் பினராயி விஜயனுக்கும் கேரள அமைச்சர்களுக்கும் வாழ்த்துகள். உங்கள் எண்ணம் விரைவில் நிறைவேறும்” என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 33 மாத ஆட்சியில் ரூ.8.65 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு..!

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மறைந்த முதலமைச்சர் கருணாநிதி சென்னையில் வள்ளுவர் கோட்டம், தருமபுரியில் அதியமான் கோட்டம் எனத் தமிழ் வளர்க்கும் கோட்டங்களை அமைத்தார்கள். அதுபோல், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2021-ல் பொறுப்பேற்றது முதல் இந்தியாவின் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் புதிய முதலீடுகளை ஈர்த்துத் தமிழகத்தில் தொழிற்சாலைகளைப் புதிது புதிதாக அமைத்துத் தமிழகத்தை ஒரு தொழில் கோட்டமாக உருவாக்கிடும் முயற்சியில் ஓய்வின்றி உழைத்து வருகிறார்.

2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாடு 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாகவும், இந்தியப் பொருளாதாரத்துக்கு மிக முக்கியப் பங்களிக்கிற மாநிலமாகவும் தமிழகத்தை உயர்த்திடும் பெரும் லட்சிய இலக்கை நிர்ணயித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முனைப்புடன் செயல்படுகிறது.அதன் முதற்கட்டமாக, முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்ற பெயரில் சென்னை கோயம்புத்தூர், தூத்துக்குடி ஆகிய நகரங்களில் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடுகள் மூலம் ரூ.1,90,803 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 2,80,600 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.

இரண்டாம் கட்டமாக, ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு 17 ஆயிரத்து 371 பேருக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துகிற வகையில், 7 ஆயிரத்து 441 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் பெறப்பட்டன. மூன்றாம் கட்டமாக, 2024 ஜனவரி 7, 8 ஆகிய நாட்களில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தமிழ்நாடு அரசு நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவாக, 6,64,180 கோடி ரூபாய் முதலீடுகளும், அவற்றின்மூலம் 14,54,712 பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகளும் 12,35,945 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் என மொத்தம் 26,90,657 வேலைவாய்ப்புகளுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நான்காம் கட்டமாக 27-1-2024 அன்று புறப்பட்டு ஸ்பெயின் நாட்டுக்குச் சென்று அங்குள்ள பொருளாதாரம் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சக அதிகாரிகள், ஸ்பெயின் தொழில் கூட்டமைப்பு பொறுப்பாளர்கள், இன்வெஸ்ட் ஸ்பெயின் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆகியோரைச் சந்தித்து தமிழ்நாட்டிலுள்ள தொழில் வாய்ப்புகளையும், அரசு வழங்கும் சலுகைகளையும், கிடைக்கும் திறன் வாய்ந்த மனித வளத்தையும் எடுத்துக் கூறி, தமிழ்நாட்டில் தொழில் தொடங்கிட வருமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். அவற்றின் பயனாக ரூ.3,440 கோடி ரூபாய் அளவுக்குத் தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழ்நாடு குறித்தும், தமிழக அரசு குறித்தும் உலகளாவிய தொழில் நிறுவனங்களுக்கு உள்ள நம்பிக்கையை இது காட்டுகிறது. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியையும், தமிழ்நாட்டின் பொருளாதார மேம்பாட்டையும் புகழ்ந்து உலக அளவில் முக்கியப் பத்திரிகையான ‘நியூயார்க் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டு பாராட்டியது.‘ஆண்டுவாரி முதலீட்டாளர்கள் சந்திப்பு 2022 நடைபெற்றபோது ஆசிய-ஒசியான மண்டலத்துக்கான சிறந்த முதலீட்டு நிறுவனத்துக்குரிய விருது தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

96 மாசமா..? அதாவது 8 வருஷம் … யாரோட ஆட்சி… வார்த்தையை விட்டு.. மாட்டிக்கிட்டோமே..!?

தமிழ்நாடு முழுக்க பல்வேறு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டங்களை செய்கின்றன. அதே சமயம் தமிழ்நாட்டில் நாளை நடைபெறும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஐ.என்.டி.யூ.சி தொழிற்சங்கம் பங்கேற்காது என முதன்மை பொதுச்செயலாளர் நாராயணசாமி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இதனால் பெரும்பாலான இடங்களில் 80 சதவிகிதம் வரை பேருந்துகள் இயங்குகின்றன.

தமிழ்நாடு முழுவதும் அரசு பேருந்துகள் இயக்கப்படும் விவரத்தை மண்டல வாரியாக வெளியிட்டுள்ளது போக்குவரத்துத்துறை. சென்னையில் மாநகர பேருந்துகள் வழக்கத்தை விட கூடுதலாக 103% இயக்கம். மாநிலம் முழுவதும் அரசு விரைவு போக்குவரத்துகழக பேருந்துகள் 100% இயக்கப்படுகின்றன என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த போராட்டம் குறித்து எடப்பாடி பழனிசாமி வைத்த விமர்சனத்தில், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 96 மாதங்களாக நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை சுமார் ரூ.2 ஆயிரம் கோடி உள்ளதாகவும், அதில் இந்த மாதத்தில் இருந்து அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்கினால்கூட போதும் என்றும், அதற்கு ரூ.70 கோடி மட்டுமே ஆகும் என்றும், நிலுவையில் உள்ள 96 மாதகால அகவிலைப்படியையும் மற்றும் இதர கோரிக்கைகளையும் பொங்கலுக்குப் பிறகுகூட பேசிக் கொள்ளலாம் என்றும், இதனை இந்த அரசு ஏற்றுக்கொண்டால் வேலை நிறுத்த அறிவிப்பை வாபஸ் பெற்றுக்கொள்கிறோம்” என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்த குறைந்தபட்ச இந்த ஒரு கோரிக்கையைக் கூட ஏற்காத மனிதாபிமானமற்ற அரசாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக அரசு இருந்து வருவது கடும் கண்டனத்திற்குரியது.

அரசு தனது வீராப்பைக் காட்டாமல், லட்சக்கணக்கான மக்கள் அவர்களுடைய சொந்த ஊர்களுக்குச் சென்று பொங்கல் பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்பதைக் கருத்தில்கொண்டு, போக்குவரத்துத் தொழிற்சங்கங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களுடைய குறைந்தபட்ச கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் வைத்துள்ளார். ஆனால் எடப்பாடி பழனிசாமி வைத்த விமர்சனம் தற்போது அவருக்கே எதிராகவே திரும்பி உள்ளது.

அவர் கொஞ்சமும் எதிர்பார்க்காத வகையில்.. அவர் வைத்த விமர்சனம் அவருக்கு எதிராக மாறி இருக்கிறது. அதன்படி 96 மாசம், அதாவது 8 வருஷம், இதுல கிட்டத்தட்ட 6 வருஷம் எடப்பாடி பழனிசாமி ஆட்சிதான்.. அவர்கள் ஆட்சியில கொடுக்கப்படாத டிஏ மற்றும் வருமான பாக்கிக்கு அவர்களே நியாயம் கேப்பது கொடுமையிலும் கொடுமை என்று நெட்டிசன்கள், திமுகவினர் கடுமையாக விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர்.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு: உலகின் முன்னனி நிறுவனங்களுடன் 100 க்கு மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தகள்

உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஜெர்மனி, ஜப்பான், அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் தமிழ்நாட்டில் புதிதாக தொழில் தொடங்குவது, முதலீடு செய்தல், தொழில் செயல்பாடுகளை விரிவுபடுத்துதல் தொடர்பாக பல்வேறு நிறுவனங்களுடன் மாநில அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுன.

அந்த வகையில், பல்வேறு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கவும், முதலீடு செய்யவும், தொழிலை விரிவுபடுத்தவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தன. இந்த மாநாட்டில் தமிழ்நாடு அரசின் செமி கண்டெக்டர் மற்றும் மேம்பட்ட உற்பத்தி கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

இந்நிலையில், சென்னையில் இன்று நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் முதல் நாளில் 100 க்கு மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தகள் உலகின் பல்வேறு முன்னனி நிறுவனங்களால் கையெழுத்திடப்பட்டு ரூ.5.5 லட்சம் கோடி இலக்கு எட்டப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கிய உலக முதலீட்டாளர்கள் மாநாடு நாளை நிறைவு பெறுகிறது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைப்பு … தமிழ் கற்பிக்கும் தன்னார்வலர்கள் ஆசிரியர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க இணையதளம்..

தமிழ் பரப்புரை கழக திட்டத்தில் தமிழ் கற்பிக்கும் தன்னார்வலர்கள், ஆசிரியர் பயிற்சிக்கு பதிவு செய்வதற்கான இணையதளம், தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் ஒருங்கிணைந்த இணையதளம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: அயலக மாணவர்களின் தமிழ்கற்றல், கற்பித்தலுக்காக தமிழ் பரப்புரை கழகத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 2022 செப்டம்பரில் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் பணிகளை தமிழ் இணைய கல்விக் கழகம் செயல்படுத்தி வருகிறது.

இதில் 34 நாடுகள், 16 இந்திய மாநிலங்களில் தமிழ் இணைய கல்வி கழகத்தின் 160 தொடர்பு மையங்கள் மூலம் திறன்கள் அடிப்படையிலான பாடப் புத்தகங்கள், கற்றல் துணை கருவிகள், கட்டணமில்லா இணையவழி வகுப்புகள் உள்ளிட்ட பல வசதிகள் வழங்கப்படுகின்றன. இந்த மையங்களில் மாணவர்களுக்கு தன்னார்வலர்கள் தமிழ் பயிற்றுவிக்கின்றனர்.

இந்த சூழலில், அயலக தமிழ்ச்சங்கங்கள், பள்ளிகளின் கோரிக்கை அடிப்படையில், கற்பித்தலை மேம்படுத்தும் நோக்கில், தன்னார்வலர்களுக்கு இணையவழியில் ஓராண்டு ஆசிரியர் பட்டயப் பயிற்சி வழங்க தமிழ் பரப்புரை கழகம் திட்டமிட்டது. இப்பயிற்சியை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வழங்க கடந்த ஜனவரியில் அயலக தமிழர் தின விழாவில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இந்நிலையில், இப்பயிற்சியில் சேர பதிவு செய்வதற்கான http://tva.reg.payil.app/ என்ற இணையதளத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பட்டயப் பயிற்சி குறித்த குறிப்பேட்டை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெற்றுக் கொண்டார்.